எஸ்.ராமகிருஷ்ணன் (S. Ramakrishnan) எழுதிய 'சிறுதுயர்' (Siruthuyar Tamil Short Story) என்ற சிறுகதை-யை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை

எஸ்.ராமகிருஷ்ணனின் ‘சிறுதுயர்’ என்ற சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை.

எஸ்.ராமகிருஷ்ணனின் 'சிறுதுயர்' என்ற சிறுகதையை முன்வைத்து எழுதப்பட்ட கட்டுரை பெருந்துயர் தரும் சிறுதுயர் ஒரு தொடக்கப்பள்ளி மாணவனை வகுப்பறையை நோக்கி ஈர்ப்பது பாடப்பொருளா? வகுப்பறையின் ஒழுங்கு நேர்த்தியா? கற்பிக்கும் உத்திகளா? அல்லது இவை அனைத்துமா? எனச் சிந்தித்தால் இவற்றைவிட முதன்மையான ஒன்றாக…
எஸ் ராமகிருஷ்ணன் எழுதிய கிறு கிறு வானம்(Kirukiru Vanam) - நூல் அறிமுகம் S.Ramakrishnan ' S Kirukiru Vanam published by books For Children - https://bookday.in/

கிறு கிறு வானம்(Kirukiru Vanam) – நூல் அறிமுகம்

கிறு கிறு வானம் - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள் :    நூல் : "கிறு கிறு வானம்" நூலாசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் விலை : ரூபாய் 80/- வெளியீடு :தேசாந்திரி பதிப்பகம் தொடர்பு எண் :…
சாப்ளினுடன் பேசுங்கள் – நூல் அறிமுகம்

சாப்ளினுடன் பேசுங்கள் – நூல் அறிமுகம்

சாப்ளினுடன் பேசுங்கள் - நூல் அறிமுகம்   நூலின் தகவல்கள்: நூல்: சாப்ளினுடன் பேசுங்கள் (சினிமா கட்டுரைகள்) ஆசிரியர் : எஸ் ராமகிருஷ்ணன் வெளியீடு : உயிர்மை பதிப்பக வெளியீடு பக்கம் ; 160 விலை : ரூ.140   மனித…
Rayil nilayangalin thozhamai ரயில் நிலையங்களின் தோழமை

எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ரயில் நிலையங்களின் தோழமைகள் – நூல் அறிமுகம்

தோழர் பகவதி அவர்களின் அலுவலகப் பணி (நியூ இந்தியா அஸ்ஸுரன்ஸ்) ஓய்வு நிகழ்வில் பங்கெடுத்தவர்களுக்கு பரிசாக அளித்த புத்தகம் இது. மதுரை - சென்னை ரயில் பயணத்தில் துவங்கி, சென்னை-கொல்கத்தா விமானப் பயணத்தில் படித்து முடித்தேன். பயணங்களை விரும்பும் மனதிற்கு இந்தப்…
nool arimugam: maraikkappatta india - s.tamilraj நூல் அறிமுகம்: மறைக்கப்பட்ட இந்தியா - செ. தமிழ்ராஜ்

நூல் அறிமுகம்: மறைக்கப்பட்ட இந்தியா – செ. தமிழ்ராஜ்

நூல் விமர்சனம் மறைக்கப்பட்ட இந்தியா எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் விகடன் பிரசுரம் பக்கம் 351 விலை 285 எங்கள் ஊர் கிளை நூலகத்தில் ஒரு புதையலை கண்டெடுத்தது போல் இந்நூலை தேடி கண்டுபிடித்தேன். எவரின் கைபடாமலும் விரலின் நுனி கூட தொடாமலும் ஒரு…
நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்

நூல் வெளியீடு: ஜி.ராமகிருஷ்ணனன் ’மகாத்மா மண்ணில் மதவெறி’ (மதவெறி ஆயுதங்களை எதிர்த்து நிற்கும் பேனா!) – தொகுப்பு: சுப்பிரமணியன்




நமது நக்கீரன் இதழில் சி.பி.ஐ.எம்.மின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் எழுத்தாளருமான ஜி.ராமகிருஷ்ணன் எழுதி தொடராக வந்த மகாத்மா மண்ணில் மதவெறி நூல் வெளியீட்டு விழா ஜூலை 1 2022 அன்று திநகர் சர்பிட்டி தியாகராயர் அரங்கில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இவ்விழாவுக்கு மாவட்டச் செயலாளர். தீ.சந்துரு தலைமை தாங்கினார் விழாவுக்கு வந்தவர்களை மாவட்டத் தலைவர் எம்.ஆர்.சுரேஷ் வரவேற்புரையளித்தார்.

நூலை சி.பி.ஐ-எம்மின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் பெற்றுக் கொண்டார் கோவிட் தொற்று காரணமாக விழாவுக்கு வரவியலாத நிலையில் மகாத்மாவின் நான்காவது மகன்வழிப் போரனாகிய கோபாலகிருஷ்ண காந்தி, வாழ்த்துச் செய்தி அனுப்பியிருந்தார். அது விழா மேடையில் வாசிக்கப்பட்டது ‘மதவெறியில் முஸ்லிம் மதவெறி, இந்து மதவெறி என்று கிடையாது வன்முறை என்றால் வன்முறைதான். அத்தகைய சமயங்களில் விரைந்து செயல்எட்டு மதவெறி பரவாது தடுத்திட இந்திய மக்களாகிய நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார்.

நூலை வெளியிட்டுப் பேசிய கே.பாலகிருஷ்ணன் “எற்கனவே சில மாதங்களுக்கு முன் டெல்லியில் நடைபெற்ற விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத்தைப் பற்றி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களில் ஒருவரான சி.மகேந்திரன், நக்கீரன் இதழில் தொடராக எழுதி அதன் புத்தக வெளியீட்டு விழா நடந்தது. அந்தப் புத்தகத்தை வெளியிட்ட பெருமையும் நக்கீரன் கோபாலையே சேரும்.

‘மகாத்மா மண்ணில் மதவெறி என்னும் சிந்திக்கக் அடினமான தலைப்பில் புத்தகம் வெளியிடுவது மிகுந்த தைரியமான காரியம் இத்தகைய தொடரை எல்லோராலும் வெளியிட முடியாது கட்டுரை போராடித் தென்றால் பத்திரிகை நட்டம் ஏற்படுமே என்றுதான் பத்திரிகை உரிமையாளர்கள் நினைப்பார்கள் சமூகத்துக்கு பலனளிப்பதைப் பற்றி பெரிய கவலைப்படமாட்டார்கள்:

ஆனால் நக்கீரன் ஆசிரியர், இந்தத் தொடரை வியாபாரமாகப் பார்க்காமல் சித்தாந்தப் போராட்டமாகப் பார்த்து வெளியிட்டிருக்கிறார். அறிவை வியாபாரம் செய்வது வேறு. அறிவை விதைப்பது என்பது வேறு. நக்கீரன் கோபால் அறிவை விதைத்திருக்கிறார். நாடிருக்கும் குழ்நினையில் சமூகம் மகாத்மாவை மறுவாசிப்புக்கு உட்படுத்த வேண்டிய தேவையை உணர்ந்து இந்த நூலை எழுதியிருக்கிறார் ஜி.ராமகிருஷ்ணன்” என்று குறிப்பிட்டார்.

இந்த நூல் குறித்த கருத்துரை வழங்கிய நமது நக்கீரன் ஆசிரியர். 2002 குஜராத் கலவரத்தில் 2000 பேர் இறந்ததாய் செய்தி. குஜராத் கலவரம் குறித்த இந்த வழக்கில் சமீபத்தில் தீர்ப்பு வந்தது. இந்த வலவரத்தில் இறந்தவர்களை எல்லாம் யாருமோ கொல்லலை, தங்ளைத் தாங்களே அழிச்சுக்கிட்டாங்க யாருமே குற்றம் செய்யாம கொலைகள் நடந்திருக்கு.

இத்தகைய மண்ணில்தான். தம் வாழ்கிறோம் இந்த மண்ணில்தான் வாழப்போகிறோம்” என்று மனம் கசந்தவர், “ஹிட்னர் பாதையில் ஒன்றிய ஆட்சி எப்படி நடைபோடுகிறது என்பதை தன் பாணியில் ஜி.ராமகிருஷ்ணன் நூலில் சொல்லாமல் சொல்லியிருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் விரைவில் நூற்றாண்டு விழா கொண்டாடப் போகிறார்கள் இந்தக் குறிக்கோளுக்கு தடையாக அமைபவை இதுபோன்ற நூல்கள். எனவே இதுபோன்ற எத்தனை நூல்களை ஜி.ஆர். அவர்கள் எழுதினாலும் அதைக் கொண்டுவர நக்கீரன்’ தயாராக இருக்கிறது என உற்சாகத்துடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் இதை நூலாக வாசித்தபோது எமக்கு ஏற்பட்ட முதல் அனுபவம் என்ன தெரியுமா? இடதுசாரிகள் மகாத்மா காந்தியைக் கொண்டாடத் தொடங்கியிருக்கிறார்களே என்ற மகிழ்ச்சிதான் இதில் 25 கட்டுரைகள் இருக்கின்றன. அவற்றின் வழியாக ஏன் காந்தி இன்று தேவைப்படுகிறார் என்பதை விளக்குகிறார் காந்திடமிருந்து நமக்குக்கிடைக்கவேண்டியது ஏதாவது இருக்குமென்றால், வெளிச்சத்தை நோக்கிய பயணம்தான் இப்போதிருக்கும் சூழலில் ஜி ஆரின் நூல் தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியச் குழலுக்கே மிகவும் தேவையான நூலி என்று அடையாலம் காட்டினார்.

அவரைத் தொடர்ந்து போசவந்த காங்கிரஸ் தலைவரும், சிறுபான்மை ஆணையத் தலைவருமான பீட்டர் அல்போன்ஸ் வரலாற்றை மக்கள் மறந்துகொண்டே இருப்பார்கள் வாரலாற்று ஆசிரியர்களுடைய கடமை மக்களுக்கு அதை மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான் அதனால் எத்தனை புத்தகங்கள் வந்தாலும் புத்தகங்கள் செய்ய வேண்டிய பணிகள் தீர்ந்து விடுவதில்லை என எமர்சன் (சொல்கிறார் மகாத்மா மண்ணில் மதவெறி தொடரை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியரைப் பாராட்டவேண்டும் என பேசியமார்ந்தார்.

நிறைவாக ஏற்புரையாற்றிய ஜி.ராமகிருஷ்ணன் இத்தகைய நூலொன்றை எழுதவேண்டும் என மறைந்த பத்திரிக்கையாளர் ஜவஹர் சொன்னார். என்னால் முடியாது என்று தயங்கினேன் உங்களால் முடியும் என்று ஊக்கப்படுத்தினார் பின் எழுத முடிவுசெய்தபோது, நாலைந்து தலைப்புகளை ஆலோசித்து ‘மகாத்மா மண்ணில் மதவெறி’ என்ற தலைப்பை முடிவு செய்தோம் பதிப்புரைக்கு நக்கீரன் ஆசிரியர், மதவாதத்தை வெடித்துச் சிதரவைக்கும் கந்தகம்’ என பொருத்தமாக தலைப்பிட்டிருந்தார். இன்றும் ஆர்.எஸ்.எஸ் பாஜகவுக்கு அச்சுறுத்தலாக இருப்பது மகாத்மா காந்திதான் அதனால் மதவெறிக்கு எதிரான போராட்டத்தில் உயிநீத்த மகாத்மா உள்ளிட்ட தியாதிகளுக்கும் நூலை சமர்ப்பித்தோம்” என்று குறிப்பிட்டார்.

தொகுப்பு: சுப்பிரமணியன்
நன்றி: நக்கீரன்

நூல் வெளியீடு : மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி‌.ராமகிருஷ்ணன்

நூல் வெளியீடு : மகாத்மா மண்ணில் மதவெறி – ஜி‌.ராமகிருஷ்ணன்





மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி‌. ராமகிருஷ்ணன் எழுதி நக்கீரன் பதிப்பகம் பதிப்பித்துள்ள ‘மகாத்மா மண்ணில் மதவெறி‘ நூல் வெளியீட்டு விழா வெள்ளியன்று (ஜூலை 1) தி.நகரில் நடைபெற்றது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தென்சென்னை மாவட்டக்குழு சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நூலை வெளியிட தமிழ்நாடு சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பெற்றுக் கொண்டார். உடன் ஜி.ராமகிருஷ்ணன், நக்கீரன் கோபால், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், வாலிபர் சங்க நிர்வாகிகள் எம்.ஆர்.சுரேஷ், ஜானகி ஆகியோர் உடன் உள்ளனர்.

நூல் : மகாத்மா மண்ணில் மதவெறி

ஆசிரியர் : ஜி‌.ராமகிருஷ்ணன்
விலை : ரூ. 125.
வெளியீடு : நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com

நன்றி : தீக்கதிர்

Veeram Vilaindhathu Book By Nikolai Ostrovsky in tamil translated by S. Ramakrishnan BookReview By Ki Ramesh. நூல் அறிமுகம்: நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது | தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன் - கி.ரமேஷ்

நூல் அறிமுகம்: நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் வீரம் விளைந்தது | தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன் – கி.ரமேஷ்




புத்தகம்: வீரம் விளைந்தது.
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
ஆசிரியர்: நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்கி
தமிழில்: எஸ்.ராமகிருஷ்ணன்
விலை:300
பக்கங்கள்: 505

சில நாட்களுக்கு முன்னால் அல்லது சென்ற வாரம் இந்த வருடத்தின் முதல் புத்தகம் முடிந்தது. அதாவது பாதி சென்ற வருடம் படித்தது, மீதியை இந்த வருடம் முடித்தேன். அதன் தொடர்ச்சியாக இரண்டாவது புத்தகத்தை வாசித்து முடித்தேன். சரியாகச் சொல்வதென்றால் மறுவாசிப்பு. ‘வீரம் விளைந்தது என்ற இந்த சோவியத் நாவலை நான் மாணவனாக இருந்த போது படித்திருக்கிறேன். இப்போது பாவல் கர்ச்சாகின் என்ற அந்த நாவலின் நாயகனின் பெயரைத் தவிர எதுவும் நினைவில் இல்லாமல் இருந்தது. பாரதி புத்தகாலயத்தில் அதை மறுவெளியீடு செய்யவும், அந்த சந்தர்ப்பத்தைப் பற்றிக் கொண்டு வாங்கிப் படித்து முடித்திருக்கிறேன்.

பலரும் மொழிபெயர்ப்பு என்றாலே பயந்து வாங்காமல் ஆங்கிலப் புத்தகத்தைத் தேடுவார்கள். நான் இங்கு ஒரு உறுதிமொழி கொடுக்கிறேன். சற்றும் சலிக்காத ஒரு மொழிபெயர்ப்பை நமக்குக் கொடுத்திருக்கிறார் தோழர் எஸ்.ராமகிருஷ்ணன்.

பிரமிப்பாகத்தான் இருக்கிறது. ஏனென்றால் அந்த நாவலின் ஆசிரியர் நிக்கோலாய்தான் அதன் நாயகனும் கூட. தனது 32 வயதில் இத்தனை விஷயங்களைச் செய்து முடித்து மரணத்தைத் தழுவியிருக்கிறார் என்றால் பிரமித்து செவ்வணக்கம் செய்யாமல் வேறென்ன செய்ய முடியும்?

தன் இளவயதில் ஒரு ரயில் நிலையத்தில் காண்டீனில் வெறும் தொழிலாளியாகத் தனது வாழ்க்கையைத் தொடங்கும் பாவல் கர்ச்சாகின் படிப்படியாக ஒரு போல்ஷெவிக் போராளியாகி பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு மத்தியக்குழு வரை உயரும் ஒரு வீர காவியம் இது.

ஒவ்வொரு புரட்சிக்கும் அதனால் தமது வாழ்வை, அதாவது அடுத்தவரை உறிஞ்சிப் பிழைக்கும் வாழ்க்கையை இழந்த எதிர்ப்புரட்சி சக்திகளின் எதிர்ப்பும் கடும் போராட்டமும் இருக்கும். சோவியத்திலும் செம்படைக்கு எதிராக வெண்படை திரட்டப்பட்டுக் கடும் போராட்டம் நடந்தது. தமது இன்னுயிரையும், வேறு எதையும் பொருட்படுத்தாமல் போரில் ஈடுபட்டுத் தமது தந்தையர் நாட்டைப் பாதுகாத்தவர்கள் செம்படை வீரர்கள். மக்களையும் அவர்களின் நல்வாழ்வையும் நினைத்துக் கூடப் பார்க்காமல் அழிக்கும் வெண்படையினரின் சீரழிவுக்கு எதிராகவும் கடும் போராட்டம் நடத்தியிருக்கின்றனர். அங்கு நிலவும் கடும் குளிர்காலத்தில் மக்களுக்கு விறகு கிடைக்காமல் இருக்கவும் தடை ஏற்படுத்துகின்றனர். அந்தக் கடும் குளிரில் செம்படை வீரர்கள் உயிரைப் பணயம் வைத்து ரயில் பாதை அமைக்கின்றனர், மக்களைப் பாதுகாக்கின்றனர்.

அங்கிருந்து திரும்பும் பாவெல் தொடர்ந்து பல பொறுப்புக்களை ஏற்றுப் பணி செய்கிறான். நேரம் காலம் பார்க்காமல் பணி செய்கிறான். இறுதியில் போரில் ஏற்பட்ட காயம் காரணமாகத் தனது உடலே செயலிழந்தாலும், பின்னர் தமது வாழ்க்கையை ஒரு நாவலாக எழுதி நமக்கு வழங்கியிருக்கிறார் நிக்கோலாய் என்ற நம் பாவெல் கர்ச்சாகின். ஒரு மனிதன் தம்மைப் புரட்சியாளனாக்கிக் கொள்ளும் போது எத்தகையதொரு தியாகத்துக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பதை இந்த நாவலின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

இந்தப் புத்தகத்தில் இந்த முறை நான் ரசித்த ஒரே ஒரு பகுதியை உங்களுக்கு வழங்குகிறேன்:

”இந்தக் கம்சமோல் இளைஞர்களெல்லோரும் எங்கிருந்து வந்தார்களென்பதுதான் எனக்கு விளங்கவில்லை. இந்த மாதிரி ஆட்களை நான் முன்னால் பார்த்தது இல்லை. அந்தப் பள்ளிக்கூட ஆசிரியைதான் இவர்களையெல்லாம் கிளப்பி விட்டிருக்கிறாள்; எனக்குத் தெரியும். அவளது பெயர் ரக்கீத்தினா. உங்களுக்குத் தெரியுமா? இளம் வயதுதான்; ஆனால் மிகவும் தீயவள். கிராமத்திலுள்ள பெண்களையெல்லாம் தூண்டி விடுகிறாள்; அவர்களுக்கு ஏதேதோ அபத்தமான விஷயங்களையெல்லாம் சொல்லிக் கொடுக்கிறாள். இதனாலே கலகமே உண்டாகிறது.

முன்போல ஒருவன் தனது சொந்த மனைவியை அடிக்க முடியாத அளவுக்கு நிலைமை கெட்டு விட்டது! அந்தக் காலத்தில், ஒருவனுக்கு மனநிலை சரியில்லாவிட்டால், மனைவியை அடிப்பான். அவளும் பதில் பேசாமல் மூலையில் உட்கார்ந்து இருப்பாள். இப்பொழுதோ, அடித்தால், ஆர்ப்பாட்டம் செய்கிறாள்! ஏண்டா வழியிலே போகிற தொல்லையை வாங்கிக் கட்டிக் கொண்டோமென்று வருந்த வேண்டியிருக்கிறது. பொதுஜன நீதிமன்றத்தில் வழக்குப் போடுவேன் என்று வீரம் பேசுகிறாள், அவள்! வயதுப் பெண்களோ, தத்தம் கணவன்மாரிடம் சட்டம் பேசுகின்றனர்! அடித்தால், விவாகரத்துச் செய்து விடுவேனென்று அச்சுறுத்துகின்றனர். என் மனைவி கன்கா, மகாசாது! இப்பொழுது அவள் மாதர் சங்கத்தில் சேர்ந்து பிரதிநிதியாக வேறு ஆகிவிட்டாள்.”

புரட்சி எதைச் சாதித்திருக்கிறது என்பதை நாவலின் ஒரு பகுதியிலேயே ஒரே பத்தியில் விளக்கி விட்டார் பாருங்கள். அனைத்து இளைஞர்களுக்கும் ஒரு ஆலோசனை. எப்படியாவது இந்த நாவலை ஒருமுறை படித்து விடுங்கள். எப்படி செயல்பட வேண்டுமென்று அது உங்களுக்கு வழிகாட்டும்.

2021 Muthamil Dr.Kalaignar Porkili BAPASI Award Announced. 2021-ம் ஆண்டுக்கான 'முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி' விருது அறிவிப்பு

2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிப்பு



2021-ம் ஆண்டுக்கான ‘முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் பொற்கிழி’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பபாசி இன்று (செப். 30) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

“2007-ல் 30-வது சென்னை புத்தகக் காட்சியைத் தொடங்கிவைத்த, மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தம் சொந்த நிதியிலிருந்து ஒரு கோடி ரூபாயை பபாசியிடம் வழங்கி, ஆண்டுதோறும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும் ஒரு பிறமொழி எழுத்தாளருக்கும், ஒரு ஆங்கில மொழி எழுத்தாளருக்கும் தலா ஒரு லட்சம் வீதம் பொற்கிழியும், விருதும் வழங்கக் கூறினார்.

அதற்காக, பபாசியால் உருவாக்கப்பட்ட அறக்கட்டளையில் இருந்து, கவிதை, புனைவு இலக்கியம், உரைநடை, நாடகம் ஆகியவற்றில் சிறந்த 4 தமிழ் எழுத்தாளர்களுக்கும், ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் எழுதும் சிறந்த 2 பேருக்கு ஆண்டுதோறும் விருது மற்றும் ரூ.1 லட்சம் பணமும் அளித்து கவுரவித்து வருகிறது. அதன்படி, 2007-ல் இருந்து இதுவரை 84 எழுத்தாளர்களுக்கு ரூ.84 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

2021-ம் ஆண்டுக்கான விருதாளர்களை அதற்காக அமைக்கப்பெற்ற குழு தேர்வு செய்துள்ளது. தேர்வுபெற்ற விருதாளர்கள் பட்டியலை பபாசியின் தலைவர் ஆர்.எஸ்.சண்முகம் அறிவித்துள்ளார். கரோனா காரணமாக நடைபெறாமல் நின்றுவிட்ட 2020-ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழாவும், 2021-ம் ஆண்டுக்கான விழாவுடன் இணைந்து நடைபெறும். விழா குறித்த தேதி மற்றும் நேரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று பபாசி தலைவர் அறிவித்துள்ளார்.

2021-ம் ஆண்டு விருது பெறும் விருதாளர்கள்:

1. அபி – கவிதை

2. இராசேந்திர சோழன் – புனைவிலக்கியம்

3. எஸ்.ராமகிருஷ்ணன் – உரைநடை

4. வெளி ரங்கராஜன் – நாடகம்

5. மருதநாயகம் – ஆங்கிலம்

6. நதித் சாகியா – பிற இந்திய மொழி (காஷ்மீரி)”.

இவ்வாறு பபாசி தெரிவித்துள்ளது.