டி.டி.கோசாம்பி அவரது சிந்தனைகள். ஆய்வு முடிவுகள். கருத்து உருவாக்கங்கள் எல்லாம் அறிவுத்தளத்தில் வைக்கப்பட்ட காலத்திலேயே மிகுந்த கவனத்தைப் பெற்றவை. கோசாம்பி இந்திய வரலாற்று ஆய்வில் ஒரு புதிய பெருநோக்கை (Paradigm) உருவாக்கியவர் என பேராசிரியர் ரோமிலா தப்பார் அவர்களால் புகழப்படுபவர்.
நான் ஒரு வரலாற்று ஆய்வாளன் அல்ல. ஆனால் ஒரு அரசியல் செயற்பாட்டாளன் என்ற முறையில் எனது இந்திய வரலாறு பற்றிய புரிதலுக்கு நான் கோசாம்பியையே பெரிதும் நாடினேன் என தோழர். Ems அவர்களே தனது ஆசான் எனக்காட்டும் ஆளுமை.
இன்றைய இந்திய அரசியல். பொருளாதார. சமூக நிலை என்ன. அதில் வெகுமக்கள் நலன் நாடுபவர்கள் செய்ய வேண்டியது என்ன. என்ற வினாக்களுக்கு விடைகாணவும் கோசாம்பியின் எழுத்துக்கள் உதவுகின்றன.
அவரது கருத்துகளின் மீது நமது கவனத்தை குவிக்கின்றது. குறுகிய ஜாதி. மத ஃபாசிச நோக்கில் வரலாறு கட்டமைக்கபடுவது. இந்திய சமூகத்தில் வர்க்கம். ஜாதி ஆகியவற்றுக்கு இடையேயான ஊடாடல்கள். இந்திய ஆளும் வர்க்கத்தின் வர்க்கப் பன்பு இந்திய பண்பாட்டு உருவாக்கம் நிகழ்ந்த விதங்கள். அவற்றை செழுமைப்படுத்திய பல நீரோட்டங்கள் போன்ற எண்ணற்ற அம்சங்களை அவர் தனது எழுத்துக்களில் நமக்கு விளக்குகிறார்.
முன்மாதிரியற்ற தனது சொந்த ஆய்வுகள். கறாரான அறிவியல் நோக்கு. தனித்துவம் கொண்ட சுய சிந்தனை ஆகியவற்றின் அடிப்படையில் தனது கருத்துகளை கட்டியமைத்தவர் கோசாம்பி.
சளைக்காத உழைப்பு. ஆழமும் விரிவும் கொண்ட கற்றல். மார்க்சிய அடிப்படைகள் மீது கொண்டிருந்த பற்றுதல். சொந்த நலனுக்காக கொள்கைகளை விட்டுக் கொடுக்காத கட்டுறுதி. பிறந்த ஜாதி.மதத்தின் பிடியை விட்டு விடுதலையாகி நின்றவிதம் இவை போன்ற அவரது சிறப்புகள் அவரை நினைக்கும் போதெல்லாம் உற்சாகமும் உத்வேகமும் கூட்டக் கூடியவை. ஆனால் அதற்கெல்லாம் மேலாக இன்றய அரசியல் சமூக அரங்கில் மேலெழுந்துள்ள பல கனத்த வினாக்களுக்கு அவர் அளித்த விடைகளையும் விளக்கங்களையும் புரட்டி பார்ப்பதும் அவற்றின் பொருத்தப்பாடு குறித்து சிந்திப்பதும் பயனுள்ளதாக இருக்கும் கோசாம்பியின் விருப்பமும் அதுவாகத்தான் இருக்கும்.
மிகவும்வித்தியாசமானதொரு ஆளுமையின் மகனாக 1907 ஆம் ஆண்டு கோவாவின்
அருகிலுள்ள கோஸ்பென் எனும் கிராமத்தில் டி.டி. கோசாம்பி பிறந்தார். அவரது தாய் வழி பாட்டனார் வீட்டில் தனது ஐந்தாவது வயது வரை வளர்ந்துள்ளார்.
தனது தாய்மொழியான மராத்தி மற்றும் கொங்கனி ஆகியவற்றில் தேர்ச்சி பெற ஆரம்பித்து விட்டார். அவர் ஒரு குழந்தை அருந்திறனாளர் (Child prodigy) என்றுதான் கூறவேண்டும். வயதிற்கு மிஞ்சிய ஞானத்தை அவர் சிறுவயதிலிருந்தே வெளிக்காட்டி வந்துள்ளார்.
அறிவுத்தாகம். ஞானத்தேடல். அதற்காக எந்த சிரமத்தையும் தாங்கி நிற்கும் உளப்பாங்கு ஆகியவற்றை தந்தையாரிடம் இருந்து கோசாம்பி பெற்றார் எனலாம். கோசாம்பியின் பன்முக படிப்பு இங்கே தான் ஆரம்பமானது. அவரது தந்தையை போலவே மிகவும் சிறப்பான மொழி திறன் பெற்றவராக டி டி கோசாம்பி இளமையிலேயே உருவாக ஆரம்பித்தார். பள்ளியிலிருக்கும்போதே பல மொழிகளையும் அவர் கற்றுத் தேர்ந்தார். வெறும்மொழிப் புலமை மட்டும் கொள்ளாது அன்றைய சமகால நவீன அறிவியலையும் கற்றுக்கொள்ள ஹார்வர்ட் சூழல் அவருக்கு உதவியாக இருந்தது.
மிக நல்ல புத்தகங்களை சிறந்த முறையில் பராமரித்து நூல் நிலையங்களை கேம்பிரிட்ஜ் கொண்டிருந்தது . கோசாம்பி அவற்றை நன்கு பயன்படுத்திக் கொண்டு தனது பன்முக ஆளுமையின் துவக்கத்தை சிறுவயதிலேயே பெற்றார். அறிவியலையும் தத்துவத்தையும் அவற்றில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் அறிந்து கொள்ள விழையும்.
ஒரு சாமானிய மனிதனுக்கு ஹார்வர்ட் போன்ற இடத்தில் அது சாத்தியம். அவற்றை சாமானியனுக்கு புரியும் விதமாக கற்றுத் தரும் நூல் அன்றும் இன்றும் அமெரிக்கா ஐரோப்பிய பல்கலைக்கழகங்களும். பதிப்பகங்களும் வெளியிடப்படுவது ஒரு பண்பாடாகவே வளர்ந்து செழித்துள்ளது. அந்தத்துறையின் மேதைகளே இந்த பணியை செய்துள்ளனர். அத்தகைய நூல்கள் அன்றும் இன்றும் கற்றுக் கொள்ள முனையும் ஒரு ஏழை இந்திய மாணவனுக்கு எட்டாக் கனிதான்.
மார்க்சியத்தை வெறுப்பவர்கள் லண்டன் அருங்காட்சியகத்தின் நூல் நிலையத்தை வெறுக்க வேண்டும் என்று மார்கரெட் தாட்சர் ஒருமுறை கூறினார். மார்க்சின் ஞானப்பசிக்கு லண்டன் அருங்காட்சியகத்து நூல்நிலையம் உணவளித்ததால் தான் மார்க்சியமே உருவாகியது என்பது அவரது கருத்து.
பன்முக அறிஞர் நோபர்ட் வைய்னர். அவர் இருபதாம் நூற்றாண்டில் ஒரு முக்கியமான குழந்தை அறிந்திறனாளர் (Child prodigy) என அறிவுலகத்தால் ஒப்புக் கொள்ளப்பட்ட மனிதர். அவர் தனது 3ஆம் வயதிலேயே புத்தகங்களை படிக்க ஆரம்பித்துள்ளார். அவரது விதிவிலக்கான அறிவுத் திறனைக் கண்ட அவரது தந்தையாரும் அவருக்கு எப்பொழுதும் எளிதில் அடைய முடியாத இலக்கு களை கொடுத்து பயிற்சி அளித்துள்ளார். அவரது இலக்குகளை எப்பொழுதும் கடப்பவராக நோபர்ட் இருந்துள்ளார்11 வயதிலேயே பல்கலைக்கழக கல்வியை துவங்கி 19 வயதிலேயே ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர்தான் நோபர்ட் வைய்னர். பன்மொழி வித்தகர்.
பிறப்பால் யூதரான வைய்னர் மிகவும் தீவிரமான நாத்திகர். மனிதநேயம் கொண்ட போராளி. பொதுவாக ஏழைகள். ஆசிரியர்கள். மெக்ஸிகன்கள் மற்றும் ஏனைய அமெரிக்கவாழ் சிறுபான்மையோரின் நலன்களுக்காக பாடுபட்டவர். அமெரிக்காவின் அணுகுண்டு தயாரிப்பு திட்டமான மான்ஹாட்டன் திட்டத்தில் பணியாற்ற மறுத்தவர். தனது கண்டுபிடிப்புகள் அனைத்தையும் அதில் ஆர்வமுள்ள அனைவரிடமும் பகிர்ந்து கொண்டவர். அப்படி பகிர்ந்து கொண்டவர்களில் ரஷ்யர்களும் இருந்ததால் அமெரிக்க உளவு நிறுவனத்தின் கண்காணிப்பிற்கு உள்ளானவர். ஆனால் கடுமையான நிறுவன எதிர்ப்பாளர்.இவர் பல விதங்களில் கோசாம்பிக்கு ஒரு ஆதர்சமாகவும் முன்னுதாரணமாகவும் இருந்துள்ளார்.
கேம்பிரிட்ஜ் நகரம் ஒரு இரட்டை நகரமாக இருந்துள்ளது. மெத்தப் படித்த அறிவு ஜீவிகள் ஒருபுறம் சாமானிய மக்கள் மறுபுறம் கோசாம்பி இருபுறங்களிலும் மிகவும் எதார்த்தமாக இருந்துள்ளார்.
அந்த நாட்களில் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க ஒரு கடினமான நுழைவுத் தேர்வு எழுதித் தேறவேண்டும். வெகு சிலரே அவர்களது பள்ளிக்கல்வி சாதனைகளின் அடிப்படையில் இந்த நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு அளிக்க படுவர். கோசாம்பி அத்தகைய விலக்கு பெற்று நுழைவுத்தேர்வு இன்றி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கல்விகான உதவித் தொகையும் கிடைத்தது.
கோசாம்பி தனது இந்திய வேர்களை வலுப்படுத்திக் கொள்ளவும் அதன் அழகு. அருமை.அநீதி. வளமை. வருமை. ஒற்றுமைகள். வேறுபாடுகள். பிரச்சனைகள் ஆகியவற்றை நேரடியாக தெரிந்து கொண்டார்.
கோசாம்பி இந்து மதம் குறித்தும் பௌத்தம் குறித்தும் இந்திய தத்துவங்கள் குறித்தும் கூறுவது ஹீரோ பேரறிஞர்கள் தங்கள் ஒப்பற்ற மொழி ஆளுமை ஆழமான ஆய்வு. மதசார்பற்ற எவ்வித நிர்பந்தத்திற்கும் பணியாத நேர்மை ஆகியவற்றின் அடிப்படையில் வந்து சேர்ந்த முடிவாகும்.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்ற அமெரிக்க மாணவர் ஒருவர் கோசாம்பியின் அறை பற்றி விவரித்துள்ளார். கோசாம்பியின் அறை மிகவும் எளிமையாக இருந்துள்ளது. அன்றைய கேம்பிரிட்ஜ் நகரில் அதைக் காட்டிலும் குறைவான வாடகையில் வேறு அறை கிடையாது. அவரது அறை சுவரில் ஒரே ஒரு புகைப்படம் மாட்டப்பயடிருக்கும். அது மகாத்மா காந்தியின் படம் அந்த இடம் தவிர ஏனைய சுவர் பரப்புகள் முழுமையும் புத்தக அலமாரிகள் மறைந்திருக்கும். அன்றைய அறிவியல். தத்துவத்தின் அனைத்து முன்னேற்றங்கள் குறித்தும் புத்தகங்கள் இருக்கும். மானுடத்தின் சகல அறிவுப் புலங்கள் குறித்தும் புத்தகங்கள் இருக்கும்.
அறிவியல் புத்தகங்கள் எல்லாம் அவற்றின் மூலத்தின் பெரும்பாலும் ஜெர்மன் மொழியில் இருக்கும். பைபிள் மட்டும் பல்வேறு பதிப்புகளில் பல்வேறு மொழிகளில் லத்தீன். கிரீக்.ஆங்கிலம். ரஷ்யன். போலீஷ். ஜெர்மன். பிரஞ்ச் இன்னும் ஏராளமான பிற மொழிகளில் இருக்கும். கோசாம்பி மொழிகளின் ஒப்பீட்டு ஆய்வுக்கு இந்த பைபிள்களை பயன்படுத்துவார் இத்தாலியன். பிரெஞ்சு. ஜெர்மன் மொழிகளில் வந்த ஏராளமான புனைவிலக்கிய நூல்களும் இருந்தன. அவர் மிகவும் வேகமாக வாசிக்க கூடியவராக இருந்துள்ளார் ஒருமுறை படித்தால் அப்படியே நினைவில் கொள்ளும் புகைப்பட நினைவாற்றல் கொண்டவராகவும் இருந்துள்ளார்.
தீவிர வாசிப்பு ஆய்வுகளில் இருப்பவர்.
அவரது தந்தையாரோ என்றும் பிராமணர்களாக உணர்ந்ததோ அல்லது வாழ்ந்ததோ இல்லை. மாறாக அவர்களது கடும் பிராமணிய எதிர்ப்பு கருத்துகளையும் நடவடிக்கைகளையும் அறிந்தவர்கள் அவர்கள் பிராமண ஜாதியில் பிறந்தவர்கள் என்பதை அறிய நேரும்போது வியறப்படைலாம். எனவே அவரது புதல்வரான கோசாம்பி பெயர். நடை .உடை. பேச்சு. கொள்கை. கருத்து எதிலும் பிராமணராக இருந்ததில்லை.
ஹார்வர்டின் மிகுந்த மதிப்பான பை பீட்டா கப்பா என்ற அமைப்பின் உறுப்பினராகும் அனுமதி மிக மிகச் சிறப்பான முறையில் தேர்வு பெருவோருக்கு மட்டுமே அளிக்கப்படும். இந்த அங்கீகாரம் அவருக்கு அளிக்கப்பட்டது.
கோசாம்பியின் சொந்த நூலகத்தில் சுமார் 3000 புத்தகங்கள் இருந்தன என்பதை சேது மாதவராவ் பதிவு செய்துள்ளார். அப்போதே அவரது மாணவர்கள் மற்றும் சில சக ஆசிரியர்களுக்கு மார்க்சிய வகுப்புகள் எடுக்க ஆரம்பித்துள்ளார். அவரது பிராமண இந்துமத எதிர்ப்பு கருத்துக்களால் பிராமண இந்து ஆசிரியர்களும். அவரது மார்க்சியத்தின் காரணமாக முஸ்லிம் ஆசிரியர்களும் அவரை விரும்பவில்லை.
மார்க்சிய வரலாற்றுப் பொருள் முதல்வாத அடிப்படையில் சமகால நிகழ்வுகள். அறிவியல் சமூகம் ஆகியவற்றின் ஊடாடல்கள் ஆகியவற்றை குறித்தும் அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் வரத் துவங்கின.
புராதான சமஸ்கிருத நூல் குறித்து ஆய்வு செய்த நூலாசிரியர் பர்த்திரஹரி கருத்துக்களை திறனாய்வு நடத்தியிருந்தார் கோசாம்பி. பர்த்திரஹரி ஒரு கவிஞன் என்ற வகையில் சிறப்பானவர் தான் ஆனால் அவரது சமூக கருத்துக்கள் எல்லாம் மேட்டுக்குடிகளுக்கே உரித்தான போலித்தனங்கள் நிரம்பியவை என அவர் எழுதினார்.இவை இதேபோன்ற போலித்தனங்களை கொண்டிருந்த வைதீக இந்துமதக் மேட்டுக்குடிகளுக்கு உவப்பானதாக இல்லை. கோசாம்பிஅது குறித்து சிறிதும் பொருட்படுத்தவில்லை.
அதே சமயம் பர்த்தரஹரியின் நூல்களையெல்லாம் கடும் உழைப்பில் திறனாய்வோடு கூடிய செம்பதிப்பாக கொண்டு வந்தார். இந்தியாவில் பல பகுதிகளில் விளங்கி வந்த வெவ்வேறு மாற்று பிரதிகளையும் ஒன்று திரட்டி ஒப்பிட்டு காட்டியிருந்தார் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த அவரது நூலை புதிய மானுட சமூகத்தின் முன்னோடிகளான மார்க்ஸ் ஏங்கல்ஸ் லெனின் அவர்களுக்கு சமர்ப்பணம் என(Nutanamanava samajasya purascardnam Marx Engels Lenin) திவ்யமான சமஸ்கிருதத்தில் சமர்ப்பித்திருந்தார்.
காலத்தாலும் மக்களாலும் புறக்கணிக்கப்பட்டு அழிவின் விளிம்பில் இருந்த சுமார் 50 சமஸ்கிரத கவிஞர்கள் என்னால் புணர்வாழ்வு பெற்றனர் என அவரே பதிவு செய்துள்ளார். சமஸ்கிருதத்திற்கு இந்த மார்க்சிஸ்ட் செய்த சேவையில் நூறில் ஒரு பங்கைகூட எந்த வொரு சங்பரிவார் கவிக் கும்பல் தலைவரும் செய்திருக்கமாட்டார்.
மானுடம். கொரில்லா. சிம்பன்ஸி அகியவற்றின் மரபணுத்ப்புகளை எடுத்துக்கொண்டு மானுடத்திற்கு நெருக்கமான உயிரினம் கொரில்லாவா அல்லது சிம்பான்சியா என்பதை தீர்மானிப்பது எப்படி என்பது போன்ற வினாக்களுக்கு விடை காண்பதாகும். அதுவரை JBS ஹால் தானே என்ற புகழ்பெற்ற ஆங்கில உயிரியல் நிபுணர் ( இங்கிலாந்தின் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் ஒரு காலத்தில் முக்கியமான நபராக இருந்தவர்) வரையறுத்து அளித்திருந்த தொரு முறைதான் 1919 ஆம் ஆண்டிலிருந்து உலகெங்கும் நடைமுறையில் இருந்து வந்தது 1944 ஆம் ஆண்டு கோசாம்பி காட்டியமுறை இப்போதும் கோசாம்பி சூத்திரம் என்ற பெயரில் வழக்கத்தில் உள்ளது.
இவை போன்ற கல்வி சார்ந்த ஆய்வுக் கட்டுரைகள் தவிர பொதுவான பிரச்சனைகள். அறிவியல் சமூகப் பிரச்சினைகள் போன்றவை குறித்து எழுத ஆரம்பித்திருந்தார். இந்த வகை எழுத்துக்கள் பெரும்பாலும் அன்றைய ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் இதழ்களில் வந்தது இது அவர் மீது இடதுசாரி வட்டாரங்களில் கவனமும் மதிப்பும் கூடியது.
அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணி தலைவராக இருந்த Dr. அதிகாரி அவர்களிடம் மிகுந்த மதிப்பு கொண்டவராக இருந்துள்ளார். Dr.அதிகாரி தாமே ஒரு அறிவியல் அறிஞர். அன்றே ஜெர்மனியில் கல்வி கற்று டாக்டர் பட்டம் பெற்று வந்தவர். இதனாலோ என்னவோ அவர்களது நட்பு நீண்ட காலம் சண்டை சச்சரவின்றி தொடர்ந்துள்ளது .இது தந்தை தர்மானந்தருக்கு வியப்பளித்துள்ளது அவரே தோழர்Dr. அதிகாரியிடம் இதன் ரகசியம் என்னவென வினவியுள்ளார். எங்களுக்குள் சண்டை சச்சரவு வர வாய்ப்பில்லை ஏனெனில் நாங்கள் இருவரும் சந்திக்கும் போதெல்லாம் கோசாம்பி பேசுபவராக மட்டும் இருப்பார் நான் கேட்பவனாக மட்டும் இருப்பேன் என அதிகாரி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்று கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தாலும் சில நாட்கள் தங்கி உள்ளார் அந்த சமயத்தில் அவர் சந்தித்த மற்றொரு ஆளுமை ஏ.எல்.பாஷாம் எனும் இந்தியவியல் அறிஞர். இந்திய வரலாறு குறித்த பல நூல்களை எழுதியுள்ள பாஷாம் பின்னர் வாழ்நாள் முழுவதும் கோசாம்பியின் நண்பராக இருந்தார்.
அணுவாற்றல் என்பது கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதலே அதனை பயன்பாட்டுக்கு கொண்டுவருவதை இயற்பியல். அணுவியல் அறிஞர்களில் சிலர் எதிர்த்து வந்துள்ளனர்.
அறிவியல் அறிஞர்கள் பலரை உலக சமாதானம் அணுஆயுத ஒழிப்பு ஆகிய வற்றின் பக்கம் கொணர்ந்தது . இந்தியாவிலும் உலக சமாதான இயக்கம் வலுவானது உலகின் பல பகுதிகளிலும் கம்யூனிஸ்டுகள் தான் இதில் முன்னணி வகித்தனர். ஆனாலும் இது ஒரு வெகுமக்கள் இயக்கமாக இருந்தது.
அணுவாற்றல் ஆய்வுக்கு செலவு செய்வதில் ஆயிரத்தில் ஒரு பங்குகும் சூரிய ஆற்றல் ஆய்வுக்கு அரசு செலவு செய்யவில்லை என்பதை அவர் தொடர்ந்து சுட்டிக்காட்டிருந்தார். மேலை நாடுகள் அதில் அக்கறை காட்டவில்லை யென்றாலும் இந்தியா முன்முயற்சி எடுக்க வேண்டும் என்று கூறினார்.
கோசாம்பி 1940 ஆம் ஆண்டிலிருந்து இந்திய வரலாறு குறித்து பல ஆய்வுக் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார். இவை இலக்கியம். மொழியியல். மானுடவியல். நாணயவியல். தொல்பொருளியல். முதலிய பல கோணத்தில் வரலாற்றை எப்படி அணுகுவது என்பது பற்றி விவரித்தன.
கோசாம்பியே தனது முன்னுரையில் கூறியது போல இது ஒரு வரலாற்று நூலல்ல. வரலாற்றை எங்ஙகனம் அறிந்து எழுதுவது எனும் நூல் இந்த நூலின் மூலம் கோசாம்பியின் வரலாற்று பேராசிரியர்களின் பேராசிரியர் எனும் பெயர் பெற்றார். சுமார் 400 பக்கங்களில் பல புகைப்படங்கள். வரை படங்கள். விவரங்களோடு வந்த இந்த நூல் வரலாற்று நூல்களில் வந்த முதல் மாதிரியாக இருந்தது. வரலாறு என்பது ஒரு கலைப் படிப்பு அல்ல. அது ஒரு அறிவியல் கல்வி என்பதை விளக்கியது இந்த நூல்.
வரலாறு குறித்து கோசாம்பியின் நோக்கு அடிப்படையில் மார்க்சிய நோக்குதான். மார்க்சியத்தின் வரலாற்று பொருள் முதல்வாத நோக்கே கோசாம்பியின் நோக்கு. வரலாறு என்பது கால ஓட்டத்தில் உற்பத்திகளும் உற்பத்தி உறவுகளும் எப்படி மாறி வந்துள்ளன? இந்த மாற்றங்களின் காலவரிசை (Chronogy)என்ன? என்பதை கண்டறியும் அறிவியலை என்பதை விவரித்த கோசாம்பி இதனை இந்திய வரலாற்றுக்கு பொருத்தி காட்டினார்.
இன்றைக்கு ஆர்.எஸ். சர்மா. இர்ஃபான் ஹபீப். நூருள் ஹஸன். கே.என்.பணிக்கர். ரோமிலா தாப்பர் என கிட்டத்தட்ட அனைத்து மார்க்சிய வரலாற்று ஆய்வாளர்களும் கோசாம்பியின் கருத்தை சரியென கொள்கின்றனர் .
இந்தியாவின் ஃபாசிச அபாயத்தை அவர் 1954 ஆம் ஆண்டே அவதானித்து கூறியுள்ளார்.
இந்தியாவில் ஃபாசிசத்தின் துவக்கம் கேரளத்தின் அரசாங்கத்தை கலைத்ததில்தான் என அவர் கூறுகிறார்.
அன்று கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்த தோழர் ஞ.ஊ.ஜோஷி மிகச் சிறந்த ஒருங்கிணைப்பாளராகவும் பரந்துபட்ட அறிவு ஜீவிகள் . கலைஞர்களை. கவர்ந்திழுக்கும் வல்லமை கொண்ட வராகவும் மாறுபட்ட கருத்து கொண்ட வராக அவர்களையும் அரவணைத்துச் செல்லும் பண்பு கொண்டவராகவும் இருந்தது ஒரு முக்கியமான காரணமாக இருந்தது. இந்திய சமாதான இயக்கத்தின் தலைவராக பழம்பெரும் சுதந்திர போராட்ட வீரரான. சைஃபுதீன் கிச்சுலு பணியாற்றினார் டி டி கோசாம்பி ஒரு உதவித் தலைவர் ரொமேஷ் சந்திரா. தோழர் டாங்கே. இயற்பியல் அறிஞர் மேக்நாத் சாகா. கவிஞர்கள் சாஹிர் லுதியானாவி. கைஃபி ஆஸ்மி (சபானா ஆஸ்மியின் தந்தை) புகழ்பெற்ற நடிகரான பால்ராஜ் சஹானி. எழுத்தாளர்கள் கே.ஏ.அப்பாஸ் .இஸ்மத் சுக்தாய் போன்றொறெல்லாம் ஊக்கத்துடன் பணியாற்றினார்கள்.
நூல் வாசிக்கிற போது பல வரலாறுகளையும் அறிவியலாளர்கள் அறிஞர்களையும் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளையும் அவர்கள் செய்திருக்கிற பணிகளை புரிந்துகொள்ள முடிந்தது…
பாரதி புத்தகாலயம்…
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/aasankalin-aasan-dd-kosambi-vaalvum-pilivum-4521/
P.ஸ்டாலின்
உளுந்தூர்பேட்டை
9042214882
ப.கு.ராஜன் புத்தகத்தையே பிழிந்து தந்திருக்கிறார் ஸ்டாலின். மிகப் பெரிய அறிஞரின் எளிய வரலாறு ஒரு பருந்துப் பார்வையில் கிடைக்கிறது.
//புராதான சமஸ்கிருத நூல் குறித்து ஆய்வு செய்த நூலாசிரியர் பர்த்திரஹரி கருத்துக்களை திறனாய்வு நடத்தியிருந்தார் கோசாம்பி. பர்த்திரஹரி ஒரு கவிஞன் என்ற வகையில் சிறப்பானவர் தான் ஆனால் அவரது சமூக கருத்துக்கள் எல்லாம் மேட்டுக்குடிகளுக்கே உரித்தான போலித்தனங்கள் நிரம்பியவை என அவர் எழுதினார்.//
கவிச்சக்கரவர்த்தி கம்பன்தான் நினைவுக்கு வருகிறார். படிக்கப் படிக்க ஆச்சரியத்திலும் இன்ப அதிர்ச்சியிலும் உறைந்து போகக் கூடிய கவித்துவம். ஆனால் வேதத்தைச் சொல்வதிலும் வைதீக மரபில் ஈடுபாடு வைத்திருப்பதிலும், புராணீக வர்ணாசிரமக் கருத்துகளில் தோய்ந்திருப்பதிலும் அன்றைய மேல்தட்டு, மேல் சாதி குணாம்சங்களையே பிரதிபலித்திருக்கிறார்.
அருமையான அறிமுகம். நூலாசிரியருக்கும், அறிமுகம் செய்த தோழருக்கும் வாழ்த்துக்கள்!