தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட வரைபடம் அல்ல
________________________________________

உன்னுடைய வீட்டின்
ஒரு அறையில்
தீப்பிடித்து எரிகிறதென்றால்
என்ன நீ
வேறொரு அறையில் தூங்க முடியுமா?
உன்னுடைய வீட்டின் ஒரு அறையில்
சடலங்கள் அழுகிக் கொண்டிருந்தால்
மற்றொரு அறையில்
உன்னால் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்க முடியுமா?
ஆமெனில்
எனக்கு உன்னிடம்
சொல்வதற்கு எதுவுமில்லை.

தேசம் காகிதத்தில் தீட்டப்பட்ட
வரைபடம் அல்ல
ஒரு பகுதி கிழித்து எறியும் போது
மீதமுள்ளவை அதே மாதிரி அப்படியே இருக்கின்றன
மற்றும் ஆறுகள், மலைகள், நகரங்கள், கிராமங்கள்
அப்படியே அதனதன் இடத்தில்
நீ இதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால்
எனக்கு உன்னுடன்
வாழ்வது இயலாமல் இருக்கிறது.

இந்த உலகில் மனிதனின் உயிரை விட பெரியது
ஒன்றுமில்லை
கடவுள் இல்லை
அறிவு இல்லை
தேர்தல் இல்லை
காகிதத்தில் எழுதிய
எந்தக் கட்டுரையையும்
கிழித்தெறிய முடியும்
மற்றும் தரையின் ஏழு அடுக்குகளுக்குள்
வாகனம் செல்ல முடியும்.

எந்த விவேகம்
பிணங்களை எழுந்து நிற்க செய்கிறது
அவர் பார்வையற்றவர்
எந்த ஆட்சி
நடந்து கொண்டிருக்கிறது
துப்பாக்கி குழாய்களின் வழியாக
கொலைகாரர்களின் வணிகம் இருக்கிறது
நீ ஏற்றுக்கொள்ளவிலை என்றால்
என்னை
இப்போது ஒரு கணம் கூட
நீ சகித்துக் கொள்ள முடியாது.

நினைவு கொள்
ஒரு குழந்தையை கொல்வது
ஒரு பெண்ணின் மரணம்
ஒரு மனிதனின்
குண்டுகளால் கிழிக்கப்பட்ட உடல்
எந்த அரசாங்கமும் இல்லை
ஒட்டுமொத்த தேசமும் வீழ்ச்சியடைந்துள்ளது.

அப்படி பாய்ந்த ரத்தம்
பூமி உறிஞ்சுவது இல்லை
வானத்தில் பறக்கும் கொடிகள்
கறுப்பு நிறமாக ஆகிறது
எந்த பூமியில்
இராணுவப்படை பூட்ஸின்
அடையாளங்கள் இருக்கின்றன
மற்றும் அதன் மேல்
சடலங்கள் விழுந்து கொண்டிருக்கின்றன
அந்த பூமி
உன் இரத்தத்தில்
நெருப்பாகி ஓடாது
எனவே புரிந்து கொள்
நீ தரிசு நிலமாகி இருக்கிறாய்
இங்கே சுவாசிப்பது வரை உனக்கு இல்லை அதிகாரம்
உனக்காக இல்லை வாழ்வதற்கு இப்போது இந்த உலகம்.

கடைசி விஷயம்
முற்றிலும் சுத்தம்
எந்த ஒரு கொலையாளியையும்
ஒருபோதும் மன்னிக்காதே
விரும்பி இருக்கிறாய்
அவன் உன்னுடைய நண்பன்
மத ஒப்பந்தக்காரன்,
விரும்பிய ஜனநாயகத்தின்
மதிப்பிற்குரிய காவலாளி.

ஹிந்தியில் : சர்வேஸ்வர் தயாள் சக்சேனா
தமிழில் : வசந்ததீபன்



சர்வேஸ்வர் தயாள் சக்சேனா
_____________________________________

பிறப்பு :
__________

15 செப்டம்பர் 1927

இறப்பு :
__________

24 செப்டம்பர் 1983

பிறந்த இடம் :
_________________

ஜிலா பஸ்தீ , உத்திரபிரதேசம் , இந்தியா.

சில முக்கிய படைப்புகள் :
________________________________
(1) காட் கீ கண்டியாங்
(2) பாம்ஸ் கா புல்
(3) கர்ம ஹவாரங்
(4) ஏக் ஸூனீ நாவ்
(5) குஆனோ நதி

விருதுகள் :
________________

” க்கூண்டியோங் பர் டாங்கே லோக் ” (1983) கவிதைத் தொகுப்பிற்காக சாஹித்ய அகாதமி விருது உடன் நிறைய பிரபல விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார்.

🦀



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *