சோம வள்ளியப்பன் பற்றிய சில வரிகள்

சோம. வள்ளியப்பன் அவர்கள் புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர், பயிற்சியாளர் மற்றும் மனித வள மேலாண்மை, ஆளுமை மேம்பாடு மற்றும் நிதி முதலீடுகள் போன்ற துறைகளில் நிபுணர் .சுய முன்னேற்றம், பங்குச் சந்தை, உணர்ச்சி பற்றிய நுண்ணறிவு, நேர மேலாண்மை, விற்பனை, தலைமைபண்பு மற்றும் சுய ஆளுமை மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் 45 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளார். 2004 ஆம் ஆண்டில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்ட “அள்ள அள்ள பணம்” என்ற பங்குச்சந்தை முதலீடு குறித்த அவரது புத்தகம் சுமார் 5 ஆண்டுகளில் 100,000 பிரதிகள் விற்றுள்ளது.

நேரத்தை உரமாக்கு


காலம் என்பதே அனைவருக்கும் பொதுவானதுதான். அதை எப்படிப் பயன்படுத்துவது அல்லது வீணடிப்பது என்பதில் மட்டும்தான் வேறுபாடு இருக்கிறது. சாதனையாளர்களுக்கும் தோல்வியாளர்களுக்குமான வேறுபாடு என்பது இதுதான். இந்நூல், நேர மேலாண்மையைச் சுவையாகவும் தகுந்த உதாரணங்களுடனும் கற்றுத் தரும்.

உறவுகள் மேம்பட

மனிதர்களை ஈர்க்கும் வித்தையை நெருக்கமான சம்பவங்கள், அழகான கதைகள், ஆழமான உதாரணங்கள் ஆகியவை மூலம் நமக்கு உறவுகள் எவ்வாறு மேம்படும் என்பதை கற்றுத்தருகிறது இந்நூல்.

காதலில் இருந்து திருமணம் வரை

இந்நூல், உங்களை திருமணத்துக்கும், திருமணத்துக்குப் பிறகான வாழ்க்கைக்கும். சிநேகமான முறையில் சில முக்கிய ரகசியங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்தத் திருமண கைடு, இன்பமான இல்லற வாழ்க்கைக்கு உங்களைச் சரியான வழியில் தயார்படுத்தும்.

எல்லோரும் வல்லவரே

சாதனையாளர்களுக்கு சாத்தியமானவை அனைத்தும் உங்களுக்கும் சாத்தியப்படும். அவர்களைப் போலவே நீங்களும் ஒரு வல்லவர்தான். இதை நீங்கள் உறுதியாக நம்பத் தொடங்கும்போது உங்கள் ஆளுமை பல மடங்கு பிரகாசிப்பதை நீங்களே உணரலாம்.

உறுதி மட்டுமே வேண்டும்

மன உறுதியை நீங்கள் பெறுவதற்கு இந்தப் புத்தகம் ஓர் உந்துசக்தி. உங்கள் கனவுகளை விரிவாக்குவதோடு நிறுத்திக்கொள்ளாமல் அந்தக் கனவுகளை நிறைவேற்றுவதற்கான சூட்சுமங்களையும் கற்றுக்கொடுக்கிறது.

உஷார் உள்ளே பார்

மனத்தை அடக்கி ஆள்வது முனிவர்களுக்கு மட்டுமே கைவந்த விஷயமல்ல. உங்களாலும் முடியும். நீங்கள் தவம் இருக்க வேண்டும். தாடி வளர்த்துக்கொண்டு தனிமை தேடிப் போக வேண்டாம். இருந்த இடத்தில் இருந்தபடி சாதிக்கலாம்! உள்ளுக்குள் இருக்கும் உங்கள் மனத்தைத் தூக்கி எடுத்து உங்கள் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு நினைத்த நேரத்தில் நினைத்தபடி அதை ஆட்டிப் படைக்க முடியும்!
மனித மனம், விசித்திரங்களின் மூட்டை. நீங்கள் நம்பமுடியாத பல திறமைகள் அதற்கு உண்டு. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நடத்திக் காட்டும் அற்புத ஆற்றல் உங்கள் மனத்துக்கு உண்டு,அதை உணர்த்துவது தான் இந்த புத்தகம்.

தள்ளு

உலகமெங்கும் நடைமுறையில் இருக்கும் மோட்டிவேஷன் தியரிகளை ஆராய்ந்து கண்டுபிடிக்கப்பட்ட நுணுக்கமான தகவல்கள், அவற்றின் மூலம் செயல்திறனை மேம்படுத்த உருவாக்கப்பட்ட முறைகள் ஆகியவற்றை எளிமையாக விளக்குகிறது இந்த புத்தகம்.

சிறந்த நிர்வாகி ஆவது எப்படி

மிகச் சிறந்த ஒரு நிர்வாகியாக உங்களை நீங்கள் வளர்த்தெடுத்துக்கொள்ள இந்தப் புத்தகம் உதவும்.

பணமே ஓடி வா

சம்கபாதிக்கத் தெரிந்த அளவுக்குச்சம்பாதித்த பணத்தை நிர்வகிக்கத் தெரியவில்லை பலருக்கும். இனியாவது தெரிந்துகொள்ளவேண்டும் என்றுகூட நினைப்பதில்லை. இதில் படித்தவர் படிக்காதவர், உயர் பதவியில் இருப்பவர் சாதாரண ஊழியர் போன்ற வேறுபாடுகள் ஏதுமில்லை
நிஜத்தில் பணம் சம்பாதிப்பது அத்தனை கஷ்டமான விஷயமேகிடையாது. நம்மிடம் இருக்கும் சிறு அளவு பணமே பெரும் பணத்தைச் சம்பாதித்துவிடும். அதற்கான வழிகளை எளிமையாகச் சொல்லும் புத்தம்தான் ‘பணமே ஓடி வா’. இது போன்ற எழுத்தாளர்களை ஊக்குவிக்க நூல்களை வாங்கிப் படியுங்கள் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *