என்னென்று சொல்வேன்?
என்னென்று சொல்வேன்?
பாழை வீழ
பணக்கூட்டம் வாழ
பங்கு போடும் ” வேளாண் ” சட்டத்தை!
என்னென்று சொல்வேன்?
அடிக்கொரு தரம்
தற்கொலைச் சாட்டையால்
அடித்துக் ” கொல்லும்” அதர்மத் திட்டத்தை!
என்னென்று சொல்வேன்?
சேற்றில் கால்வைத்தவன்
சோற்றில் கைவைத்துச்
“சோசலிசம்” பேசும் சோகக் கொடுமையை!
என்னென்று சொல்வேன்?
ஆதாரம் ” உழவென்று”
வள்ளுவ வாக்கு இன்று
சேதாரம் செய்த ” பாசிசக்” கூட்டத்தை!
என்னென்று சொல்வேன்?
தலைநகரில் கூடி
உழவே ” தலை” யென்றார்
தலையெடுக்கா “களை” எடுக்கும் வேதனையை!
என்னென்று சொல்வேன்?
சோறிட்டவன் வீதியிலே!
சொத்துள்ளவன் மாடியிலே!
‘சொந்தம்’ அவனே என்பான்
அவனை என்னென்று சொல்வது நாம்?