குறும்புக்காரன் குவேரா - பாமரன்

“சே” என்றால் மகிழ்ச்சி. கொண்டாட்டம்.

இந்த கோடை விடுமுறையை கொண்டாடி மகிழ, குழந்தைகள் வாசிக்க வேண்டிய நூல் இது.

படிக்க இயலாத குழந்தைகளுக்கு பெற்றோர்கள் படித்து, அவர்களுக்குச் சொல்ல வேண்டிய எளிமையான நூல் இது.

குறும்புக்கார டேட்டி எனும் ஒரு சிறுவனின் வாழ்க்கை வரலாறு தான் இந்த நூல்.

தென் அமெரிக்கா கண்டத்தில் உள்ள அர்ஜென்டினா நாட்டில் வசிக்கும் பெரும் செல்வந்தர்களின் மகன் தான் டேட்டி.

மிகுந்த அறிவோடு கூடிய குறும்புக்காரன். சிறு வயதிலேயே ஆற்றில் மிதவையின் மூலம் பயணிப்பது, மோட்டார் சைக்கிளில் பயணிப்பது, கால்பந்து விளையாட்டு வீரனாகவும் திகழ்ந்தார் டேட்டி.

ஒருமுறை தந்தையோடு பயணம் செய்யும் போது பலரும் பசியால் வாடுவதை கண்கிறார். இது பற்றி தனது சந்தேகத்தை தந்தையிடம் கேட்கிறார். தந்தை டேட்டியிடம், “நூறு ஏழைகள் உழைத்து ஒரு பணக்காரன் உருவாகிறான். அதே நேரத்தில் ஒரு பணக்காரன் மட்டும் வாழ ஆயிரம் ஏழைகளை உருவாக்குகிறான்.” என்கிறார்.

அந்த பதில் டேட்டியின் மனத்தில் ஆழமாகப் பதிகிறது.

அன்றுமுதல், ‘இனி ஏழைகளுக்கு உதவ வேண்டும். ஏழை பணக்காரன் என்ற பாகுபாட்டை ஒழிக்க வேண்டும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறார் டேட்டி.
பெற்றோர்களும் டேட்டிக்கு ஊக்கம் அளிக்கிறார்கள்.

பள்ளிக்கல்வி முடித்தவுடன் டாக்டர் படிப்பில் உயர் கல்வி படிக்கிறார். அதோடு தனது பயணங்களையும் தொடர்கிறார்.

தனது கல்லூரி நண்பருடன் சாகச பயணத்தை தொடருகிறார்கள். மோட்டார் சைக்கிள் மற்றும் நடந்து செல்வதும், பொது வாகனங்களையும் பயன்படுத்தியும் 14 ஆயிரம் கிலோமீட்டர் பயணிக்கின்றனர்.

அப்படி பயணிக்கும் போது, பல நாடுகளில் சுரங்கத் தொழிலாளர்கள் படும் கஷ்டங்களையும் பார்க்கின்றனர். அவர்களுக்கு மருத்துவ உதவிகளை செய்து கொண்டே பயணத்தை தொடர்கின்றனர்.

தொழு நோயாளிகளை கட்டித் தழுவி அன்பு செலுத்தி மருத்துவ உதவி வழங்குகிறார்கள். தங்களை சக மனிதராக நடத்தியதை பெருமையாக கருதினர் தொழு நோயாளிகள். தொழுநோய் தொற்று நோய் அல்ல என்பதை விளக்குகிறார்கள்.

தங்களது பயணத்தை முடித்துக் கொண்டு கல்லூரிக்கு திரும்பி மருத்துவக் கல்வியை முடிக்கின்றனர்.

கியூபா நாட்டின் பிடல் காஸ்ட்ரோவைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.

பிடல் காஸ்ட்ரோவுடன் டேட்டியும் கியூப மக்கள் விடுதலைக்கான போராட்டத்தில் குதித்து, அந்நாட்டின் சர்வாதிகாரியாக இருந்த பாடிஸ்டாவை நாட்டை விட்டு துரத்துகிறனர்.

பிடல் காஸ்ட்ரோவும் டேட்டியும் மக்கள் வெள்ளத்தில் மிதக்கின்றனர்.

டேட்டிக்கு கியூப மக்கள் “சே” எனும் செல்ல பெயர் சூட்டுகின்றனர்.

டேட்டிக்கு பெற்றோர் வைத்த பெயர் குவேரா ஆகும்.

“சே” என்றால் மகிழ்ச்சி. கொண்டாட்டம் என்பதாகும்.

கியூப நாட்டில் அந்நியர் வசம் இருந்த அனைத்தையும் அரசுடமையாக்கி ஏழைகளுக்கு பிரித்துக் கொடுக்கிறார் சே எனும் புரட்சியாளர்.

எளிமையாக எழுதப்பட்டுள்ள, சேகுவாரா எனும் புரட்சியாளனின் சுருக்கமான வரலாற்றை குழந்தைகள் புரிந்து கொள்ளும் வண்ணம் அழகிய முறையில் படைத்துள்ளார் நூல் ஆசிரியர் பாமரன்.

மக்களை நேசித்த ஒரு தலைவனைப் பற்றிய இந்தக் கதை நூலினை இன்றைய குழந்தைகளிடம் கொண்டு சேர்ப்பதும் அவசியமாகும்.

 

நூலின் தகவல்கள் 

நூல் : “குறும்புக்காரன் குவேரா”

நூலாசிரியர் : பாமரன்

விலை: ரூபாய். 70

வெளியீடு : நாடற்றோர் பதிப்பகம் கோயமுத்தூர் -641002

தொடர்பு எண் : 9443536779

நூலறிமுகம் எழுதியவர்

MJ. பிரபாகர்

 

 




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *