ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் - கடலுக்கு பறவையின் குரல் - அ.ஷம்ஷாத்

 

 

 

பல நெகிழ்வான கவிதைகளைக் கொண்ட புத்தகம் “கடலுக்கு பறவையின் குரல்”
அனைத்தும் இனிமையான கவிதைகள் எழுதியவர் எழுத்தாளர் திருமதி அமுதா ஆர்த்தி அவர்கள். வாழ்க்கையின் ஏற்படும் அனுபவங்களையும், வலிகளையும், இன்னல்களையும், ரசித்த நிகழ்வுகளையும் கவிதைகளாக எழுதியுள்ளார் எழுத்தாளர்.

பூவரசின் இலைக்குள் வைத்து வேகவைத்த கொழுக்கட்டையின் ருசியை எடுத்து கூறும் கவிதை அருமை.

‘யாவும் விற்கும் தெருவில் ஒரு நடை’ என்ற தலைப்பில் ஒரு

“பூவரசன் இலைக்குள்
சம்பா அரிசி கொழுக்கட்டை
தேங்காய் துருவல்
பூ டிசைனுடன்

அந்தி சாயும் நேரம்
அந்தக் கடையில் இருந்து
வாங்கி வருவாள் பாட்டி

நித்தமும் வேண்டிக்கொண்டது
நாக்கு

ருசியில் மெய் மறந்த நாக்கு
சொல்லி கொண்டது
கண்களிடம்
விற்பவளை காண வேண்டி

ஈக்காம் பெட்டிக்குள்
சம்பா அரிசி கொழுக்கட்டைகள்
ஈக்களுக்கே முதல்
விற்பனை

ஈக்களை செல்லமாக
துரத்துகிறாள்
வலுவிழந்த கைகளால்”

என்ற கவிதையும் இன்னும்
முதியவளுக்கும் பறவைகளுக்கும்
உள்ள உறவை எடுத்துரைக்கும் கவிதைகள் அருமை.

“சிறகடிக்கும் அறை” என்ற தலைப்பில்

“பறவையின் பாஷையைக் கற்றுக் கொண்ட முதியவள் பறவைகள் போலவே ஒலி எழுப்புகிறாள்

எங்கோ கேட்கும் பறவையின் ஒலிக்கு வீட்டிலிருந்தபடியே சிறகுகளை விரிக்கதுவங்குகிறாள்

குருவிகளுக்கு விதைகளை தானமாகக் கொடுத்து நெருக்கம் கொள்கிறாள்

வானம் திறந்து
மழை வெடிக்கிறது

இரவெல்லாம் உறக்கமின்றிக்
கிடக்கும் முதியவளின் அறையில்
சிறகடிக்கும் சத்தம்”

என்ற கவிதைகளும்
அருமை

“மழை வெயில் காற்றுக்கும் தன்னைப் பதப்படுத்தி வேறு இடம் தேடி முளைக்கத் துவங்கின தானியங்கள்”

“வலியின் ருசி” என்ற தலைப்பில்

“சோற்றில் உன் ஒற்றை வார்த்தையைச் சேர்த்தே
வேகவைத்தேன்

குழம்பிலும் கூட சுவைக்காக சேர்த்துக் கொண்டேன்

எத்தனை அருமையான
ருசி என்றாய்

கசப்பின் சுவை
அறியாதவன்

என்றேனும் ஒரு நாள்
வலி யோடு பிரசவிக்கலாம்
உயிரற்ற மொளனத்தை”

‘கடலுக்கு பறவையின் குரல்’

“மழைக்காக காத்திருக்கும்
குயிலின் பாடலில்
மேகங்கள் உரசிக்கொண்டபோது
ஒரே ஒரு துளி நீர்
கடலின் எங்கோ
ஒரு பக்கத்தை நனைக்கிறது”

இன்னும் என்னை கவர்ந்த கவிதைகள்

”ஏன்’

“உனக்கும் எனக்கும் இடையில்
காற்றை ஏன் அமரச் சொல்கிறாய்”

இன்னும் அன்பை பற்றியக் கவிதை

‘அன்பின் சேமிப்பு’

“மழைக்காலத்தில் முளைக்கும்
குடை போன்ற ஸ்பரிசம்

கண்களுக்குள்

ஒன்று சேர பல புத்தகத்தின் பக்கங்களை புரட்டிக் கொண்டிருந்தாள்

எங்கோ தொலைந்து போன ஒற்றை நெல் மணிக்காக
காத்திருந்தேன்

சேமித்து வைக்க முடியாத
நிமிடத்துளிகளைப் போல்
அவள் அன்பு.”

 

இவரது கவிதைகள் மிகச் சிறப்பான இன்றைய நவீன வாழ்வின் உளவியலையும் மென்மையையும் எடுத்தியம்புகின்றன.

பெண்களின் மனதை சுயமரியாதையை பிரதிபளிப்பதாகவும் இனிமையாகவும் சொல்லாடல்கள் புதிய வார்த்தைகளை உபயோகித்து எழுதியுள்ளார்.

இக்கவிதைகள் எழுதிய எழுத்தாளர் அமுதா ஆர்த்தி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்

அ. ஷம்ஷாத்

புத்தகம் :- கடலுக்கு பறவையின் குரல்
பதிப்பகம் :- வேரல் புக்ஸ்
தொலைபேசி எண்:-9678764322
பக்கங்கள்:- 98
விலை:- 140/-

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

2 thoughts on “ஆயிரம் புத்தகம், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூல் அறிமுகம் – கடலுக்கு பறவையின் குரல் – அ.ஷம்ஷாத்”
  1. ஆர்வத்தைத் தூண்டும் விமர்சனம் எழுதியுள்ள ஷம்ஷாத் அவர்களுக்கு பாராட்டுகள்! கடலுக்கு விடுத்த பறவையின் குரல் என் காதிலும். மனதிலும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. முழுவதும் படிக்கத் தூண்டுகிறது. வாழ்த்துகள்!

  2. ஆர்வத்தைத் தூண்டும் விமர்சனம். வாழ்த்துகள் தோழர் ஷம்ஷாத். கடலுக்கு மட்டுமல்ல மனிதர்களின் மனக் கடலுக்குள்ளும் பறவையின் குரல் ஒலித்துக்கொண்டே இருக்கும். அற்புதமான கவிதைகளை வாசிக்கத் தூண்டும் விமர்சனம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *