Asha – Anganwadi worker - Modi Goverment | ஆஷா – அங்கன்வாடி பணியாளர்

பரப்புரை எண்: 5

மோடி அரசின் பொய்கள், பொய்கள், மேலும் பல பொய்கள்

உழைக்கும் பெண்கள்

சொன்னது

நாட்டின் தொழிலாளர் தொகுப்பில் பெண்கள் பங்கேற்க பாதுகாப்பான, ஆரோக்கியமான, உகந்த சூழலை உருவாக்கவும், விக்சித் பாரத்தின் வளர்ச்சிக்கு அவர்கள் சிறப்பான வகையில் பங்களிக்கவும் தொழிலாளர்களின் பணிநிலைமைகளை குறிப்பாக அமைப்புசாரா துறையில் இந்தத் தொழிலாளர் குறியீடுகள் மேம்படுத்தும் – தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம்

“10க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும் பாலியல் துன்புறுத்தல் புகார்களை மறுபரிசீலனை செய்ய உள்மட்டக் குழுக்களை அமைக்க வேண்டும் – 2022இல் நாடாளுமன்றத்தில் தொழிலாளர் நலத் துறை அமைச்சர்

“அங்கன்வாடி ஊழியர்களின் பணி நிலைமைகளை மறுபரிசீலனை செய்து அவர்களின் ஊதியத்தை உயர்த்த வேண்டும் – பாஜக 2014 தேர்தல் அறிக்கை

“ஆஷா – அங்கன்வாடி பணியாளர்களின் மதிப்பூதியத்தை நாங்கள் கணிசமாக உயர்த்த உள்ளோம்.” – பாஜக 2019 தேர்தல் அறிக்கை
2017ஆம் ஆண்டில் மகப்பேறு நலச்சட்டத்தில் திருத்தம் செய்ததன் மூலம் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக அதிகரிக்கப்பட்டது.

உண்மை நடப்பு

கொரோனா தொற்றுநோய்ப் பரவலின்போது, 2020 மார்ச் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடையில் வேலையை விட்டு வெளியேற நேர்ந்த பெண் தொழிலாளர்களில் 47 சதவீதம் பேர் நிரந்தரமாகவே வேலை இழப்பைச் சந்தித்தனர்.

இந்தியாவில் பெண் தொழிலாளர் பங்கேற்பு விகிதங்கள் உலகிலேயே மிகக் குறைவு ஆகும். சமீபத்திய 37 சதவீத அதிகரிப்பிற்கு முக்கிய காரணம் பெண்கள் மத்தியில் சுய வேலைவாய்ப்பு 70 சதவீதமாக அதிகரித்துள்ளது. இவர்களில் பெரும்பாலோர் விவசாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 40 சதவீதம் பேர் ஊதியம் பெறாத உதவியாளர்கள் என்ற பிரிவில் உள்ளனர். 10 சதவீதம் பேர் மட்டுமே நிரந்தர சம்பளம் பெறும் தொழிலாளர்கள். எந்தவொரு சமூகப் பாதுகாப்பு சலுகைகளும் இல்லாத, வழக்கமான சம்பள வேலைகளில் ஈடுபடும் பெண்களின் விகிதம் கிராமப்புறங்களில் 58 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 51 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. இதன்பொருள் என்னவெனில், முக்கியமாக வேலைகளில் அதிகரித்து வரும் நிலையற்ற தன்மை மற்றும் பாதிக்கப்படக்கூடிய வாழ்வாதார நிலைமைகளால் இந்த அதிகரிப்பு உந்தப்படுகிறது.

அரசு சேகரித்த நேரப் பயன்பாட்டுத் தரவுகள், உழைக்கும் வயதில் உள்ள 92 சதவீத பெண்கள் ஒவ்வொரு நாளும் 5 மணி நேரத்திற்கும் மேலாக ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் செலவிடுகின்றனர் என்பதைக் காட்டுகிறது. இந்த அவலத்தைப் போக்க எந்தக் கொள்கை நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சுத்தமான குடிநீர் கிடைப்பது பெரும் சவாலாக உள்ளது. சமையல் எரிவாயு விலை சிலிண்டருக்கு ரூ. 1000க்கு மேல் அதிகரித்துள்ளதானது பெண்களின் சுமையை மேலும் அதிகரித்துள்ளது.

2019ஆம் ஆண்டில் சமமான, குறைந்தபட்ச ஊதியங்களுக்கு உத்திரவாதம் அளிக்கும் ஊதியக் குறியீடு நிறைவேற்றப்பட்ட போதிலும், ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையிலான ஊதிய இடைவெளி மாதச் சம்பள வேலைவாய்ப்பில் 34 சதவீதமாகவும், சாதாரண வேலைவாய்ப்பில் 50 சதவீதமாகவும், சுயவேலைவாய்ப்பில் 160 சதவீதமாகவும் உள்ளது.

2020ஆம் ஆண்டின் தொழில்சார் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் சமூகப் பாதுகாப்பு குறியீடுகள் அமைப்புசாரா துறையில் உள்ள தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆனால் பல பிரிவினர், உதாரணமாக வீட்டுப் பணியாளர்களில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில், அநேகமாகப் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மறுக்கப்படுகிறது. மேலும் சமூகப்பாதுகாப்பும் இல்லை.

10 வீட்டுப் பணியாளர்களில் 9 பேர் அவர்கள் ஒப்புக் கொண்டதற்கும் மேலாக கூடுதலான, ஊதியமற்ற வேலைகளைச் செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர் என்று ஓர் ஆய்வு சுட்டிக் காட்டுகிறது. வீட்டிலேயே தங்கி வேலை செய்யும் தொழிலாளர்கள் உடல்ரீதியான அத்துமீறல்கள் மற்றும் துன்புறுத்தல்களுக்கு அதிகம் ஆளாகின்றனர். இதுகுறித்து பல தனிநபர் மசோதாக்கள் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும், மோடி அரசு தன் பதவிக் காலம் முழுவதிலும் வீட்டுத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஒரு சட்டத்தை நிறைவேற்ற மறுத்துவிட்டது.

குறைந்தது இரண்டு கோடி பெண்கள் அற்ப ஊதியத்திற்கு வீட்டு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். குடும்பத்தில் உள்ள அனைத்துப் பெண்களும் இந்த வேலையைச் செய்கின்றனர். ஒவ்வொரு வேலைக்கும் நியாயமான ஊதியத்தைப் பரிந்துரைக்கும் வகையில் மோடி அரசுக்கு வழங்கப்பட்ட வரைவு தேசியக் கொள்கை புறக்கணிக்கப்பட்டுள்ளது.

மல்யுத்த சம்மேளனத்தில் தலைவராக இருந்த பாஜக எம்.பி. க்கு எதிரான புகார்கள் புறக்கணிக்கப்பட்டதால் வீதியில் இறங்கிப் போராடிய பெண் மல்யுத்த வீராங்கனைகளின் விஷயத்தில் பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல் குறித்த மோடி அரசின் அணுகுமுறை மிகத் தெளிவாகத் தெரிந்தது.
புகார்கள் தொடர்ந்து அதிகரித்து வந்தபோதிலும், 2024ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் பதில் அளித்தவர்களில் 59 சதவீதம் பேர் 2013ஆம் ஆண்டின் பாலியல் ரீதியான துன்புறுத்தலைத் தடுக்கும் சட்டம் (போஷ் சட்டம்) கட்டாயப்படுத்தியிருந்த உள்மட்டக் குழுக்களை தங்கள் நிறுவனங்கள் அமைக்கவில்லை என்று கூறியிருந்தனர். எனினும் அவற்றுக்கு எதிராக அரசு நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டது.

இதில் மத்திய- மாநில அரசுகள் மிக மோசமான குற்றவாளிகளாக உள்ளன. ஏனெனில் அவற்றின் பெரும்பாலான அலுவலகங்கள் மற்றும் பிற பணியிடங்களில் போஷ் சட்டத்தை செயல்படுத்தவில்லை. பல்வேறு வகையான பாலியல் துன்புறுத்தல்களின் விளைவாக 40 சதவீத பெண்கள் தங்கள் பணியிடங்களில் பாதுகாப்பற்ற நிலையை உணர்கின்றனர் என்றும், 30 சதவீத ஊழியர்கள் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான நியாயமான வழக்குகள் கண்ணுக்குத் தெரியாமல் மறைக்கப்படுகின்றன என்றும் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களுக்கு இந்திய அரசிடமிருந்து 2018 முதல் ஊதிய உயர்வு எதுவும் கிடைக்கவில்லை. தற்போது அங்கன்வாடி பணியாளருக்கு ரூ. 4500/- மினி அங்கன்வாடி பணியாளருக்கு ரூ. 3500/-, உதவியாளருக்கு ரூ. 2250/- என மத்திய அரசு மாதாந்திர மதிப்பூதியத்தை அறிவித்துள்ளது.

ஆஷா பணியாளர்களின் ஊதியம் 2018 முதல் ரூ. 2000/- ஆக தேங்கி நிற்கிறது. அதேநேரத்தில், மதிய உணவு ஊழியர்களின் ஊதியம் 2019 முதல் அதிகரிக்காமல் நிற்கிறது. தொற்றுநோய் பரவலின்போது இந்தத் தொழிலாளர்கள் அனைவரும் தங்கள் உயிரைப் பணயம் வைத்து, தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள் முதல் தடுப்பூசி வரை கொரோனாவின் மூன்று அலைகளிலும் தங்கள் கடமையை தொடர்ந்து செய்து வந்தனர். இந்தக் காலகட்டத்தில் அவர்கள் ஊதிய உயர்வுகள் அனைத்துமே நீண்ட, கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு வந்தவை. அதுவும் கூட மாநில அரசுகளால் வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில் பணிபுரியும் சுமார் 80 லட்சம் தொழிலாளர்களுக்கு – இவர்களில் பெரும்பாலோர் பெண்கள் – ’தொழிலாளர்’ என்ற அங்கீகாரம் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகிறது. அங்கன்வாடி தொழிலாளர்கள், உதவியாளர்கள், ஆஷாக்கள், மதிய உணவுத்திட்ட தொழிலாளர்கள், தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் உள்ளிட்ட திட்டப் பணியாளர்கள் ஆகியோருக்கும் தொழிலாளர்கள் சட்டத்தின் கீழ் குறைந்தபட்ச ஊதியம் வழங்கப்பட வேண்டும்; சமூகப்பாதுகாப்பு சலுகைகளை வழங்க வேண்டும் என்ற 45 மற்றும் 46வது இந்திய தொழிலாளர் மாநாடுகளின் ஒருமித்த பரிந்துரைகள் முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. அங்கன்வாடி பணியாளர்கள் – உதவியாளர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்ற உச்சநீதிமன்ற உத்தரவு இரண்டு ஆண்டுகள் ஆகியும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டுத் திட்டம், தேசிய சுகாதார இயக்கம், மதிய உணவுத் திட்டம் போன்ற இந்தப் பெண்கள் பணிபுரியும் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு மோடி அரசால் கடுமையாக வெட்டிக் குறைக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டத்திற்கு 55 சதவீதமும், மதிய உணவுத் திட்டத்திற்கு 30 சதவீதமும், தேசிய சுகாதார இயக்கத்திற்கு 20 சதவீதமும் ஒதுக்கீடு குறைக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில் வேதாந்தா, பெப்சிகோ, பதஞ்சலில் போன்ற கார்ப்பரேட் நிறுவனங்களிடமும், இஸ்கான் போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமும் இவற்றை ஒப்படைப்பதன் மூலம் இத்திட்டங்களை தகர்க்கவும், தனியார் மயமாக்கவும் அரசு முயற்சிக்கிறது.

மகப்பேறு சலுகைகளின் பாதுகாப்பை அதிகரிப்பதைப் பொறுத்தவரை, பெரும்பாலான பெண்கள் அமைப்புசாரா துறைக்கும், விவசாய வேலைகள் மற்றும் ஊதியமற்ற வேலைகளை நோக்கித் தள்ளப்பட்டு, சட்டத்தின் வரம்பிற்கு வெளியே நிறுத்தி வைக்கப்படுகின்றனர்.

தனியார் துறையில் பெரும்பாலான பெண்கள் ஒப்பந்த அல்லது அவுட்சோர்சிங் தொழிலாளர்களாக பணி அமர்த்தப்படுகின்றனர். இதன்மூலம் சட்டபூர்வமான சலுகைகள் மறுக்கப்படுகின்றன. இப்போதுள்ள ஆய்வு ஏற்பாடுகள் அகற்றப்படுமானால், நிலைமை மேலும் மோசமாகி விடும். தன் சொந்த திட்டங்களை செயல்படுத்தி வரும் ஆஷா மற்றும் மதிய உணவு திட்டப் பணியாளர்களுக்கு மகப்பேறு உதவிகளை நீட்டிக்க மத்திய அரசு மறுக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா திட்டத்தின்கீழ் ஒரு முறை மட்டுமே ரூ. 5000/- வழங்கப்படுகிறது. இது 2017 முதல் மாற்றமின்றி நீடிக்கிறது. என்.எஃப். எஸ். ஏ. 13 ரூ. 6000/- -ஐ கட்டாயம் வழங்க வேண்டுமென கூறுகிறது. இது சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தைக்கு மட்டும் ரூ. 6000/- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான பயனாளிகளில் 20 சதவீதம் பேர் மட்டுமே திட்டத்தை அணுக முடிகிறது. மேலும் பதிவு செய்ய ஆதார் எண்ணை கட்டாயமாக்கிய பிறகு, இந்த எண்ணிக்கை 2022இல் 46 சதவீதம் குறைந்துள்ளது. முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடுகையில், 2023-24ஆம் ஆண்டில் பட்ஜெட் ஒதுக்கீடு 17 சதவீதம் குறைந்துள்ளது. 29 சதவீத பயனாளிகள் மட்டுமே இரண்டு தவணைகளையும் பெற்றுள்ளனர்.

பெண் தொழிலாளர்கள் ஊதியம் பெறாமலும், குறைந்தபட்ச ஊதியம் பெறாமலும், தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் என ஒரு பரிதாபகரமான வாழ்க்கையை நடத்த பல விதமான வேலைகளை செய்ய நிர்ப்பந்திக்கப்படுகின்றனர். இது அவர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

பெண் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்போம்!

பாஜகவை தோற்கடிப்போம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *