மலர்வதி (Malarvathi) - தூப்புக்காரி (Thooppukaari) -Kizhakku Pathippagam

 

இந்த நாவல் 2012 ஆம் ஆண்டு யுவ புரஸ்கார விருது வாங்கிய புத்தகம். இதை வாசிக்கும் போது நம் மனம் போகாத இடங்கள் இல்லை முகம் சுழிக்கும் நாம் இதை வாசித்தவுடன் அந்த எண்ணம் கண்டிப்பாக மனதுக்குள் மாறும் இது ஒரு உணர்வுள்ள ஒரு இனத்தின் குரல்.

மனிதர்களாக பார்க்கக்கூட தயங்கும் ஒரு இனம் என்னவெல்லாம் செய்கிறது அது செய்ய மறுத்தால் என்ன நடக்கும் என்று தோன்றுகிறது வலியில்லாத மனிதர்கள் இல்லை ஆனால் இவர்கள் எல்லோரும் வலிகள் மட்டுமே கொண்ட மனிதர்களாக நாம் கண்ணுக்கு தெரிவார்கள்..

ஒவ்வொரு பக்கமும் ஏதோ ஒன்றை நமக்குள் சொல்கிறது அது நாம் செய்யும்பார்க்கும் முறையை மாற்றும் என்று தோன்றுகிறது ஒரு பெரிய செயல் செய்கிறார்கள் அவர்கள் இல்லை என்றால் யோசிக்கக்கூட நமக்கு முடியாது தூய்மை என்பதைவிட அவர்கள் தியாகம் அவர்கள் பசி எல்லாம் தெரியும்் இந்த நாவலில்..

நம் வீட்டில் நம் கழிவறை உபயோகிக்கும் முன்பு குழந்தைகள் ஒரு சில நேரத்தில் தண்ணீர் ஊற்றாமல் வந்துவிட்டால் நமக்கு வரும் கோபத்தின் பார்வை எப்படிி சொல்ல முடியும்உச்சிக்கு செல்லும் இருந்தும் அவர்கள் நம் குழந்தைகள் என்பதை நாம் மறந்து கோபத்தில்பல வார்த்தைகளை கொட்டுகிறோம் ஆனால் இந்த மனிதர்களின் வலி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லைமனிதர்களின் வலி நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அப்படி தெரிகிறது இந்த நாவல் முழுவதும் அவர்களும் மனிதர்களே என்ற உணர்வை மறந்து போன நாமக்குள் கொண்டுவருகிறது..

இந்த நாவலில் சில காதல்கள் உள்ளது அதுவும் அந்த நாற்றத்தில் முளைக்கும் நல்ல பூவாக வருகிறது பூவரசி காதல் அதுதான் இந்த நாவல் முழுவதும்..

பூவரசியும் மனோவும் காதல் அந்த காதலில் அந்த காதலில் பூவரசி மட்டுமே மனம் முழுவதும் மனோவுடன் ஆனால் மனோவோ வீட்டிற்கு பயந்து தைரியம் இல்லாமல் மனிதனாக இருக்கிறான்.. மாறி பூவரசி மேல் காதல் கருப்பு மனிதன் சாக்கடையில் மனிதனுக்கு காதல் வரக்கூடாது அவனும் மனிதன் தானே வருகிறது ஆனால் பூவரசின் காதலை அறிந்து தன் காதலிக்கும் பெண்ணின் காதல் தோற்று போகக்ககூடாது அப்படி தோல்வியில் ஏதேனும் நிகழ்ந்தால் மனோவை கொலை கூட செய்யத் துணியும் மாரி..

மாரியின் காதலே உண்மையாக இருக்கிறது பூவரசியும் மனோவும் ஒன்றாக வீட்டில் இருப்பதை பார்த்த மாரி உடல் தாகம் ஏன் நாம் கூட அங்கே இங்கே போகவில்லையா இது என்ன தப்பு என்று யோசிக்கும் மனநிலை அது எல்லோருக்கும் வருமா வரவே வராது தன் காதலிக்கும் பெண் வேறு ஒருவனோடு இருப்பதைப் பார்த்தால் கோபம் தான் வரும்.

ஆனால் மாறி அதன் பிறகு தான் அவளின் மேல் அதிகப்பற்று பாசம் எல்லாம் அதிகமாகிறது அவளின் காதல் ஏமாற்றப்படக்கூடாது என்று நினைக்கிறான் உண்மையில் மாறியேன் கதாபாத்திரத்தில் சிறப்பு இன்னும் சிறப்பு என்று தோன்றுகிறது..

ஒரு தூப்பக்காரி என்று நாம் எல்லாம் ஒரு வட்டம் வைத்துள்ளோம் அதற்கு மேல் அவர்கள் வரவும் கூடாது வந்தால் தட்டி மீண்டும் உள்ளே போட்டு விடுவோம் இதுதான் நம் மனதில் என்றுமே நிலையாக இன்றும் இருந்து கொண்டுள்ளது இந்த நிலையை முழுமையாக மாற்றும் இந்த நாவல் அவர்கள் மனிதர்கள் அவர்களுக்கும் குடும்பம் பாசம் காதல் ஆசை சுகம் துக்கம் என்று இருக்கிறது என்று காட்டுகிறது இந்த நாவல் இதையெல்லாம் ஒரு நாவல் தான் நமக்கு சொல்ல வேண்டுமா என்று மனது கேட்கும் அது சொல்லவில்லை என்றால் இந்த அளவு அவர்களை நாம் யோசித்திருப்போமா என்று நினைக்கும் போது கண்டிப்பாக மாட்டோம் என்று தான் தோன்றும் உண்மை தான் இது..

இந்த நாவலில் இடை இடையே ஆசிரியர் அவர்களின் கவிதைகளும் உள்ளே வருகிறது அதுவும் வலிகளைம் நம் கண் முன்னே காட்டுகிறது..

இந்த நாவலில் ஒரு மூன்று பக்கங்கள் உள்ளது 71லிருந்து 75 இதுவரை இதை வாசிக்கும் போது நம் மனம் கோணம் முகம் சுளிக்கும் என்றுதான் நாம் கருதுவோம் ஆனால் அங்கு ஒரு இனமே நின்று கொண்டிருக்கிறது அதை பார்க்க வேண்டும் நம்முடைய சுளிப்பும் மனம் கோணவதோ தெரியாது என்பதை உணர முடியும்..

பூவரசின் அம்மாவை சாப்பிடவிடாமல் பந்தியில் இருந்து எழுப்பி விரட்டி விரட்டி விடுவோம் இடத்தில் என் கண்கள் நிஜமாகவே கலங்கிவிட்டன இது எல்லாம் தான் ஒரு நாவலின் வெற்றி என்று உணர வைக்கிறது அவர்களின் வலியை அதேபோல் மருத்துவமனையில் குழந்தை பெற்ற பெண்களின் துணியை துவைக்க வாங்கி வரும்போது அந்த வாடையை தாண்டி அவர்கள் கொடுத்த இருபது ரூபாய் பெரியதாக தெரிகிறது துவைத்துக் கொண்டிருக்கும் போது சேலையில் முடிந்து வைத்திருந்த அந்த நசுங்கிய லேசாக கிழிந்த இருபது ரூபாய் சாக்கடையில் விழுந்து விடுவதும் அப்போது ஏற்படும் வேதனையின் வலிகளை சொல்லி அதை வாசிக்கும் போது கொஞ்சம் வேதனை தான் தருகிறது அந்த மனிதர்களின் வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது என்று
உணர முடிகிறது ..

              தூப்புக்காரி ஆசிரியர்: மலர்வதி

இன்னொரு இடத்தில் தான் நோயாளியாக இருந்தும் அந்த மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரியாணி வாங்கி கொடுக்கின்றனர் அதை வாங்க வரும் நேரத்தில் இந்த மருத்துவமனையின் தூப்புக்காரி உனக்கு எதுக்கு என்று விரட்டுவது ம்ஏன் பொய் சொல்லி வாங்குகிறாய் என்று ிதட்டும் கொடுக்கின்றனர் அந்த இடமும் கண்கள் கலங்கிவிடும் அதைவிட ஒருவர் அதை கவனித்து தனக்கு கொடுத்த பிரியாணியை வாங்கிக்கோங்க என்று கொடுப்பதும் பல யோசனைகளுக்குப் பிறகு வாங்குகிறாள் கனகம். தனது மகளுக்காக வாங்கி ஆசையாக தன் மகளுக்கு என்று வரும்போது கல் தடுமாறு கீழே விழுந்து அந்த பிரியாணி சுத்தமாக எல்லாம் கொட்டி போய் விடுகிறது இந்த இடமெல்லாம் வாசிக்கும்போது மனம் பல கோணங்களில் நம்மை கொண்டு செல்லும் பசி என்ன என்பதை உணர்த்துகிறது எவ்வளவோ உணவுகள் நாம் கொட்டுகிறோம் அதை எண்ணிப் பார்க்க வைக்கிறது..

இந்த நாவல் பல நிலைகளில் என்னை யோசிக்க வைக்கிறது ஒரு உணர்வுபூர்வமான நாவல் இது தன் தாய் இறந்து விடுகிறாள் அந்த வேதனையில் பூவரசி இருக்கும்போது அறியாமல் செய்த தவறா அல்ல காதலின் கடைசி நிகழ்வா நம்பியவனின் சதியா என்று சொல்வதா கருவுறுகிறாள் அதைத் தாங்காமலும் அதை அழிக்க விருப்பம் இல்லாமலும் இருக்கிறாள் பூவரசி இதை ஏற்கனவே நிகழும் என்று உணர்ந்த மாரி கருவை கலைக்க சொல்கிறான்.. நான் கலைக்க மாட்டேன் என்னை உலகம் தவறாக நினைத்தாலும் பரவாயில்லை என்று குழந்தையை சுமக்க நினைக்கிறாள் இதை வளர்க்க இதற்கு தந்தையாக இருக்க நான் ஆசைப்படுகிறேன் உன் அனுமதி இல்லாமல் புருஷனாக மாட்டேன் என்கிறான் மாரிஅவனுடைய காலில் விழுகிறாள் பூ இதையெல்லாம் வாசிக்கும் போது மனது ஏதோ செய்கிறது..

இரண்டு வருடம் கழித்து வரும் மனோ தனது குழந்தையையும் மாரியையும் பூவரசியையும் பார்க்க வருகிறான் ஆனால் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது அவனுக்கு மட்டுமல்ல வாசிக்கும் நமக்கும் மாரி என்ன செய்கிறான் பூவரசு என்ன செய்தாள் பிறந்த குழந்தை என்ன செய்கிறது என்று இறுதி அத்தியாயங்கள் மிகச் சிறப்பாக இருக்கும் அந்த அதிர்ச்சி வாசிக்கும் போது ஒருவித வலியை தந்து விடுகிறது..

தனக்குப் பிறக்கும் குழந்தை இந்த அழுக்கில் வாழ்க்கையை வாழ வேண்டாம் இந்த உலகில் இந்த அனைத்துக்கும் தீர்வாக இயந்திரம் வர வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொண்டே இருக்கிறான் மாரிகனவு நினைவானதா அல்லது கனவாகவே இருக்குமா என்று இந்த சமூகம் தான் பதில் சொல்ல வேண்டும் பல இடங்கள் உணர்வுகளின் களஞ்சியமாக இந்த நாவலில் உண்டு அதிலிருந்து என் மனதில் நின்ற சில வரிகளை தர ஆசைப்படுகிறேன் அற்புதமான ஒரு நாவல் காலம் கடந்து வாசித்தது தான் கொஞ்சம் வருத்தம்ஏ ன் இதுவரை இதை வாசிக்கவில்லை என்ற ஒரு வருத்தமும் எனக்கு இருந்தது மனதிற்குள் அதிகமான வலியை தந்தது இந்த நாவல்..

தாயின் சேலை கிழிந்துள்ளது என்று சொல்லும் போது கனகத்தின் வரிகள்..
“ ஒடம்புண்ணா என்ன நினச்ச மோளே. ஆக கூடி கொஞ்சம் சொப்பனங்களை சுமக்கிற சொப்பனக்கூடுதான் தேகம். ஏதோ அது பாட்டுக்கு ஒரு மிசியனைப் போல ஓடுது. அதுல கொஞ்சம் அன்பு, கொஞ்சம் ஆச, கனவு எல்லாத்தையும் சுமந்துட்டு திரியிற வெறும் ஒரு அடையாளம்தான் இந்த ஒடம்பு”

மனோவை ஒருதலையாக காதலிக்கும் போது

“கிளைகளின் சலனம்
ஊருக்குத் தெரியும்.
வேர்களின் அழுகை
யாருக்குத் தெரியும்..”

ஆண்டவனைப் பற்றி மாரியின் வார்த்தஉள்ளது

“போவம் ஓய்…எழுதி வச்சப்படிதான் எல்லாம் நடக்குமுண்ணு சொன்னா, ஆளு பாத்து எழுதி வச்ச ஆண்டவன்தான் பெரிய குத்தக்காரன். என்னை அழுக்கு வாரணமுண்ணும், மத்தவங்களையெல்லாம் அழுக்கு சேர்க்கவும் படச்சி விட்ட அவன்தான் பெரிய குத்தவாளி. தொழில வச்சி உயர்ந்தவன், தாழ்ந்தவண்ணு பிரிச்சி அவங்கவங்க வசதிக்காக வச்ச வேறுபாடுகள்தான், இப்ப சாதியா மதமா பிரிஞ்சி நிக்கி. எழுதி வச்சபடி அப்படி எதுவும் இல்ல ஓய். இது எல்லாமே ஆதிக்க மனுசங்கள் எழுதி வச்சது”

இன்னும் நிறைய இருக்கிறது..

 

நூலின் தகவல்கள்:- 

நூல் : “தூப்புக்காரி” 

நூலாசிரியர் : மலர்வதி

வெளியீடு : கிழக்கு பதிப்பகம்

விலை : ரூ.225

பக்கங்கள் : 182

நூலறிமுகம் எழுதியவர்:- 

நடராஜன் செல்லம் 

 


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *