Umamohan's poem உமா மோகனின் கவிதை

உமா மோகனின் கவிதை




சின்னதாக நிலவைப் பிய்த்துக் கொள்ள ஒரு கை நீண்டது
அதைத் தட்டிவிட்ட இன்னொரு கை
தொடாதே என் உடைமை என்றது

நிலவுக்கு நடந்த அசம்பாவிதம் கண்டு
தலைதெறிக்க ஓடி ஒளியத் தொடங்கின விண்மீன்கள்
மேகத் திரளுக்குள் வசதியாக நகர்ந்து
அமர்ந்து கொண்ட கதிரவன்
என் வெம்மையை வைத்துக்கொண்டே
இவன்களிடம் சமாளிக்க முடியலையே
இந்த பூமி பாவம் என்றிட
இடி இடியெனச் சிரித்தது இடி
கண்ணீர் சிந்தி பூமிக்கு ஆறுதல் சொன்னது மழை

அண்டசராசரத்தையும் எனது எனது
எனக்கு மட்டுமானது
நானே உயரம்
என்று அகப்பட்டதை கைக்கொண்டு
அடுத்தவரைப் பள்ளத்தில் தள்ளியபடி
சாதி சாத்தான்
சமயப்பிசாசு
கூட்டணி வருகிறது
ஓடுங்க
அது நம்மை நோக்கிதான் வருது

நிற்க
திரும்பி
எதிர்த்து நிற்க
கைவந்தது
சமமே யாவரும் சரிசமமே
மந்திரம்
உரத்துச் சொன்னால்
ஒதுங்கும் உருவங்களைக் கண்டுகொள்

Uma Mohan’s Poem. உமாமோகனின் கவிதை

உமாமோகனின் கவிதை




காசு கொடுத்து தனியாக
சனிப்பெயர்ச்சி குருபெயர்ச்சி புத்தகங்கள்
வாங்கி வருவார் அப்பா
வீட்டுச்சுற்று முடிந்து இரவலுக்கும் போகும்

பகுதி பகுதியாய் தினசரியில் வரும் பலன்களுக்காகக்
காத்திருப்பாள் அத்தை
சின்ன பாதம் வைத்து
ராசி தாண்டி குதித்துவிடும் நட்சத்திரங்களோடு
எப்போதும்
வாய்க்கா வரப்பு தகராறு

சமயத்தில் எந்த ராசிக்கு நற்பலனோ
அதுவாக மாற்றி
வாசித்துக் கொள்வதுண்டு எதிர்வீட்டு மாமா

அன்றாடம் சேனல்தோறும்
ராசிபலன் கேட்டு முடிந்தபின் வியக்கிறாள்
அம்மா
ஒரே அளவாய்ப்பிடிக்க வராத ரவாலட்டுக்காக
தன்னை ஏசும் மாமியார்
ஆளுக்கொன்றாய் நாளை உருட்டும் சோதிடர்களை
ஒன்றுமே சொல்வதில்லையே என

இப்போது வசதி
அலைபேசி முழுக்க கொட்டுகிறது பலன்கள்
இத்தனை வருடம் பார்த்தும்
யாரை யார் பார்த்தால்
தனக்கு நல்லது எனத்தெரியாத அப்பா
நினைவாக
குறித்துவைத்துக் கொள்கிறார் பெயர்ச்சி நாளை

எப்போதாவது நடக்கிறதா
என சரிபார்த்தீர்களா
அப்பாவிடம் கேட்க நினைத்து விழுங்கிக்கொண்டேன்
நானும்
சரிபார்க்காத பலன்கள் நினைவில்

Uma Mohan Poetry in Tamil Language. Book Day is Branch of Bharathi Puthakalayam. உமா மோகன் கவிதை

உமா மோகன் கவிதை



நீதிக்குப்பின் பாசம்
பிரித்து வாசிக்கக் கற்றுக்கொண்டபின் வந்தவர்களின் பரிபாலனத்தில்
ஆலவட்டக்குடைகள் ஆரஞ்சு நிறத்தில்

கண்ணாடிக்குள் பதப்படுத்தி மிதக்கும்
கைகள் நீள வாய்ப்பில்லை
உறுதிப்படுத்திக்கொண்டபின் நீளும் கரங்களில்
ரத்தவாடை
தூக்குக்கயிற்றை
நீட்டிய குற்றரேகைகளை
ரூபாய்த்தாள்கள் கொண்டு துடைத்துக் கொள்கிறார்கள்
இரண்டெழுத்துதானே
நடுங்காமல் உறையில் எழுதப்படுகிறது “நீட்’டாக

உமா மோகன்

உமா மோகனின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும் Uma Mohan's Tamil Poem and Srivatsa's English Translation. Book Day Website is Branch of Bharathi Puthakalayam.

உமா மோகனின் தமிழ்க் கவிதையும், ஸ்ரீவத்ஸாவின் ஆங்கில மொழியாக்கமும்

Words have to be chosen with care. Once they are uttered they cannot be retracted, beware! Sage Thiruvalluvar said many centuries ago thus: யாகாவாராயினும் நா காக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு…