samakala sutrusoozhal savalgal 10 article by rammanohar சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 10 ராம் மனோகர்

உள்ளூர் மரங்கள் இன பாதுகாப்பு!
உணர்வு பூர்வ தேவை, ஒருங்கிணைப்பு!

உலக புவி தினம் 22.04.23 அன்று உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. நமது அரிய இயற்கை சுற்று சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஐக்கிய நாடுகள் சபை அறிவித்த இந்நாள், மக்கள் நாம் வளர்ச்சி திட்டங்கள் என்றும், நாகரீகம் என்றும் மக்கள் தொகை, காரணத்தினால் மரங்கள் வெட்டப்பட்டு, காண்கிரீட் காடுகள் ஆக நம் நிலங்கள் கட்டிட குவியல்களாய் மாறிவிட்டன, அல்லவா!?

இந்நிலையில், மரக்கன்றுகள் ஒரு புறம், நடப்பட்டு, வெற்று விளம்பரம் பெருகிவிட்ட அவல நிலை, அதாவது பராமரிப்பு, தொடர்ந்து கண்காணிப்பு பற்றிய எண்ணம் இல்லாத ஒரு வழக்கம், அதிகம் ஆவதும் மறு புறம்!எப்படியோ மரங்கள் இயற்கை தந்த அழகு, அற்புதம், பசுமை, நிழல், உணவு, நீர் தேக்குதல்,பொருளாதாரம் என்றும் பல்வேறு பணிகள் உள்ளடக்கிய ஒரு செல்வம் என்று அனைவரும் அறிவோம்! நமது பூமியில், கிட்ட தட்ட 60000 வேறுபட்ட மர சிற்றினங்கள் உள்ளன. அதிக பட்ச பூமியின் “உயிர் கூழ்மம்”(BIOMASS) ஆக விளங்குகிறது எனில் மிகையில்லை.

மரங்கள் பூமியில் பசுமையாக இருந்து ஏராளமான சூழல் செயல்பாடுகளை தொடர்ந்து பல்லாண்டுகாலம் மேற்கொண்டு வருகின்றன. நீர் சுழற்சி, காற்று, மற்றும் கார்பன் சுழற்சி செய்வதுடன், உணவு, மருந்து தர வளர்ச்சி பெறும் மரங்கள் பல்வேறு உயிரினங்களின் வாழிடம் ஆக பயன்படுகின்றன. இவற்றை நம்மில் பலரும் அறிந்தாலும், விழிப்புணர்வு பெற்றிருப்பினும், பல்வேறு மரங்கள் பற்றிய வேறுபாடு, பரவல்,, பாதுகாப்பு, இன்றும் வினாக்களுக்கு உரியதாகவே இருக்கும் நிலை வருந்ததக்கது. ஆம்!பன்னாட்டு உயிரினங்கள், உயிரின வள பாதுகாப்பு குழு (IUCN/SSC) அறிவித்த உலக மரங்கள் நிலை அறிக்கையின் படி (BOTANICAL GARDENS CONSERVATION INTERNATIONAL -UK.,. Report) 58497 மர சிற்றினங்கள் அழிந்து போய்விடக் கூடிய அபாய நிலையில் உள்ளன. மேற்கண்ட தகவல் ஐந்து ஆண்டு ஆய்வுகளுக்கு பின் அறியப்பட்ட அதிர்ச்சி தரும் நிலையில் நம் அறிஞர் பெருமக்களை ஆழ்த்தி விட்டது. மொத்தம் 17510 சிற்றினங்கள் “அழியும் தீவிர பயமுறுத்தல் “((THREAT OF EXTINCTION ) நிலை கொண்டும், அதிலும் 142 மர சிற்றினங்கள் காடுகளில் முழுவதும் அழிந்து போய்விட்டது.

இந்தோமலயா, பேலே ஆர்ட்டிக் பகுதியில் உள்ள நம் இந்தியா,17 பெரு சிற்றின வேறுபாட்டு நாடுகளில் ஒன்றாக பல்வேறு தாவர சிற்றின வகைகள் கொண்டு விளங்குகிறது.2608 மர சிற்றினங்கள் உள்ள இந்தியாவில்,651 சிற்றினங்கள் நம் நாட்டுக்கு உரிய பிறப்பிடம் கொண்டவை. இந்த உள்ளூர் மர சிற்றினங்கள்

எண்ணிக்கையில் 413 வகை அழிந்து விடும் தீவிர பயமுறுத்தலுக்கு உள்ளாகிவிட்டது என்பதை அறியும்போது மிக வேதனை ஆக இருக்கிறது.(Hopea shingeng)ஹோப்பியா ஷிங்கெங் என்ற மரம் கிழக்கு இமாலய பகுதியில் இருந்தது. மிக உயரமான இந்த மரம் முற்றிலும் அழிந்து விட்டது. (Sterculia Khasiana ) ஸ்டர் குலியா கேசியனா என்ற மேகாலயா மாநிலத்தில் இருந்த மரமும் அழிந்து விட்டது. (Corypha taliera) கார்யாப்பா தாலிரா என்ற பர்மா தாயகம் கொண்ட, அரிய மரவகை , முன்னொரு காலத்தில் பங்களா தேசத்தில், நம் நாட்டின் மேற்கு வங்காள காடுகளில் அழகாக வளர்ந்து நின்றவை, தன் எச்சத்தை கூட விடாமல் அழிந்து விட்டது.

பன்னாட்டு இயற்கை வள பாதுகாப்பு குழு (IUCN )ஆய்வு தகவல் படி, (2015 ஆம் ஆண்டு ஆய்வு )நம் நாட்டில் ஆபத்து நிலையில் 55 சிற்றினங்கள், அருகி வரும் நிலையில் 136 மர இனங்கள், பாதிக்கப்படும் நிலையில் 113 மர சிற்றினங்கள், இருப்பது தெரிய வந்துள்ளது. மேலும் 736 மர சிற்றினங்கள் மட்டும் எவ்வித பிரச்சனை இல்லாமல், குறைந்த பட்ச கவலை தரும் நிலையில் உள்ளது. ஆனால் 57 சிற்றினங்கள் பற்றிய தரவு தகவல் குறைவு என்பது வருத்தம் ஆக உள்ளது. அதைவிட 1459 மர சிற்றினங்கள் பற்றி எவ்வித ஆய்வு மதிப்பீடு என்ற செய்தி, தாவரவியல் வகைப்பாடு, பரவல், பற்றிய ஆய்வுகள் நம் நாட்டில் எதிர் காலத்தில் தேவை என்பது புலப்படுகிறது.

மேகலயா, கேரளா, அந்தமான் யூனியன் பகுதி ஆகிய மாநிலங்களில் முறையே இரண்டு முதல் நான்கு உள்ளூர் மர சிற்றினங்கள் அழியும் அச்சுறுத்தலில் உள்ளது. தமிழ் நாட்டில் பேர்பரியஸ் நீலகிரியன்சிஸ், மெட்ரோமைர்ட்டஸ் வயணாடேன்சிஸ் என்ற இரு உள்ளூர், தாவரங்கள், அதே அழியும் ஆபத்தில் இருப்பது கவலை அளிக்கிறது. இந்த அரிய உள்ளூர் மர இனங்கள் அழிய காரணம், வரை முறையற்ற மர வெட்டுதல், எரி பொருள், வாழிட அழிவு, நோய்கள், அந்நிய தாவர ஆக்கிரமிப்பு ஆகியவை முக்கிய காரணங்கள் ஆகும்.எனினும் மரங்கள் பெரும்பாலும் பலரும் பணம் உற்பத்தி செய்யும் இயந்திரங்கள் ஆக எண்ணுவது, காடுகள், முக்கிய உள்ளூர் இன மரங்கள் அழிய சமீப கால வழக்கம் ஆகிவிட்டது.

பாரம்பரியமாக, இருந்த வனங்களை அழித்து, வெவ்வேறு மர இனங்கள் நடுவது, பருவ கால மாற்றம் மூலமாக வறண்ட பருவ நிலை, (அதிக கார்பன் டை ஆக்சைடு அடர்வு உண்டாதல், தாவரங்களிலிருந்து குறைவான நீராவியாதல் ) போன்ற பாதிப்புகள் ஏற்படும். எனவே ஆய்வு தகவல் அடிப்படையில், நம் நாட்டில் பாதிக்க படும் சூழல் மீட்பு நடவடிக்கை மேம்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. சாதாரண மரங்கள் அதிக நிலையில் வளர்த்து நடுவதை விட அரிய உள்ளூர் மர இனங்கள் வளர்ப்பு வனத்துறை மூலம் ஊக்குவிக்கப்படவேண்டும். (Compensatory Afforestation Fund planning Management )CAMPA திட்டத்தின் மூலம் ஒன்றிய அரசு வனங்கள் பாதுகாக்க முயன்று வருகிறது. குறிப்பிட்ட அரிய உள்ளூர் சிற்றினங்கள், பற்றிய ஆய்வு பாதுகாப்பு மேற்கொள்ள முயற்சி செய்வது அவசியம் ஆகும். உயிரினவேற்றுமை, பாதுகாப்பு, வன மேம்பாடு, பருவ கால மாற்றம் பற்றிய அரசு கொள்கை முடிவுகள் அவ்வப்போது சீர் தூக்கி பார்க்க வேண்டும். பன்னாட்டு உயிரினம் பாதுகாப்பு முடிவுகள் (CONVENTION OF BIOLOGICAL DIVERSITY )படியே,2017-30 ஆண்டுகளுக்குள்,சட்ட பூர்வ நடவடிக்கைகள், மூலம் வன குற்றங்களை குறைக்க வேண்டும்.

சுற்றுச் சூழல் கல்வியில் பள்ளி, கல்லூரிகளில் முக்கிய மரங்கள், உள்ளூர் மரங்கள் முக்கியத்துவம், இனம் கண்டறிதல் இளம் தலைமுறை முறையாக,( வழக்க பாட திட்டத்தினை தவிர) அறிந்து கொள்ள சுற்றுச் சூழல், வனத்துறை, பள்ளி கல்லூரி துறை, உள்ளூர் நிர்வாகம் ஒருங்கிணைந்து திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும்.

அரிய உள்ளூர் மரங்கள் அவற்றின் வரலாறு, பயன்கள், பரவல், போன்றவை பொது மக்கள் அருங்காட்சியகங்கள், மர கண் காட்சிகள் நடத்த வேண்டும். பாரம்பரிய உள்ளூர் மர இனங்கள் அழியாமல் இருக்க சற்று சிந்தித்து பார்ப்போம்!!!

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது
புத்தக விமர்சனம்கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 

2 thoughts on “சமகால சுற்றுச்சூழல் சவால்கள்: தொடர் 10 – முனைவர். பா. ராம் மனோகர்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *