"பூமிக்கு அடியில் ஒரு மர்மம்" - யெஸ். பாலபாரதி (Bhumiku Adiyil Oru Marmam - S.Balabharathi)

இது ஒரு “அட்வென்ச்சர் நாவல்”ஆகும்.

விடுமுறையில் உறவினர் வீட்டில் சந்தித்துக்கொண்ட நான்கு குழந்தைகள் செய்த நல்ல காரியம் தான் இந்த கதை.

கிராமிய சூழலில் உள்ள குழந்தைகள் பேசும் மொழியில் உள்ளது இந்த நூல்.

ஒவ்வொரு குழந்தைக்குமான கேரக்டர்கள் மிக அருமையாக அமைந்துள்ளது குறிப்பாக ஆட்டிச பாதிப்பு உள்ள கண்ணன் கேரக்டர் மிக அருமை. இந்த நாவலின் கதாநாயகனும் கண்ணன் தான்.

கிராமத்துப் பள்ளியில் படிக்கும் இவர்கள் அடிக்கும் லூட்டிகளுக்கு குறைவில்லை.

இவர்கள் அனைவரும் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள கோவிலின் அருகில் உள்ள சுரங்கத்தை கண்டறிகிறார்கள் இதுதான் கதை.

அலிபாபா நாற்பது திருடர்கள் நாவலில் உள்ளதுபோல் அண்டா கா கசம் திறந்திடு தீசே –
என்று சொன்னால் குகையின் கதவு திறக்கும் என்று நாம் படித்திருக்கிறோம்.

இதுபோன்று இக்குகைக்கு செல்லும் முன்னே குகை மூடியிருக்கும் வாயைத் திறக்க வேண்டும். அங்கே யானை +சிங்கம் வடிவில் ஒரு சிலை இருக்கிறது. அந்த சிலையின் வாய்க்குள் ஒரு உருண்டை கல் இருக்கிறது.

இந்தக் கல்லை உருட்டினால் சுரங்கத்தின் கதவு திறக்கும்.

சுரங்கத்தை திறந்தவுடன் அறிவியல் பூர்வமாக சிந்திக்கிறார்கள்.
நீண்ட நாட்களாக பயன்படாத இருக்கக்கூடிய பகுதியில் உள்ள காற்று மாசடைந்து விஷத்தன்மை அடைந்துவிடும் .
அந்த இடத்தில் காற்று விஷத்தன்மை உள்ளதா என்பதை பரிசோதித்து அதன் பின்னரே சுரங்கத்தில் குழந்தைகள் பயணிக்கிறார்கள்.

இதை அறிந்து கொண்ட குழந்தைகள் சுரங்கத்தை கண்டறிந்து உள்ளே செல்கிறார்கள்.

சிறிது தூரம் சுரங்கத்தினுள் சென்று கொண்டிருக்கும் போதே சுரங்கத்தின் வாயில் மூடப்படுகிறது.

மீண்டும் அதே படியில் குதிக்கும்போது மீண்டும் திறக்கிறது.

இப்படியாக சின்ன சின்ன அனுபவங்களைப் பெற்று மிகுந்த பயத்துடன் சுரங்கத்தினுள் பயணிக்கிறார்கள்.

பயம் வந்துவிடுகிறது.
இன்றைக்கு போதும் நாளைக்கு வருவோம் என்று மீண்டும் சுரங்கத்திற்கு வெளியே வந்து வீட்டிற்கு சென்று விடுகிறார்கள்.

நாளை எத்தனை மணிக்கு எங்கு சந்திப்பது என்றெல்லாம் திட்டமிட்டு தூங்கி விடுகிறார்கள்.

இச்சம்பவங்கள் அனைத்தும் வீட்டில் உள்ள பெற்றோர்கள் யாருக்கும் தெரியாது.

மீண்டும் காலையில் சுரங்கத்தில் மிகுந்த தயாரிப்புகளோடு, டார்ச்லைட், மெழுகுவத்தி, கம்பு இவையெல்லாம் எடுத்துக்கொண்டு பயணத்தைத் தொடர்கின்றனர்.

அப்படிச் செல்லும்போது அவர்கள் காலில் சில பொருட்கள் தட்டப்படுகிறது. டார்ச் லைட் கொண்டு பார்க்கும் போது இங்கு மனித நடமாட்டம் இருந்ததற்கான அறிகுறிகள் அவர்களுக்கு தென்படுகிறது.

சிறிது தூரம் சென்றபின் டார்ச் லைட் அடித்து பார்க்கும்போது உடல் முழுக்க புதர் போல் முடி வளர்ந்த ஒரு கரடி அவர்களுக்கு தென்படுகிறது.

குரங்கு மாதிரியான பாவனைகளும் அந்த உருவத்திடம் இருப்பதை
வருகிறார்கள்.

கதையின் நாயகன் பயப்படாமல் இந்த உருவத்தை நோக்கி செல்கிறான். மற்றவர்களின் பயந்து உறைந்து போய் நின்றுகொண்டு கண்ணனை அங்கு செல்லாதே என்று தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றனர்.

இவர்களது நடவடிக்கைகளைப் பார்த்து அந்த உருவம் ஓடத் தொடங்குகிறது. கண்ணனும் பின்தொடரும் போது தடுமாறி கீழே விழுந்து விடுகிறான். மற்றவர்கள் வந்து எழுப்பி, இன்று இதற்கு மேல் செல்ல வேண்டாம். வீட்டுக்குத் திரும்பி விடலாம் என்று முடிவெடுத்து வீட்டிற்கு திரும்பி விடுகின்றனர்.

இரவு முழுக்க ஒவ்வொருவரும் இன்று நடந்த சம்பவத்தை நினைத்து தூங்காமல் நேரத்தைக் கடத்தி கொள்ளுகின்றனர்.

இவர்களது நடத்தையை
கண்டுகொண்ட உறவினர் அத்தை காவல் துறையில் பணியாற்றுகிறார்.

பசங்களிடம் நைசாக பேசி சம்பவங்களை கேட்டறிந்து கொள்கிறார்.

குழந்தைகளுடன் விஷயத்தை கேட்டறிந்த அத்தை மறுநாள் நானும் சுரங்கத்திற்கு வருகிறேன் என்று தெரிவித்தார் குழந்தைகளும் அத்தையை அழைத்துக்கொண்டு சுரங்கத்தில் பயணித்தார்கள்.
காவல்துறையில் பணியாற்றினாலும் சுரங்கத்திற்குள் செல்வது மிகுந்த பயத்துடனும் கவலையுடனும் சென்றார் அத்தை.

அத்தை அந்த உருவத்தைப் பார்த்து பயத்துடன் மிரட்சி ஆகிறார்.

குழந்தைகளுடன் ஊர் திரும்பி தன்னுடைய துறை அதிகாரிகள் ஆடுமே அரசின் கவனத்திற்கும் இச்சம்பவத்தை கொண்டுசென்று விடுகிறார்.

காவல்துறை தீயணைப்புத்துறை மாவட்ட நிர்வாகம் என அனைத்து துறைகளும் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தைகளிடம் விஷயத்தை கேட்டறிந்து தீயணைப்புத்துறை உதவியோடு அந்த உருவத்தை மீட்கிறார்கள்.

மாவட்ட ஆட்சித்தலைவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இன்னும் பிற அதிகாரிகள் அனைவரும் குழந்தைகளை பாராட்டி மகிழ்கின்றனர்.

மிகுந்த நெகிழ்ச்சியுடன், பரவசத்தோடு, பயத்தோடு இந்த சம்பவங்களை நேரில் பார்த்த அனுபவித்த உணர்வு வாசிக்கும் அனைவருக்கும் ஏற்படும்.

அந்த உருவம் என்னது என்ன மாதிரியான உயிரினம் என்று படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

மாயாவி படக்கதை மர்ம நாவல் படித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது. சிறிதும் உற்சாக குறைவு ஏற்படாமல் கதை உயிரோட்டமாக கொண்டு சென்றது மிகவும் பாராட்ட வேண்டியது குழந்தைகளும் இளைஞர்களும் அவசியம் படித்து *அட்வன்சர்* புரியுங்கள்.

 

நூலின் தகவல்கள்:- 

நூல் : “பூமிக்கு அடியில் ஒரு மர்மம்” 

நூலாசிரியர் : யெஸ். பாலபாரதி

வெளியீடு : வானம் பதிப்பகம்

அலைபேசி எண் : 9176549991

விலை : ரூ.140

பக்கங்கள் :160 

நூலறிமுகம் எழுதியவர்:- 

MJ பிரபாகர் 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *