இசையமைப்பாளர் இளையராஜா ‘அவுட் லுக்’ என்ற ஆங்கில பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், பாப் மாக்ஸி, பாப் டிலன் மற்றும் தமிழகத்தில் பாவலர் வரதராஜன் ஆகிய மக்கள் பாடகர்களைப்பற்றிக் கேட்ட போது “அந்தக் குப்பைகளுக் கெல்லாம் அப்பாற்பட்டவன் நான் என்று சென்னதாகப் பத்திரிகைகளில் செய்தி வெளியாகியுள்ளது. இக்கூற்றை இளையராஜா இது வரையில் மறுக்கவில்லை .

இளையராஜா தன் உடன் பிறந்த சகோதரரான பாவலர் வரதராசனின் நாட்டார் இசைப் பற்றிச் சொல்லியிருப்பது உண் மையானால், அவர் தன்னைத் தானே மறுப்பதாகும். தான் பிறந்து வளர்ந்த இசை மரபை அவமதிப்பதாகும். பாவலர் வரதராசன் பற்றியும், வரதராசன் இசைக்குழுவில் அங்கமாகித் தமிழகம் பட்டி தொட் டிகள் எல்லாம் அலைந்த கலைப் பயணம் பற்றியும் சொல்லியி ருப்பதைத் திரும்பிப் பார்க்க வேண்டும்.

இளையராஜா, பாவலர் வரத ராசனை ஒரு பிறவிக் கலைகள் ஏன்று சொன்னதோடு மட்டும் இல்லாமல் பாவலர் இசையின் வல்லமை பற்றி, “பாவலர் சிரித்ததால் மக்கள் சிரித்தார்கள். அவர் அழுதால் அவர்களும் அழுதார்கள். அவருடைய உணர்ச்சிகளை, அவருடைய பாடல்களைக் கேட்கும் ஒவ்வொருவரும் அவர் போலவே உணர்வுகளை வெளிப்படுத்தினர்,” என்று சொன்ன தோடு மட்டுமல்லாமல், அந்த மகத்தான மக்கள் கலைஞருதுடைய இசைப்பயணம் பற்றிக் கீழ்க்கண்டவாறு சொல்லுகிறார்:

“இப்பொழுதுகூட நான் வேடிக்கையாகக் சொல்வதுண்டு, மாட்டு வண்டி போகாத ஊருக்குக்கூட எங்கள் பாட்டு வண்டி போயிருக்கு இது வெறும் வார்த்தையல்ல. பதினைந்து ஆண்டுகள் நாங்கள் பெற்ற அனுபவம். இன்று கூட நாள் உபயோகித்துக் கொண்டிருக்கும் ஆர்மோனியப் பெட்டியைப் பல மைல்கள் தலையில் தூக்கி நடந்து சென்று கிராமம் கிராமமாகப் பாட்டுப் பாடியிருக்கிறோம்.” (1982-ம் ஆண்டு வெளியான பாவலர் பாடல் தொகுப்புக்கு எழுதிய முன்னுரை), இப்படி, தமிழ் நாட்டின் பட்டி தொட்டிகள் எல்லாம் அலைந்து, நாட்டு மக்களின் இசை உணர்வை உள்வாங்கி, இசையமைப்பாளராகப் பரிணாமம் பெற்ற ஒரு கலைஞன், இப் படி மாறுபட்டு, மறுதரிப்பாகப் பேசியிருப்பது, நாபிக்கொடி அறுந்ததும், தன்னைப் பிரசவித்த கர்ப்பகிரகத்தையே சூரிக்கத்தியால் குத்திக் கிழித்துச் சிதைப்பதற்கு ஒப்பாகும்.

