வட இந்தியா ஒளிர்கிறது எரியும் பிணங்களால் 😥😭 – சிந்துஜாபெருந்தொற்றுக்கு
ஏது சாதி, மதம்
விலகி
இருப்பதில்லை
மனிதனிடம்
வீதியெங்கும்
பிணக்குவியல்
சுவாசிக்கும்
காற்றும்
சுவாச மற்றுபோகிறது
வான் உயர்ந்த
சிலைகளுக்கு
இடமிருக்குமிடத்தில்
உயிருடனிருக்க
ஓரு படக்கையில்லை
மாத்திரை மருந்து
மந்திரகளுக்கு மட்டும்
மரணப்படுக்கையில்
எண்ணற்ற உயிர்கள்
ஏன் என்று
கேட்க
நாதியற்றவர்களாய்
நடுத்தெருவில்
புலம்பல்
இன்னொரு
பொது முடக்கம்
பட்டினியை
காட்டவிருக்கிறது
ஆனால்
அங்கோ காட்டமாய்
கூட்டமாய்
தேர்தல் பரப்புரை
கும்பமேளாவில்
குளியல்
ஏதுமற்றவர்களாய்
நாளும்
இந்நாட்டில்….

— சிந்துஜா

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)