சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும் – ஆதி வள்ளியப்பன்

சிட்டுக் குருவிகளின் கீச் கீச் என்ற இசை இல்லாமல் காலையில் எப்போதாவது கண்விழித்து இருக்கிறோமா?

அப்படி கண்விழித்த நாட்களும் தான் நல்ல நாட்களாக இருந்து இருக்கின்றனவா?

சிட்டுக்குருவிகளின் வாழ்க்கையும் வீழ்ச்சியும் பற்றி அறிவியல்பூர்வமான ஆதாரங்களோடு பேசுகிறது இந்நூல்.

நூலிலிருந்து….
————————–

மார்ச் 20 சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. உண்மையில் சிட்டுக்குருவிகள் தினம் எப்படி வந்தது தெரியுமா?

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் சேர்ந்த ஒரு பறவை ஆர்வலர் முகமது திலாவர். இவர் 2010 ஆம் ஆண்டில் தனது பிறந்த நாளை உலக சிட்டுக்குருவிகள் நாள் என்ற பெயரில் இவரே பிரபலப்படுத்த ஆரம்பித்தார் அதுதான் இன்றைக்கு நாடெங்கும் பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது.

இந்திய பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து பாதுகாப்பது பிரபலப்படுத்தி வழியிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் கழித்த இந்தியாவின் பறவை மனிதர் சலீம் அலி யின் பிறந்தநாளை எந்த ஆர்ப்பாட்டமும் இன்றி ஆண்டுதோறும் கடந்து கொண்டுதான் இருக்கிறோம்.
ஆனால் யாரோ ஒரு ஆர்வலரின் பிறந்தநாள் இல்லாத ஒரு காரணத்திற்காக பெரிதாக கொண்டாடப்படுகிறது. இதுதான் நாம் வந்தடைந்து விட்ட மோசமான புள்ளி.

சிட்டுக்குருவிகளை விட அழிவின் விளிம்பில் உள்ள எத்தனையோ உயிரினங்களின் மேல் செலுத்த வேண்டிய கவனம் தவறான திசையில் சென்று கொண்டு இருக்கிறது.

அப்படி என்றால் சிட்டுக்குருவிகள் முக்கியம் இல்லையா என்று கேட்கலாம். அழிவின் விளிம்புக்கு உண்மையிலேயே தள்ளப்பட்ட உயிரினங்களை தவிர்த்து (கான மயில்- INDIAN BUSTARD இந்திய தேசிய பறவையாக அறிவிக்க பரிசீலிக்கப்பட்டு, பின்னர் மயிலை அறிவித்தார்கள்) ஒரு நகர்ப்புற பறவையான சிட்டுக்குருவி வேறு இடத்துக்கு நகர்ந்து தொடர்பாக மக்கள், அரசின் கவனம் வழிந்து திருப்பப் படுவதால் மற்ற உயிரினங்கள், பறவைகள் மீதான கவனம் திசை திருப்பப்படுகிறது என்பதில் சந்தேகமில்லை.

உலக சிட்டுக்குருவி தினம் இன்று | Today ...

சில சுவாரஸ்ய தகவல்கள்:
======================
1.மற்ற பறவை இனங்களைப் போலவே பின் சிட்டுக்குருவிகளுடன் கலவி கொள்வதற்கு ஆண் சிட்டுக்குருவிகள் இடையே போட்டியும் சண்டையும் இருக்கும்.
இதில் வெற்றி பெறும் ஆண் குருவியே பெண்ணுடன் இணை சேர முடியும்.

2.இங்கே நாம் கவனிக்க வேண்டிய விஷயம் பெரும்பாலான உயிரினங்களில் பெண்களே சிறந்த ஆணை அதாவது நல்ல மரபணு கொண்ட ஆணை தேர்ந்தெடுக்கின்றன.
அனேகமாக பெண்ணை ஆண் தேர்ந்தெடுக்கும் தந்திரம் மனித இனத்தில் மட்டுமே இருக்கிறது.

3.சிட்டுக்குருவி வருடம் முழுவதும் இணை சேரும். இணை சேர்வதற்கு குறிப்பிட்ட கால இடைவெளி கிடையாது. ஆனால், இப்படி கணக்கு வழக்கில்லாமல் இணை சேர்வதுதான் சிட்டுக்குருவி பற்றிய மூடநம்பிக்கைக்கு முக்கியமான காரணம் ஆகிவிட்டது.

4.சிட்டுக்குருவி நீர்ப்பறவை இல்லை என்றபோதும் ஆபத்து நேரத்தில் தப்பி போவதற்கு தண்ணீருக்கு அடியில் நீந்தும் திறன் கொண்டது.

5.முட்டை வைத்து அடை காத்து குஞ்சு பொரிக்கும் காலம் தவிர மற்ற நேரத்தில் எந்த பறவையும் கூட்டில் தங்குவது கிடையாது .இணை சேரும் காலத்தில் மட்டும் தான் பறவைகளுக்கு கூடு இருக்கும்.

6.தன்னுடைய சுயசரிதைக்கு ஒரு சிட்டுக்குருவியின் வீழ்ச்சி என்று பெயர் வைத்து தான் சுட்ட சிட்டுக்குருவிக்கு கௌரவம் சேர்த்தார் சலீம் அலி.

சிட்டுக்குருவியின் அழிவுக்கு காரணங்கள்
÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷÷

பூச்சிக்கொல்லிகள், அயல் தாவரங்கள் பெருகிவிட்டதன் காரணம்

நவீன கட்டடங்களில் குருவிகள் கூடு அமைக்க வசதியின்மை.

வேலி தாவரங்களுக்கு பதிலாக இரும்பு வேலிகள் போடப்படுவது.

ஓய்வு எடுப்பதற்கு புதர் செடிகள் இல்லை.

செல்போன் கோபுரங்களில் இருந்து வரும் மின் காந்த அலைகள்.

சிட்டுக்குருவிகளின் எண்ணிக்கை குறைவதற்கான காரணம் சுற்றுச்சூழல் சீர்கேடுகள் தானே தவிர செல்போன் கோபுரங்கள் மட்டுமே காரணமல்ல என்று இந்தப் புத்தகம் நிறுவுகிறது.

சிட்டு குருவிகளின் வாழ்வும் ...

புத்தகப்பெயர்: சிட்டுக் குருவிகளின் வாழ்வும் வீழ்ச்சியும்

ஆசிரியர் : ஆதி வள்ளியப்பன்

பக்கங்கள்: 88

பதிப்பகம் : தடாகம் 

லோகநாதன் தருமபுரி தகடூர் புத்தக பேரவை குழுவில் இருந்து