பொதுப் பெயர் – Richard’s pipit
அறிவியல் பெயர் – Anthus richardi

பெயர் காரணம்
Anthus L. anthus – என்பவை புல்வெளிகளில் உள்ள சிறிய பறவையாகும்.

மான்சியர் ரிச்சார்டு Monsieur Richard (1745–1835) என்பவர் தபால்துறையில் நிர்வாகக்குழு தலைவராக பணியாற்றிக் கொண்டிருந்தார். பணியில் உள்ள போதே பூச்சிகள் மற்றும் பறவைகள் போன்றவற்றை சேகரித்தார். இதில் உள்ளூர் மற்றும் வலசைப் பறவைகளும் அடங்கும்.

ரிச்சார்டு சேகரித்த பறவைகளை பிரான்சில் உள்ள லாசட்ரே (La Chaˆtre) பகுதியில் உள்ள பைலன் சேகரிப்பு அரங்கில் வைத்துள்ளார். இவர் ஒரு சிறந்த பறவையியல் வரலாற்றாசிரியர். 1800 ல் பாடம் செய்து வைத்த பறவைகளில் சில சிதைந்து போனதில் நெட்டைக்காலியும் அடங்கும். இதற்கு  பின்னர் பதப்படுத்தும் முறையை மாற்றி, arsenical soap பை பயன்படுத்திப் பதப்படுத்தியுள்ளார்.

மீதமிருந்து பறவைகளில் மான்சியர் ரிச்சார்டு அவர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. 1815ல் அருங்காட்சியகங்களிலிருந்தும் சேகரித்த  தகவல்களின் அடிப்படையில் 1818 ஆம் ஆண்டில்  நெட்டைக்காலிக்கு Anthus richardi என லூயிஸ் வில்லட் (Louis Vieillot) என்பவர் பெயரிட்டார்.

மேலும் சில பறவைகள் 1849 ஆண்டில் நடந்த தீ விபத்தில் எறிந்து போயின.

Blue throat (Luscinia svecica) (specimen MLC.2011.0.1678)
Blue throat (Luscinia svecica) (specimen MLC.2011.0.1678)
Original label on base of specimen stand கடைசி வரியில் உள்ளது M. Richard
Original label on base of specimen stand கடைசி வரியில் உள்ளது M. Richard

மான்சியர் ரிச்சார்டு பதப்படுத்திய பல பறவைகளில் ஒன்று 
Blue throat (Luscinia svecica)

உடல் அமைப்பு:

மஞ்சள் பழுப்புநிறம் கலந்த நீண்ட கால்கள், தெளிவான புருவக்கோடு (குறிப்பாக, கண்ணிற்குப் பின்புறம்), பூங்குருவியைப் போன்ற தோற்றம்; நன்கு தெரியும்  கோடுகளுடைய மேல் பாகங்கள் மற்றும் மார்பு, பருத்த நீளமான அலகு, நீளமான பின்புறம் மற்றும் வளைந்த நகம். நெட்டைக்காலிகளில் பெரியவை இவை. 17 – 20 செமீ நீளமும் 25 – 36 கிராம் நிறையும் கொண்டவை. நெட்டைக்காலி வகைகளில் மிகப்பெரியது ரிச்சார்டு நெட்டைக்காலி தான்.

பறவை படம்https://ebird.org/species/ricpip1 

காணப்படும் இடங்கள் 

ஆசியப்பகுதிகளில் திறந்த புல்வெளிகளில் இனப்பெருக்கம் செய்கின்றன; அங்கிருந்து இந்தியத் துணைக்கண்டம் மற்றும் தென்கிழக்கு ஆசியப்பகுதிகளுக்கு இவை நீண்ட தூரம் வலசை போகின்றன.

வாழுமிடம்:

வயல்கள், ஈர நிலங்கள், புல்வெளிகள், ஏரிகளை ஒட்டிய கரைப்பகுதிகள் ஆகியவையாகும்.

உணவு:

பூச்சி வகைகளையே பெரும்பாலும் விரும்பி உண்ணுகின்றன. ஆதலால் இதனை  பூச்சியுண்ணும் பறவை என்கிறோம்.  பெரிய பறவை வண்டுகளையும், எறும்புகள், பட்டாம்பூச்சிகள் மற்றும் சிலந்திகளையும் உண்ணும். ஆனால் குஞ்சுகளுக்குச் சிறு சிறு பூச்சிகளையே ஊட்டுகின்றன.

வலசை போதல்:

சைபீரியா, மங்கோலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இப்பறவைகள்  வாழ்கின்றன. குளிர்காலங்களில்  தென் மேற்கு ஆசியாவிற்கும், இந்தியாவிற்கும் வலசையாக வருகின்றன. செப்டம்பர் முதல் ஜூன் வரையிலும்  தமிழ்நாட்டிற்கும் வலசை வருவதாகத் தரவுகள் சொல்கின்றன.

Map – https://ebird.org/species/ricpip1 

இனப்பெருக்கம்:

இனப்பெருக்கத்திற்காக “மே முதல் செப்டம்பர் வரை” இலையுதிர் காலத்தில் இப்பறவைகள் சைபீரியாவை நோக்கிச் செல்கின்றன.

3லிருந்து 4 முட்டைகள் வரை இடுகின்றன. ஆண் பெண் இரண்டுமே  அடைகாக்கின்றன.

தற்போதைய நிலை:

பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு நிறுவனம் (International Union for Conservation of Nature – IUCN) நிலையாக உள்ளதாக (Least Concern) குறிப்பிட்டுள்ளனர்.

தரவுகள்:

1). Richard Mearns, Christophe Gouraud, and Laurent Chevrier (2015). The identity of Richard of Richard’s pipit (Anthus richardi Vieillot, 1818), Archives of Natural History, 85–90.

2). https://ebird.org/species/ricpip1

முனைவர். வெ. கிருபாநந்தினி
பறவைகள் ஆராய்ச்சியாளர்

முந்தைய தொடரை வாசிக்க: 

பெயர் சொல்லும் பறவைகள் – முனைவர். வெ. கிருபாநந்தினி



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



6 thoughts on “பெயர் சொல்லும் பறவைகள் 2: ரிச்சார்டு நெட்டைக்காலி – முனைவர். வெ. கிருபாநந்தினி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *