மானுடத்துயர்
_________________
ஆறாம்திணை
கடவுள்கள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்
மனிதர்கள் கைகால்‌விலங்கிடப்பட்டுள்ளனர்
பயணங்கள் யாவும்
மின் அனுமதி சீட்டில் வேலியிடப்பட்டிருக்கின்றன
பறவைகள் வழக்கம் போல் பறந்து திரிகின்றன
எறும்புகள் ஊறித் திரியாமல் இல்லை
இரவும் பகலும் நாய்கள் சுதந்திரமாய் அலைகின்றன
ராமரும் அல்லாவும் மெளனமாய் வேடிக்கை பார்க்கிறார்கள்
ரயில் எரிபட்டது
நகரங்கள் குருதியில் நனைந்தன
ஆக்கிரமிக்கப்பட்ட மசூதி
கட்டப்படும் கோயில்
ஆறாத ரணங்கள்
தீ நுண்கிருமிகள் வேட்டையாடுவதாய் புனைகதைகள்
காலம் கொதித்துக் கொண்டிருக்கிறது.
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார் கார்ல் மார்க்ஸ்
________________________________________
காரல் மார்க்ஸ் நினைவு தினம் Images kaliraj ...
டிரியர் நகர மோசெல் ஆற்றின் கரையில் பிறந்த போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
உள்ளூர் பள்ளியில் பயின்ற போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
வெஸ்ட்ஃபாலனிடம் கற்பனவாத சோசலிசக் கருத்துக்களைக் கேட்டபோது
சிவப்பு சட்டை அணிந்திருந்தார்
பாசத்தந்தையின் புகைப்படத்தை கோட்டுப் பையில் வைத்திருந்தபோது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
பெர்லின் பல்கலைக்கழகத்தினுள் நுழைந்த போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
நூலகங்களில் ஹெகலின் சிந்தனைகளை ஆராய்ந்த போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
ஜென்னியை நட்பாக்கிக் காதலித்து மணந்த போது
சிவப்புச் சட்டை அணிந்தார்
பத்திரிக்கையின் ஆசிரியராக..நிருபராக..ஆன போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
நண்பர்களுக்கு கடிதம் எழுதியபோது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
நாடு கடத்தப்பட்ட போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
அந்நிய நாடுகளில் தஞ்சம் அடைந்த போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கு உத்வேகம் ஊட்டிய போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
ஏங்கெல்ஸுடன் நட்பு கொண்ட போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதிய போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
மூலதனம் நூலை எழுதிய போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
பெற்ற குழந்தைகள் இறந்து சவப்பெட்டி வாங்க இயலாத போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
வறுமையித் தீயில் வாடிய போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
முதல் அகிலம் உருவான போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
பாரீஸ் கம்யூன் எழுந்த போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
காதல் மனைவி இறந்த போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
தன்னை நிராகரித்த தாயின் கடைசி‌நொடியில் அவளின் கைகளைப் பற்றிய போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
நேசித்த முதல் மகள் உயிர் நீத்த போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
ஈரல் நோயால் அவதிப்பட்ட போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
நுரையீரல் நோயால் தன் சிந்தனையை நிறுத்திய போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்
ஏழைகளின் மயானம் ஹேகேட்டில் அடக்கமான போது
சிவப்புச் சட்டை அணிந்திருந்தார்.
வசந்ததீபன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *