தொன்மக் காலத்து இயற்கை மாற்றங்களால் உருவான புவி வெப்பச்சலனத்திற்கும், நம்முடைய இன்றைய வெப்பச்சலனத்திற்கான ஒப்புமையை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதுதான் கல்வியாளர்களின் பணி தொழில்புரட்சிக் காலத்திற்கும் இன்றைக்கும் மாறி விட்டதை உணர முடிந்தது. பதினேழு பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பாளர்கள் எங்கே தவறு செய்து விட்டனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.
புத்தாக்கச் சிந்தனையை மாற்றி அமைக்க வேண்டுமானால் அது கல்வியாளர்களால் மட்டுமே முடியும் என்றப் புரிதல் ஏற்பட்டது. தும்பை விட்டு வாலைப் பிடித்தக் கதையாய், நம்முடைய முந்நூறு நூற்றாண்டு கண்டுபிடிப்புக்கள் பல நம்முடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வாழும் வழிகளை மாற்றி அமைத்து இருந்தாலும், நம்முடைய அடிப்படை வாழ்வாதாரமான புவியைப் பற்றிய சிந்தனை இல்லாத கண்டுபிடிப்புக்கள் இன்று நம் அடி மடியிலேயே கை வைத்துவிட்டன.
அதே நேரம் நம்முடைய பொருளாதார நடவடிக்கை ஒவ்வொன்றும் கணினியைச் சார்ந்ததாகிவிட்டது கணினிசார் வாழ்க்கையில், இன்று இருக்கக்கூடிய பொருளாதாரம் இலாபம் சார்ந்த எந்த ஒரு தொழில் முனைப்புகள் நீடித்து இருக்கும் ஒரு புவி என்பதை தங்களுடைய தொழிலின் அடிப்படையாக கொண்டே செயலாற்றவேண்டும். இது ஒரு மேடைப் பேச்சாகவோ, மனித உணர்வுகளைத் தூண்டி தங்கள் செய்தி நிறுவனங்களின் விளம்பர வருவாயைப் பெருக்கக்கூடிய அன்றாடம் அடிக்கொரு தொலைக்காட்சியில் மிதந்து வரும் செய்திகளாக மட்டுமே இருந்து விடக்கூடாது.
கணினிசார் உலகில், இயந்திரங்களே தொழிலாளர்களாக வேலை செய்யும், காலக்கட்டத்தில், அனைத்து விவரங்களும் ஆராயப்பட்டு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும்முறை, நாம் வாழும் புவியின்மேல் நாம் காட்ட வேண்டிய அத்தியாவசிய அக்கறை இவற்றை நாம் ஒரு உணர்வு பூர்வமாகப் பார்க்கும்போது ஒரு தார்மீகப் பொறுப்பாக மட்டும்தான் தெரியும். ஆனால் தற்போதைய தரவுகளின் உலகத்தில் தரவுகளை ஆராய்ந்து நாம் அறிவியல் பூர்வமாகவும் சிந்தித்துப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றோம். ஒரு நல்ல குடிமகனாக இப்பொறுப்புணர்ச்சி அனைத்துத் துறையில் இருப்பவர்களுக்கும் பொது என்றாலும், கல்வித் துறைக்கு இப்பொறுப்பின் பளு அதிகமாகத்தான் உள்ளது. உலக நிகழ்வுகள் மட்டுமன்றி இயற்கையையே சீர் படுத்தவேண்டிய ஒரு அச்சாணியாகக் கல்வித்துறை திகழ்கிறது. ஆசிரியர்கள் ஆனாலும் சரி மாணவர்களானாலும் சரி இந்தப் பொறுப்பை எந்த அளவிற்கு உணர்ந்திருக்கின்றோம் என்பதன் வெளிப்பாடாய் நம்முடைய அன்றாட வகுப்பறை பாடங்கள்.
நம்முடையப் பாடங்கள் தொழில் புரட்சி காலத்தில் ஒரு தனி மனிதன். உயர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காரணத்தால் ஒவ்வோரு துறை வாரியாக நமது பாடங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இன்றைய இணையத் தொழில்நுட்பத்தாலும் தரவுகளின் ஆராய்ச்சியினாலும் சமூக வலைதளங்களில் தனி ஒருவரின் ஆளுமையினாலும் நம் ஒவ்வோருவரின் செயல்பாடுகள் பாடப் புத்தகங்கள் வகுப்பறை மதிப்பெண்கள் என்ற எல்லையைத் தாண்டி வெட்டவெளியில் அனைவருக்கும் எந்நேரமும் கிடைக்கக் கூடிய தரவுகளாக உள்ளன. அதனால் நமது செயல்பாடுகளின் பக்க விளைவுகள் பின் விளைவுகள் பல்வேறு கோணமாக ஆராயப்படுகின்றன. அப்படி ஆராயப்பட வேண்டியத் தேவையும் உள்ளது.
அப்படி ஆராயப் படக்கூடிய பொருண்மைகளாக நமது பாடநூல்களையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்க்கவேண்டும். கல்வி 4.0 என்பது கணினிசார் வாழ்க்கைமுறைக்கான கல்வி என்பதோடு, கணினியோடு இயந்து வாழும் வாழ்க்கைமுறை என்பதை நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும். கணினிகள் மனிதனின் உதவியாளராக மட்டுமல்லாமல், மனித வளத்திற்கும் போட்டியாகவும், மனிதனின் சிந்தனையை அச்சிந்தனை சார்ந்த செயல்முறையை நடத்திச் செல்லும் ஒரு அதிமுக்கியக் காரணி என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடப் பொருண்மை ஆகிய ஆராய்ச்சிக் கூறுகளை கணினி என்ற அளவு கோலைக் கொண்டு நாம் மதிப்பிடவேண்டும்.
எந்த ஒரு ஆராய்ச்சியிலும் உள்ள நான்கு முக்கிய கூறுகளை நாம் புரிந்து கொண்டால் கல்வி 4.0 கொள்கைகளை நம் ஒவ்வொருவரின் தனித்தனித் தேவைக்கு ஏற்ப புரிந்து நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். முதல் இரண்டு Objective and Subjective analytics. Objective analysis என்பது உணர்வுகளை சார்ந்தது. ஆராய்ச்சியாளரின் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு ஆய்வு இது. அகவழி ஆய்வு எனவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். Objective analysis என்பது புறத்தில் ஆய்வாளர் சேகரிக்கும் புள்ளி விவரங்களை சார்ந்தது. உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்கும், காலக் கட்டத்திற்கும் தேவைக்கும் ஆராய்ச்சியின் பொருண்மைக்கும் தேவையான விவரங்களை அறிவியியல் பூர்வமாக நிரூபிக்க உதவும் புள்ளி விவரங்களைக் கொண்டது.
பொது முறை ஆய்வு என்று அறியப்படும் இவ்வாய்வு முறை, ஒரு யதார்த்ததைப் புரிய வைக்கக் கூடியது ஐக்கிய நாடுகளின் கல்வி 4.0 கொள்கை பல்வேறு புள்ளி விவரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொதுமறை ஆய்வின் விளைவாக உருவானது என்றால் கல்வி என்பது, ஒருவரின் விருப்பு வெறுப்புக்களைச் சார்ந்தது. கல்வி என்ற பொருண்மை அகவழி ஆய்விற்கு ஏற்றதாகும். கல்வி 4.0 ஆய்வுப் பொருண்மையின் அடுத்த இரண்டு முக்கியக் கூறுகள், dependent variable and Independent variable. Variable என்றால் ஒரு ஆராய்ச்சியில் மாறிக் கொண்டே வரும் ஒரு கூறு (மாறி) Dependent variable என்றால் சார்பு நிலை மாறி என்றும். Independent variable என்றால் சார்பற்ற மாறி என்றும் அகராதி கூறுகின்றது. நாம் இதை ஒரு தன்னிச்சை மாறி என்றும் புரிதலுக்காக எடுத்துக் கொள்ளலாம்.
கல்வி 4, 0 பற்றிய நமது ஆய்வில் கணினி என்பதற்கு சார்பற்ற மாறி (independent variable) என்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடத்திட்டங்கள் பொருளாதாரத் தேவைகள் மனித வளம், புவியின் அழிவைத் தடுத்தல், இயற்கை வளங்களைக் காத்தல் என்பவற்றை சார்பு நிலை. மாறிகளாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். புழக்கத்தில் இதுக்கும் பலவகைப் பாடத்திட்டங்களை இன்றைய உலக நிகழ்வுகளோடு பொறுத்தி, நம்முடைய. இரு வகை மாறிகளையும், அக வழி ஆய்வாகவும் பொதுமுறை ஆய்வாகவும் நாம் அடுத்துப் பார்க்கலாம்.
முந்தைய தொடர்களை வாசிக்க:
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்
இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.