தமிழர்கள் ஆகிய நாம் சினிமாவை கொண்டாடிய அளவு வேறு மாநிலம் கொண்டாடி இருக்குமா என்பது சந்தேகமே , சினிமாவில் நடித்தவர்களை நாம் நம் மாநிலத்தை தொடர்ந்து ஆட்சி பொறுப்பில் அமர்த்தி இருக்கிறோம் இதை வைத்தே நாம் சினிமாவை எந்த அளவு நேசிக்கிறோம் எந்த அளவு நம் வாழ்வில் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்..

நாயக வழிபாட்டை தாண்டி திரைப்படங்கள் சாதி மனநிலையை தக்கவைப்பதில், கட்டமைப்பதில் செலுத்தி இருக்கும் தாகத்தை பற்றி 11 கட்டுரை மூலம் விளக்கி இருக்கிறார் ஆசிரியர்..

நீலாம்பரியாக வடிவெடுத்த நீலி

Tamil Film 'Mannan' Presses the Limits of Using Violence on a ...

மன்னன், படையப்பா போன்ற நாயக மைய படங்களில் பெண்ணை எதிரி ஆக்கி அவளை அடக்கி ஆள்வதே ஆண்மை என்கிற ரீதியில் எடுக்கப்பட்ட படம். இதை புராணத்தோடு ஒப்பிட்டு எழுதி இருந்தது சிறப்பாக இருந்தது.

நீலி என்னும் பெண் பற்றிய கதை தமிழகத்தின் பல இடங்களில் வழக்காறுகளாக இருக்கிறது , குமரி மாவட்டத்தில் நீலிகேசி கோவிலும் இருக்கிறது. இந்த நீலி கதைகளில் ஒரு ஒற்றுமை இருக்கிறது அது இந்த நீலிகள் எல்லாம் தவறு செய்த கணவரை கொன்றவர்கள் , குடும்ப அமைப்புக்கு எதிரானவர் ஆகிறார்கள் . அவள் தெய்வமாக வணங்கபடுவது கூட அவள் பேயாக வந்து அச்ச படுத்த கூடாது என்று தான் ..

இப்படி ஆண் மைய சமூகம் தன்னை மீறிய பெண்ணின் ஆற்றலைக் கண்டு அச்சம் கொள்கிறான் எனவே அந்த ஆற்றலை இயல்பற்றதாக்கி விலகிக்கொள்ள முற்படுகிறான்.

ஆண் மைய திரைப்படத்திற்கு இன்னும் ஒரு புராணத்தை உதாரணம் :

இதே போல தான் கண்ணகியை கொண்டாடிய சமூகம் மணிமேகலையை விளக்கி வைத்தது காரணம் மணிமேகலை குடும்ப அமைப்பிற்கு வெளியே சமூகத்தோடு தொடர்பு கொண்டவள்.. ஆணுக்கு புறம் ( சமூக வெளி) , பெண்ணுக்கு அகம் ( வீடு காதல்) இது தான் நம் மரபாக அறியப்படுகிறது , முதல்முறையாக தமிழ் மரபில் பெண்ணுக்கு சமூகத்தால் நிச்சயிக்கப்பட்ட அகவெளியை மறுத்து புறத்தில் நிற்கிறாள், குலவழி தொழிலை வெறுக்கிறாள் , ஆண்களோடு ( சமணர்கள்) வாதிடுகிராள்.

அறிவை அடையாளமாக கொண்ட மணிமேகலையை கண்டு இந்த ஆண்மைய சமூகம் அச்சம் கொள்கிறது அதே வேளையில் கண்ணகி அக வாழ்வை வாழ்கிறாள் கணவன் தவறு செய்யும் போதும், தன்னை விட்டு மாதவியுடன் சென்ற போதும், சொத்து அனைத்தையும் விட்ட போதும் , பேசாமடந்தை ஆக தான் கண்ணகி இருந்தாள் , அவள் பத்தினித்தனம் என்பதே பேசாமடந்தையாய் இருப்பதும் கணவனுக்கு ஆபத்து வரும் போது மட்டும் ரௌத்திரம் கொண்டு பொங்கி எழுவதும் மட்டுமே.

En Peru Padayappa' from 'Padayappa'

இதையே படையப்பா நீலாம்பரி அறிவாற்றல் கொண்ட பெண்ணாக இருந்த போதும் பணிப்பெண்ணாக இருந்த வசுந்தரா கண்ணகியை போல பேசாமடந்தையை போல இருந்ததால் அவளையே நாயகி ஆக்கி மணம் கொள்கிறான் நாயகன்.

அதாவது அவள் படிப்பை, தனித்துவத்தை திமிர் எனவும் ஆணவம் எனவும் , மற்றும் அடங்காபிடாரிதனம் என்கிறது அவள் அறிவு , தனித்துவத்திற்க்கு காரணமாக இருக்கும் கல்வி, வேலை, உடை போன்றவையை எதிர்மறையாக காட்டி கொண்டு இருக்கிறார்கள்.

அடுத்து பொது மகளும் குலமகளும், மனித நிலைக்கும் தெய்வ நிலைக்கும் இடையே ஊடாட்டம், போன்ற கட்டுரைகள் தாசியாக இருந்து பின் சமூக நிலைக்கு உள்ளே தங்களை நிலை நிறுத்த போராடும் பெண்களும் அவர்களை மீட்க்கும் ஒடுக்கப்பட்ட ஆண்களும் அதற்கு துணையாக வரும் இசையை பற்றிய குறிப்புகள்..

கிராமம் என்கிற களம், பாரதிராஜாவின் மண்வாசனை போன்ற கட்டுரைகள் எப்படி சாதிய மனநிலையை கிராம கதைகள் மூலம் நம் சமூகத்தில் நிலை நிறுத்தி இருக்கிறது என்பதை மிக சிறந்த முறையில் ஆய்வு செய்து வழங்கி இருக்கிறார் ஆசிரியர். கவுண்டர், தேவர் சாதி படங்கள் சமூகத்தில் செலுத்திய தாக்கத்தை மிக சரியாக அலசி இருந்தது கட்டுரைகள்…

இந்த படங்களில் வரும் இடைநிலை சாதி ஆட்களின் சாதி மீறல் என்பது சமத்துவமாக இல்லாமல் அவர்களின் சாதியப் பெருமிதத்தில் உருவாகி வரும் கருனையாகவே வருவதை நாம் பார்க்கலாம்..
உதாரணமாக முதல் மரியாதை சின்னையா தேவர் தன் மருமகனுக்கு ஒடுக்கப்பட்ட பெண்ணை மணம் செய்து வைக்கிறார். அந்த பெண்ணின் தந்தை எப்போது சின்னையா தேவரை கண்டாலும் அவர் காலில் விழுந்து வணங்குகிறார். இதில் இருந்து சின்னையா தேவரின் சாதி மீறல் என்பது அவரின் சாதிய பெருமையில் உருவான கருணையே அன்றி சமத்துவம் இல்லை என்பதை உணரலாம்..

Mudhal Mariyathai Songs | Listen to Mudhal Mariyathai Audio songs ...

பாரதிராஜாவின் மண்வாசனை என்கிற படம்தான் தமிழில் முதல் இனவரையியல் படம்( பிரமலைக்கள்ளர் சாதி) .. குறிப்பிட்ட சாதி, அதன் நிலப்பரப்பு, சடங்கு, சாதி சார்ந்து இப்படம் செய்த துல்லியமான சித்தரிப்புக்கு இணையாக வேறு படம் அதற்கு முன் இல்லை இதுவே பிற்காலத்தில் சாதிய பெருமை பேசும் படங்கள் வர காரணமாக இருந்தது..

இதே காலகட்டத்தில் சவரம் செய்கிறவர், துணி துவைப்பவர் போன்ற கீழ் நிலை வேலை செய்கிற பாத்திரங்களை எல்லாம் செந்தில், கவுண்டமணி வைத்து அந்த வேலை செய்கிற மக்களை நகைப்புக்கு உள்ளக்கி உள்ளார்கள்…

எனக்கு பிடித்த பகுதி இரண்டு ஒன்று பட்லர்களை பரிகசித்த சினிமாக்கள் மற்றும் சயனாவனத்திலிருந்து புறப்பட்ட தேவர் மகன்..

Thevar-Magan-1992-Tamil-Movie-Download | MaJaa.Mobi : MaJaa.Mobi

பட்லர் மட்டும் வீட்டு சமையல் பணியாளர்களை எப்படி எல்லாம் பரிகாசம் செய்து தமிழ் சினிமா காட்டி இருக்கிறது என்றும் அதற்கு காரணமாக இருக்கும் சமூக உளவியல் மிக அழகாக எடுத்து சொல்லி இருந்தார் ஆசிரியர்.

ஆங்கிலேயர் ஆட்சியில் அவர்கள் வீட்டில் சமையல் வேலைக்கு சென்ற ஒடுக்கப்பட்ட மக்கள் அடைந்த வளர்ச்சி அதனால் அவர்கள் வாழ்வாதாரம் மேம்பட்டது , கல்வி கிடைத்தது போன்ற காரணங்கள் பொறுக்காமல் உள்ளூர் சாதிகாரர்களுக்கு ஒருவித ஒவ்வாமை ஏற்படுத்தியது அதுவே அவர்களை பரிகசிக்க காரணங்கள்.

ஆங்கிலேயருடன் சேர்ந்து அவர்கள் அரைகுறையாக கற்றுக்கொண்ட ஆங்கிலத்தில் பேசியதை கூட பொறுக்க முடியாமல் ஆங்கிலத்தை தவறாக பேசும் மக்களை பட்லர் இங்கிலீஷ் என்கிற அவமானம் ஏற்படுத்தும் வசைசொல்லை உருவாக்கினார்கள்..

அயோத்திதாசர் முதல் m.c raja வரை பட்லர் சமூகத்தில் இருந்து வந்தவர்கள் தான் ஆனால் தலித்துகள் மீதும் அவர்களின் வளர்ச்சியின் மீதும் இருக்கும் ஒவ்வாமையை கிண்டலாக சித்தரப்பதின் வாயிலாக பொது சமூகம் திருப்தி கொண்டது…

கலாச்சாரம் , சாதி, சாதிய மனநிலை அனைத்தும் எப்படி நம்மையும் அறியாமல் நமக்குள் கொண்டு வந்து அதை சரியென நம்பவைத்து இருக்கிறது சினிமா என்பதை தெரிந்து கொள்ள இந்த கட்டுரை தொகுப்பை வாசிக்கலாம்…

Book :எண்பதுகளின் தமிழ் சினிமா

திரைப்படங்களின் ஊடாக தமிழ்ச் சமூக வரலாறு

ஆசிரியர் : ஸ்டாலின் ராஜாங்கம்

நீலம் பதிப்பகம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *