நூல் அறிமுகம்

பாலகோபாலின் சுருக்கமான வாழ்க்கை குறிப்புஉள்ளது.

1990களின் பிற்பகுதியில் சிவில் உரிமை இயக்கங்களுக்கும் மக்கள் இயக்கங்களுக்கும் இடையிலான உறவு குறித்து அவர் தொடங்கிய விவாதம் மனித உரிமை நடவடிக்கைகளுக்கு ஒரு அறப்பரிணாமத்தை சேர்த்தது.

இந்திய அரசின் திட்டக் குழு( planning commission) சார்பாக அமைக்கப்பட்ட “நக்சலைட் பகுதிகளில் வளர்ச்சி நடவடிக்கைகள்” குறித்து ஆய்வு செய்வதற்கான குழுவில் பாலகோபால் பங்கேற்று அளித்த அறிக்கை (2008) முக்கியமான ஒன்று.

பாலகோபாலன் எந்த நாளும் யாருடனும் சமரசம் செய்து கொண்டதில்லை.

ஒய்.எஸ்.ஆர். வெற்றியை பகுத்தாய்வு செய்து அவர் எழுதிய கட்டுரை ஒரு master piece. வரலாற்று ரீதியாக ராயலசீமா பகுதியில் நிலவுடைமை கலாச்சாரம், இன்று அது சந்தித்து கொண்டுள்ள விவசாய பிரச்சினை, ஒய்.எஸ்.அர். குடும்பம் அவர் தந்தை காலம் தொடங்கி எப்படி ஒரு தாதா அரசியலை கட்டமைத்தது என அவர் படிப்படியாக விரித்து செல்வார்.

ரெட்டியார் சாதி பெண்மணி ஒருவரிடம் வழிப்பறி செய்த ஒரு தலித்தை ஒய்.எஸ்.ஆரின் தந்தை உயிரோடு பெட்ரோல் ஊற்றி எரித்ததையும், அரசின் கனிம நிறுவனத்துடன் Yar ன் நிறுவனம் இணைந்து அடித்த கொள்ளையால் பாதிக்கப்பட்ட விவசாயி ஒருவர் நீதிமன்றத்திற்குச் சென்றபோது தலைநகரில் வைத்து அவரது கை கால்களை ஒடிக்கப்பட்ட தையும் அவர் விலாவாரியாக சொல்லும் போது நமக்கு நெஞ்சம் பதைக்கும்.

அதிகாரங்களை எதிர்க்கும் போது நமக்கு பாதுகாப்பு தேவை என்று கருதியதே இல்லை.

எல்லா அதிகாரங்களுக்கும் எதிராக நின்ற பால கோபாலுக்கு அரணாக இருந்தது அவரது நேர்மை, அர்ப்பணிப்பு, எளிமை, துணிவு, உழைப்பு ஆகியவை மட்டுமே.

“மக்களுக்கு பிரச்சினைகள் இருக்கும் வரை நமக்கு ஓய்வு இல்லை” என பாலகோபால் ஒருமுறை சொன்னதை அவர் உருவாக்கிய HRFஅமைப்பின் இன்றைய பொதுச் செயலாளர் வி. எஸ். கிருஷ்ணா ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

டெல்லியிலுள்ள இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் முனைவர் பட்டத்திற்கு பிந்தைய ஆய்வை தொடங்கி அங்குள்ள சூழல் பிடிக்காமல் வெளியேறுகிறார்.

ஆந்திர மாநிலத்தின் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்பாகிய Apclc (ஆந்திர மாநில சிவில் உரிமை குழு)வின் பொதுச் செயலாளராக தேர்வு தேர்வு செய்யப்படுகிறார் (1983). அடுத்து 15 ஆண்டுகாலம் தொடர்ந்து பொறுப்பில் இருந்து செயல்படுகிறார்.

Apclc அமைப்பை ஆந்திர மாநிலம் முழுவதும் விரிவுபடுத்துகிறார். அவரது அற்பணிப்பு பல அறிவுஜீவிகளை இயக்கத்திற்கு ஈர்க்கிறது. ஒரு சிறந்த ஆசிரியரான பாலகோபால் ஆந்திரா மாநிலம் முழுவதும் சிவில் உரிமை கண்ணோட்டம் பரவ காரணமாகிறார்.

மனித உரிமை மீறல்கள் நடக்கும் போதெல்லாம் மக்கள் தானாகவே குரல் கொடுக்கும் நிலையை உருவாக்கினார்.

வன்முறைகளுக்கும் வன்முறையற்ற ...

கோபி ராஜண்ணா டாக்டர் ராமநாதம் ஜாபா லக்ஸம ரெட்டி நர்ர பிரபாகர் ரெட்டி முதலிய மனித உரிமைப் போராளிகள் ஆந்திர காவல் துறையினரால் கொல்லப்பட்ட நிகழ்வுகள் அவரது துணிவையும் செயல்பாடுகளையும் எள்ளளவும் அவரை பாதிக்கவில்லை. அவரது பணி மேலும் தீவிரமாகிறது.

1984 ல் பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி அணியினர் அவரை கரீம் நகரில் வைத்து தாக்கினார்கள்

ஆந்திர மாநிலத்தில் “தடா”வில் கைது செய்யப்பட்ட இரண்டாவது நபர் இவர்தான் .

1992ல் கோத்தகு டெம் என்னுமிடத்தில் நடைபெற்ற தாக்குதலில் அவர் கடும் காயங்களுக்கு ள்ளாகிறார். 1993ல் தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பாகவே அவர் தாக்கப்படுகிறார். இந்த தியாகங்களை என்றைக்கும் அவர் பெரிதாக பேசியதில்லை. புகழாக மாற்றிக்கொள்ள முயற்சித்ததில்லை. இப்படிப்பட்ட செய்தி ஊடகங்களில் பெரிதாக காட்டிய போது கிராமப்புறங்களில் இதனினும் பெரிய மனித உரிமை மீறல் தினந்தோறும் நடக்கின்றன. அவற்றின் மீது அக்கறை காட்டுங்கள் என்று பத்திரிகையாளர் களை நோக்கி கேட்டு கொண்டார்.

அவருடைய தலைமையில் Apclc இந்திய அளவில் புகழ்பெற்ற மனித உரிமை அமைப்பாகியது. நக்சல்பாரிகள் தவிர தலித்துகள் மீதான மனித உரிமை மீறல்களையும் வெளிச்சம் போட்டு காட்டுவதில் முன் நின்றார்.

கரம்சேடு. கொல்லிப்பாரா. காட்சில் கசர்லா. பிப்பாரா.டொண்டிலி.
சுண்டுர். ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தலித்துக்கள் மீதான வன்முறைகளை அம்பலப்படுத்தி இயக்கம் நடத்திடத்தினார்.

மண்டல் குழு எதிர்ப்பு போராட்டத்தின் போது அது பற்றி அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரை மிக முக்கியமானது.

மனித உரிமை பணிகளுக்காக வென சட்டம் பயின்று வழக்கறிஞரானவர் சுமார் 800 வழக்குகளை உயர் நீதிமன்றத்தில் நடத்தியுள்ளார். அவர் வாதத் திறமையோடு பல்வேறு சட்ட பிரச்சனைகளுக்கு ஆதரவளித்த விளக்கங்கள் குறிப்பிடத்தக்கவை. தேசிய மனித உரிமை ஆணையத்தின் முன்பு. சாலை சாலிசிடர் ஜெனரலின் கருத்துக்களுக்கு பதிலாக அவர் முன்வைத்த நுட்பமான வாதங்கள் மோதல் கொலைகள் தொடர்பான நெறிமுறைகளை ஆணையம் உருவாக்க காரணமாயிற்று. பெரும்பாலும் தொழிற்சங்கத்தினர். பழங்குடியினர். தலித்துகள். பெண்கள் ஆகிய பிரிவினருக்கு சார்பாக வாதிட்ட அவர் ஏழை மக்களிடம் ஊதியம் பெற்றதே இல்லை.

Indian Civil Society isn't silent over Kashmir Cause: Navlakha

1980களில் மோதல் படுகொலைக்கு எதிராக அவரது செயல்பாடுகள் இருந்ததென்றால்.
1990 களில் தாராளவாதத்தை ஒட்டிய ‘வளர்ச்சித் திட்டங்களால்’ இடம்பெயர்க்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளுக்காகவும். 2000களில் சிறப்பு பொருளாதார மண்டலம் தொடர்பான பிரச்சினைகளை முன்னிறுத்தியும் அவரது செயல்பாடுகள் அமைந்து.

சிறப்பு பொருளாதார மண்டலங்கள். கடலோர நடைவழி (coastal corridor) திட்டத்தாலும் இதர வளர்ச்சியை திட்டங்களாலும் கடலோரங்களில் இருந்து விவசாயிகளையம் மற்றும் மீனவர்களையும் வெளியேறப்படுவதற்கு எதிரான போராட்டங்களை முன்னேடுத்தார்.

எழுத்துத் துறையிலும் அவர் முக்கியமான இடத்தைப் பெறுகிறார். “ஆந்திர ஜோதி” இதழில் அவர் ஒரு பத்தி எழுத்தாளர். டி.டி.கோசாம்பியின் பகவத் கீதைஆய்வை படித்த பின்னரே மார்க்சியத்தின்பால் ஆர்வம் கொண்டதாகச் சொல்லும் அவர் 1986ல் கோசாம்பியின் introduction to lndian history நூலைத் தெலுங்கில் மொழிபெயர்த்தார்.கோசாம்பியின் வரலாற்று நோக்கை அறிமுகம் செய்து அவரெழுதிய தெலுங்கு நூல் முக்கிய வரலாற்றுப் பாட நூலாக கருதப்படுகிறது.

எளிமையாக சொல்வதானால் உங்களின் துப்பாக்கி முனையை ஒரு நிலபிரபுவின் தலையை குறிவைத்து நீட்டுவிட முடியும். ஆனால் சிறப்பு பொருளாதார மண்டலங்களுக்கோ இந்திய அமெரிக்க அணு ஒப்பந்தத்திற்கோ நாம் துப்பாக்கியை குறிவைக்க தலைகள் கிடையாது.

இந்தியாவில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலுமே மக்கள் இயக்கங்களின் மீதான அரச அடக்குமுறைகளுக்கு எதிராகவே சிவில் உரிமை இயக்கங்கள் உருவாகின்றன.

அமெரிக்காவில் சிவில் உரிமைகளின் ஒன்றியம் 1920களில் பிறந்தது. அன்றைய அரசு பொதுவுடமைக் கொள்கை உள்ளவர்களை எல்லாம் வேட்டையாடியது. துன்புறுத்தியது. தேசத்துரோக குற்றச்சாட்டின் சிறையில் அடைத்தது.

Kandala Balagopal | Outlook India Magazine

பிரிட்டனில் தேசிய சிவில் உரிமை ஒன்றியம் 1930 களில் உருவானது. வேலை இயில்லாத் திண்டாட்டத்திற்கு எதிராக உழைக்கும் வர்க்கம் திரண்டெழுந்த காலம் அது .
கொடூரமாக அரசு அதை ஒடுக்க முயன்றது.

இந்தியாவில் அன்றைய பிரிட்டிஷ் காலனி ஆட்சியாளர்கள் தேசிய போராட்டத்தை தடைகளாளும் தடுப்பு காவல்களாலும் ஒடுக்கிய போது அதற்கு எதிராக 1936ல் உருவானதுதான் இந்திய சிவில் உரிமைகள் ஒன்றியம் (lclu) காலனிய மற்றும் முதலாளித்துவ நாடுகளில் மட்டுமின்றி கம்யூனிஸ்ட் மற்றும் சோசலிஸ்ட் கட்சிகள் ஆட்சி புரிந்த நாடுகளிலும் கூட இதே முறையில்தான் சிவில் உரிமை அமைப்புகள் உருவானது. ஆளும் கட்சியுடன் கருத்து மாறுபடுகிற உரிமை மறுக்கப்பட்ட போது அதற்கு எதிராக சக்திவாய்ந்த சிவில் உரிமை மேடைகள் செக்கோஸ்லேவியா போன்ற நாடுகளில் உருவாயின.

இன்றைய காலகட்டத்திற்கு வருவோமானால் சிவில் உரிமைகள். ஜனநாயக உரிமைகள். மனித உரிமைகள் என்கின்ற பெயர்களில் பல்வேறு பகுதிகளில் பல இயக்கங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒடுக்கப்பட்ட மக்களை அணிதிரட்டும் எந்த ஒரு மக்கள் இயக்கமும் அப்பகுதியிலுள்ள மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளின் அனுதாபத்தை ஈர்ப்பது வழக்கம். அரசியல் ரீதியாக இத்தகைய இயக்கங்களுடன் முழுமையாக ஒத்துப் போகாதவர்களுங் கூட அவற்றின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பார்

எங்கள் மாநிலத்தில் நக்சலைட் இயக்கத்தை ஒடுக்குவதற்கென அரசு போலி மோதல்கள். பழங்குடியினரின் வீடுகளை எரித்தல். சதி வழக்குகளை போடுதல் ஏராளமான கைதுகள். சித்திரவதைகள் என்கின்ற நிலை எடுத்தபோது ஏராளமான எழுத்தாளர்கள். வழக்கறிஞர்கள் மற்றும் அரசியல்வாதிகள் சிவில் உரிமைகளுக்காக அணிதிரண்டனர் பேரணிகள் நடத்தினர். 1970 -72 காலகட்டத்தில் அகன்ற அளவிலான ஒரு அணிதிரட்டல் இவ்வாறு நிகழ்ந்தது.

சிவில் உரிமைப் போராளிகளைக் காவல்துறையினர் கொண்டதாக வரலாறில்லை பஞ்சாப்பில் அப்படி நடந்ததில்லை. காஷ்மீரிலும் அப்படி நடந்ததில்லை. அசாம் நாகலாந்திலும் இல்லை ஆனால் ஆந்திர மாநில காவல்துறை டாக்டர் ராமநாதத்தை கொன்றது ஜாபா லக்ஸம ரெட்டியை கொன்றது. நர்ர பிரபாகர் ரெட்டியை கொன்றது. பாஜகவினரின் கையில் துப்பாக்கியைக் கொடுத்து கோபி ராஜண்ணாவை கொன்றது. தேசிய பாதுகாப்புச்சட்டம். தடா. தேசத்துரோக வழக்குகள் அகியவற்றின் கீழ் அவர்கள் எங்களை பலமுறை சிறையிலடைத்தனர். இத்தனை அடக்கு முறைகளுக்கும் மத்தியில் அறிவுஜீவிகள் வர்க்கத்திலிருந்து ஜனநாயகவாதிகள் முன்னே வருவதுதான் மிகப்பெரிய பிரச்சினை.

மனித உரிமை போராளிகளின் வலியையும் வேதனையையும்
அ.மார்க்ஸ் அவர்கள் விரிவாக எழுதியிருக்கிறார்.
வாசிக்க வேண்டிய நூல்.

டாக்டர். கே.பாலகோபால் .

 வன்முறைகளுக்கும் வன்முறையற்ற வழிமுறைகளுக்கும் அப்பால் 

தொகுப்பும் மொழியாக்கம்

அ. மார்க்ஸ்

P.ஸ்டாலின். உளுந்தூர்பேட்டை 9042214882.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *