ஹைக்கூ மாதம்… இளையவன் சிவாவின் ஹைக்கூ

ஹைக்கூ மாதம்… இளையவன் சிவாவின் ஹைக்கூ

  • இலையுதிர் வனம்
    காட்சியளிக்கும் கடவுள்கள்
    ஆபரணங்கள் துறந்து

 

  • மழலையின் புன்னகையில்
    விரியத் தொடங்கியது
    பலூன்காரன் வாழ்வு

 

  • மூடுவிழா தொடக்கம்
    நிமிர்ந்த பிணங்களாக
    தேர்தல் நேர சிலைகள்

 

  • தழுவும் பொழுதில்
    வெட்கத்தில் நழுவுகிறது
    மணலைத் துறந்த அலை

 

  • வெட்டப்படும் மரங்கள்
    விழுந்து கிடக்கின்றன
    பாதைகளில் பூக்கள்

 

  • சுடுகாட்டின் மேட்டில்
    உயிர்த்துக் கிடக்கின்றன
    எருக்கஞ்செடிகள்.

 

  • இறைவனைக் காணவில்லை
    இடிந்து கிடக்கிறது
    மணிப்பூரில் மனிதம்

 

  • மழையின் வருகை
    நிற்கவேயில்லை
    மயிலின் நடனம்

 

  • கரை தேடும் பயணம்
    கடைசிவரை முடியவில்லை
    மீனவனின் தேடல்

 

  • வெட்டும் கருவி
    காத்துக் கிடக்கிறது
    வளரும் செடிக்கு

 

  • அடி வாங்கும் உளி
    சிரித்தபடி நிற்கிறது
    கடவுளான பாறை

 

  • வெடிக்கிறது பலமாய்
    அசையாமல் செல்கிறது
    இறுதி ஊர்வலம்

 

  • திருவிழாக் கூட்டம்
    தீவிரக் கண்காணிப்பு
    திருடனின் விழிகள்

 

  • மிகுந்து கிடக்கிறது
    கோயிலுக்குள்
    கடவுளின் பெயரில் காணிக்கை

 

  • ஒதுங்கியது புயல்
    வலுவடைகிறது
    கரையோர ஒலம்

 

எழுதியவர்

இளையவன் சிவா

கி சிவஞானம் என்ற இயற்பெயர் உடைய இவர் அரசுப் பள்ளி ஆசிரியர்.பயணங்கள் வழியே இயற்கையை ரசிப்பதில் பெரு விருப்பம் உடைய இவரது கவிதைகள் ஆனந்த விகடன் கணையாழி கொலுசு புன்னகை ஏழைதாசன் தினத்தந்தி போன்ற இதழ்களிலும் நிறைய மின்னிதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன. சாகித்திய அகாதமி நிறுவனம் வெளியிட்ட ஆயிரம் ஹைக்கூ தொகுப்பு நூலில் இவரது கவிதைகள் இடம் பெற்றுள்ளன. மின்மினிகள்(1999) தூரிகையில் விரியும் காடு((நூலேணி பதிப்பகம் கன்னிமாரா நூலக வாசகர் வட்டம் இணைந்து நடத்திய போட்டியில் முதல் பரிசு )(2022) தீராக் கனவை இசைக்கும் கடல் (2023)(தமிழ்நாடு கலை இலக்கிய மேடை வழங்கிய அசோகமித்ரன் படைப்பூக்க விருது) என மூன்று கவிதைத் தொகுப்புகளை வெளியிட்டுள்ளார்.




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *