சமூக மற்றும் பொருளாதார தளங்களில் இந்துத்துவாவை எதிர்த்துப் போராட வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து எடுத்துரைத்த பாபாசாகேப் அம்பேத்கரைப் பின்பற்றுபவர்களில் ஆனந்த் டெல்டும்டேவும் ஒருவர்.

கோவிட்-19 பெருந்தொற்று நோய் அபாயம் அதிகரித்து வரும் வேளையிலும், சிறைச்சாலைகள் மிகவும் ஆபத்தான ஹாட்ஸ்பாட்களாக மாறி வரும் வேளையிலும், நாட்டின் உச்சநீதிமன்றம் சிறையிலுள்ள விசாரணை கைதிகளை மற்றும் குற்றவாளிகளை இடைக்காலப் பிணையில் விடுமாறு உத்தரவிட்டு உள்ள நிலையிலும், ஊரடங்கு காரணமாக இந்திய நாடே ஸ்தம்பித்து உள்ள நிலையிலும், நூற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் வீடு திரும்ப வழியில்லாமல் பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டிருக்கும் இந்நிலையிலும், இந்த நாட்டின் முதுபெரும் சிந்தனையாளர்களில் ஒருவரான டாக்டர் ஆனந்த் டெல்டும்டே அவர்களை இந்திய அரசு துன்புறுத்துவதை தடுக்கும் திறன் கொண்ட வைரஸ் கிருமி ஒன்றும் இல்லை என்றே தெரிகிறது.

இந்தப் புதிய தாராளவாத, இந்துத்துவா ஆட்சியின் பார்வைக்கு ஏன் டெல்டும்ப்டே மிகவும் ஆபத்தான மனிதராகத் தெரிகிறார் ?

2018 ஆம் ஆண்டில் பீமா கோரேகானில் முதன்முறையாக வன்முறை வெடித்ததைத் தொடர்ந்து சம்பாஜி பீடே மற்றும் மிலிந்த் எக்போட் ஆகிய இரண்டு இந்துத்துவா நபர்கள் மீது காவல்துறை விசாரணை நடத்தப்பட்டது. இருப்பினும் சங் பரிவாரின் வலதுசாரிப் படைகள் மிக விரைவாக இந்த விசாரணை போக்கினை மறுத்து ஒரு அறிக்கையை வெளியிட்டன. அதற்கு மாறாக, பீமா கோரேகானில் ஆண்டுதோறும் அந்த தினத்தில் பொதுக்கூட்டங்கள் நடத்தும் எல்கர் பரிஷத் எனப்படும் முற்போக்கு அம்பேத்கரிய அமைப்புகளின் கூட்டமைப்பு மாவோயிஸ்டுகளின் தொடர்பு வைத்திருப்பதாகப் பொய் குற்றச்சாட்டுகள் சாட்டினர்.

மாவோயிஸ்ட் அமைப்புகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளன என்பது அனைவரும் அறிந்ததே.அப்படியிருக்கும்போது ஏன் ஒரு அம்பேத்கரிஸ்ட் தலித் அமைப்பு நடத்தும் ஒரு நினைவு நிகழ்வு மாவோயிச நிகழ்வாக சித்தரிக்கப்பட்டது?

அதாவது தலித்துகள் மற்றும் அம்பேத்கரிஸ்டுகளைக்  குறிவைத்து அவர்கள் மீது சட்டத்தின் மிக மோசமான வடிவங்களைப் பயன்படுத்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு இதுபோன்ற தொடர்பே இல்லாத பொய்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டது  என்பதை பின்னர் நிகழ்ந்த நிகழ்வுகளைப் பின்பற்றிய எவரும் தெளிவாகப் புரிந்துகொள்வார்கள்.

விரைவிலேயே, இந்த “மாவோயிஸ்ட்” என்ற சொல்லாடல் கைவிடப்பட்டு, பெரிதான விளம்பரத்திற்காகவும், நாடெங்கும் உள்ள போராளிகளை/சமூக ஆர்வலர்களை கைது செய்ய கருத்திசைவு ஏற்படுத்தும் விதமாக, “அர்பன் நக்சல்” என்ற வார்த்தை பிரயோகம் ஆளும் வர்க்கத்தினரால் தொடங்கப்பட்டது.

Civil Society Archives – Page 3 of 7 – TheLeaflet

நகர்ப்புறங்களில் வாழும் அறிவுஜீவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆகியோரை ஏதேனும் பொய் புகார்களில் சிக்க வைக்கவும், தேவைப்பட்டால் மிக பலவீனமான இடதுசாரி சாய்மானம் கொண்டவர்களை கூட இந்த வார்த்தை பிரயோகத்தால் சிக்க வைக்க முடியும். அவ்வாறாக இந்த அர்பன் நக்சல்கள் பிரதமரை கொலை செய்ய சதி திட்டம் தீட்டினர் என தலைப்பு செய்தியினை அவர்களால் உருவாக்க முடிந்தது.

ஆக இட்டுக்கட்டப்பட்ட இந்த சதித்திட்டத்தின் அடிப்படையில், மரியாதைக்குரிய தொழிற் சங்க வழக்கறிஞர் சுதா பரத்வாஜ், ஆங்கில பேராசிரியர் ஷோமா சென், வக்கீல்கள் சுரேந்திர காட்லிங் மற்றும் வெர்னான் கோன்சால்வ்ஸ், சமூக ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான மகேஷ் ரவுத், பத்திரிகையாளர் அருண் ஃபெரீரா, ஆசிரியர் சுதிர் தவாலே, அரசியல் கைதிகள் ‘உரிமை ஆர்வலர் ரோனா வில்சன் மற்றும் புகழ்பெற்ற மூத்த தெலுங்கு கவிஞர் வராவர ராவ் ஆகியோரை அவர்கள்  சிறைக்கு அனுப்பிவிட்டனர்.

அந்த வகையில் குற்றப்பத்திரிகையில் மேலும் இரண்டு சமூக ஆர்வலர்களின் பெயரையும் சேர்த்தனர். அது ஆனந்த் டெல்டும்ப்டே மற்றும் பத்திரிகையாளரும், சமூக ஆர்வலருமான கௌதம் நவ்லகா ஆகிய இருவரும் ஆவர். இந்த இருவரும் ஏப்ரல் 14,2020 செவ்வாய்க்கிழமை அன்று தேசிய புலனாய்வு அமைப்பில் சரணடையுமாறு கூறப்பட்டுள்ளனர்.

வழக்கின் தன்மையும், இந்த அபத்தமான இட்டுக்கட்டப்பட்ட சதியும்  எவரையும் எங்கேயும்  துன்புறுத்த காவல்துறையினரை அனுமதித்தன. உதாரணமாக ஹைதராபாத்தில் பேராசிரியர் டாக்டர் கே. சத்தியநாராயணா மற்றும்  டெல்லியில் பேராசிரியர் ஹனி பாபு ஆகிய இருவரின் வீடுகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அவர்களின் கணினிகளில் உள்ள தகவல்கள் சோதிக்கப்பட்டன. ஆனால், இந்த கைது நடவடிக்கைகள் இத்தோடு முடிந்து விட கூடியவை அல்ல என்பதுதான் வேதனையான ஒன்று.

SCI Decision To Send Gautam Navlakha and Anand Teltumbde To Jail …

ஆனந்த் டெல்டும்ப்டே ஏன் இவ்வளவு மோசமான முறையில் குறிவைக்கப்படுகிறார்? நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றுநோய் அச்சம் தீவிரம் அடைந்து வரும் வேளையில் இயன்றளவு சிறைக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றமே விரும்புகிறபோதும், கெளதம் நவ்லகாவுடன் ஆனந்த் டெல்டும்ப்டே சிறைக்குச் சென்றேயாக வேண்டும் என்று அதிகாரவர்க்கம் முடிவு செய்ய என்ன காரணம் ?

பாபாசாகேப் அம்பேத்கரின் மருமகன் என்பதே ஆனந்த் டெல்டும்டே மீதான நடவடிக்கைகளுக்கு ஒரு பிரதான காரணம் என தான் நினைப்பதாக பாபாசாகேப் அம்பேத்கரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் சுட்டி காட்டியுள்ளார். பாபாசாகேப் அம்பேத்கரின் பாரம்பரியத்தை சீர்குலைப்பதே பாஜக, ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங் பரிவார் அமைப்புகளின் இலக்கு. ஆனந்த் டெல்டும்ப்டே பீமா கோரேகான் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவும் இல்லை, அந்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழுவிலும் இல்லாத போது, அவர் மட்டும் ஏன் தனித்து நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுகிறார்? வலதுசாரி, புதிய தாராளமய ஆட்சிக்கு எதிராக ஆனந்த் டெல்டும்டே எடுக்கும் அரசியல் நிலைபாடுகளே காரணம்.

சமூக மற்றும் பொருளாதார தளங்களில் ஹிந்துத்துவாவை எதிர்த்து போராட வேண்டியதன் அவசியத்தை தொடர்ந்து வலியுறுத்தும் அம்பேத்கரின் வழிதோன்றல்களில் ஆனந்த் டெல்டும்டேவும் ஒருவர். ஒருபுறம், அவர் சங் பரிவாரின் பிராமணிய சமூக விரோத சாதிவெறியை அப்பட்டமாக அம்பலப்படுத்தியதோடு, மறுபுறம் இந்துத்துவாவின் மக்கள் விரோத புதிய தாராளமய பொருளாதாரக் கொள்கைகளையும் எதிர்த்துள்ளார். அவரது சமீபத்திய வெளியீடுகளில் ஒன்றான சாதியின் குடியரசு புதிய தாராளவாத இந்துத்துவாவின் காலத்தில் சமத்துவ சிந்தனையை முன்வைப்பதாக இருந்தது.

சாதியை அழித்தொழித்து அரசு சோஷலிசத்தின் மூலம் இந்தியாவில் சமூக மற்றும் பொருளாதார ஜனநாயகத்தை முன்னெடுக்க முடியும் என்ற அம்பேத்கர் அவர்களின் கொள்கையை ஆனந்த் டெல்டும்டே தீவிரமாக முன்னெடுக்கிறார்.

டெல்டும்ப்டே பாபாசாகேப் அம்பேத்கரின் வெளிப்படையான சோசலிச பார்வையை இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்:

“சமூக பொருளாதார நீதி என்ற ஒன்று இங்கு வேண்டுமென்றால் அது தொழில்கள் அரசின் கையிலும், நிலங்கள் அரசின் கையில் இருப்பதாக இருக்க வேண்டும். ஒரு சோசலிச பொருளாதாரம் என்றில்லாமல் எப்படி இனி வரும் அரசாங்கங்களால் சமூக நீதி, பொருளாதார சமத்துவம், அரசியல் நீதி என்பதை எல்லாம் எட்டுவது சாத்தியம் என்பது எனக்கு புரியவில்லை?(December 17, 1946).

அதே கட்டுரையில், ஆனந்த் டெல்டும்டே சாதி எதிர்ப்பிற்கான அல்லது சாதி ஒழிப்பிற்கான புரட்சி என்ற ஒன்று இல்லாமல் சோஷலிசம் வெற்றி பெறாது என்பதை,

“சொத்தில் சம பங்கிற்கான புரட்சிகரப் பயணத்தில், புரட்சிக்கு பின்பாக சமத்துவம் நிலைக்கும், சாதி வர்க்க ரீதியாக பேதங்கள் இருக்காது என்கிற உண்மையை உணராமல் மக்கள் புரட்சியில் இறங்க மாட்டார்கள். புரட்சியை வழிநடத்தும் சோசலிஸ்ட் ஒருவர் தான் உண்மையாக சாதியை ஏற்கவில்லை அதற்கு இடமில்லை என்பதாக அவர் உறுதி கூற வேண்டும். அந்த உறுதியானது, மனதின் அடி ஆழத்தில் இருந்து எழுவதற்கு சக மனிதர்களோடு சமத்துவமும் சகோதரத்துவ உணர்வும்  தேவை.

மேலும், சோசலிசத்தோடு சாதியை அழித்தொழிப்பதற்கான கொள்கையும் செயல்திட்டமும் தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒரு அறிவுஜீவியிடமிருந்து வருகிறது. இந்தியாவின் உழைக்கும் வர்க்கத்தினரில் தலித் மக்களே பெரும் பகுதியினர். ஆக, சாதியை எதிர்ப்பது என்பது கட்டுபாடற்ற முதலாளித்துவ சுரண்டலை பெரிதாக எதிர்ப்பதாகும். என்றும் சொல்கிறார்.

BhimaKoregaon): “Plot to kill PM” was a deliberate ploy to ...

பாபாசாகேப் அம்பேத்கர் அவர்களின் சாதியற்ற சோஷலிசம் என்பது சாதி, வர்க்க, பாலின பேதங்களை வளர்த்து தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் ஆர்.எஸ்.எஸ்-பாஜகவின் புதிய தாராளமய ஹிந்துத்துவா கொள்கைக்கு நேர் எதிரானது. அது மத சிறுபான்மையினரை குறி வைப்பதன் மூலம் இந்திய சமூகத்தை வகுப்புவாத வழியில் பிளவுபடுத்தி தன்னுடைய மோசமான இலக்கை அடைய முயல்கிறது.

ஆர்.எஸ்.எஸ் அதன் துவக்க காலம் தொட்டே பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் கைக்கூலியாகவும், மனுதர்மத்தை தூக்கிபிடிக்கும் அமைப்பாகவுமே செயல்பட்டு வந்திருக்கிறது. பிரிட்டிஷ் காலனியம் இந்திய வளங்களையும், இந்திய மக்களையும் தங்கள் சொந்த நலனுக்காக சுரண்டிக்கொண்டிருந்தபோது இந்திய சுதந்திரப் போராட்டம் உச்சத்தை அடைந்தது. அப்போது  ஆர்.எஸ்.எஸ் தலைவர் எம்.எஸ். கோல்வல்கர் “ இந்துக்களே, பிரிட்டிஷாரை எதிர்த்துப் போராடி உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள். முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கம்யூனிஸ்டுகள் ஆகிய நமது உள்நாட்டு எதிரிகளை எதிர்த்துப் போராட உங்கள் சக்தியைச் சேமித்துக் கொள்ளுங்கள்” என்று கூறியிருந்தார்.

இந்துக்கள் உட்பட தேசபக்தி கொண்ட இந்தியர்கள் அனைவரும் தேச விரோத இந்துத்துவாவுக்கு செவிசாய்க்காது, நாடு சுதந்திரம் பெறும் வரை பிரிட்டிஷ் காலனித்துவத்தை எதிர்த்து உயிரைக் கொடுத்துப் போராடினார்கள் என்பது வேறு விஷயம். மற்றொரு சந்தர்ப்பத்தில், “உலகின் முதல் மற்றும் மிகப் பெரிய சட்டத்தை வழங்கிய மனு, தனது கூற்றின்படி வாழ்ந்திட உலக மக்கள் அனைவரையும் இந்த நிலத்தின் மூதாதையர்களான பிராமணர்களின் புனித காலடியில் கிடந்து தங்கள் கடமைகளைக் கற்றுக்கொள்ள வருமாறு வழிநடத்தியது என்பதுதான் உண்மை” என்று மனுவைப் புகழ்ந்து எழுதினார் கோல்வால்கர்.

இருப்பினும்  இந்திய அரசியலமைப்பின் 15 வது பிரிவு, “மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபாடு காண்பதைத் தடைசெய்கிறது” என்று தெளிவாகக் கூறியுள்ளது ஆர்.எஸ்.எஸ் படைக்கு அசௌகரியமானதாக உள்ளது.

Arrest of Prof. Anand Teltumbde and Activist Gautam Navlakha is ...

ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவின் புதிய தாராளவாத இந்துத்துவத்திற்கு எதிராக முற்போக்கான அறிவுசார் படையைப்போல நிற்கும் அம்பேத்கரிய அமைப்பைச் சேர்ந்தவர் டெல்டும்ப்டே. சாதியப் பாகுபாடு, வர்க்க சமத்துவமின்மை மற்றும் ஆணாதிக்க ஆதிக்கம் ஆகியவற்றைக் கொண்ட இந்துத்துவாவின் சமமற்ற, பிற்போக்குத்தனமான சமுதாயத்தை நோக்கி ஆர்எஸ்எஸ் வழிநடத்துகிற இந்த மக்கள் விரோத மத்திய அரசு முன்னேறுவதற்கு அத்தகைய முற்போக்கான அறிவுசார் படையைத் தகர்க்க வேண்டியது கட்டாயமாகி உள்ளது.

இருண்ட காலத்திற்குள் நம்மை அழைத்துச் செல்லும் இந்தக் காலகட்டத்தை துரிதப்படுத்த அவர்கள் விரும்புகிறார்கள். எனவே  பீமா கோரேகான் வன்முறையின் பின்னணியில் இருந்த இந்துத்துவா ஆர்வலர்களைக் காப்பாற்றிடவே அவர்கள் வன்முறையைத் தூண்டியது மாவோயிஸ்டுகள் என்ற ஒரு போலியான கட்டுக்கதையை உருவாக்கியதோடு, அம்பேத்கரிஸ்டுகள் வழிநடத்திய எல்கர் பரிஷத் அமைப்பின் மீதும் பொய்க் குற்றச்சாட்டை முன்வைத்தனர்.

இருப்பினும், உண்மை இறுதியில் வென்றே தீரும்.  ஆர்.எஸ்.எஸ் இன் இந்த மோசமான சூழ்ச்சியின் மூலம் மோடி-அமித் ஷா தலைமையிலான மத்திய அரசின் அதிகார இயந்திரங்களைப் பயன்படுத்தி டெல்டும்ப்டே போன்ற முற்போக்கான மற்றும் சமத்துவம் போற்றுகிற அம்பேத்கரிய அறிஞர்களை இழிவுபடுத்துவதை தேசபக்தி கொண்ட அனைத்து இந்தியர்களும் எதிர்த்திட வேண்டும்.

ஆக, அம்பேத்கர் ஜெயந்தியன்று நடத்தப்பட்ட அவரது  திட்டமிட்ட கைது நமது தேசத்தின் மீது விழுந்திருக்கும் மோசமான கறை. எனவே அவரை உடனடியாக விடுவிக்குமாறும், அதோடு பீமா கோரேகான் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து சமூக ஆர்வலர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களையும் விடுவிக்குமாறும் வலியுறுத்துவோம்.

ஜிக்னேஷ் மேவானி குஜராத் மாநில சட்டமன்ற உறுப்பினர்.

மீனா கந்தசாமி, எழுத்தாளர், கவிஞர்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *