எழுத்தாளரும் ,சூழலியலாளருமான நக்கீரன் அவர்களின் இயற்கை 24×7 என்ற இந்த நூல் இந்து தமிழ் திசை நாளிதழில் உயிர்ச் மூச்சு பகுதியில் ஓராண்டுக் காலம் தொடராக வெளிவந்து வாசகர்களிடையே பெறும் வரவேற்பைப் பெற்றது.

இது தற்போது மேலும் செம்மைப்படுத்தப்பட்டுச் சென்ற மாதம் நூல் வடிவம் கண்டிருக்கிறது.

வணக்கம் செய்திகள் வாசிப்பது இயற்கை இப்படிதான் இந்த நூல் ஆரம்பிக்கிறது. பரவலாக இப்போதெல்லாம் அதிகமாக சோஷியல் மீடியாவிலும் மற்றும் நேரிலும் புலியைக் காப்பாற்றுவோம், யானையைக் காப்பாற்றுவோம், மரங்களைக் காப்பாற்றுவோம் இப்படிப் பல காப்பாற்றுவோம் என்ற வாசம் அதிகமாக நம் கண்களுக்கு தெரிகிறது.

இயற்கை என்பது முழுமை இதில் புலி, யானை, மரம், நீர், நிலம் இன்னும் பல அடங்கும். இயற்கையின் ஒவ்வொரு அங்கமும் அதன் வலைப் பின்னலில் ஓர் இழையே அந்த வகையில் மனிதரும் இயற்கையின் ஒரு இழைதான்.

இழைகள் ஒவ்வொன்றும் ஒன்றையொன்று சார்ந்து பின்னிப்பிணைந்து உள்ளன. இதில் மானுட இழை மட்டும் மற்ற இழைகளைக் காக்க போவதாக கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.

இயற்கையைக் காப்பாற்ற நாம் யார் அதற்கு என்ன தகுதி நம்மிடம் இருக்கிறது? இயற்கை ஒரு உடல் என்றால் நாம் அதன் விரல் நகம் உடலை நகத்தால் காப்பாற்ற முடியுமா ? மாறாக இயற்கை நம்மை வேண்டாம் என்று நினைத்தால் அது தன் நகத்தை வெட்டி வீசிவிட்டு போய்விடும் என்கிறார்.உண்மைதானே.!

புடவி

பிரபஞ்சம் என்னும் வடமொழிச் சொல்லை தமிழில் புடவி என்று அழைக்கலாம் புடவியைப் பற்றி பேசுவது சிலருக்கு அலுப்பூட்டலாம் ஆனாலும் அதைப்பற்றி நாம் அவசியம் அறிந்தாக வேண்டும் அப்போதுதான் புவியில் உயிரினங்கள் வாழ இயற்கை என்னென்ன முன்னேற்பாடுகளை செய்து வைத்துள்ளது என்பது நமக்கு விளங்கும் என்று புடவியைப் பற்றி விளக்குகிறார் .
எண்ணற்ற தகவல்கள் அடங்கிய இருக்கிறது.

கடல் என்பது புவியின் கருப்பை .உயிர் தோன்றிய இடம் எனவேதான் இயற்கை அமைப்புகளில் கடலை மட்டும் கடலம்மா என்கிறோம்.

உப்பு நம் உயிரின் அடையாளம்.உயிர்கள் கடலிலிருந்துதான் உருவானது என்பதால்,நம் உடலிலும் கடல் நீர் மிச்சம் உள்ளது. கடல் உப்பின் அளவு லிட்டருக்கு 3.4 மி.கி.என்றால் , நம் உடலில் உப்பின் அளவு 0.08 மி.கி. மனிதர்கள் உப்பின் துளிகள்‌ ‌.அதனால்தான், உம்மைக் கண்ணீராக உகுக்கிறோம் எனவே உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்கிறார்கள்.ஆனால் நாம் உப்பிட்ட கடலை மறந்த துரோகிகள் ஆனோம்.

ப்டிக்டாங்க் சேர்த்து கட்டுகிற நாம் உலகின் கழிவுகளைக் கொட்ட எந்த ஒரு செப்டிக்டாங்கும் இதுவரை கட்டவில்லை அதுதான் கடல் இருக்கிறதே.

உலகின் நிலப் பகுதியில் பனிரெண்டு சதவீதம் பகுதி பாதுகாக்கப்பட்ட பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடலில் வெறும் ஒரு விழுக்காடு பகுதி மட்டுமே அவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிலத்தை பாதுகாக்கும் அளவுக்கு நாம் கடலை பாதுகாப்பதில் கவனம் செலுத்தவில்லை என்பதை உணர்த்துகிறது.

ஆற்றுநீர் வீணாக கடலில் கலக்கிறது, என்று நிறைய பேர் பேசிவதை கேட்டிருக்கிறோம். ஆனால் அது வீணாக கலங்கவில்லை ஆற்றுநீர் கடலில் கலப்பதால் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்று விளக்கியுள்ளார்.

மணல் என்ற அரும் செல்வத்தை நாம் ஏற்றுமதி செய்து இழந்து கொண்டிக்கும் கொடுமையை விவரிக்கிறார்.

நம்மை பாதுகாக்கவே வேண்டாத ஹார்பனை காடு தனக்குள் புதைத்து வைத்துள்ளது. அதை ஒரு ஊதாரி மகனைப் போல வெளியே எடுத்து செலவிடுகிறோம் இது நம்மை நாமே அளித்துக்கொள்ளும் திட்டம் என்பதை உணர்வதில்லை மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளின் அழிவால் தமிழ்நாட்டின் வெப்பநிலை 0. 25 பகை செல்சியஸ் உயர்ந்திருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது. இது ஒரு எச்சரிக்கை மணி.

காடுகள் என்பது பலருக்கும் தொந்தரவாக உள்ளது. அதனால்தான் அதை ஒரு ஸ்பீட் பிரேக்கர் என்கிறார் ஒருவர் .அதாவது பொருளாதார வளர்ச்சிக்கு இடையூறு செய்யும் ஸ்பீட் பிரேக்கராம் அவர் வேறு யாரும் இல்லை முன்னாள் ஒன்றிய கான்துறை அமைச்சரான பிரகாஷ் ஜவ்டேகர் என்பவர்தான் அவர் .

எவ்வளவு சிறந்த அமைச்சர்

நம் நாட்டு அமைச்சர்களின் பெருமையைப் பற்றி நமக்கு தெரியாதா என்ன.

உலகம் முழுவதும் ஆண்டுக்கு ஏறத்தாழ 1500 கோடி மரங்கள் வெட்டப்படுகின்றன. பதிலாக வெறும் 500 கோடி மரங்கள் மட்டுமே நடப்படுகின்றன.

தற்கால மருத்துவத்தில் பயன்படும் மருந்துகளில் ஏறக்குறைய கால்பகுதி மருந்துகள் மழைக்காட்டு தாவரங்களிலிருந்து பெறப்படுகின்றன. இத்தனைக்கும் காட்டுத் தாவர வகைகளில் இதுவரை வெறும் ஒரு விழுக்காடு அளவுள்ள தாவரங்களே ஆய்வு செய்யப்பட்டுள்ளன. இனிமேல் நாம் வரவழைத்துக் கொள்ளப் போகும் நோய்களுக்கும் அதில் மருந்திருக்கலாம் யார் கண்டது.

மரபீனி மாற்றம் செய்யப்பட்ட காய்கறிகள் விலங்குகள் பற்றி பார்த்திருக்கிறோம், படித்திருக்கிறோம் ஆனால் இது மனிதர்களுக்கே வரப்போகும் ஆபத்தைப் பற்றியும் அந்த மனிதர்கள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் படித்த போது பேரதர்ச்சியாக இருந்தது.

 

நன்றி.
ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி.

நூல்: இயற்கை 24×7
ஆசிரியர்:  நக்கீரன்
பதிப்பகம்: காடோடி
விலை: ₹170
பக்கங்கள்: 140

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

2 thoughts on “ஆயிரம் புத்தகங்கள் ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – இயற்கை 24×7 – ஶ்ரீதேவி சத்தியமூர்த்தி”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *