கவிதை - விடுதலைப் போரில் வேடிக்கை பார்த்தவர் | Poem - liberation war

பக்தியின் போதையை பலருக்கும்
ஊட்டியே
பாடங்கள் எடுத்திடுவோம் – பெரும்
மாடங்கள் கட்டிடுவோம் – இதுவே
முக்திக்கு வழி என முழங்கியே
அவர்தம்
மூளையை துவைத்திடுவோம் – இல்லையேல்
ஆளையே சிதைத்திடுவோம்

ஜெய்‌ ஸ்ரீராம் என்னும் சிந்தையை
என்றும்
ஜென்மங்கள் வளர்த்திடுவோம்
பல
வன்மங்கள் செய்திடுவோம் – இதை
பொய்என்று கூறிட புறப்பட்டோரை
புதைகுழி அனுப்பிடுவோம் – அட
சிதை எரி யூட்டிடுவோம்

கண்மூடி வழக்கங்கள் கடவுளின்
பேரோடு
கலந்திட வைத்திடுவோம் – என்றும்
மலர்ந்திட உதவிடுவோம் – இவை
மண்மூடி போகாது மக்களைச்
சேர்ந்திட
மந்திரம் என்றிடுவோம் – பெரும்
தந்திரம் செய்திடுவோம்

விடுதலைப் போரில் வேடிக்கை
பார்த்தவர்
வேடிக்கை காட்டுகின்றார் – இதை
வாடிக்கை ஆக்குகின்றார்- பல
கெடுதலை நினைப்பவர் கேட்கின்றார்
வாக்கினை
விரட்டிட சூளுரைப்போம் – இனியும்

மிரட்டிட சம்மதியோம்

 

எழுதியவர்

ச.லிங்கராசு




இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *