எழுதாப் பயணம் – ஓர் அன்னையின் பார்வையில் ஆட்டிச உலகம் – லட்சுமி பாலகிருஷ்ணன்.
ஆட்டிஸம் என்று சொல்லப்படுகிற அறிதல், வளர்ச்சி குறைபாடு உள்ள குழந்தைக்கு தாயான ஓர் அன்னையின் அனுபவப் பகிர்வு.
குறைபாடுள்ள குழந்தையை பெற்று விட்டோமே என்று அழுது புலம்பாமல் தன்னம்பிக்கையோடு எதிர்கொண்ட ஒரு தாயின் டைரிக் குறிப்பு போன்றது.
மனம் தளராமல் தொடர்ந்து பயணித்து ,குழந்தைக்கு பயிற்சி அளித்து தானும் கற்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார் திருமதி லக்ஷ்மி பாலகிருஷ்ணன்.
ஒரே மூச்சில் படித்து விடக்கூடிய நடையில் உள்ளது. முக்கியமான புத்தகம் ,அனைவரும் அவசியம் வாசிக்கலாம்..
ஆசிரியர்:
லக்ஷ்மி பாலகிருஷ்ணன்
வெளியீடு:
கனி புக்ஸ், மனை எண்: 84/1, ஐஸ்வர்யா தெரு, ஷீலா நகர், மடிப்பாக்கம், சென்னை-600091.
தொடர்புக்கு: 9940203132.
விலை: ரூ.100/-
– தங்கமணி