‘கரகககசிகயகமாகய்
கரகககசிகயகமாகய்’
இந்நூலை வாசித்துவிட்டீர்களா நண்பர்களே?
என்னங்க குழப்பமா, புதுசா இருக்கேன்னு பார்க்கிறீங்களா. ok ok மறையீட்டுக் (password) குறியீட்டை நீக்கி காண்பிக்கிறேன்
‘ரகசியமாய்
ரகசியமாய்’
இதுதாங்க அது.
நமது மக்கள் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்கள் அசத்தலாக எழுதிய பாரதி புத்தகாலய வெளியீட்டில் ஜூலை 2023ல் மிகச்சிறப்பாக வந்துள்ள நூல். விலை ரூ.50.
நாம் சிறிய வயதில் மேலே முதலில் நான் குறிப்பிட்ட ரகசிய குறியீட்டை விளையாடாதவர்கள் இருக்கமுடியாது. இந்நூல் நமது கணினி, செல்போன் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் மறையீட்டுக் குறியீட்டை எப்படி உருவாக்குகிறார்கள் என்பதை இவ்வளவு எளிமையாக நூல் எழுதமுடியுமா என்று ஆச்சரியப்பட்டேன் நண்பர்களே!
நமது மக்கள் விஞ்ஞானி தவிவி அவர்கள் எவ்வளவு முடியுமோ அவ்வளவு எளிமையாக இந்நூலில் வழங்கியிருப்பார். 48 பக்கம். ஒவ்வொரு பக்கமும் உயிரோட்டமாக நம்முடன் பயணிக்கும். பாஸ்வேர்டு எப்படி உருவாக்கப்படுகிறது, எப்படி நம்முடைய இணையப் பாதுகாப்பு இருக்கிறது என்பதை அறிவதற்கு அனைவரும் அவசியம் இந்நூலை வாசிக்க வேண்டுகிறேன்.
மக்கள் விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்!
வாசிப்போம்!
உலகை நேசிப்போம் தோழர்களே!!
நூல்: ரகசியமாய் ரகசியமாய்
ஆசிரியர்: த.வி.வெங்கடேஸ்வரன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹50.00
புத்தகத்தை வாங்க கிளிக் செய்க: Thamizhbooks.com
ஆசிரியர்: த.வி.வெங்கடேஸ்வரன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ₹50.00
புத்தகத்தை வாங்க கிளிக் செய்க: Thamizhbooks.com
தோழமையுடன்
இரா.சண்முகசாமி
புதுச்சேரி.