குருவி, நரியாரும் காட்டு ராஜாவும் – வா மு கோமு | மதிப்புரை கேத்தரின் தெரசா 

கூட்டுக்குடும்பங்கள் குறைந்து வந்துள்ள காலத்தில், தாத்தா பாட்டிகளின் கதை சொல்லுதலும் இல்லாத இந்நேரத்தில் குழந்தைகளுக்கான சிறுகதைகளை சொல்லும் முயற்சியாக சிறு புத்தகங்கள் எழுதிவரும் வா மு கோமு அவர்கள் எழுதியுள்ள சிறுவர்களுக்கான நாவல் இது.
ஒரு பெரிய காட்டில் சிங்கராஜாவின் தலைமையில் அருமையான வாழ்க்கை வாழ்ந்து வரும் மிருகங்களுக்கு காட்டின் எல்லை யோரத்தில் வாழ்ந்துவரும் ஆதிவாசி மக்களால் ஏற்படும் துன்பங்களை குருவி நரியார் எனும் நரியின் மூலம் ராஜாவுக்கு தெரிவித்து அதனை தீர்வு காண்பதே குறுநாவல்.

தங்கள் குழந்தைகளை வேட்டையாடி காட்டு மனிதர்கள் உணவாக உண்டு வருவதை தாங்கமுடியாத மிருகங்களின் ஆலோசனையின்படி சிங்கராஜாவின் அனுமதியோடு மனிதர்களின் வாழ்விற்கு சென்று அவர்களது குழந்தைகளை கடத்தி வந்து பத்திரமாக ஒரு குகையில் வைத்து விளையாடி பழங்கள் கொடுத்து பாதுகாத்து வருகின்றனர் குரங்குகளும் மற்ற மிருகங்களும். தங்களது குழந்தைகளை பிரிந்த துயரில் மனிதர்கள் என்ன செய்வதென்று தெரியாமல் சில நாட்களில் மெல்ல மீண்டும் வேட்டையாடுதல் திரும்பும் போது ஓரிடத்தில் குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதை காணுகின்றனர்.

அப்போது குழந்தைகளில் ஒருவனான விக்கிமூலம் தாங்கள் சொல்ல நினைத்ததை சொல்லி புரிய வைத்த பிறகு மனிதர்கள் அவ்விடத்தை விட்டு விலகிச் சென்றனர். மிருகங்களும் தங்களது காட்டில் மகிழுந்து வாழ்ந்தனர்.இச்சிறு நாவலின் மூலம் குழந்தைகளின் மனதில் விலங்குகளையும் காடுகளையும் பாதுகாப்பதன் அவசியம் குறித்து பதிய வைக்கிறார் வா. மு. கோமு அவர்கள்.

நூல்: குருவி நரி யாரும் காட்டு ராஜாவும்
ஆசிரியர் : வா மு கோமு
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
பக்கம் : 47
விலை : ரூபாய் 35