க .புனிதன் கவிதைஐந்து நதிகளின்
முகப்பு வாசல்
எங்கள் வீடு
சூரியனின் கதிர் எட்டும்
விளைந்த
கோதுமை கதிர்கள்
எங்கள் வயல்
அடுக்களையில்
விளையும் குட்டி நிலவுகள்
கோதுமை ரொட்டி
நடனமும் பாடலும்
சேர்ந்தது
எங்கள் மொழி
எங்கள் வானத்தில் இன்று
தூமகேது
எங்கள் வயலில் இன்று
வெட்டுக்கிளிகள்
பாவங்களின் பாவம்
எம் மக்கள்
சிலந்தி வலையில்
எங்கள் முண்டாசு சூரியன்
 கலப்பையால் உழ வந்திருக்கிறோம்
எங்கள் தேசத்தை மீண்டும்
….க .புனிதன்