கொரான ஊரடங்கில் புத்தகம் வாசிப்பது பயன் உள்ளதாக அமைந்தது. புத்தக அலமாரியில் தேடித்தேடி புத்தகங்களை வாசிக்க நேர்கின்றபோது என்னுடைய கண்களில் ஜாரெட்டை மண்ட எழுதிய இந்த புத்தகம் கவனத்தை ஈர்த்தது. புத்தகத்தை கையில் எடுத்தவுடன் இவ்வளவு பக்கத்தையும் வேகமாக வாசிப்பது என்று புத்தகத்தின் உள்ளே நுழைந்தேன். புத்தகம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு, பத்தொன்பது அத்தியாயங்களை உள்ளடக்கி இருந்தது. ஒவ்வொரு அத்தியாயமும் சுவராசியமான பல்வேறு விசயங்களை முன்வைக்கிறது. மனித சமூகங்களின் நிலைகளை தீர்மானித்த காரணிகளைப் பற்றி பேசுகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் மனித சமூகத்தின் வெற்றியை தீர்மானித்ததில் துப்பாக்கிகளின் பங்கு, கிருமிகளின் பங்கு.எஃகுவின் பங்கு எந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை மிக மிக நேர்த்தியாக விளக்கி இருக்கிறார். ஐரோப்பிய நாடுகள் மட்டும் எப்படி உலகத்தையே கட்டுக்குள் கொண்டுவந்தது. உலகின் புகழ்பெற்ற கார்தேஜ் நாகரிகம் எப்படி காணாமல்போனது என்பதை பற்றிய ஆச்சர்யமூட்டும் தகவல்களை பதிவு செய்திருக்கிறார். உலக வரலாற்றை நாம் இதுவரை அரசர்கள் மக்கள். அதிகாரம் என்ற தரவுகளோடு நாம் வரலாற்றை வாசித்தோம். ஆனால் இந்த புத்தகம் அதனை தாண்டி வேறு ஒரு கண்ணோட்டத்தில் உலக வரலாற்றை பார்க்க தூண்டுகிறது. புகழ் பெற்ற சம்ராச்சியங்கள் அழிவுக்கான காரணங்களையும் முன்வைக்கின்றது. சமூக ஊடங்களில் அதிகமாக பேசப்படுகின்ற வைரஸ் கிருமிகள் எப்படி தங்களை உருமாற்றிகொள்கின்றன.

Tamil article | Guns, Germs and Steel: A very short introduction ...

மனித சமூகத்தில் எப்படி தாக்குதல்களை நடத்துகின்றன என்பதை பற்றியெல்லாம் மிக அற்புதமாக ஒரு அத்தியாத்தில் விளக்கி இருக்கிறார். பப்புவா நியூகினியா என்று அழைக்கப்படும் சின்னஞ்சிறிய நாட்டின் பிரபலமான அரசியல்வாதி யாளினி அவர்களோடு இந்த புத்தகத்தின் ஆசிரியர் உரையாடிய நிகழ்வின் அடிப்படையில் பல்வேறு விசயங்களை விவாதிக்கிறது. இந்தியா என்கின்ற துணைக் கண்டத்தை ஐரோப்பாவின் சின்னஞ்சிறிய நாடான பிரிட்டன் 200 ஆண்டுகள் ஆண்டதின் சூழ்ச்சுமத்தை இந்த நாவலை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடியும். பள்ளிகளில் ஒரு மார்க்வினா உலகின் இருண்ட கண்டம் எது? நாம் எல்லோருக்கும் தெரிந்த விடை ஆப்பிரிக்க அந்த ஆப்பிரிக்க கண்டம் எப்படி இருட்டடிக்கப்பட்டது என்பதையெல்லாம் பேசுகிறது. புலிட்சர் விருது பெற்ற இந்த நூலை உலகை புரிந்துகொள்ள வேண்டும் வரலாற்றை வாசிக்க வேண்டும் என்று முனைப்போடு இருப்பவர்கள் வாசிக்க வேண்டிய அற்புதமான நூல்களில் இதுவும் ஒன்று.

மதிப்புரை
கு.காந்தி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *