Teach Like Finland Book Review

1.  அப்படி என்ன இருக்கிறது பின்லாந்து கல்வி முறையில் என்று தெரிந்து கொள்வதற்காக கூகுளில் தேடிய போது மிகக் குறைந்த விலையில் இந்த நூல் கிடைத்தது. மற்றவை எல்லாம் பத்தாயிரம் தொடங்கி முப்பதாயிரம் ரூபாய் வரை ஆகும்.

பின்லாந்து நாட்டில் கல்வி எப்படி போதிக்கப்படுகிறது? உலக அளவில் தரமான கல்வி என்று ஏன் போற்றப்படுகிறது ?என்று கூறிடும் நூலாசிரியர்கள் 3 நாள் பயணம் மேற்கொண்டு.. மேலும் பல கட்டுரைகளை வாசித்து ..அங்கே நேரடி விவாதம் நடத்தி எழுதிய நூல் இது. இந்நூலை வாசிக்கும் கல்வியாளர்கள்.. சமூக செயல்பாட்டாளர்கள் நூலில் விவரிக்கப்பட்டுள்ள மிகத் துல்லியமான போதனா முறைகள் பற்றி தீவிரமாக ஆராய்ச்சி செய்வதன்மூலம் தங்கள் பகுதிகளிலும் மாற்றங்களை உருவாக்க முடியும் என்று நான் நம்புகிறேன்.

2.*பின்லாந்து நாட்டில் எல்லா மட்டங்களிலும் நம்பிக்கை (Trust)வெளிப்படுகிறது. ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துவதுடன் அமைப்புகளுக்கும் மரியாதை செலுத்துகிறார்கள். நம்பிக்கை நாட்டின் உள்கட்டமைப்பில் (Infrastructure)வெளிப்படுகிறது .சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை… நிர்வாகிகளில் இருந்து போதிப்பவர்கள் வரை …நாட்டிலிருந்து ஒவ்வொரு பள்ளி வரை.. அரசிடமிருந்து நம்பிக்கை ஊட்டப்படுகிறது.. இதுதான் பின்லாந்து நாட்டின் கல்வி சூழ்நிலை!..

3. உலக நாடுகளுக்கு இடையேயான கல்வித்தர வரிசையில் 2021ல் பின்லாந்து மூன்றாம் இடத்தில் உள்ளது.
உயர்நிலைப்பள்ளி கல்வியை நிறைவு செய்வதில் பின்லாந்துஉலகில் முதல் இடம் வகிக்கிறது .
உலகப் பொருளாதார நிறுவனம்(WEF) அறிக்கைப்படி ஃபின்லாந்து கல்வி முறை உலகளாவியது .(International)
*ஒரு நாள் வகுப்பறையில் மாணவன் 5 மணி நேரம் மட்டுமே செலவிடுகின்றான்.
*பள்ளியை விட்டு வீட்டுக்கு சென்ற பின் வீட்டுப்பாடம்(Homework) பின்லாந்தில் கிடையாது. *வேறு எங்கும் தனிப்பட்ட (Coaching/Tuition)போவதில்லை .
*மிகக் குறைவான அளவிலேயே தேர்வுகள் ஆசிரியர் தரத்தை மதிப்பீடு செய்யும் விதத்தில் அமைந்துள்ளது.
*ஆசிரியர் தொழில் மிக உன்னதமாக மதிக்கப்படுகிறது .
*மழலையர் கல்வி ஏழு வயதில் ஆரம்பமாகிறது .அதற்கு முன்பு ஒரு வருடம் ஆறாம் வயதில் சுகாதாரம் மற்றும் விளையாட்டு மூலம் கல்வி தரப்படுகிறது.
உலக அளவிலான கல்வி தர அறிக்கை (Pisa performance Report) 2001 முதல் பின்லாந்து நாட்டின் முதன்மை கல்விச்சூழலை ஆசிரியர்கள் தொடர்ந்து தக்க வைத்துக் கொண்டு இருக்கிறார்கள்.

4. பள்ளிப்படிப்பு, கல்வியில் ஒரு அம்சம் ..அதை தவிர குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து இரவு உணவு சாப்பிடுதல் ,சேர்ந்து உடற்பயிற்சி செய்தல்,நல்வ இரவு உறக்கம் அமைதல் ஆகியனகூட கல்வியில் ஒரு பகுதியாக கருதப்படுகிறது .கட்டாய கல்வி என்று இல்லாவிட்டாலும் குழந்தையை குழந்தையாகவே பேணும் முறையில் கல்வி வழிமுறை வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளும் 9 ஆண்டுகள் மட்டும் படித்தால் போதும் என்பது வரைமுறை(Mandatory)
ஸ்வீடன்,நார்வே, ரஷ்யா, எஸ்டோனியா ஆகிய நாடுகள் எல்லைகளாக உள்ளன. இயற்கை யுடன் கூடிய நவீன நகரங்கள் கொண்ட நாடாக… மிக தூய்மையான வசதிகள் நிறைந்த காடுகள் நிறைந்த நாடாக பின்லாந்து விளங்குகிறது.

5. தங்கள் நாட்டில் உள்ள ஒவ்வொரு குழந்தையும் சரிசமமான அளவில் கல்வி பெறும்கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது .மதிய உணவு ஏற்பாடு செய்து தரும் அரசு ,வீட்டிலிருந்து பள்ளிக்கும் பள்ளியிலிருந்து வீட்டுக்கும் போக்குவரத்து அரசு சார்பில் ஏற்பாடு செய்து தருகிறது. கல்விக் கட்டணம் எந்த நிலையிலும் இல்லை .சீருடை கிடையாது. உயர்நிலை கல்வி வரை பாடப் புத்தகங்களை ..பிற எழுதுபொருட்களை அரசே வழங்குகிறது .அதற்கு பின் மேல்நிலைக் கல்வி.. கல்லூரி பல்கலைக்கழக அளவிலான பாட புத்தகங்களை .அவர்களே தேர்ந்து எடுத்து வாங்கி வாசித்துக் கொள்ளலாம். ஒவ்வொரு பள்ளியிலும்.. ஒவ்வொருவகுப்பிலும் ..தனித்தனியாக ஒவ்வொரு மாணவனுக்கும் தனித்தனி கல்வி போதனை பாடத்திட்டம் என்கின்ற அளவிற்கு நுணுக்கமாக(micro level)அந்தந்த பள்ளி ஆசிரியர்களால் உருவாக்கப்படுகிறது என்பதை சிறப்பாக கூற வேண்டும் .எல்லா வகுப்பு மாணவர்களுக்கும் ஐ பேட் போன்ற டிஜிட்டல் வசதிகள் பள்ளி வகுப்பிலேயே செய்து தரப்படுகிறது .7 வயதிலிருந்து 16 வயது வரை ஒரு மாணவனுக்கு ஒரே ஆசிரியர்… ஒரே பள்ளியில் எப்படி சாத்தியம் என நூல் விளக்குகிறது.

6. ஆரம்பக் கல்வி ஒன்று முதல்ஆறு வரை Gradeகள் உள்ளன .பின்னிஷ் மொழி ,கணிதம் உயிரியல்,புவியியல் உடற்கல்வி, மதம் இசை ,கலை, கைவினைப் பயிற்சி..
மூன்றாம் கிரேடில்ஆங்கிலம் மற்றும் பிற நாட்டு மொழிகள்.
கிரேடு நான்கில்பௌதிகம் ,இரசாயனம் ,வரலாறு போதிக்கப்படுகிறது.

பின்லாந்தில் கல்வி:

Quality, Efficiency ,Equity ,Internationalism= four education pillers.. அதாவது தரம்.. திறமை ..சம வாய்ப்பு.. சர்வதேச மனப்பான்மை ஆகியவை கல்வியின் நான்கு தூண்களாகபின்லாந்து பார்க்கிறது. கல்வியும், பண்பாடும் அரசியல் சாசனப்படி அடிப்படை உரிமை ஆக்கப்பட்டுள்ளது .வாழ்க்கை முழுவதும் படிப்பதுவும், இலவச கல்வி என்பதும் உத்திரவாதப்படுத்தப்பட்டுள்ளது. சமூக நலத்திற்கு கல்வியே அடிப்படை என்பதை பின்லான்டுஉணர்ந்து செயல்படுகிறது.
பின்லாந்தில் பள்ளி காலை 6 மணியிலிருந்து எட்டு மணிக்குள்தூக்கக் கலக்கத்துடன் பள்ளிக்கு கிளம்பும் நிலை கிடையாது .9 மணியில் இருந்து
9. 45 மணிக்குள் தயாராக இருந்தால் (சரியான தூக்கம் ..காலை நேரத்தில் சத்தான உணவு ஆகியவை ஒருவரின் உடல் நலத்திற்காக அவசியம் என கருதப்படுகிறது) பள்ளிக்கு அரசு வாகனம் அழைத்து செல்லும். அதே போல மதியம் இரண்டிலிருந்து இரண்டு2. 45 மணியளவில்அரசின் (மதிய உணவை சாப்பிட்டபின்) பள்ளியிலிருந்து வீட்டிற்கு அரசு வாகனம் கொண்டு விடும் .ஒவ்வொரு பாடவேளையும்(Periodநீண்டிருக்கும் ..அதேபோல பாட வேளைக்கு இடையிலான இடைவேளையும் நீண்டதாக இருக்கும். வகுப்பு கூட்டமாக இல்லாமல் ஒவ்வொரு மாணவனின் முகமும் நன்றாக தெரியும்படி குறைவான எண்ணிக்கையில் இருக்கும் .ஆறு வருட கல்வியில் ஒரே ஆசிரியர் ஒரே பள்ளியில் தொடர்ந்து அதே மாணவனுக்கு பாடம நடத்தக் கூடிய சூழல் இருப்பதால் அந்த குழந்தையுடன் ஆசிரியர் ஒரு குடும்ப உறுப்பினராக மாறிவிடுகிறார். அந்த ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையில் நல்ல பிணைப்பு.. புரிதல் ஏற்பட்டு விடுகிறது .அவனைப் பற்றி சரியாக மதிப்பீடு செய்து அவனுக்கு என்ன தேவை.. எதில் திறமையாக இருக்கிறான் என கவனித்து அவனுக்கென தனி பாடத்திட்டத்தை ஆசிரியர் உருவாக்கி அவனுடைய கல்வியை பரிபூரணமடைய செய்கிறார். ஒவ்வொரு மாணவனின் கல்வித் திறமைக்கும் முன்னேற்றத்திற்கும் அவனது ஆசிரியரே பொறுப்பாக்கப்படுகிறார் பின்லாந்து நாட்டில்! பெரும்பாலான பள்ளிகள் அரசிடம் இருந்து பணம் பெறுகின்றன.

7.பின்லாந்தில் கல்வி முறை :

பின்லாந்து நாட்டில் கல்வி முறையை உருவாக்குவது ..அதை நிர்வகிப்பது ஆகியவை அந்த நாட்டில் உள்ள பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் உருவாக்கப்படுகிறது. இங்கே உள்ளது போல அரசியல்வாதிகளால் அல்ல.
பின்லாந்து நாட்டில் பிறந்த ஒவ்வொரு குழந்தையும் அது கிராமத்திலோ, நகரத்திலோ இருக்கலாம் ..ஏழையாகவோ, பணக்காரனாகவும் இருக்கலாம் ..அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் எல்லோருக்கும் ஒரே மாதிரியான கல்வியை வழங்குவதை அரசு உத்தரவாதப்படுத்தி இருக்கிறது. மூன்றில் இரண்டு பகுதி மாணவர்கள் ஒன்பது ஆண்டு கல்வியை முடித்த பிறகு மேல்நிலைக் கல்விக்கு செல்கிறார்கள். 1960 இல் பின்லாந்தின் கல்வி முறை அந்நாட்டுக்கு அருகே இருந்த சோவியத் யூனியன் கொள்கையால் ஈர்க்கப்பட்டு இருந்தது.
எந்த ஒரு வகுப்பிற்கும் கல்விக் கட்டணம் கிடையாது. ஆரம்பக் கல்விக்கு தேவைப்படும் பாடநூல்கள் ,எழுது பொருட்களை அரசு வழங்குகிறது . Upper Secondary Educationalல் புத்தகம் ,எழுது பொருட்களை மட்டும் மாணவர்கள் வாங்கிக் கொள்ள வேண்டும். அதற்கு பிந்திய படிப்பிற்கு தேவையான உதவிகளையும் ,கல்விக் கடனையும் அரசு ஏற்பாடு செய்து தருகிறது.

அரசின் பணி :

அரசு, தொழிற்சங்கங்கள் ,தொழில் அதிபர்கள் சங்கம் என்று மூன்று பேரும் கூட்டு சேர்ந்து அரசின் கல்வித் திட்டத்தை வகுப்பதில் கூட்டாக செயல்படுவது பின்லாந்தின் சிறப்பம்சமாகும். கல்விச் சீர்திருத்தத்தில் நாட்டின் பல பிரிவினரும் உண்மையாகவே ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆசிரியர்கள் ,ஆசிரியர் சங்கங்கபிரதிநிதிகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறார்கள். கல்வித்திட்டம் மேலே மத்திய அரசால் வகுக்கப்பட்டாலும் அதை அப்படியே அமலாக்காமல் உள்ளூர் பள்ளி வகுப்பின் தேவைக்கேற்ப நெகிழ்வுற மாற்றிக் கொள்ளக்கூடிய சுதந்திரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது .ஏழு வயதிலிருந்து 16 வயது வரை அதே பள்ளியில் ஒரே பள்ளியில் படிக்கிறான். மொழி கல்விக்கு முன்னுரிமை தரப்படுகிறது. ஸ்வீடிஷ்இரண்டாம் மொழியாகவும் ஆங்கிலம் மூன்றாம் மொழியாகவும் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது. ஆங்கில பாடம் நடத்துவதற்கு ஐரோப்பிய யூனியனைச்சேர்ந்த ஆசிரியர்களுக்கு மட்டுமே வாய்ப்பு தரப்படுகிறது. இங்கே பொருளாதார ரீதியில் ஏற்ற இறக்கம் அதிகம் கிடையாது .மாணவர்கள் வகுப்பில்… சமுதாயத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என ஆசிரியர் போதிக்கிறார் .பொறுப்பை எடுத்துக் கொள்வதற்கு ஒவ்வொரு மாணவனையும் ஊக்கப்படுத்துகிறார். சாதாரண பாட்டாளி முதல் கொண்டு கல்லூரி கல்வி பெற்ற பணியாளர்வரையாராக இருந்தாலும் அவரவர் பணிக்குரிய மதிப்பு என்கின்ற வகையில் எல்லோருக்கும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும் என்ற நியதியை மாணவர்களுக்கு உணர்த்துகிறார்கள். மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதுவதற்காக மூன்றாண்டுUpper Secondary School Education நடைபெறுகிறது .இதில் தகுதி பெறுவோர் பல்கலைக்கழகத்திற்கு செல்வார்கள். அதேபோல தொழில்கல்விக்கு செல்லஉயர்நிலை படிப்புக்கு பின் செல்வதற்கு வாய்ப்பு உள்ளது. இவர்களும் மெட்ரிகுலேஷன் தேர்வு எழுதி பல்கலைக்கழகம் செல்ல வாய்ப்பு தரப்படும். ஒவ்வொரு நாளும் ஒரு அரை மணி நேர அளவிற்கே வீட்டுப்பாடம் தரப்படுகிறது.

ஆசிரியர் :

வகுப்பில் மாணவருடன் இருக்கும் நேரம் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் ஒவ்வொரு மாணவனை பற்றியும் தகுதி மதிப்பீடு செய்ததன் அடிப்படையில் அவர்களுக்கான பாடத்திட்டத்தை வகுப்பதற்கான புதிய வழிமுறைகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஆசிரியர்கள் ஈடுபடுவது குறிப்பிடத்தக்கதாகும். அதற்கு ஏற்ப புதிய நூல்களைப் படிப்பதும் சொந்தமாக உருவாக்குவதும் இங்கே நடைபெறுகின்றன .குழு ரீதியான விவாதங்கள் ஏற்பாடு செய்யப்படுகிறது. உலக அளவில் 15 வயதில் உள்ள குழந்தைகளில் கணிதம் .அறிவியலில் சிறப்பிடம் பெறும் மாணவர்களாகமுதல் இடத்தில் பின்லாந்துஉள்ளார்கள். ஆசிரியர் பணிக்கான தேர்வு இங்கே மிக கவனமாக நடத்தப்படுகிறது. திறமை மிக்க மாணவர்கள் மட்டுமே பல்கலைக்கழக கல்வியில் பட்ட படிப்பிற்கு தெரிவாக முடியும். முதுகலை பட்டம் கல்வி இயலில் பெற்றவர்களுக்கே வேலை வாய்ப்பு வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது .தங்கள் வாழ்நாள் முழுவதும் பரிபூரணமான மாணவர்களை உருவாக்குவதை மட்டுமே கடமையாகக் கொண்டுள்ளனர் பின்லாந்து ஆசிரியர்கள்.

8. உலகத்திலேயே பின்லாந்து கல்வி முறை ஏன் சிறப்பாக இருக்கிறது என்பதற்கான 9 முக்கிய அம்சங்களை இங்கே பட்டியலிடலாம் .அதற்கு முன் வகுப்பு விபரங்களை பார்ப்போம்.
1.Early childhood education and Care. 5வயதில்
மழலைக்கல்வி.
2.Pre Primary Education (ஆறாம் வயதில்)
3.Primary education 7-16 வயது வரை
4.Upper secondary education (Vocational education and training/General upper secondary education)
5.Hr.education(by universities/Universities of applied sciences.
நாட்டின் கல்வித் திட்டத்தை உருவாக்கி அமல்படுத்துவதில் கல்வித்துறை, ஆசிரியர்கள், நகராட்சி ,பெற்றோர் ஆராய்ச்சியாளர்கள், வணிகப்பிரிவினர் என எல்லோரும் முக்கிய பங்கு வைத்து எல்லா குழந்தைகளுக்கும் சமமான கல்வி கிடைப்பதை உறுதி செய்கிறார்கள் .
இனி பின்லாந்தின் கல்வி முறை கூறுகளின் 9 முக்கிய அம்சங்களை பார்க்கலாம் .
1. சமவாய்ப்பு 2.விளையாட்டுடன் கல்வி.
3. தனிப்பட்ட கவனத்துடன் பாடம்
4. திட்டமிடப்படாத தேர்வு
5.மிகக் குறைந்த வீட்டுப்பாடம்6 உயர் தொழில்நுட்ப உதவி வகுப்புகளில் .7.வாழ்நாள் முழுவதும் கல்வி 8.எல்லா தரப்பினருக்குமான கல்வி தனி(inclusive) 9அதிகாரம் பெற்ற ஆசிரியர்கள் (autonomous)

நாடு முழுவதும் பரவலாக நூலகங்கள்.. கலைக்கூடங்கள் ..அருங்காட்சியகங்கள்.. உடற்பயிற்சி விளையாட்டு மைதானங்களால் பள்ளிகள் சூழப்பட்டிருக்கின்றன. ஆரம்பக் கல்விக்கு தேசிய அளவில் பொது தேர்வு இல்லை. ஆனால் ஒவ்வொரு ஆசிரியரும் தன் ஒவ்வொரு மாணவனையும் தனியே கவனித்து மதிப்பீடு செய்து அறிக்கைகளை பராமரிக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

9. பின்லாந்தின் தலைநகர் ஹெல்சிங்கி World design capital ஆக உள்ளது என்பதுஒரு தகவல்.

ஒவ்வொரு வகுப்பிற்கும் பொருத்தமான பாடத்திட்டத்தை உருவாக்குகின்ற அளவு திறமை பெற்றவராக ..அதற்கு தகுந்த நூல்களை தெரிவு செய்பவராக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு ஆசிரியரையும் கவனிப்பதற்குதான் பள்ளிகளில் Principal என்பவர் இருக்கிறார்.. மாணவர்களுக்கு அல்ல!
கல்வி நிறுவனங்களுக்கு இடையே போட்டி என்பதை விட ஒத்துழைப்பு என்பது உள்ளது.
தங்கள் மாணவர்களின் திறமையை அதிகப்படுத்த குழு விவாதமுறைக்குமுக்கியத்துவம் தரப்படுகிறது.
இரக்கம் (Kindness)அடுத்தவர் இடத்தில் தன்னை வைத்துப் பார்ப்பது(Empathy) ஆகிய இரண்டு அம்சங்களும் ஆரம்பம் முதலே மாணவர்களுக்கு ஊட்டப்படுகிறது .இங்குள்ள ஆசிரியர்களுக்கு தொடர்ந்து ஆராய்ச்சி மனப்பான்மை தேவைப்படுகிறது .அதிக பட்டங்கள் பெற்றோரே ஆசிரியர் பணிக்கு தெரிவு செய்யப்படுகிறார்கள். Kinder garden ஆசிரியருக்கு 2600 Primary School ஆசிரியருக்கு 3200 Subject ஆசிரியருக்கு 4300 என பின்லாந்து பணம் ஊதியமாக தரப்படுகிறது.சர்வதேச தரத்திலான ஆசிரியர்கள் மிக அதிக ஊதியத்தில் வேலைக்கு அமர்த்தப்படுவது குறிப்பிடத்தக்கது .கல்வி இயல் துறை படிக்க 5 – 8 ஆண்டுகள் செலவு செய்ய வேண்டும் .ஆரம்பக் கல்வி ..உயர்கல்வி.. மேல்நிலைக் கல்வி.. பல்கலைக்கழக கல்வி.. என ஒவ்வொரு வகுப்பிற்கும் கல்வியியல் படிப்பிற்கு தனித்தனி பல்கலைக்கழகங்கள் உள்ளது.
கல்வி சுற்றுலா என்பது ஆண்டு முழுவதும் திட்டமிடப்படுகிறது .கலந்துரையாடல் முறை.. ஒரு பிரச்சனையை அறிந்து தீர்வு காணும் முறை.. சமூகத்தில் பழகும் முறை.. தங்களை தாங்களே கவனித்துக் கொள்ள தயாரித்துக் கொள்ளுதல் போன்றவை மாணவர்களுக்கு பாடத்தின் ஊடே பாடமாக நடத்தப்படுகின்றன. 14 பல்கலைக்கழகங்கள் உள்ளன ஆரம்பக் கல்வி தொடங்கி அறிவியல் ஆராய்ச்சி படிப்பு வரை தொடர்ந்து சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன .2016 முதல் புதிய கல்வித் திட்டம் ஆசிரியர் திறனுக்கு முழு மதிப்பு தந்து உருவாக்கப்பட்டுள்ளது.

10″The Finnish Teachers’ Educational Forum” என்ற அமைப்பு மூலம் ஆசிரியர்களுக்கு புத்துணர்வு பயிற்சியும் கலந்த ஆலோசனை மூலம் புதிய கல்வி பயிற்சி வகுப்பு திட்டங்களும் அமலாக்கப்படுவது சிறப்பம்சமாகும்.
சில போதனா முறைகளை மட்டும் ஆங்கிலத்தில்
பட்டியலிட்டு விட்டு நூல் அறிமுகத்தை நிறைவு
செய்வோம். (அதன் முழுவிவரத்தை தேடித்
தெரிந்துகொள்ள பல வசதிகள் உள்ளன.)
1. Lecturing
2.Circle time activities
3. simulation method
4.modelling method
5. Online learning tools
6. game simulation
7 collaborative problem solving
8 discussion groups
9.peer instruction
10 .active learning
11.project based learning
12.unit tests
13 .assignments
14 class room quizzing and brain gym
15. remedial teaching
16 presentations
17 .zoom In
18 .chalk talk
19 .work books
20 .posters and reading conference
21 .self learning tools
22. competitions
23 .object based learning
25 .club activities
26 adaptive teaching
27 cross over learning
28. case study
29. self learning
30. team projects
31.research projects
32 gesturing
33 .instructional videos
34. social media
35 humour
36 .panel discussion
37 .modelling
38 .discovery method
39. demonstration method
40 role playing method
41. oral questions
42. questioning method
43 .discussion method
44. problem based learning
45 .assignments
46 .make free and open source technologies available to teachers and students
47 .cross over learning
48. dramatic method
49.Pen Pals
50. audio tutorial lessons
51 .mobile applications
52. flowcharts
53 brain storming
54 .simulation games
55. psycho motor development methods
56. Inquiry method
57.ensure scientific literacy within the curriculum
58 webinars
59.Process approach method
60.hands -on hands -on and
61.Seminors
62.Chalk and talk
63.School labs
64. content analysis
65 .reciprocal teaching
66 .assignment method
67 .micro teaching
68 .mastery learning
69 .direct instructions
70 .personalized instructions
71. recitation
72. memorization
73. reasoning
74. social emotional learning
75. instructional scaffolding
(சில தலைப்புகள் நூலிலேயே திரும்ப ..வேறு
ஓர் விளக்கத்துடன் வந்துள்ளது.24 விடுபட்டுள்ளது)

11. நிறைவாக ….
நூலாசிரியர்கள் மூன்று நாட்களும் கல்லூரிகள் பல்கலைக்கழகங்களுக்கு நேரடியாக சென்று பார்த்த வகுப்புகளையும் அங்கே இடம்பெற்றிருந்த பல்வேறு விதமான கற்பிப்பு உபகரணங்களையும் நூல் முழுக்க சிறப்பாக புகைப்படங்கள் மூலம் நிரப்பியுள்ளனர் .
எப்படி இஸ்லாமியர்கள்மெக்காவுக்கு மெதினாவுக்கு செல்கிறார்களோ …கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்கிறார்களோ..இந்துக்கள் தங்கள் கோயில்களுக்கு செல்கிறார்களோ ..அதே போல ஆசிரியர் ஒவ்வொருவரும் பார்க்க வேண்டிய புண்ணிய பூமி என்றால் அது பின்லாந்து என
இந்த நூலாசிரியர்கள் மிகவும் உணர்வுபூர்வமாகவும் ..உணர்ச்சி பூர்வமாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள் கல்வி முறையை பற்றி மேலும் விரிவாக அறிந்து கொள்ள நிறைய கட்டுரைகள் இணையங்களில் கிடைக்கிறது அவற்றையும் வாசிக்கலாம்.
(என்ன…பின்லாந்தின் பெரும்பாலானவர்கள்
பகுத்தறிவுவாதிகள்…நம்ம ஊர் பாஷையில்
நாஸ்திகர்கள்…அவ்வளவுதான்..)

நூலின் தகவல்கள் 

 

நூல் :Teach Like Finland

ஆசிரியர்கள்: Dr.Dheeraj Mehrotra(Pricipal,Kunwars Global School,Lucknow)
                                 Dr.Dinesh Kamra(CEO of AKS Worldwide)

பக்கங்கள்: 122

விலை : ரூ799/-

 

நூலறிமுகம் எழுதியவர்

மன்னை இரா.இயேசுதாஸ்

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *