குழலெனப்படுவது….
—————————————–
வேதகாலத்தின்
குழலொன்று
தங்களிடமிருப்பதாகவும்
இசைத்தால்
எல்லாம் சுபிட்சமகிவிடுமெனவும்
விளம்பரப்படுத்திக்
கொண்டேயிருக்கிறார்
பிரபலமாக்கப்பட்டவர்
குழலில் கசிந்து வரும்
இசையை நாம்
அறிந்துகொள்ளத்தான்வேண்டும்
ஒற்றை வண்ணம்
ஒற்றை மொழி
ஒற்றை மதம்
ஒற்றைத் தேசமென
கட்டியெழுப்ப விழைகிற
அதன் இசையை நாம்
அறிந்துகொள்ளத்தான்வேண்டும்
தன் ஆலாபனைக்கும்
மெல்லிய ஹம்மிங் கிற்கும்
குடிகளை மண்டியிடச்செய்யும்
அதற்கு
குருதியின் சுவையுண்டு
அதன் வரலாற்று மூலத்தை
அறிந்தவர்கள் நாம்
குழலென்பது குழ லல்ல
வெளியெங்கும் நிலவும்
அமைதியின்மையின்
மரண ஓலம்
இதைக் கண்டுணர்ந்து
சொல்கிற
முன்னுணர்ந்து செல்கிற
நாம் தான்
அதன் முடிவுரை.
– நந்தன்கனகராஜ்
“முகமூடிக்குள் மறைந்திருக்கும் கோரைப் பற்கள்” கல்விக் கொள்கைக்கு எதிரான கவிதைத் தொகுப்பிலிருந்து வெளியீடு – தமுஎகச மற்றும் ஆனந்தாயி.
Leave a Reply
View Comments