நூல்: விரலால் சிந்திப்பவர்கள்
ஆசிரியர்: எழுத்தாளர் ச. சுப்பாராவ்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
முதல் பதிப்பு: 2019- டிசம்பர்
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/viralal-sindhippavarkal/
முதல் கொரோனா அலையில் டரென்டிங் ஆன பல விசயங்களில் ஒன்று தங்கத்தாலான முகக்கவசம். ஆனால் இங்கே ஒரு எழுத்தாளர் தங்க டைப்ரைட்டர் வாங்கி தான் எழுத்துக்கு தனக்குதானே விருது வழங்கி கொண்டாடியிருக்கிறார். யாராக இருக்கும்?
மற்றோரு புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளருடைய கையெழுத்து கோழி கிறுக்கினது போல இருக்குமாம். யாராக இருக்கும்?
நுரையீரல் லைட்டா டேமேஜ், இருதயமும் பலவீனப்பட்டு கிடக்கும்போது, நேரம் கிடைக்கிற கேப்புல எல்லாம் எழுதி தள்ளுகிறார் இந்த மனுஷன். யாராக இருக்கும்?
இதோ இவர் எழுதின கதை பயங்கரமான உச்சியை நோக்கி ஓடும்போது கதையில் கதாநாயகன் செத்துவிட்டாராம். அதற்கு நாடே எதிர்ப்பு தெரிவித்து மாற்றி எழுதும்படி கேட்டுக்கொண்டதாம். இதெல்லாம் நம்புகிற மாதிரியா இருக்கு. நீங்க நம்பலாட்டினாலும் அதான் நெசம். யாராக இருக்கும்?
இன்னொன்று சொல்லட்டுமா, இரண்டு பக்கத்தை எழுதி கொடுத்துவிட்டு, ஆடி காரில் பறந்த எழுத்தாளர்லாம் கூட இருக்கிறார்கள் நண்பர்களே.
தூக்கத்தில் நடக்கிறவங்களை கேள்விப்பட்டிருப்பீங்க;தூக்கத்திலே பணம் சம்பாதித்த எழுத்தாளரை எங்கேனும் கேள்விப்பட்டதுண்டா? யாராக இருக்கும்?
புது புது சொற்களை உருவாக்குவதெல்லாம் இந்த மனுஷனுக்கு டீயில் பிஸ்கட் முக்கி சாப்பிடுவது போல;சுமார் 2035 புது வார்த்தைகள்.
பத்தல….பத்தல…இன்னும்…என்று ஒரு பக்கம் ஓடி கொண்டே மறுபக்கம் எழுதியும் வலம் வருகிற ஜப்பானிய எழுத்தாளர். கண்பிடிதீதிருப்பீர்கள் இந்நேரம்?
கிரிக்கெட்டில் பெட் மேட்ச் ஆடியிருப்பீங்க, எழுதுறதில் பெட் வைத்து ஆடியிருக்கீங்களா? இவர்களெல்லாம் மனுஷர்களே அல்ல, விசித்திர பிறவிகள்.
ஒரு புத்தகத்தை வாசிக்க நாம் என்ன செய்வோம்? ஒரு நல்ல அமைதியான இடம், போதிய வெளிச்சம், சிலர் book with lite snaks, etc., ஆனால் இந்த ஐயா இருக்கிறாரே, “கேஸ் விளக்குகாரர்” என்று போஸ்டிங் கொடுத்து, ஒரு நபரை அமர்த்தி சம்பளம் கொடுத்து, போகிற இடமெல்லாம் கூட்டிகிட்டு போவாராம். ஏன்? அதாவது வாசிக்கும் நேரம் முழுக்க சீரான ஒளிவெள்ளம் அவர் முகத்திலும், உடலிலும் விழனுமாம். யாராக இருக்கும்? எப்படியெல்லாம் எழுத்தாளர் வாழ்ந்து போயிருக்கிறார்கள். வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள். சரி, இந்த ஆட்டமெல்லாம் வேண்டாம் நீங்களே சொல்லி விடுங்கள்? யார் அந்த எழுத்தாளர்கள் ? என்று கேட்கிறீர்களா, அஸ்கு புஸ்கு அப்பளம் வடை.
ச.சுப்பாராவ் அவர்களின் புத்தகத்திற்கு பின்பு ஊடு வாசிப்பும், எக்ஸ்ட்ரா வாசிப்பும், கன்னியமான உழைப்பும், அதிக மணி நேரம் மெனக்கெடலும், ஏமாற்றாத பண்பும் உண்டு. நம்பி வாங்குங்க “விரலால் சிந்திப்பவர்கள்” ஆழமான தகவல்களோடு பயணியுங்கள். பல எழுத்தாளரை ஆழமாக படிக்க உதவும் நல்ல அறிமுக புத்தகம். நன்றிகள் நண்பர்களே.