தலைவர்மார்களின் வாகன விரைவில்
சாமிமார்களின் அன்னதான அறிவிப்பில்
தண்ணீர் லாரி வந்துவிட்ட பரபரப்பில்
கருணைப் பைகள் காலியாகிடும் அச்சத்தில்
ஆலைக் கதவுகள் மூடப்படும் பதற்றத்தில்
மழைவெள்ள முகாம்களைத் தேடுவதில்
புயல் எச்சரிக்கைக் கலக்கத்தில்
பூகம்பக் குலுக்கல் அதிர்ச்சியில்…
ஓடி ஓடியே பழகிய கால்களே
ஒரு மாற்று வேண்டுமென்றா
சொந்த ஊருக்கு நடக்கிறீர்கள்?
ஆனால் நீங்கள் பரிணமித்தது
ஓடவும் நடக்கவும் மட்டுமில்லையே?
—
அ. குமரேசன்
என் வலைப்பூ: அசாக்
http://asakmanju.blogspot.com