அன்புள்ள மகளே-இரா. தட்சிணாமூர்த்தி (Anbulla Magale : R Datchinamoorthy)

படிப்பு உழைப்பு இருந்தால் வென்று காட்ட முடியும்….

நம் வீட்டில் வளரும் ஆடு, மாடு, நாய், பூனை எல்லாம் பொட்டை குட்டி போட்டால் மகிழும் இச்சமூகம், ஒரு பெண்ணுக்கு பெண் குழந்தை பிறந்தவுடன் தாயையும் குழந்தையும் வெறுத்து ஒதுக்குகிறது.

பெண்ணுக்கு கல்வி மறுக்கப்பட்டது. பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் தான் பொது பள்ளிக்கூடம் கட்டி உள்ளார்கள்.
அதன் பின்னர் தான் பெண்களும் படிக்கும் சூழல் ஏற்பட்டது. அதுவும் சேரி பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் படிக்க இயலாது.

மற்ற சமூக குழந்தைகள் படிக்கும் பள்ளியில் சேரி குழந்தைகளுக்கு படிக்க மறுக்கப்பட்டது.

பிரிட்டிஷ்சார் அனைவருக்கும் கல்வி என்ற கட்டுப்பாடு கொண்டு வந்த பின்னரே பள்ளிக்கூடத்தில் அனைத்து சமூகமும் ஒன்றாய் படிக்கும் சூழல் ஏற்பட்டு என்பதை நூல் ஆசிரியர் அருமையாக பதிவு செய்துள்ளார்.

அரசு வழங்கும் இலவசம், அது போல கல்வி உதவித்தொகை ஏழைகளுக்கு எவ்வளவு அவசியம் என்பதும், இதன் மூலம் சேரிப் பகுதி குழந்தைகள் சிறந்த கல்வி பெற்று வருகின்றனர்.

சமூக உண்மைகளையும் அறிவியல் கருத்துக்களையும் குட்டி குட்டி கதைகள் வழியாக குறிப்பாக அம்மா மகளுக்கு எழுதிய கடிதம் வாயிலாக எடுத்து கூறியுள்ளார் நூலாசிரியர்.

சேரியில் பிறந்த பெண் குழந்தை பத்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து முடிக்கிறார். மேலே படிக்க வாய்ப்பு மறுக்கப்படுகிறது. தந்தை மறைவையொட்டி தனது இரு தங்கைகளையும் தாயையும் பராமரிக்க வேலைக்கு செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது.

தனது இரு தங்கைகளையும் படிக்க வைத்து, போலீஸ் அதிகாரியாகவும், பொறியாளராகவும் உருவாக்குகிறார்.
தானும் கம்யூனிஸ்ட் தோழரை திருமணம் செய்து கொண்டு தேர்தலில் போட்டியிட்டு பஞ்சாயத்து தலைவியும் ஆகிறார்.

பெண் கல்வியை உணர்ந்ததன் மூலம் தனது மகளுக்கு கடிதம் எழுதுகிறார்.
பூப்படைதல் என்றால் என்ன ? கருத்தரித்தல் என்றால் என்ன? பெண்களுக்கான உணவு, பெண்களின் உடை, சுகாதாரம், பெண்களுக்கான அரசியல், பெண்களுக்கு கல்வி ஏன் அவசியம்? அரசு வழங்கும் இலவசங்கள் ஏன் அவசியம்? தீண்டாமை என்றால் என்ன? சாதிய பாகுபாடு, மதபாகு, மூடநம்பிக்கைகள் போன்றவற்றை அறிவியல் ரீதியாக கதை வடிவில் கொண்டு வந்துள்ளது அனைவரும் எளிமையாக வாசிக்கத் தூண்டுகிறது இந்த நூல்.

 

           நூலின் தகவல்கள் 

நூல் : “அன்புள்ள மகளே “

நூலாசிரியர் : இரா. தட்சிணாமூர்த்தி

விலை : ரூபாய் 90/-

வெளியீடு : பாரதி புத்தகாலயம்

தொடர்பு எண்: 044 24332424

 

நூலறிமுகம் எழுதியவர் 

M J பிரபாகர் 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *