நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள்

________________________________________
நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள்
ஏனென்றால் நான் காதல் கல்யாணம் செய்தேன்…
என் விருப்பத்தோடு பையனைக் தேர்ந்தெடுத்தேன்
இதனால் வேறுபாடு ஏற்படவில்லை என்று
கல்யாணம் வீட்டிலுள்ளவர்களின் ஆசைப்படியே நடந்தது.

நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள்
ஏனென்றால் நான் இரண்டு கஜ முகத்திரையை அணிவதில்லை
சேலையில் செளகரியம் இல்லையானதால்…
சூட் அணிந்தேன்
என்ன நடந்தது ?
சட்டை மாதிரியும் அது இருந்ததால்
களங்கம் என சாட்டப்பட்டது
நான்

பாரம்பரியத்தை உடைத்தேன்.
நான் கெட்டவள்..நான் மிகவும் கெட்டவள்
ஏனென்றால் என்னுடைய கணவன் என்னை வீட்டில் கைதியாக வைக்கவில்லை
உலகத்தை விரும்பாத என்னுடன் நேரத்தை செலவிட்டார்
நாங்கள் எல்லா உறவுகளையும் சிநேகத்தோடு வைத்திருக்க விரும்பினோம்
நான் மாயக்காரி மற்றும் அவர் மனைவியின் அடிமை என அழைக்கப்பட்டார்.
நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள்
ஏனென்றால் உறவினர்களின் வீடுகளுக்குப் போய்
அவர்களின் வேலைகளில் ஒத்தாசையாய் இருப்பதில்லை
இரண்டு.. நான்கு கோள் சொற்களை அவர்களிடமிருந்து கேட்பதில்லை
இரண்டு.நான்கு வார்த்தைகள் எனது உலகத்தைத் பற்றி சொல்லுவதில்லை.

நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள்
ஏனென்றால் எல்லாவற்றையும் மவுனமாய் வேடிக்கை பார்ப்பதில்லை
வெட்கங்கெட்ட விஷயங்களைப் பேசி வாயாடி ஆவதில்லை
உண்மையான விஷயங்கள் பக்கம்
எப்போதும் நான் நின்றிட
என் ஒழுக்கம் வெட்கம் இல்லாததாக..
வெட்கம் கெட்டவளாக…
நான் அழைக்கப்பட்டேன்.

நான் கெட்டவள்.நான் மிகவும் கெட்டவள்
ஏனென்றால் தப்பைச் சகிக்கக் கற்றுக் கொள்ளவில்லை
மற்றும் பொய்சொல்ல கற்றுக் கொள்ளவில்லை
இனிப்பு விஷம் புத்தியில் நிரம்பிட
யாரையும் முதுகின் பின்னே குத்த
கற்றுக் கொள்ளவில்லை.

நான் கெட்டவள்.. நான் மிகவும் கெட்டவள்
ஏனென்றால் எல்லாக் குற்றச்சாட்டுகளையும் கேட்டும்
கடமைகளுக்கு நான் முகம் திருப்புவதில்லை
உடைந்து சிதறிய உறவுகளையும்
விருப்பின் நூலால்
இணைத்து இருக்கிறேன்.

நான் கெட்டவள்… மிகவும் கெட்டவள்
ஏனென்றால்……
ஏனென்றால் நான் கைப்பாவையாக ஆக முடியாது
சாவி கொடுக்கும் பொம்மையாக ஆக முடியாது.
ஹிந்தியில் :  மனிஷா துபே ” முக்தா “
தமிழில் : வசந்ததீபன்


மனிஷா துபே ” முக்தா “
_________________________________
பெயர் :  மனிஷா துபே ” முக்தா “
பிறந்த இடம் :  ஸிங்கரௌலீ , மத்திய பிரதேசம்.
கல்வி : M.com., Cost Account Course
வெளியான தொகுப்புகள் :
(1) ஏக க்ரஹிணி கா அரத்த்சதக் ( கவிதை)
(2) ஆன்லைன் வுமனியா தொகுப்பாசிரியர் (32 பெண்களின் சிறுகதைத் தொகுப்பு )



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *