ஓநாயும், கிழவியும்

ஒரு நாள் மிகவும் பசியோடிருந்த ஒரு ஓநாய் உணவு தேடித் திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு கிராமத்தின் எல்லையில் ஒரு சிறு குடிசையில் ஒரு சின்னப் பையன் அழும் சத்தம் கேட்டதும், ஓநாய் அந்தக் குடிசைப் பக்கமாகச் சென்று நின்று, உள்ளே என்ன பேச்சு சத்தம் கேட்கிறது என்று ஒட்டுக் கேட்டது.

குடிசையில் ஒரு கிழவி, ” நீ இப்போது அழுவதை நிறுத்தாவிட்டால், உன்னை ஓநாயிடம் கொடுத்து விடுவேன்,“ என்று அந்தப் பையனை மிரட்டிக் கொண்டிருந்தாள். ஓநாய்க்கு ஒரே சந்தோஷம். இனி உணவு தேடி திரியவேண்டாம். இங்கேயே நிற்போம் என்று நின்று கொண்டது.

இரவு நெடுநேரமாகிவிட்டது. இன்னமும் கிழவி அந்தப் பையனை ஓநாயிடம் கொண்டுவந்து தரவில்லை.. உள்ளே என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று குடிசைக்குள் லேசாக எட்டிப் பார்த்தது ஓநாய்.

” அழாதே என் கண்ணு… உன்னை ஓநாயிடமெல்லாம் தரமாட்டேன். பாட்டி சும்மா சொன்னேன். ஓநாய் வந்தால், நாம் இருவரும் சேர்ந்து அதை அடித்துக் கொன்றுவிடுவோம், சரியா?” என்று பாட்டி அந்தப் பையனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.

“இந்த மனிதர்களே இப்படித்தான். சொல்வது ஒன்று. செய்வது ஒன்று,” என்று புலம்பியபடி பசியோடு மீண்டும் காட்டுக்குத் திரும்பியது ஓநாய்.



 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள்: ராஜாவும், சட்டையும் – தமிழில் ச.சுப்பா ராவ்

 



 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 2: அரசரும், விவசாயியும் – தமிழில் ச.சுப்பா ராவ்

 



 

டால்ஸ்டாயின் சிறார் கதைகள் 3: தானியக் களஞ்சியத்தில் எலி – தமிழில் ச.சுப்பா ராவ்

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *