உளறுகிறீர்கள் நீங்கள் , சாதி எங்கே இருக்கிறது ?
______________________________________

துப்புவதற்காக இல்லை
எனது நாக்கின் மேல் எச்சில்
உளறுகிறீர்கள் நீங்கள் ,
சாதி எங்கே இருக்கிறது ?

சந்தை நடுவில் இழுத்தபடிச் சென்று
தொங்க விட்டான் தலைகீழாக
அங்கு தான் இருக்கின்றன
நீரூற்றுகளும்
ஏராளமான பூக்களும்
பூக்கக் காத்துக் கொண்டு…
சரியாக அந்த சாலையில் அவள்
விமானத் தளத்திலிருந்து
தொழிலக மையத்திற்கு இழுத்து வரப்பட்டிருக்கிறாள்
அவளுடைய இரண்டாவது கை
பிக் பஜார் பொருட்களின் கீழே
வைக்கப்பட்டிருக்கிறது

அங்கேயே
அவளது கழுத்தை முண்டத்திலிருந்து சரிப்பதற்காக
வாளால் வெட்டப்பட்டது
ரத்தம் வெளியானது
மற்றும் அங்கே அவளை
மொட்டு எனச் சொல்லிச் சிரித்த
அவன் உள்ளே சென்றது
யாருக்கும் தெரியவே இல்லை
கறுப்பு சீசாவிலிருந்து
சிவப்பு நிறமோ
காட்டவில்லை சிவப்பு…
மற்றும்
ஹீரோ ஹோண்டா பஜாஜின் பார்வை
முன் பக்கமாக இருக்கிறது
அதனுடைய பார்வையிலும்
நுழைய முடியவில்லை ரத்தம்
அப்பொழுது நடைபாதையைச் சூழ்ந்து
சர்மா சுவீட் சென்டர்
நுகர்வோர் வசம் போய் சேர்ந்தது.

பயணி இல்லை
யாரோ அவளுடைய அந்த வழியை
தின்று விட்டான்
அவளின் நேரம்
பாக்குத் தொழிற்சாலையில்
எரிந்து கொண்டிருக்கிறது
சில உலையடுப்புக்குக் கீழே
பாக்கை தீயில் வாட்டுவதற்காக
மற்றும் பரவிக் கொண்டிருக்கிறது
அதனுடைய புகை
போகிறது அது நேராக கண்களில்.

நசுக்குகிறார்கள்
மற்றும் முன்னே செல்கிறார்கள்
அவர்களிடம் இல்லை என
நேரம்
அசிங்கமாக பேசுவதற்காகவும்
அப்போதும் யாரோ ஒருவருடைய குரலிலிருந்து ஏதோ செய்தி வருகிறது
மூளையின் உள்ளே
உலையடுப்பில்
மலைகளில்
அடுக்குகளிலிருந்து போகவில்லை
ஒவ்வொன்றும் ஏதோ எரிச்சல்
எங்கே உத்திரவிடப்பட்டிருக்கிறது ?
அதே சாதியாகவே இருக்கிறாய்
உண்மையை நிலைநாட்டுகிறது
ஆனால் இது இயங்குகிறதா ?

வளர்ச்சி மிகவும் அதிகமானது
நிறைய செய்து எடுத்தார்கள்
ஒதுக்கீட்டாளர்கள்
பதவி உயர்வு உரிமை கொன்று…

கிராமம் , கிராமக் கணக்கன் , பஞ்சாயத்து , பள்ளிக்கூடத்தின் சான்றுக்குப் பிறகும்
அவசியமாக இருக்கிறது.
திருப்திக்காக புகைப்படம்.

நம்பிக்கை தான் இல்லாமல் இருக்கிறது
மனிதனைப் பார்த்து
பஞ்சாயத்தின் தீர்ப்பு பதிவு காகிதம் பிரதிக்ஞை படிவம்
அனைத்தும் போலியானவை
உண்டாக்க முடிகிறது மனிதனைப் போலியாக
சாதி சான்றிதழ்களோ நூற்றாண்டுகளாக உருவாக்கப் பட்டுக் கொண்டிருக்கின்றன
நூற்றாண்டுகளாக செய்து கொண்டு வருகிறார்கள்
இது மட்டுமே வேலை _ தொழில் எமது அடையாள ஆராய்ச்சி
பின்னர் சிவாஜியின் சாதிக்காக பனாரஸிலிருந்துஉருவாக்கப்பட்டு இருந்தது பதிவு
இப்போது கலியுகத்தில்
உயர் சாதியினருக்கு வேண்டாம் சான்று
அவர்களோ ரொட்டி _
மகளிலிருந்து செய்து எடுக்கிறார்கள்
மீண்டும் _மீண்டும் ஆயிரம் தடவைகள் வெளிப்படையாகச் சொல்கிறார்கள்

எப்போதும் தான் ஏழையாய் இருப்பதற்கான
வஞ்சனையைச் சேர்த்தே
எப்போதும்
மீசையை முறுக்கி
சொல்கிறாய் ஹி…ஹி..செய்தபடி _ பனியா( வியாபாரி )மனிதன் இருக்கிறேன் என
தீர்ந்ததை கொடுக்கிறாய் மற்றும் முன்னே உள்ளவைகளை
மறந்து போய் இருந்தால்
நினைத்துக் கொள்
ஏந்து உன் சாதி
ஒதுக்கீடு , முன் பதிவு _ பாதுகாத்தல் , மதிப்பு , மகிமை ஒளிதல் , தேசம் _ உலகம்
அரசியல் , வாக்கு _ வங்கி , அசுத்தம் , குப்பை , சினிமாக் கதாநாயகி , எஸ்எம்எஸ் , எஸ்எம்எஸ் , வாட்ஸ்அப் , நீலப்படப் பாட்டு….
விடை பெறுவதாய் சொல்கிறாய்
பெரிய வேலை மீதம் இருக்கிறதென்று
இந்த வாழ்க்கையும் ஏதோ ஒரு வாழ்க்கையாக இருக்கிறது
இந்த தேசமும் ஏதோ ஒரு தேசமாக இருக்கிறது….
அதன் குழந்தைகளோடு
எந்தக் கடவுளின் வடிவமென
சொல்லியபடி..
எதற்கு ?
வெட்கம் வராமல் சொல்கிறாய்
பெறுகிறாய் ஸ்காலர்ஷிப்பையும்…
எடுக்க வா
இறந்த மிருகத்துடன்
உன் புகைப்படம்….

நான் கேட்கும் அந்த நேரம்
இரண்டரை கிலோமீட்டர் தொலைவில்
என்னை
ஏதோ ஒரு புராதன குகையில்
நான் காண்கிறேன்..
அதிர்ச்சி அடைகிறேன்…
உன்னிடம் எவ்வளவு அற்பமான எண்ணங்கள் இருக்கின்றன
உன் மனநிலை அழுகியப்
பின்னரும் கூட…
இப்போதும் கூட…..
அந்த குடல் புழுவானது ஊருகிறது
அசுத்தத்தை விட்டு விட்டும்
அழுகியும் போகிறது
துப்புவதற்காக அல்ல
எனது நாக்கின் மேல் எச்சில்.

நிற்க
மீதியிருக்கிறது என்னிடம் சொற்கள்
அவற்றை நான் விரும்புகிறேன்
அடுப்பை எரிக்கும் வேலைக்குப் பயன்படுமென
என் மகனுக்கு கற்பிக்க முடியும்
ஒன்பதாவது பாடத்தைக் போல என..

எப்போது யாராவது உன்னிடம்
இது போல் சான்று கேட்டால்
என்னைப்போல்
தற்கொலை செய்து கொள்ளாதே.

எனது மகன் அவனிடம் சொன்னான்
மாமா ஜீ என்னிடம் இருக்கிறது
அட்டூழியத்தின் காகிதம்
வீட்டில் இருக்கிறது அரசியல் அமைப்பு…..

மாராத்தியில் : நாம் தேவ் தஸால்
ஹிந்தியில் : கைலாஷ் வான்க்கேடே
தமிழில் : வசந்ததீபன்


நாம் தேவ் தஸால்
________________________
பிறப்பு : 15 பிப்ரவரி 1949
__________
இறப்பு : 15 ஜனவரி 2014
__________
பிறந்த இடம் :
________________
பூனாவுக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் , மஹாராஷ்டிரா மாநிலம்.
படைப்புகள் :
__________________
(1) கோல் பீட்டா (1972)
(2) மூர்க்கம் ஹாதாத் யானே டோங்கர் ஹல்வலே (1975)
(3) ஆமச்யா இதிஹாஸாதீல் ஐக் அபரிஹார்ய பாத்ர: பிரியதர்ஷிணி (1976)
(4) துஹீ யத்தா காஞ்சீபுரம் (1981)
(5) க்கேல் 1983)
(6) காண்டூர் பஹீச்சா (1986)
(7) யா ஸத்தேத் ஜீவ் ரமத் நாஹீ (1995)
(8) மீ மார்லே சூர்யாச்யா ரத்தா சே
க்கோடே  ஸாத் , துஜே  போட் த்தருன்
சால்லோ ஆஹே.
ஆக மொத்தம் 11 கவிதைத் தொகுப்புகள்.
மற்றவை :
______________
(1) தலித் பைந்த்தர் ஆந்தோலன் கே  ஸம்ஸ்த்தாபக் (1972)
(2) புத்த் ரோஹிதாஸ் விசார்ட்ஸ் கெளரவ் புரஸ்கார் (2009)
(3) ஸாஹித்ய ஜீவன் கெளரவ் புரஸ்கார் (2004) மற்றும் பத்மஸ்ரீ புரஸ்கார்.
இவர் கவிதையைக் தவிர நாடகமும் , நாவலும்  எழுதியுள்ளார்.



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *