Subscribe

Thamizhbooks ad

கோவிட்-19 மீது நாம் அடையப் போகும் வெற்றி அனைவருக்கும் சொந்தமானது! (மலையாள மனோரமா தலையங்கம்) | தமிழில் முனைவர் தா.சந்திரகுரு

கோவிட்-19: ஊரடங்கு குறித்த புதிர்

டாக்டர் ஷாஹுல் எச்.இப்ராஹிம், அட்லாண்டா அமெரிக்கா

டாக்டர் என் எம் முஜீப் ரஹ்மான், கேரளா, இந்தியா

மலையாள மனோரமா தலையங்கம், 2020 ஏப்ரல் 13

ஊரடங்கை விரைவில் முடித்துக் கொள்வது முக்கியம் என்றாலும், அறிவியலைப் பின்பற்றுவதே அதற்கான மிகச் சிறந்த வழியாகும்

கோவிட்-19ஐ மட்டுப்படுத்துகின்ற கொள்கையை முன்கூட்டியே ஏற்றுக் கொண்ட கேரள அரசு இப்போது அதன் பலனை முழுமையாக அடைந்திருக்கிறது. சமாளிக்க முடியாத இந்த பேரழிவை, அறிவியலின் உதவி கொண்டு தன்னுடைய கட்டுப்பாடிற்குள் வைத்து நிர்வகித்துக் கொள்ளக்கூடிய நோய்பரவலாக கேரள அரசு மாற்றிக் கொண்டிருக்கிறது. கேரளாவின் 3.5 கோடி மக்கள் தொகையில் 387 பேர் மட்டுமே நோயாளிகளாக இருக்கிறார்கள் என்ற மதிப்பீடு, மாநில அரசின் வெற்றியை உறுதிப்படுத்துகிறது. மாநில மக்கள்தொகையில் குறைந்தது 10% பேர், நோய் கடுமையாகப் பரவியுள்ள நாடுகளில் வாழ்ந்து வருவதால், மாநிலத்தில் உள்ள நான்கு சர்வதேச விமான நிலையங்கள் நோயாளிகளை இறக்குமதி செய்வதற்கான ஏராளமான வாய்ப்புகளைக் கொண்டிருக்கின்றன. இருந்தபோதிலும், இதுவரையிலும் மாநிலத்தில் நோயின் அதிவேகப் பரவல் நிகழவில்லை. ஒருவேளை இளைஞர்களிடையே அதிகமாக இந்த தொற்றுநோய் பரவினால், இந்த விகிதம் அதிகரிக்கக்கூடும் அவர்கள் மிகக் குறைவான நோய் அறிகுறிகளுடனே இருக்கிறார்கள். பரிசோதனைகள் பரவலாகச் செய்யப்படுவதன் மூலமே, முழுமையாக இந்த நெருக்கடியை நம்மால் அறிந்து கொள்ள முடியும்.

விமானங்கள், ரயில்கள், பேருந்துகள் என்று போக்குவரத்து தடை செய்யப்பட்டிருப்பது, குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியாதிருப்பது, கடைகள் மூடப்பட்டிருப்பது, அரசாங்கத்தால் வழங்கப்படுகின்ற உணவுப்பொருட்களை நம்பி லட்சக்கணக்கானவர்கள் வீடுகளுக்குள் சிக்கித் தவித்துக் கொண்டிருப்பது என்று நமது வாழ்க்கை முறை முழுமையாக முடக்கப்பட்டிருக்கும் நிலையில்  –  விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி விடுவோம் என்றே அனைவரும் நம்புகிறார்கள்.  ஊரடங்கு என்பது கோவிட்-19 நோய்க்கான தீர்வு கிடையாது என்பதை நினைவில் கொள்வது அவசியம். தொற்று நோயின் பரவலைக் குறைப்பதற்கும், அதற்கான நேரத்தைக் கடத்துவதற்குமான வழிமுறையாக மட்டுமே இந்த ஊரடங்கு என்பது இருக்க முடியும்.  சர்வதேச தரவுகளின் அடிப்படையில் செய்யப்பட்டிருக்கின்ற ஆய்வுகள், நோய் ஒடுக்கல் கொள்கையை ஆறு வாரங்களுக்கு முன்னதாகவே நிறுத்தி விடுவதால், உலகளாவிய தொற்றுநோயின் விளைவுகளில் எந்தவிதத்திலும் அர்த்தமுள்ள முன்னேற்றம் ஏற்படாது என்று காட்டுகின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இவ்வாறான அழுத்தம் இல்லாமல் போகும் போது, ​​பாதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை மிக எளிதாக உயரவே செய்யும்.

இந்த தொற்று நோய் ஏன் இவ்வாறு இருக்கிறது?

 1. இதுஉலகளாவிய தொற்றுநோய்.  அதாவது எங்கு வேண்டுமானாலும் தோன்றுகின்ற, அனைத்து இடங்களிலும் இருக்கின்ற தொற்று.
 2. கோவிட்-19 நோயை ஏற்படுத்துகின்ற வைரஸ்புதிதாகத் தோன்றியுள்ளது. மிகவும்குறைவாகவே நமக்கு அந்த வைரஸ் குறித்து தெரியும். 100 ஆண்டுகளுக்கும் மேலாக நமக்கு நன்கு  தெரிந்துள்ள இன்ஃப்ளூயன்ஸாவுடன் ஒப்பிடும்போது, ​​கடந்த மூன்று மாதங்களாக மட்டுமே  நாம் இந்த வைரஸை அறிந்திருக்கிறோம்.
 3. இன்னும் முழுமையாக பாதிக்கப்பட்டவர்களைப் பற்றி நமக்குத் தெரியவில்லை. இன்று பாதிக்கப்பட்டவர்களாக அறியப்படுபவர்கள், உண்மையில் 2 முதல் 14 நாட்களுக்கு முன்பாகவே இந்த தொற்றுநோயைப் பெற்றவர்களாக இருக்கின்றனர். அதாவது இன்று நாம் 10 நோயாளிகளைக் கண்டறிந்தோம் என்றால், ஏற்கனவே அந்த 10 பேரும் இந்த நோயை 25-50 நபர்களுக்கு கடத்தியிருப்பார்கள். அந்த 25-50 நபர்களிடமிருந்து ஏறத்தாழ 63-250 நபர்களுக்கு நோய் பரவியிருக்கும். நோயின் எந்த அறிகுறிகளையும் காட்டாமல், இந்த தொற்றுநோயால் பாதிக்கப்பட்ட 4 பேரில் ஒருவர் இருக்கிறார். பாதிக்கப்பட்டு குணமடைந்த சிலரிடம் பல வாரங்களுக்குப் பிறகும் வைரஸ் தங்கியிருக்கக்கூடும்.

A call for unity, action: COVID-19 and principles of ...

 1. நாம்அனைவருமே உடல்ரீதியாக தனித்திருப்பதைக் கடைப்பிடித்து வருகிறோம்.  இருந்தாலும் கோவிட்-19 வைரஸ் மிக விரைவில் தொற்றிக் கொள்ளக்கூடிய நோயாக இருக்கிறது. நோயின் அறிகுறிகளற்று நோயைச் சுமந்து கொண்டிருப்பவர் பயன்படுத்திய மேற்பரப்புகளிலிருந்து அல்லது பொருட்களிலிருந்து இந்த நோய்த்தொற்று அடுத்தவருக்குப் பரவும் போது, நமது நடவடிக்கைகள் அனைத்தும் பயனளிக்காமல் போவதற்கான சாத்தியம் இருக்கிறது. எந்தவொரு நடவடிக்கையும் முழுமையானதாக இருக்கப் போவதில்லை. அனைத்து நேரங்களிலும், அனைத்து நடவடிக்கைகளுக்கும் அனைவரும் இணங்கிப் போவதை உறுதிசெய்வது என்பது அனைத்து சமூகங்களிலும் சாத்தியப்படுவதில்லை.
 2. நோய்களைப்பரப்புவதில்மக்களிடையேயும் மாற்றங்கள் நிகழலாம். அதாவது  பாதிக்கப்பட்ட முதியவர்களிடமிருந்து, அறிகுறிகளற்ற இளைஞர்களுக்கு நோய்த் தொற்று மாறலாம். கேரள மக்கள் தொகையில் 13% வயதானவர்கள்  என்ற உண்மை இங்கே அடிக்கோடிட்டுக்  காணப்பட வேண்டியது.
 3. நோய் கடத்தப்பட்டதிலிருந்து, நோயின் அறிகுறிதோன்றுவதற்கு சிறிது காலம் எடுத்துக் கொள்ளப்படும். வைரஸைப் பெற்றுக் கொண்டவர்களில் 80% பேருக்கு,பெரும்பாலும் குழந்தைகள் மற்றும் 40 வயதிற்குட்பட்டவர்களுக்கு, மருத்துவ கவனிப்பு எதுவும் தேவைப்படுவதில்லை என்றே மதிப்பிடப்பட்டிருக்கிறது. அவர்களிடம் நோயின் லேசான அறிகுறிகளே இருக்கும். 14% பேருக்கு நிமோனியா உள்ளிட்ட கடுமையான நோய் பாதிப்பு இருக்கும்; 5% பேருக்கு சுவாச செயலிழப்பு, செப்டிக் அதிர்ச்சி மற்றும் உறுப்பு செயலிழப்பு ஆகியவை ஏற்பட்டு தீவிர மருத்துவ கவனிப்பு தேவைப்படும்; அளிக்கப்படுகின்ற மருத்துவ கவனிப்பையும் மீறி 1-2% பேர் இறந்து விடுவார்கள். ஆகையால், நோய் பரவல் கீழ்நோக்கிப் போகின்ற போக்கை நாம் காணும் நாட்களில் இருந்து, ஊரடங்கு நடவடிக்கைகளைத் தளர்த்துவது குறித்து பரிசீலிப்பதற்கு மேலும் 14-21 நாட்கள் காத்திருப்பதே விவேகமானதாக இருக்கும். தொற்றுநோய் பரவலின் கீழ்நோக்கிய போக்கு உண்மையைப் பிரதிபலிப்பதாக எப்போதும் இருக்காது மேலும் அந்தப் போக்கு உண்மையிலேயே குறைந்து கொண்டுதான் இருக்கிறதா என்பதை மதிப்பிடுவதற்கு 3-7 நாட்கள் காத்திருப்பது நல்லது. எடுத்துக்காட்டாக, இங்கிலாந்தில் ஏப்ரல் 3 அன்றிலிருந்து கீழ்நோக்கிய போக்கைக் காட்டியதாக தரவுகள் காட்டின. ஆனால் 3 நாட்களுக்குப் பிறகு அது மீண்டும் நோய் எழுந்து விரைவாகப் பரவியது.

Brazil: First Possible Case Of COVID-19, More Tests Needed | News ...

 1. நோயாளிகளைக் கண்டறிவதற்கு பரிசோதனைமுறைகளே சிறந்தவை. நமது பரிசோதனைமுறைகள் எந்த அளவிற்கு இருக்கிறது என்பதைப் பொறுத்து, அந்த அளவிற்கே மக்கள் பரிசோதனைகளை நாட முடியும். மக்கள் எந்த அளவிற்கு பரிசோதனையை நாடுகிறார்கள் என்பது பாதிக்கப்பட்ட, நோய் அறிகுறிகளைக் கொண்டுள்ள நபரின் நோய் எதிர்ப்பு சக்தியைப் பொறுத்ததாக இருக்கிறது. பர்சோதனகள் இல்லாமல், இன்று நாம் அறிந்திருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை மிகச் சரியானதாக இருக்காது.

ஊராடங்கைத் தளர்த்தினால் என்ன ஆகும்?

 1. வூஹான், நியூயார்க்அல்லதுஈரானைப் போன்ற நிலைமையை கேரளாவால் கையாள முடியுமா? இந்த கேள்விக்குப் பதிலளிப்பதற்கு தரவுகளே மீண்டும் நமக்கு உதவும். கேரளாவில் உள்ள தீவிர சிகிச்சை உள்கட்டமைப்பை  நாம் தீவிரமாக ஆராய்வது நல்லது. அனைத்து மருத்துவமனைகளிலும் இன்றைக்கு எத்தனை படுக்கைகள் உள்ளன? இன்றைக்கு நம்மிடம் எத்தனை தீவிர சிகிச்சை (ஐ.சி.யூ) படுக்கைகள் உள்ளன?  தடுப்பூசி அல்லது உரிய சிகிச்சை முறை எதுவும் இல்லாத இந்த நிலைமையில், அரசாங்கத்திற்கு சவால் விடுக்காத வகையில் நம்மிடம் இருக்கின்ற சுகாதாரப் பராமரிப்புத் திறனை நாம் உறுதி செய்து கொள்ள வேண்டும். மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது அல்லது  ஐ.சி.யூ படுக்கை வசதிகள் தேவைப்படுகின்ற 19% பேர் இருக்கின்ற வசதிகளைப் பெற்று உயிர்வாழ முடியும். சுகாதாரப் பணியாளர்கள் மீது இந்த நோய் ஏற்படுத்துகின்ற தாக்கத்தையும் நாம்  மறந்து விடக்கூடாது.
 2. மற்றநாடுகளில்கோவிட்-19 நோய் பரவல் நடந்து கொண்டிருக்கும் போது, கேரளா மட்டும் அது குறித்து கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா? ஏதாவதொரு நாடு, மாநிலம் அல்லது சமூகம்  செய்கின்ற தவறான செயல்களுக்கு நாம் அனைவருமே பெரிய விலை கொடுக்க வேண்டியிருக்கும். அந்தமான் அல்லது நிக்கோபார் தீவுகள் போன்ற தீவுச் சமூகங்களில், வெளி போக்குவரத்தை நிறுத்தி வைப்பதன் மூலம் நோயாளிகள் அங்கே வருவதைக் கட்டுப்படுத்தலாம். ஆனால், இந்தியாவில் இருக்கின்ற ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள மாநிலங்கள் அனைத்தும், தங்களுக்கிடையே இருக்கின்ற அனைத்து வகை போக்குவரத்தை முழுமையாக கட்டுப்படுத்தப்படாவிட்டால், கோவிட்-19இலிருந்து விடுபட முடியாது. மற்ற நாடுகளில் சிக்கித் தவிக்கின்ற கேரள மக்களை சிறப்பு ஏற்பாடுகள் மூலம் திரும்ப அழைத்துக் கொள்வது மிகவும் அவசியமானது என்றாலும், வழக்கமான  சர்வதேச போக்குவரத்து சேவைகளின் மூலம் அதைச் செய்தால், தொற்றுநோய்களின் அலைகள் மீண்டும் தோன்றுவதற்கு அது வழிவகுத்துக் கொடுத்து விடும். இதுவரையிலும் செய்திருக்கும் தியாகங்களுக்கான பலன்கள் அனைத்தையும் நாம் இழக்க நேரிடும். இன்று நாம் கட்டாயம் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்தால், அதன் மூலம் நன்கு அறியப்பட்டுள்ள நோய் ஒடுக்கல் செயல்பாடுகளைப் பின்பற்றி வருகின்ற மற்றவர்களின்  முயற்சிகள் அனைத்தும் சேதப்படுத்தப்பட்டு விடும்.

Trump says keeping US Covid-19 deaths to 100,000 would be a 'very ...

ஊரடங்கு மூலம் நம்பிக்கை பெறுவதற்கான ஐந்து படிகள்

 1. இந்தபல்நோக்கு முயற்சியில், ஈர்க்கப்பட்ட, அணிதிரட்டப்பட்ட, ஆற்றல்மிக்க பொதுமக்கள் என்று ஒவ்வொருவருக்குமேபங்கு இருக்கின்றது. ஏறக்குறைய நாம் அனைவரும் தயாராக இருக்க வேண்டும். இந்த முயற்சிகள் அனைத்தும் தீவிரப்படுத்தப்பட வேண்டும். இந்த ஆபத்தான நேரத்தில் நோய் தாக்குதலுக்கான அபாயத்தைக் குறைக்கும் விதத்தில், நண்பர்கள், அண்டை வீட்டுக்கார்களுக்கு ஆதரவளித்து உதவலாம். உடல் ரீதியான இடைவெளியை அனைவருமே கடைப்பிடித்தால், வீட்டிற்கு  வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிந்து கொண்டால், நோயின் ஆரம்பநிலை அறிகுறிகளுடன் இருப்பவர்களும், நோய்த்தொற்றுடையவர்களும் மற்றவர்களுக்கு இந்த நோய்த் தொற்றைப் பரப்புவதற்கான வாய்ப்புகள் குறைந்து விடும்.  இத்தகைய ஆற்றலைப் பொதுமக்கள் பெறும் வகையில் செயல்பட வேண்டும். அரசாங்கத்தின் உள்கட்டமைப்பு, குடிமை சமுதாயத்தின் தன்னார்வத் தொண்டு  மற்றும் நிதியுதவி செய்பவகளின் பங்களிப்புகள்  என்று இவையனைத்தும் நன்கு பயன்படுத்தப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டால், தற்காலிகத் தொழிலாளர்கள் உட்பட தேவைப்படுகின்ற அனைவரின் வீடுகளுக்கும் தேவையான அத்தியாவசியப் பொருட்களை வழங்கி மக்களிடையே இருந்து வருகின்ற இணக்கத்தை மேம்படுத்த முடியும். மதத் தலைவர்களும், பொதுக் கருத்தை உருவாக்குகின்ற தலைவர்களும் அரசாங்கத்தின் பின்னால் ஒன்றுபட்டு நின்று தங்களுடைய முயற்சிகளை  நிறைவு செய்து,  மக்களிடையே ஒத்திசைவு ஏற்பட உதவலாம்.
 2. லட்சக்கணக்கானபரிசோதனைகள் மூலம் கிடைக்கின்ற தரவுகள், அரசின்கொள்கைகளை வடிவமைக்க வழிகாட்டுவதாக இருக்கும். நாம் எதைச் செய்வதானாலும், அவற்றிற்குத் தேவையான அறிவியல் அடிப்படையை இவ்வாறு மேற்கொள்ளப்படுகின்ற பரிசோதனைகளே வழங்கும். அனைவரும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை என்றாலும், நோயின் அறிகுறிகள் உள்ள அனைவருக்கும் பரிசோதனைகள் தேவைப்படும்.  தென் கொரியா, தைவான், சிங்கப்பூர் என்று இந்த நாடுகள் அனைத்திலும், அவை அடைந்திருக்கும் வெற்றிக்கும், தொற்று அதிகம் உள்ள இடங்களைக் கண்டறிவதற்கும் இவ்வாறான பரிசோதனைகளே காரணமாய் அமைந்துள்ளன. மின்னணு கருவிகளை அவர்கள் பயன்படுத்தியுள்ளனர். தொற்றுநோய் உள்ளவர்களைக் கண்காணிக்க மொபைல் புவியியல் தரவுகளை அவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். அடுத்த 2 வாரங்களில் பரிசோதனைகளை இன்னும் அதிகரிக்க வேண்டும். நோயாளிகளை சமாளிப்பது தொடர்பாக எடுக்கப்படும் எந்தவொரு முடிவும், சிறந்த மருத்துவ மதிப்பீடுகள் மற்றும் நோய் கண்டறியும் பரிசோதனைகளின் முடிவுகளைப் பொறுத்தே அமையும். நோய் கண்டறியும் பரிசோதனைகள் இல்லாமல், நோய் பரவல் குறித்து நம்மால் அறிந்து கொள்ள முடியாது. ஆக்கபூர்வமான வழிகளைப் பயன்படுத்தி மாநில ஆய்வகங்களை ஒன்றுதிரட்டி மக்களைப் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். மேலும் இந்த பரிசோதனைகளில் நோய்த் தொற்று இருப்பதாகக் கண்டறியப்பட்டவர்களை மேலதிக பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும். சுகாதார பராமரிப்பு மையங்களிலிருந்து விலகி இருக்கின்ற அனைத்து சமூகங்களுக்கும், நடமாடும் பரிசோதனை மையங்கள் மூலமாக பிரத்யேகமான மருத்துவ சோதனை தளங்களை ஒழுங்கமைத்துத் தர வேண்டும்.

Coronavirus in US: COVID-19 confirmed cases reach half a million ...

 1. நோயை உருவாக்குகின்றஎதிரியைப் பற்றி போதுமான நுண்ணறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும். பொதுசுகாதார நடவடிக்கைகளை வடிவமைப்பதற்கும், பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்குமான முடிவுகள் அறிவியலால் மட்டுமே வழிநடத்தப்படுவதாக இருக்க வேண்டும். யார் யாரெல்லாம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்; இரண்டாவதாக, பாதிக்கப்பட்டிருப்பதாக (அதாவது, ஆரம்பத்தில் நோய்த் தொற்று இல்லை என்று பரிசோதனையில் அறியப்பட்ட, ஆனால் நோய்த்தொற்றை ஒத்த தோற்றம் மற்றும் அறிகுறிகளுடன் உள்ளவர்கள்)  கருதப்படுபவர்கள்; மூன்றாவதாக,  யார் யார்  பாதுகாப்பின்றி இருக்கிறார்கள்; நான்காவதாக, பாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியாமல் யார் யார் இருக்கிறார்கள்;  ஐந்தாவதாக, நோய்த்தொற்றிலிருந்து மீண்டு, போதுமான நோய் எதிர்ப்பாற்றலுடன் இருப்பவர்கள் யார் என்பதை  தெரிந்து கொள்ள வேண்டும். எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதையும், அவர்கள் இப்போது நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்களா என்பதையும் நாம் அறிந்து கொண்டால், அவர்கள் தங்கள் வேலைகளுக்குத் திரும்புவது, மேலும் அன்றாட நடவடிக்கைகளைத் தொடங்குவது பாதுகாப்பானதுதானா என்பது குறித்து நம்மால் தீர்மானித்துக் கொள்ள முடியும். மற்றவர்கள் வேலைக்குத் திரும்புவது பாதுகாப்பானதா என்பது, இன்னும் நீடித்துக் கொண்டிருக்கின்ற நோய்த்தொற்றின் அளவு, பணியிடத்தில் நோய் தொற்றுவதற்கான சாத்தியம், நம்பகமான பரிசோதனைகள் மூலம் புதிய தொற்றுகளை விரைவாகக் கண்டறிதல் ஆகியவற்றைப் பொறுத்ததாகவே இருக்கும். பள்ளிக்கூடங்களை பாதுகாப்பாக மீண்டும் திறக்க முடியுமா? எந்த அளவிற்கு குழந்தைகள் தங்களுடைய ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் தாத்தா பாட்டிகளுக்கு வைரஸைக் கடத்துபவர்களாக இருக்கிறார்கள் என்பது குறித்து நாம் கற்றுக் கொண்டிருப்பதைப் பொறுத்தே அது அமையும். அசுத்தமான இடங்கள், மேற்பரப்புகள் எந்த அளவிற்கு ஆபத்தானவையாக இருக்கும்? அது வெவ்வேறு சுற்றுச்சூழல் நிலைமைகளில், பல்வேறு பொருட்களின்  மீது வைரஸின் உயிர்வாழும் தன்மையைப் பொறுத்ததாக இருக்கும்.
 2. இந்த நோய் பரவலை எதிர்கொள்ளும் வகையில், அதிக அளவில் தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களை சுகாதாரஊழியர்கள் மற்றும்மருத்துவமனைகளுக்கு வழங்கிட வேண்டும். 60% மக்கள் தொற்றுநோய்களுடன் இருக்கின்ற நிலைமையைச் சமாளிப்பதற்கு உலகில் எந்த நாடும் தயாராக இல்லை. மோசமான நிலையை எதிர்கொள்வதற்குத் தயாராவதில் எந்தத் தவறும் இல்லை. தனிப்பட்ட பாதுகாப்பு உபகரணங்கள் போதுமான அளவில் கிடைப்பதற்கு தொடர்ந்து முக்கியத்துவம் தரப்பட வேண்டும். இன்னும் மோசமான நிலைக்கு கேரளா தயாராகி வரும் வேளையில், அவசியமான மருத்துவப் பொருட்களின் ’அரசு கையிருப்பு’ தேவையான அளவில் இருப்பதை உறுதிசெய்ய இது சரியான நேரமாக இருக்கலாம். அதை உறுதிப்படுத்தி விட்டால், மிகப்பெரிய தேவை உள்ள மருத்துவமனைகளால் அவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும். ரயில் பெட்டிகளை மாற்றுவது உட்பட மாற்று மருத்துவமனைகளுக்கான திட்டமிடல் செய்யப்பட வேண்டும். கிடைக்கக்கூடிய உபகரணங்கள் மற்றும் பொருட்களைப் பயன்படுத்துவது குறித்து  சரியான முடிவுகளை  எடுத்து, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தரமான மருத்துவ பராமரிப்பு கிடைப்பதை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும். ’அரசு இருப்பு’ என்பதை வீண் என்று கருத வேண்டாம்; அது அடுத்த முறைகூட பயன்படலாம். மழைக்காக நீங்கள் எடுத்துச் செல்லும் குடை, கோடை வெயிலிலும் பயனுள்ளதாகவே இருக்கும் அல்லவா!
 3. நோய் பரவல் வளைவைநசுக்கி தட்டையாக்க வேண்டும்.இப்போது அடைந்திருக்கும்  வெற்றியைஇன்னும் முன்னோக்கி நகர்த்தி செல்ல வேண்டும். இப்போதைக்கு வளைவை  நசுக்கி தட்டையாக்குவதே குறிக்கோளாக இருக்கிறது. வூஹானில் சீனா இதைத்தான் செய்தது. 8-10 வாரங்களில் கேரளா முழுமைக்கும் இதைச் செய்ய முடியும். ஆரோக்கியம் மற்றும் பொருளாதார முனைகளில் அரைகுறை நடவடிக்கைகள் மூலம் தடுமாறிக் கொண்டிராமல், கொரோனா வைரஸைத் தோற்கடித்து பொருளாதார மீட்சிக்கான வழியைத் திறப்பதற்கான திட்டங்களை நாம் உருவாக்க வேண்டும். தொற்றுநோய் குறித்து அதிரடியான தீர்வு எதுவும் நம்மிடையே இல்லை. கோவிட்-19ஐத் தோற்கடித்து முன்னேறுவதற்கான பாதையில், ஒருங்கிணைந்த மற்றும் கூட்டு நோக்கத்துடன் நம் அனைவரையும் ஒன்றிணைத்து, ஏற்றுக் கொள்ளத்தக்க, அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகளே அழைத்துச் செல்லும். இன்று நாம் எடுக்கின்ற சரியான முடிவுகளே நமது எதிர்காலத்தை வரையறுப்பதாக இருக்கும். நமது குடும்பங்கள், நண்பர்கள், சமூகங்கள், தேசம் உள்ளிட்ட ஒட்டுமொத்த உலகிற்கும்  நாம் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும். கோவிட்-19 மீது நாம் அடையப் போகும் வெற்றி அனைவருக்கும் சொந்தமானது!

ஆங்கிலத்தில் இருந்து தமிழில்

முனைவர் தா.சந்திரகுரு 

 

https://www.manoramaonline.com/news/editorial/2020/04/13/medical-advice-on-India-Lockdown.html

 

Latest

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான்...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு...

நூல் அறிமுகம்: கொடிவழி – இரா.செந்தில் குமார்

சமீபத்தில் வெளியான காமுத்துரை தோழரின் புதிய நாவலான கொடிவழி நாவல் வாசித்தேன்....

Newsletter

Don't miss

சிறுகதை: கால்கள் – அய்.தமிழ்மணி

  கதைக்கு கால் இருக்கிறதா..?!  அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எங்கள்...

பேசும் புத்தகம் |எழுத்தாளர் தாமிராவின் சிறுகதை *செங்கோட்டை பாசஞ்சர்* | வாசித்தவர்: பொன்.சொர்ணம் கந்தசாமி

  சிறுகதையின் பெயர்: செங்கோட்டை பாசஞ்சர் புத்தகம் :  ஆசிரியர் : எழுத்தாளர் தாமிரா வாசித்தவர்:  பொன்.சொர்ணம்...

பேசும் புத்தகம் | எழுத்தாளர் புதுமைப்பித்தனின் சிறுகதை *பயம் * | வாசித்தவர்: முனைவர் ஆரூர் எஸ் சுந்தரராமன். Ss34

  சிறுகதையின் பெயர்: பயம் புத்தகம் : புதுமைப்பித்தன் சிறுகதைகள் ஆசிரியர் : புதுமைப்பித்தன் வாசித்தவர்: முனைவர்...

பேசும் புத்தகம் | அறிஞர் அண்ணா *செவ்வாழை* | வாசித்தவர்: கி.ப்ரியா மகேசுவரி (ss 48)

சிறுகதையின் பெயர்: செவ்வாழை புத்தகம் : செவ்வாழை ஆசிரியர் : அறிஞர் அண்ணா வாசித்தவர்: கி.ப்ரியா...
spot_imgspot_img

நூல் அறிமுகம்: டா வின்சி கோட்- இரா.இயேசுதாஸ்

"டா வின்சி கோட் " ஆசிரியர்: டான் பிரவுன் (இங்கிலாந்து) வெளியீடு :சான்போர்ட் ஜெ கிரீன் பர்கர் அசோசியேட்ஸ் ஐஎன்சி ,யுஎஸ்ஏ  தமிழில் :எதிர் வெளியீடு முதல் பதிப்பு 2016 -நான்காம் பதிப்பு 2021 600 பக்கங்கள்- ரூபாய் 699 தமிழாக்கம்...

நூல் அறிமுகம்: காரான் – இரா.செந்தில் குமார்

தோழர் காமுத்துரை அவர்களின் புதிய சிறுகதை தொகுப்பான காரான் வாசித்தேன். காரான் கதையில் வரும் குருவம்மா என்கிற எருமை தான் கதாநாயகி என்றாலும் அதில் மிக முக்கியமான செய்தியான கவனக்குறைவு பற்றி சூசகமாக...

நூல் அறிமுகம்: கோரக்பூர் மருத்துவமனை துயரச் சம்பவம் – சு.பொ.அகத்தியலிங்கம்

இது நெடிய பதிவுதான் .ஆனால் கட்டாயம் நீங்கள் வாசித்தாக வேண்டிய பதிவு . சற்று பொறுமையாய் நேரம் மெனக்கெட்டு வாசிக்க ; இதயம் உள்ள ஒவ்வொருவரையும் வேண்டுகிறேன். தூங்கவிடாமல் துரத்தும் குழந்தைகளின் மரண ஓலம்...

1 COMMENT

 1. ஆய்புபூர்வமான அறிவியல் அணுகுமுறையுடன் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட அற்புதமான தலையங்கம். உறுத்தாத மொழிபெயர்ப்பு. தேவையான நேரத்தில் தேவையான தகவல் பெட்டகம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here