புதுகை விஜய் ஆனந்த் கவிதைகள்1)
தீநுண்மிகளின் காலம்
தீர்ந்து போன பொழுதொன்றில்
மெல்ல உயிர்த்தெழுகிறது
இந்நகரம்…
சாலைகள்
சக்கரங்களோடும்
பாதசாரிகளோடும் மீண்டும்
உறவாடத்தொடங்கியிருக்க,
விழிபிதுங்கிய டவுன்
பஸ்சொன்று கீரையும்
கருவாட்டுக்கூடைகளோடும்
மணத்துக்கிடந்தது….
கிழிந்து தொங்கிய
முகக்கவசத்துடன்….
சுழல் விளக்கலற கண்ணாடி
சன்னலேத்தி
மின்னலெனக்கடக்கிறது
குளு குளு இன்னோவா…
மூச்சிரைத்து
ஊர்ந்துசெல்லும் அந்த
டவுன் பஸ்ஸைக் கடந்தபடி…2)
ஒரேயொரு
புழுவுக்கோ பூச்சிக்கோ
ஆசைப்பட்டு செதில்
விடைத்து
துடுப்பசைக்கயில் தான்..
தூண்டில் முள் நம்
தலையை துளைத்தெடுக்கிறது
…………………………………………………..
……. தேர்தல் இலவசம்.

– புதுகை விஜய்ஆனந்த்