அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது… | மதிப்புரை தா.வாசுகி

எத்தனையோ புத்தகங்களை வாசிக்கிறோம்.
ஆனால் சில வாசிப்புதான் மனதிற்குள் புகுந்து நம் நினைவெனும் கூண்டைத் திறந்து அதில் பட்டாம்பூச்சிகளை பறக்க வைக்கிறது.

அப்படி ஓர் வாசிப்பு அனுபவத்தைத் தந்ததுதான் அலெக்சாந்தர் ரஸ்கின் எழுதிய அப்பா சிறுவனாக இருந்தபோது புத்தகம்.

கொரோனா கடிகாரத்தை / காலத்தை பின்னோக்கி நகர வைத்துவிட்டதோ..?!!

குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்க இயலாத அவசர உலகத்தில் இருந்து அவர்களுக்கான உலகத்துக்குள் புகுவதற்கான ஒரு வாய்ப்பை இந்த கொரோனா கால வீட்டுக்குள்ளே இருத்தல் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது.

தொலைக்காட்சியும் அலைபேசியும் கூட சில நாட்களிலேயே அன்னியப்பட்டுப்போக
குழந்தைகளுடன் பட்டம் விடுவது, ஆடு புலி ஆட்டம்ஆடல்,பல்லாங்குழி , தாயம் விளையாடல்.. என வீட்டுக்குள்ளேயே பல விளையாட்டுக்கள் ஒரு பக்கம் ஓடிக் கொண்டிருக்க.. நாங்க சின்ன வயசுல இப்படி இருந்தோம்…. இப்படி விளையாடுவோம்…

இதையெல்லாம் சாப்பிட்டோம் என பழைய நினைவுகளைப் பகிர.. என் மகள் ‘ரஸ்கினின் அப்பா சின்ன வயசா இருக்கச்ச..’ புத்தகத்தைக் கொண்டுவந்து கையில் கொடுத்து அம்மா நீங்கசின்ன வயசா இருக்கச்ச சேட்டை எல்லாம் செஞ்சது இல்லையா..?!, தாத்தா.. பாட்டி, டீச்சர் கிட்ட அடி வாங்கினது இல்லையா..??! , நாய் உங்கள கடிச்சுதா…? School க்கு ஒழுங்கா போவீங்களா என கேள்விகளை அடுக்கலானாள்.

அவள் கேள்வி தந்த அதிர்ச்சியுடன் விளையாட்டாய்த்தான் புத்தகத்தை திருப்பினேன்.ஆனால் புத்தகத்தை முடித்து விட்டுத்தான் கீழே வைத்தேன்.

நம்மையும் அவங்க வயசுக்கு கொண்டுபோய்நாம் செய்த குறும்புகளை குற்றங்களை கண்டுபிடிப்பதில் அவர்களுக்கு தான் எவ்வளவு மகிழ்சி..

அந்த காலத்துல நாங்க எல்லாம் எங்க அப்பா அம்மா பேச்ச அப்படி கேட்போம், அப்படி இப்படி என நம்மை ஒரு ஹீரோவாகவே நம் குழந்தைகளிடம் கதை சொல்லிய நாம் என்றாவது நாம் செய்த தவறுகளை அதனால் ஏற்பட்ட விளைவு அது நமக்கு கற்றுத்தந்த பாடத்தை நம் குழந்தைகளுக்கு சொல்லியிருக்கோமா??.

இதோ சொல்கிறார் ரஸ்கின் தன் மகள் சாஷாவுக்கு

அப்பா சிறுவனாக இருந்தபோது பந்து விளையாடியது ,நாயிடம் கடிபட்டது ,கவிதை எழுதியது, டாக்டரை கடித்தது, School க்கு போனபோது, சினிமாக்குப் போனபோது என பல கதைகள் சொல்கிறார்.

இது அவரது அனுபவம் மட்டும் அல்ல நம் ஒவ்வொருவரின் அனுபவம்.

சிறுவனாக இருக்கும்போது அதிசய குழந்தையாக/ வித்தியாசமான குழந்தையாக இருக்கும் நாம் பெரியவனாக வளர்ந்த போது என்னநடந்தது??

மிகவும் சாதாரண மனிதனாக மாறுகிறான் என்கிறார் ரஸ்கின் உண்மைதானே!

சின்னப் பிள்ளையா இருக்கச்ச நீங்க யாராவது டாக்டர கடிச்சு இருக்கீங்களா ?!ரஸ்கின் கடிச்சாராம்.அந்த நிகழ்வே ஒரு சுவாரசியம்.

பின்பு வந்த நாட்களில் நன்றாக இருப்பதற்கு சில வேளைகளில் ஓரளவு வேதனையை பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
டாக்டர்கள் எல்லோருமே நமக்கு உதவ முயன்று கொண்டிருக்கிறார்கள்.
என்ன கொரோனா கால பாடம் மாதிரி இருக்கிறதா..?!

டாக்டரைக் கடித்தபோது..நிகழ்வு பகிர்வு மூலம் ரஸ்கின் உணர்ந்த நீதி , தன் குழந்தைக்குப் போதித்த நீதி இது.

நீ பெரியவனான பிறகு என்னவாக போற..?? சாதாரணமாக குழந்தைகளிடம் கேட்கக் கூடிய கேள்வி.
கூர்க்காவாக, ஐஸ் வண்டிக்காரன் ஒரு மெக்கானிக்காக டிரைவராக, வாத்தியாராக, மாலுமியாக என மாற்றி மாற்றி பதில் சொன்ன சிறுவனாகிய அப்பாஒரு நிகழ்வுக்குப் பின் கேட்பவரிடம் எல்லாம் மனிதனாகஆக விரும்புகிறேன் என சொன்னாராம். இப்படி அவரை சொல்ல வைத்த நிகழ்வு எது தெரியுமா…?!!

வாங்குங்க..
வாசியுங்க..

அப்பா சிறுவனாக இருந்த போது- அலெக்சாந்தர் ரஸ்கின்
விலை 110 ( புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/)

நாம் வாசித்து பழம் நினைவுகளுக்குள் மூழ்க..
நம் குழந்தைகளுக்கு நம் பழைய அனுபவங்கள் கூறி புதிதாய் நல்வழிகாட்ட..

வாசியுங்க…

இது Books for Children மட்டும் அல்ல
Books for usம் கூட

நம்மிடம் கோடான கோடிகள் கதைகள் இருந்தும் ஏனோ நம்முடைய குழந்தைகள் கதைகள் இன்றி பசியோடு தான் ஒவ்வொரு நாளும் தூங்க போகின்றனர்.
எல்லா அப்பாக்களையும் அம்மாக்களையும் நல்ல கதை சொல்லியாக மாற்ற இப்புத்தகம் உதவும்

வாசியுங்கள் நம் குழந்தைகளுக்கு வாசிக்கக் கொடுங்கள்.

நிச்சயமாக எல்லோரிடமும் கதைகள் முளைக்கும் நாமும் குழந்தைகளும் கதைகள் இன்றி உறங்க போவதும் குறைந்துவிடும் என இப்புத்தகம் குறித்து ஈஸ்வரசந்தான மூர்த்தி எழுதிய ஏற்புரை உண்மை என்பதனை உணர்வீர்கள்.

– தா.வாசுகி