இல்லையென்று கை விரித்த பிறகு
ஏந்தியவனின் கண்களை எதிர்கொள்வது
எத்தனை துயரமானது ?
ஒரு கண்ணில் கடவுளையும்
மறுகண்ணில் தெரு நாயையும்
ஒரு சேர தரிசிப்பதென்பது
நூற்றாண்டுகளின் தனிமையை
ஒற்றைத்தோனியில் கடந்து போகும்
திசையற்ற பயணம் தானே?
இளநாயின் அவலக் குரல்
இரவின் கருப்பையை துளைத்து ஊடுருவிய வண்ணமே உள்ளது.
எச்சில் இலைகளில் சிதறிக் கிடக்கும்
சோற்றுப் பருக்கைகளை
அண்ணாந்து பார்த்தபடி
குழிக்குள் உருண்டு கொண்டிருக்கின்றன
இரு விழிக்கோளங்கள்
பற்களுக்குள் உருளும் நட்சத்திரங்களை
கடித்து தின்ன முடியவில்லை
உமிழ்நீரையே பசிக்கு விழுங்கும் வயிறுகளுக்குள்
வெட்டப்பட்ட மண் புழுவாக
துடித்துக் கொண்டிருக்கிறது
இந்த நூற்றாண்டின் மனிதம்
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

