மயிலிறகு மனதையும், இதயத்தையும் ஒரு சேர நெஞ்சை விம்மச் செய்தது அ.கரீமின் தாழிடப்படாத கதவுகள். துயரத்தை நெஞ்சில் தூளி போட்டும், அழியாத தடமாய் மாறிப் போன சுவடுகளாய் நீக்கமா நிலைபெற்று விட்ட புத்தகம். இந்தக்கதைகள் ஒவ்வொன்றும் காட்சிகளை நம் மனங்களில் அழுத்தம், திருத்தமாக வரைந்து இருக்கின்றன.
பூட்டிய கதவுக்குள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழும் வாழ்வு அதுவும் ஐந்து நாட்கள் தாண்டி வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் இம்சையாய் படரும் அந்த நிமிடத்தை நம்முன் காட்சிப்படுத்தி இருப்பார். அந்த அமானுல்லா அழுகை, நிமிடத்துள் தெறித்து மனதெல்லாம் பார்க்கும்போது, நம்மால் இயலாத மனதையும், நம் சகோதரனுடையது என்கிற வேதனையும் இயலாமையும் நம்மை அந்த காட்சிகளுக்குள்ளாகவே கொன்று விடுகிறது அந்த ரணத்தின உச்சம். போர்வைக்குள்ளாக வெடித்து எழும் அவனது அழுகையும், அந்த இருளும், பசியும் அவனது குடும்பத்தை மட்டுமல்ல நம் கண் முன் நடப்பதை கோர தாண்டவத்தை பிசைந்தெடுக்கிறது.
அந்தக் கதையின் மையமாக ஆசிரியர் அ.கரீமின் கீழ் உள்ள வாசகம் அதற்கு சான்று.
இந்த விட்டுக்கு குடி வந்த புதிதில் தொல்லையாக இருந்த பறவைகளின் சப்தம் பின் பழகி இனிமையான பாடலாக மாறியது. அந்தப் பறவைகள் எங்கே போனது, மனிதர்கள் இல்லாத இடத்தில் பறவைகள் வாழும். பறவைகள் இல்லாத பூமியில் மனிதர்கள் வாழ முடியாது என்று ஒரு முறை எங்கோ படித்த நியாபகம் அவனுக்கு வந்தது. அப்படியென்றால் மனிதர்கள் வாழ முடியாத பகுதியில் இருக்கிறோமா? என்று அவன் தெருவை நினைவில் நிறுத்தினான்.”

திருமணத்துக்கு காத்திருக்கும் நாட்களில் ஆணுறுப்பு வெட்டப்பட்டு பெட்ரோல் உற்றி கொளுத்தப்படுகிறான் ஓர் இஸ்லாமிய இளைஞன். மளிகைக்கடையை விட்டு ஒட ஒட விரட்டி விரட்டி அடிக்கப்படும் சலீம். பூர்வீகத்தை விட்டு மிரட்டி விரட்டு வெளியேற்றப்படும் மைமூன். இப்படியாய் கதை நெடுகிலும் எத்தனை ரணங்களளோடு கூடிய வலிகள். ஆசிரியர் அந்தக் காலத்தை மனித சமூகத்துக்கு கொண்டு சேர்ப்பதற்கு காலத்தோடு பயணம் செய்து அத்துணை வலியையும் இம்சையையும் உலகிற்கு தன் எழுத்து மூலம் அங்குலம் அங்கூலமாக வெளிப்படுத்துகிறார்.அவையெல்லா வற்றையும் நம் கண்முன் காட்சிப்படுத்துவதில மட்டுமல்ல பயணிக்க வைத்து நம்மை சாட்சியமாக்குகிறார். ஒடுக்கப்பட்ட குரலாய் ஒங்கி ஒலிக்கிறது இவரின் குரல்.
ஜமாத்துக்குள் எழும் ஓர் இளம் விதவையின் கேள்வி. ஒங்கி ஒலித்து அத்துணையையும் கேள்வி கேட்கும் குரல். அது ஆசிரியர் சமூகத்தின் அடிநாதமாய் ஜனநாயகத்தின் நாதியற்ற குரலுக்கான குரலாய் ஒலிக்கிறார். தான் இருக்கும் ஒரு இடத்தில் இருந்து கேள்வி கேட்பது அவ்வளவு சுலபமில்லை. ஆனால் பெண் வடிவத்தில் அவர்கள் உரிமையாய் வெடிப்பதில் அவர் எழுத்து நம்மையே அசைத்துப் பார்க்கிறது.
கார்பரேட் சாமியாராய் கதையளந்து, தலித்துகளின் நிலத்தை களவு செய்யும் துறவியையும், சமூகத்தின் மீதான இவரின் அக்கறையும் காலம் கடந்தும் இன்றும் அந்தக் கதை பேசப்படும் தீர்க்கதரிசியாக ஆசிரியர் இருக்கிறார். அறிவிக்கப்படாத 144 கதை இன்றைய சமகாலத்தை எல்லோருக்கும் வெட்ட வெளிச்சமாக உணர்த்துகிறது. ஒரு கதையாசிரியனாக இல்லாமல் உண்மையான நேர்மையின் ஆசிரியராக வெளிப்படுகிறார்.
சமகாலத்தின் இதயத்தை கொஞ்சம் கொஞ்சம் பிழிந்து உயிர்க்குலையை அறுத்த புத்தகம் தாழிடப்பட்ட கதவுகள்.
புத்தகம் – தாழிடப்பட்ட கதவுகள்
ஆசிரியர் – அ.கரீம்
பதிப்பகம் – பாரதி புத்தகலாயம்
விலை: ரூ.140
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/thalidappatta-kathavukal/
வீரசோழன்.க.சாே. திருமாவளவன்
நன்றி தோழர்.. பேரன்பு