இசை என்னும் அரசியல் (நிற கவர்ச்சி இசை அரசியல்…) -4 : மு.வெ.ஆடலரசு, ஆய்வாளர்

 

இயல்பாகவே இசை என்னும் தொகுப்பிலிருந்து பல்வேறு  பரிணாம வளர்ச்சிகளை நாம் பார்க்க முடியும். ஒரு மொழியிலிருந்து இசைக்கருவிகள் தோன்றுகின்றன என்று கூறப்படுகிறது. அதைப்போல் ஒரு மொழியிலிருந்து இசைக்கருவிகளை நாம் இனம் காண முடியும் என்றும்  நிரூபிக்கிறது.

கலை, இலக்கியங்கள் யாவும் மக்களுக்கானது என்று ம.சே துங்  கூறுகிறார்.  இசை என்பது பாடுகளிலிருந்து வரும் ஒரு உணர்ச்சியின் வெளிப்பாடு.  உலகம் முழுவதும் பேசப்படுகிறபொருள்  இசை என்று கருதப்படுகிறது.  ஆனால் இசைப் அவர்களின் உடல் நிறத்தில் ஒளிந்திருக்கிறது இசைக்கு  அரசியல் மகுடம் சூட்டுகின்றனர். கறுப்பரின இசைகள், நூற்றுக்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள், பாடகர்கள் இவ்வுலகில் தோன்றியிருக்கின்றனர் .

ராக் அண்ட் ரோல், ரேப் இசையில் தோற்றுவாயாகக் கருதப்படுகிறது.  குறிப்பாக ஒரு இனத்தின் ஒடுக்கப்படுவது என்பது அவர்கள்  மீதானே ஒரு கலாச்சார, பண்பாட்டு, இசை ஒடுக்குமுறை தான். யாருடைய இசையை இந்த உலகம் கேட்டு வியக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது யார் என்பதே தெரியாமல் இந்த இசை என்கிற பேராயுதம் இந்த உலகத்தில் பயணித்துக் கொண்டிருக்கிறது. மேலை நாடுகளில், ஆப்பிரிக்கக் காடுகளில் வாழக்கூடிய பழங்குடி இன மக்கள், ஆஸ்திரேலியாவில் வாழக்கூடிய பழங்குடி மக்கள் இப்படி  பல்வேறு ஆதிக்குடிகளாக வாழுகின்ற மக்களுக்கு மத்தியில் தான்தோன்றித்தனமாக தாங்களே ஒரு இசைக் கருவியை உருவாக்கி தனக்கான ஒரு இசையை, தனக்கான ஒரு லயத்தை, தம் இனத்தினுடைய அடையாளமாக அவர்கள் நிலை நிறுத்திக் கொள்கின்றனர்.

இசை இரண்டு வகையாகப் பிரிக்கப்படுகிறது “ஒன்று தோல் இசைக் கருவிகள்” மற்றொன்று “நரம்புக் கருவிகள்”. கலை இலக்கியங்கள் யாவும் மக்களுக்கு என்கிற வர்க்கம் சார்ந்த முழக்கம் நூற்றாண்டுகள் கடந்தும் அதன் உள்ளீடான வலிமையை இழக்கவில்லை குறிப்பாக மக்களின் மரபிசை நாட்டுப்புறப் பாடல்கள் வாழ்வின் அர்த்தங்களையும்,  அவலங்களையும்,  துயரங்களையும்,  மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் அதே வேளையில் மாறிவரும் நவீன உலகில் மக்களிடமிருந்து வெளிப்படுத்தும் புதிய சிந்தனைகளுக்கு உதவவில்லை. இசையை ரசிப்பதும், சிலாகிப்பது, மகிழ்ச்சிக்கான அடையாளம்.  அதேவேளையில் மக்களுக்கு தீர்வு என்பது கொள்கை சார்ந்த புதிய சிந்தனைகள் இருக்கமுடியும் ஒடுக்குமுறையை எதிர்ப்பதற்கான வழி இங்கு இருந்து துவங்குகிறது  மற்றொரு வழி இல்லை.

April 8, 2007 – Bob Dylan – It Ain't Me, Babe (Amsterdam, Heineken ...

இசை மூன்று தனித்தனி அறைகள் கொண்டவை.  இம்மூன்றும் அதன் கணக்கின் இருப்பில் உட்பட்டவை கவிதை. இசை, பாடும் போது வெளிப்படுகிறது. புதுக்கவிதை, ஹைக்கூ, கவிதை வடிவங்கள் பலவாக இருப்பினும் காலத்திற்கு உட்பட்டது தொடர்ச்சியான வாழ்வில் தவிர்க்க முடியாத ஒன்றாக இருப்பதால் இங்கே முக்கியத்துவம் பெறுவதில்லை என்று பாவலர் சுப்பையா தன் கருத்தை முன் வைக்கிறார்

உலகம் முழுக்க இருக்கக்கூடிய இசைக்கருவிகளை நாம் பார்க்கக்கூடிய இனக்குழுக்களின் பாரம்பரியத்தை நாம் உற்று நோக்குவோம்  ஆனால் இந்த வாசிப்பு முறை என்பது இசை மரபணுக்களை நிஜமாகவே வெளிப்படுத்துகிறது.  நம்பிக்கையான கட்டமைப்பை உருவாக்குகிற பணியை இசை செய்து கொண்டிருக்கிறது. பாரம்பரியம் என்றும் பண்பாடு என்றும் பரம்பரை பழக்கவழக்கம் என்றும் வழிவழியாக ஒரு இனக்குழு இந்த பண்பாட்டைப் பற்றிப் படர்ந்து வளர்ந்து வருகிறது.

உலக கண்களின் பார்வையில் அடர்த்தியான நிறம் கவர்ச்சியைக் கொண்ட இனக்குழு மக்கள் பெரும்பாலும் பலம் படைத்தவர்களாகவும், தங்களுடைய கைகளிலோ அல்லது ஒரு குச்சியையும் வைத்துப் பெருத்த இசையை எழுப்பக்கூடிய வல்லவர்களாகத் திகழ்கின்றனர். இசைக்கருவிகளை வாசிக்கக்கூடிய அந்த இனக்குழு மரபினர் பெரும்பாலும் கருத்த நிறத்தைக் கொண்டவர்களாகவே வாழ்கின்றனர். அவர்களின் மரபு, அவர்களின் பாரம்பரியம் அனைத்திலும், சடங்குகளிலும் தன்னுடைய இசையைப்  புகுத்தி தெய்வங்களைப் போல வழிபட்டு வருவதை நாம் பார்க்க முடிகிறது.

மெல்லிசை இசைக்கருவிகளை வாசிக்கும் மரபினரே அவர்களுடைய பாரம்பரியத்தை நாம் பார்ப்போமானால் அவர்களின் பாரம்பரியம் என்பது மிகச் சுருக்கமான ஒன்றாகக் காணப்படுகிறது. இரண்டாம் தரக் குடிமக்களாக வாழும்  இசை மரபினர் தன்னுடைய இசை நுணுக்கங்கள்  விரல்நுனியில் வெளிவருகின்றன. அடிப்படையில் பெருத்த ஓசை கொண்ட இசைக்கும்,  காற்றைக் கிழித்துக்கொண்டு அதிர்வை உண்டாக்கக்கூடிய மெல்லிய இசைக்கும் ஆன ஒரு தர்க்க போர் தான்  இசைப் போர்.

உலகில் மிகப் புகழ்பெற்ற ரெகே இசைக் கலைஞர்களில் ” பாப் மார்லி” த வெய்லர்ஸ் இசைக்குழுவின் தலைவர் ஆவார். ராஸ்தஃபாரை இயக்கத்தில் ஒரு முக்கியமானவர் பாப்  மார்லி  ஒரு பாடகர் ,பாடலாசிரியர் மற்றும் அவர்  உலகளவில் இசை கலாச்சார சின்னமாக உள்ளார். அவர் சிறந்த கித்தார் இசைக்கலைஞர்  ரெக்கே , ஸ்கா  போன்ற இசை கருவிகளையும் வாசிக்கும் திறம் பெற்றிருந்தார் 1963 அம் ஆண்டு த வெய்லர்ஸ் என்ற இசைக் குழுவைத் தொடங்கினார்.  அவர் தனக்கென தனி குரல் பாணி ,  தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தைக்  கொண்டிருந்தார்.    த வெய்லர்ஸ் குழு தனக்கென சொந்தமாகப் பல பாடலைகளை வேகமாக வெளியிட்டது லீ சிகிரெட்ச் பெர்ரி,  வைலர்ஸ் குழுவின் தயாரிப்பாளராக இருந்தார் ஆனால் அவரால் ஒரு இசைக்குழுவைத் தொடர்ந்து இயக்க முடியவில்லை. இசை உணர்ச்சி பெருப்பாலும்  அரசியல் தாக்கத்தை  உண்டாகிறது .  “இசை என்பது உணர்ச்சியின் வெளிப்பாடு என்கிறார் இசையோடு  வார்தகைளை சேர்த்து வெளிப்படுத்தும் போது உணர்ச்சிப்பாடல்கள் என்ற புது வடிவம் கட்டமைக்கப்படுகின்றது” என்று  மரியா லீச்  ஒரு கருத்தை முன்வைக்கிறார்.

பாப் மார்லி in tamil | Bob marley story in tamil - YouTube

கழனிகளில் கடுமையாக வேலை செய்த இனக்குழு மக்கள் அவனுடைய இசைக்கருவிகள் எல்லாம் பெருத்த  சக்தி கொண்டு கைகளால் இசைத்து மகிழ்ச்சியைத் தரக்கூடிய கருவிகளாகத் திகழ்கின்றன.  அவர்கள் பெரும்பாலும் நிறத்தால் கருத்தவர்களாக, சூள  கருப்பர்களாக இருக்கின்றனர். மேல்தட்டு  கலைஞர்கள் அந்த இசை மரபைக் கொண்ட இனக்குழுக்களைப் பார்த்தோமேயானால் பெரும்பாலும் வெண்ணிற தோல் கொண்ட குழுவாகவே காட்சியளிக்கின்றனர்.

மௌனமாகவே  இந்த உலகில் நிறத்திற்கு எதிரான இசைப் போர் இங்கே நடைபெற்றுக்கொண்டிருந்தது .அந்த வகையில் கறுப்பர் இனக் குழுவிலிருந்து வந்த பாப் மார்லி, மைக்கேல் ஜாக்சன்.  பாப் மார்லி என்ற இசைக் கலைஞனின் இசை வெளிப்பாடு மொழி, இனம், கடந்து இசை என்பதிற்கான  புரிதலைக் கொண்டு சேர்த்த பணியை பாப் மார்லி  இசை நிகழ்த்திக் காட்டி இருக்கிறது என்பதற்குச் சான்றுகள் ஏராளம்.  தன்னுடைய பாடலால், இசையால், நடனத்தால் இந்த உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த “மைக்கல் ஜாக்சன்”  கறுப்பர் இனத்தில்  பிறந்து வந்த ஒரு கலைஞன் அதற்கான அடக்குமுறைகளை ஒடுக்குமுறைகளை தன்னுடைய இசைப் பயணத்தில் கண்டு கோலோச்சிய வேண்டிய சூழலை உருவாக்கிக்கொண்டு. தன்னுடைய மரபு நிற அடையாளத்தை மாற்றிக் கொள்ளக்கூடிய அளவிற்குக் கவர்ச்சி இசை அரசியல் அங்கே செயல்பட்டு இருக்கிறது என்பதற்குச் சான்று நமக்குப் புலப்படுகிறது.

தன்னுடைய பாரம்பரியத்திலிருந்து இம்மி அளவும் மாறாமல் வாழ்க்கை கோட்பாடுகளைக் கொண்டு தமக்கென்று ஒரு இசை மரபை உருவாக்கிக் கொள்கிற பெரும்பாலும் உழைக்கும் மக்கள் மத்தியில் குறிப்பாக கறுப்பின மக்கள் மத்தியில் இந்த பண்பாடு வழிவழியாக பாதுகாத்து வருவதை நாம் பார்க்க முடிகிறது.  ஒரு நரம்புக்கருவி இல்லை என்று சொன்னால் அடுத்த கருவிக்கு அவர்கள் தங்களை ஆயத்தப்படுத்திக் கொள்கிற முறையை நாம் பார்க்கிறோம்.

Michael Jackson: Fans divided over BBC's The Real Michael Jackson ...

ஒரு இசையை, லயத்தை, ஓசையை நாம் வெளிக்கொணரும் பொழுது அதற்கான சூழலைக் கட்டமைத்துத் தருகின்றோம். அடிப்படையில் இது ஒரு மறைமுக போர்.  இசையில் இருக்கக்கூடிய கவர்ச்சி என்கிற அந்த அரசியலை உடைப்பதற்கு மேலை நாடுகளிலும், இந்தியத் தத்துவ மரபில், தமிழக சூழ்நிலையில் ,தமிழ் அறிஞர்களும் செயலாற்றியதை  நாம் பார்க்கமுடிகிறது.

தன்னுடைய சொந்த செலவில் தமிழிசையின் உடைய பாரம்பரியத்தை, பண்பாட்டை இந்த மக்களுக்குக் கொண்டு சேர்க்கும்  பணியை தன்னுடைய வாழ்நாளில் தொண்டாற்றி மறைந்த “ஆபிரகாம் பண்டிதர்” அவர்களுடைய பணி போற்றுதலுக்குரியது.  அடிப்படையில் ஆபிரகாம் பண்டிதர் அவர்கள் ஒரு நாடார் சமூகத்தைச் சார்ந்தவர். கிறிஸ்துவ மரபைப் பின்பற்றி வந்த ஒரு மனிதர். குறிப்பாக அவர் கறுப்பு நிறத்தை,  உடல் அமைப்பைக் கொண்ட ஒரு அறிஞசர். அவர்களுடைய பணி என்பது பெரிதும் வெளியே பேசப்படும் பொருளாக அமையப் படுவதில்லை. சண்முகம் ராஜரத்தினம் பிள்ளை, வீணை தனம்மாள், இவர்களையெல்லாம் நாம் குறிப்பிட்டுச் சொல்லிவிடமுடியும்.  இவர்களுடைய இந்த இசைமரபு, பண்பாட்டை மாற்றி தமிழிசையை முன்வைத்தார் இவர்.

ஆபிரகாம் பண்டிதர் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் ஒரு மிகப்பெரிய தமிழிசை  மரபுடைய ஆராய்ச்சியைச் செய்தவர். அவரை  தமிழ்ச் சமூகம் புறம் தள்ளியது காரணம் அவர் கறுத்த நிறம் கொண்ட தமிழன் என்பதால் கூட இருந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

இப்படி பல்வேறு நிகழ்வுகளில் நமக்கு நினைவுபடுத்துகிறது. வெண்மையாக இருப்பவன் பொய் சொல்ல மாட்டான், கறுத்த நிறத்தில் இருப்பவன் உண்மையைப் பேச மாட்டான் என்கிற போலியான கருத்துரை இந்த சமூகத்தின் மத்தியில் பரப்பப்பட்டு இருக்கிறது.  ஒரு அரசியல் இங்கே காட்டப்படுகிறது நிறத்தால் உயர்வு தாழ்வு என்கிற இந்த மனப்பான்மையை ஒரு மனிதனுக்கு மட்டும் அல்லாது அவர்களுக்கென்று வைத்திருக்கக்கூடிய பண்பாடுகளிலிருந்து தெய்வங்களிலிருந்து இசைக் கருவிகளிலிருந்து விலங்குகளிலிருந்து வாழ்க்கை  முறையிலிருந்து அவர்களை இனம் காட்டப்படுகிறது.

இன்று இவர் - ஆபிரகாம் பண்டிதர் - 01/09 ...

இசை மரபு என்பது மரபணுக்களின் என்ன கடத்தல் என்பதை இங்கே நாம் பார்க்க வேண்டும். வந்தவர்கள் எல்லாம் தனக்கு ஒரு போலியான  பண்பாட்டை உருவாக்கி வைத்துக் கொண்ட இந்த சமூகத்தில்.  இந்த மண்ணோடும்,  மக்களோடும் வாழ்ந்து கொண்டிருக்கிற பெரும் நிலப்பரப்பு கொண்ட  முன்னோடிகள் தமக்கென்று ஒரு பண்பாட்டைக் கட்டமைக்கத் தவறியதற்கான காரணங்களை நாம் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.  தன்னிடம் இருக்கக்கூடிய பண்பாட்டை, கலாச்சாரத்தை உணர முடியாத ஒருவன் நுகர்வு கலாச்சாரத்தின் மீது ஆதிக்கம் செலுத்துகிறான், ஆர்வம் காட்டுகிறான் அதை கற்றுக் கொள்கிறான்.தன்னுடைய வேர்களை மறக்கடிக்கச் செய்து போலி பிம்பங்களை அங்கு முன்வைக்கின்றனர். காம்பிய  என்கிற ஒரு நாட்டில் சோனா ஜபார்த்  என்கிற  பெண் பாடகர் தன்னுடைய மேடைகளில் இருபத்தி ஒரு நரம்பு இசைக்கருவியை  தன்னுடைய இடுப்பில் மாற்றி வைத்திருக்கும் அந்த இசைக் கருவிகளோடு பேசுகிற அந்த மொழியை அந்த  மக்கள் வெள்ளத்தில் நாம் பார்க்கமுடியும்.  தன் நாட்டு மக்களைப் பெருமைப்படுத்துகிறார். அந்த மரபு என்பது அவர்களுடைய சொந்த முயற்சி  அவருடைய பாரம்பரியத்தில் அதைப் பயன்படுத்தி வருகின்றார் .

இசையின்  ஒரு கட்டுப்பாட்டை இந்த இசைக்கருவி இவ்வளவுதான் இருக்கவேண்டும், இப்படித்தான் மீட்டப்பட வேண்டும், இந்த அளவு முறையில் தான் இதை வாசிக்க வேண்டும் என்றெல்லாம் தீர்மானிப்பதிலிருந்து  இசை தன்னுடைய அரசியலைத்  துவங்குகிறது.  சமூக கட்டுப்பாடு என்பது முதன்முதலில் குடும்பத்திலிருந்து இரண்டாவதாக இசையில் தான் பயணித்து இருக்கும் என்பதை நாம் உணர்கிறோம்.  இசையில் மென்மையான இசை,  அடித்தட்டு மக்கள் இசை என்று வகைப்படுத்திப் பார்க்கும் முறை இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ஆபிரகாம் பண்டிதர் முன்வைத்த முயற்சிகளை வேறு ஒரு சமூகமோ அல்லது வேறு ஒரு மதத்தினரும் குறிப்பாக வெள்ளை நிறம் கொண்ட மனிதர்கள் இந்த முயற்சியை எடுத்து இருந்தாள் அந்தக் கருத்துக்கு பல்வேறு கரங்களும் வலு சேர்த்து இருக்கும்.  அதைப் போற்றி புகழ்ந்து அதற்கு ஒரு ஆவணக் காப்பகங்கள், அதற்கான அறக்கட்டளை , அதற்கான தமிழ் நடுவங்காளி உருவாகியிருக்கும்.

சமூகம் கட்டமைப்பில்  கறுப்பர் என்பதும் மொழியால் தமிழன் என்பதும் மதத்தால் கிருத்துவன் என்பதும் சாதியால் பார்த்தாலே தீட்டு என்கிற சமூகத்தில் பிறந்து விட்டவர் என்பதிலிருந்து  அவர்களுடைய தமிழர் இசை மீட்சி  என்கிற அந்த போராட்டம் நீர்த்துப் போகச்  செய்கிறது.  இதுவும் நிற கவர்ச்சி அரசியலின்  துவக்கமே…