பாவலர் வரதராசளது பாடல்கள் அவ் வளவு மகத்துவம் பெற்றதற்குக் காரணம் அவர் பாடல்களுக்குப் பயன்படுத்திய இசை நாட்டார் இசை வடிவமாகும். அவரது  பாடல் களின் கருப்பொருள் மக்கள் பிரச்சனை. நாட்டு மக்கள் அவர் பாடல்களில் தங்களைக் கண்டனர். கடந்த ஆகஸ்ட் 30 அன்று சன் தொலைக் காட்சிக்கு அளித்த பேட்டியில், மேற்கத்திய இசையில் தாம் இசையமைத்திருக்கும் திருவாசகத்தைப் பாமரனும் புரிந்துகொள்ளும் வகையில் பாடல் வரிகளையே மாற்றிப் போட்டிருப்பதாகக் கூறும் ராசைய்யாவுக்குப் பாமரர்கள் இசை வடிவம் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு?

பாவலர் வரதராசன் இசைக்குழு அமைப் பதற்கு முன்பே எனக்கு அவரைத் தெரியும். 1958ம் ஆண்டு வாக்கில் கேரள மாநிலம், தேவிகுளம் தாலுகாவில் (இப்போதைய இடுக்கி மாவட்டம்), தேயிலைத் தோட்டத் தொழிலாளர் மத்தியில் தொழிற்சங்கப் பணிக்காக தமிழகத்திலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாவட்டக்குழுவால் முழு நேர ஊழியராக அனுப்பப்பட்டவர் அவர்.

அப்படிப்பட்ட சூழலில்தான் கேரள மாநிலத்தில் இருந்த தோழர் இ.எம்.எஸ். நம்பூதிரிபாட் தலைமையிலான கம்யூனிஸ்ட் மந்திரி சபையைக் காப்பாற்றும் பெரும் முக்கியத் துவம் வாய்ந்த தேவிகுளம், சட்டமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தல் நடைபெற்றது. கேரள அமைச்சரவையைக் கவிழ்த்துவிட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சித் தனது சக்தி முழுவதையும் திரட்டித் தேர்தல் களத்தில் குதித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர், கோள் கம்யூனிஸ்ட் கட்சியில் முக்கியத் தலைவர்களில் ஒருவரான தோழர் பி.டி.பொன்னூசின் துணைவியார் தோழர் ரோசம்மா பொன்னூஸ், அப்போது, முழுநேர ஊழியராக இருந்த தோழர் வரதராசனின் பிரச்சார ஆயுதம் அவ ரது இசைஞானமும், கவிதையாக்கும் திறமையும்தான். இசைக்கருவிகள் ஏதும் கிடையாது. தேயிலை தோட்டங்களுக்குச் சென்று மைக்கில் அவர் பாட ஆரம்பித்தார் என்றால் மக்கள் சாரை சாரையாக பாட்டின் நாதம் கேட்டு கூடுவதே பெரும் காட்சியாக இருக்கும். நடுநிசியில்கூட மக்கள் அந்தப் பாடல்களைக் கேட்கக் கூடுவார்கள்.

சிக்கிக்கிட்டு முழிக்குதம்மா வெக்கங்கெட்ட காளைரெண்டு முட்டி ஒடைஞ்ச காளை எங்கண்ணம்மா மூக்குக் சுவுரு அவுந்த காளை எம் பொள்ளம்மா (அப்போது காங்கிரஸ் கட்சியின் தேர் தல் சின்னம் இரட்டைக்காளை) இப்படித் தொடங்கும் இந்தப் பாடலின் பின் வரிகள் இன்றும் சக்தியானவை. இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்றுப் போனது. அதற்குப் பிறகுதான் பாவலர் வரதராசன், தோழர் மாயாண்டி பாரதியின் ஆலோசனை அடிப்படையில் தனது சகோதரர்களை நினைத்து இசைக்குழு அமைத்து தனது இசைப்பயணத்தை ஆரம்பித்தார்.

இங்கே நம் கவனத்திற்கு வருவது, இளையராஜா தனது சகோதரரின் மக்கள் சார்ந்த பாடலை குறைகூறியிருப்பது அல்ல. நாட்டார் பாடல்களின் பாரம்பரியத்தையும் வன்மையையும் உணராமல் மேல்தட்டு வர்க்கத்தின்பால் நின்று பேசியிருப்பதுதான். இன்றைக்கும் இளையராஜா, தாம் இசையமைக்கப் பெரிதும் பயன்படுத்துகின்ற புல்லாங்குழல், உடுக்கை, பம்பை, உரும், பறை, தப்பு, நையாண்டி நாயனம் போன்ற இசைக்கருவிகள் அத்தனையும் நாட்டார் இசைக்கருவிகளே அல்லவா? நொண்டிச் சிந்து, காவடிச் சிந்து, பதம், வர்ணம், தாலாட்டு, ஒப்பாரி போன்ற வண்ணமிகு இசை வடிவங்கள் நாட்டார் இசை வடிவங் கள்தானே?

இன்று நாம் போற்றும் இனசடிவங்கள் பண்டைத் தமிழ்நாட்டுக் கலைஞர்களான பாணர், பாணினி, கூத்தர், விறலியர் ஆகிய நாட்டுப்புறக் கலைஞர்கள் விட்டுச்சென்ற இசை வடிவங்களின் பரிணாமங்களே. ஊர் மக்களை மகிழ்விப்பதற்காகவும், பரிசில் பெறுவதற்காகவும் உருவாக்கிய இசை வடிவங்களின் பரிணாம வளர்ச்சியே இன்றைய பல இசை கோலங்கள். பழந்தமிழ்க் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தைப் படைத்த இளங்கோவடிகள் நாட்டார் இசையின் வன்மையை உணர்ந்துதான் தளது காவியத்தில் குன்றக் குரவை, வேட்டுவ வசி, ஆய்ச்சியர் குரவை போன்ற நாட்டார் இசை வடிவங்களை எடுத்து வார்த்துள்ளார். மக்களும் புலவர்களும் அனுபவித்து இன்புறும் மதுரை மீனாட்சி குறம், திருக்குற்றாலக் குறவஞ்சி – மற்றும் முக்கூடற் பள்ளு ஆகிய இசை தழுவிய நூல்கள் நாட்டார் இசையையும் வாழ்வையும் ஆதாரமாகக் கொண்டவையே.

திரிகூட ராசப்பக் கவிராயர், அருணா சலக் கவிராயர், கோபாலகிருஷ்ண பாரதி யார், முத்துத்தாண்டவர், அண்ணாமலை செட்டியார், இராமச்சந்திர கவிராயர், வேதநாயகம் பிள்ளை முதலிய கவிஞர்கள் ஜனரஞ்சகமான பாடல்களை நாட்டார் இசையிலேயே அமைத்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற மகாகவி பாரதி, நாட்டு மக்கள் இசைவடிவங்கள் பற்றி, “ஏற்ற நீர்பாட்டினிலும், நெல்லிடிக்கும் கோற்றொடியாக் குக்குவென கொஞ்சும் ஒலியினிலும்
சுண்ணமிடிப்பார் தஞ்சுவை மிகுந்த பண்களிலும் பண்ணை மடவார் பழகுபல பாட்டினிலும் வட்டமிட்டுப் பெண்கள் பேளைக்கரங்கள் தகமொலிக்க கொட்டி இசைத்திடு மேகக்கட்டமுதப் பாட்டியிலும் நாட்டினிலும் காட்டினிலும் நாளெல்லம் நன்றொலிக்கும் பாட்டிளிலும் நெஞ்சைப் பறிகொடுத்தேன் பாவியேன்,”

என்று போற்றிப் பாடியிருப்பதன் மூலம் நாட்டார் இமாயின் மகத்துவம் எத்தகையது என்பது புலப்படும். இளையராஜா நெக்குறுகி இசையமைத் திருக்கும் திருவாசகம் பக்தி இயக்க மார்க்கத்தில் தோன்றியது என்பதை யாரும் மறுக்க இயலாது. பக்தி இயக்கமானது சமஸ்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துத் தோன்றிய இயக்கம் என்கிறார் மனோகர் பாண்டே என்கிற இந்தி இலக்கியத் திறனாய்வாளர். பக்தி இயக்கமானது சமண, பவுத்த மதங்களுக்கு எதிராகத் தோன்றிய இயக்கமும் கூட சைவமும், வைணவமும் தழைக்கப் பணி செய்த ஆழ்வார்களும் நாயன்மார்களும் நாடு முழுவதும் அலைந்து திரிந்து, ஆண்ட வனை வழிபடுவதற்கு எடுத்துக்கொண்ட இசை வடிவம் நாட்டார் பண்.. ஆண்டவன், மனிதனுக்கு எட்டும் தெய்வமாக இருப்ப தற்கு, அம்மக்கள் மொழியிலேயே அம்மக்கள் மத்தியில் வழங்கிய இசை வடிவங்களிலேயே ஆண்டவனை வழிபட்டார்கள்,

பக்திப் பாடல்களை அமைத்தனர். 7ம் நூற்றாண்டு வாக்சில் தமிழகத்தில் உருவான அந்த இயக்கம், இந்திய உகண்டம் முழுதும் பரவி, ஒரு மாற்றத்தையே ஏற்படுத்திற்று தாழ்ந்த குலத்தவராகக் கருதப்பட்ட, அனாய நாயனாரும், திரு நீலகண்ட யாழ்ப்பாணரும், திருப்பாணாழ் வாரும், தமது மொழியிலேயே, தமக்குப் பரிச்சயமான நாட்டார் பண் வடிவங்களையே ஆண்டவனை வழிபடப் பயன்படுத்தினர். உண்மை இப்படி இருக்க நாட்டார் பள் வடிவங்களிலேயே உருவாள திருவாசகத் துக்கு இசையமைத்த இளையராஜா நாட்டார் பாடல்களை, வடிவங்களைக் குப்பை என்று குறிப்பிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளது என்பது மட்டுமல்லாமல் திசை மாறிவிட்டார் என்பதையே காட்டுகிறது.

காலப்போக்கில், சமுதாயத்தில் தவிர்க்க இயலாதவாறு ஏற்பட்ட வர்க்க வேறுபாடுகளின் காரணமாகவும், பிரதிபலிப்பாகவும் இசையிலும், கலையிலும் சல்தட்டு வர்க்கக் கலை, இசை என்றும் பாக்கலை என்றும் இசை என்றும் பாகுபாடு எழுந்தது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இவற்றை வேத்தியல் என்றும் பொதுவியல் என்றும் தமிழர் கொண்டனர்.

அதாவது உழுதுண்போர் ரசிக்கும் கலை, உழுவித்துண்போர் ரசிக்கும் கலை. உழைப்பினின்றும் அந்நியப்பட்டு நிற்கும் சுரண்டும் உயர் வர்க்கம் ரசிக்கும் கலை வடிவம் ‘தூய கலை என்கிற அர்த்தமற்ற கலை- இசை வடிவங்கள் “சரிகமபதநிச போட்டும் பாடும் சங்கீதம். வேறு அர்த்தம் எதும் இல்லாமல் தரந்த போட்டுக்கொண்டு மணிக்கணக்கில் ஆரோகணம், அவரோ கணம் செய்யும் சங்கீதம், நுண்கலையாகக் கருதப்படுகிறது” என்கிறார் தமிழ் அறிஞர் சாமி சிதம்பரனார்.

எனவே, மக்களது போர்க்கும் படைத்த பாமரர் இசையையும், பாடல்களையும், குப்பை என்று சொல்லியுள்ள இளையராஜா, தன்னை உருவாக்கி, வடிவம் பிடித்துவிட்ட மண்ணை மறந்து, ‘சுத்த தூய கலை-இசை’ என்கிற மாய்மாலத்தில், தன்னை மறந்து, திசைமாறிப் பறந்துகொண்டிருக்கிறார். இந்த மாயையினின்றும் விடுபட்டுத் தாய் பூமிக்குத் திரும்புவாரா என்று பார்ப்போம்.

நன்றி: தீக்கதிர்

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *