காட்சிப்பிழை  கவிதை – சிவபஞ்சவன்

காட்சிப்பிழை கவிதை – சிவபஞ்சவன்




இலகுவாய் இருப்பதும்
மிக உறுதியானதும்
வாழ்கிறது நிலைத்து
இடைப்பட்டது
பிழைத்துக் கிடக்கிறது

வாழ்வென்பதும்
பிழைப்பென்பதும்
ஒன்றாய்த் தோன்றும்
காட்சிப்பிழைக் கோடுகள்

பட்டது தளிர்ப்பதும்
பச்சை தோய்ந்து
வீழ்வதும் பிழைப்பன்று
அது வனாந்திரம்
கொண்டாடித் தீர்த்த பெருவாழ்வு

ஓடி உழன்று தின்று செரித்த
கடிகாரத்தின் நொடிமுள்ளை
வாடிச் சோர்ந்து நோய்நொடியில்
அழுந்தி மாய்வதை பிழைப்பென்றறியாதோர்
புகட்டுவார் வாழும் பாடம்.

ஏழ்மையே யாயினும்
வறுமையே சூழ்கினும்
உலகையே
அன்புசெய்யும் மாந்தர்
தம் நினைவிலும் வாழ்வர்
ஏனையோர்….
ஏதோ…..
பிழைத்துக் கிடக்கிறார்.

– சிவபஞ்சவன்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Show 3 Comments

3 Comments

  1. சா சோபனா

    இலகுவும் உறுதியும் பிழைக்கும்
    ஆழமான சிந்தனை

    //வாழ்வென்பதும் பிழைப்பென்பதும் ஒன்றாய்த் தோன்றும் காட்சிப்பிழை//

    அட அட… அருமை

    • சா.சோபனா

      திருத்தம்

      //இலகுவும் உறுதியும் வாழும்//
      என்ன ஆழமான சிந்தனை

      //வாழ்வென்பதும் பிழைப்பென்பதும் ஒன்றாய்த் தோன்றும் காட்சிப்பிழை//

      அட அட… அருமை👌🏼👌🏼

      • சிவபஞ்சவன்

        நன்றி தோழர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *