இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 86 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 86 – சுகந்தி நாடார்



அருகி வரும் மனித வளம்

நாம் முன்பே பார்த்தபடி ஒரு மாணவன் 8 மணிநேரம் பள்ளியிலும் அதை அடுத்த நான்கு மணிநேரம் ஏதாவது ஒரு பயிற்சி வகுப்பிலும் ஈடுபடுகின்றார். ஒரு நாளைக்கு 12 மணி நேரம் என்றால் ஒரு கல்வி ஆண்டில் அவர்

220லிருந்து 230 நாட்களை முறையான பயிற்சி பெற்று தன் அறிவை விருத்தி செய்ய உழைக்கின்றார் அதாவது ஒரு ஆண்டில் சுமார் 2640 மணிநேரம் முதல் 2760 மணிநேரம் அவர் கடினமாக உழைக்கின்றார். ஆக மொத்தம் பன்னிரெண்டு ஆண்டுகளில் 31680அணி நேரங்களிலிருந்து ,33120 மணிநேரம் வரை ஒரு மாணவரின் கடின உழைப்பு எத்தனை விதமான புத்தாக்க சிந்தனைகளைக் கொன்டு இருக்க வேண்டும்? எத்தனை நூதனமான கண்டு பிடிப்புக்கள் இருக்க வேண்டும்?

ஏன் இல்லை?

future of education iஎன்ற நூலின் ஆசிரியர் Hexki Aril தன் நூலின் அறிமுகப்பகுதியில் “கல்விநிலையங்கள் மட்டுமே இன்னும் பழமை மாறாமல் இக்கணினியுகத்தில் இயங்கி வருகின்றது இறந்த காலத்தில் நமக்கு பயன்பட்ட எந்தக் கல்வியும், நிகழ்காலத்தில் பொருந்திப் போகவில்லை. நாம் தொழிற்புரட்சியின் போது சாதகமாகக் கருதிய அனைத்தும் இன்றைய அறிவு வளர்ச்சிக்குப் பாதகமாக உள்ளன” என்று கூறுகின்றார் உண்மை தானே.

கல்விநிலையங்கள் மாணவர்களின் விருப்பப்பட்ட யதார்த்தத்தை நோக்கியக் குறிக்கோள்களைக் கொண்டு இருக்க வேண்டுமே தவிர தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்ற யதார்த்தத்தை நாம் யோசிக்க முடியுமா? என்று Hexki Aril தன் நுலில் கூறுகிறார். எதிர்காலத் தேவைகளுக்கு இன்றைய நிகழ்காலம் எவ்வாறு வழிகாட்டும் என்ற கேள்வியை அவரது கூற்று தாங்கி இருக்கிறது தானே?

இன்றைய யதார்த்தம் தான் என்ன?

இன்றைய மானவர்களின் தனிப்பட்ட நோக்கம் என்று இருக்கின்றதா என்றால், மருத்துவராக வேண்டும் சட்ட வல்லுனராக இருக்க வேண்டும், பொறியாளரால் ஆக வேண்டும் ஆசைப்பட்டால் அதற்குத் தகுந்த கல்வி கிடைக்கின்றதா என்றால் இல்லை. ஏதோ ஒரு சிறப்புத் தேர்வில் மதிப்பெண் பெற்றால் மட்டுமே அவர்களால் சிறப்புப் பயிற்சிக்கென்று பள்ளியிலிருந்து கல்லூரிக்குத் தேர்வு செய்யப்படுகின்றனர். பொதுக்கல்வியையும் கற்று பின் அதற்கென்று சிறப்பு பயிற்சி

இதே ஒரு கணினியை எடுத்துக் கொள்ளுங்கள். மருத்துவத் துறை என்றால் அது சார்ந்த வேலைகளை மட்டுமே செய்கின்றது. சட்டத்துறை என்றால் அதற்கென ஒரு குறிப்பிட்ட மென்பொருட்கள் ஓவ்வோரு துறைக்கும் இன்று கணினி பென்பொருக்லளும் கணினி வேலைப்பாடுகளும் வந்துவிட்டன. எந்தத் துறையில் வேலை செய்யும் கணினி என்றாலும் அது தனக்குக் கொடுக்கப்பட்டத் தரவுகளையும் கணக்கீடுகளையும் கொண்டு செயல்படுகின்றது. ஒரு மனிதர்கள் செய்வதை விட குறைந்த நேரத்தில் அச்செயலைப் பழுதின்றி செய்து முடிப்பதால் பல நிறுவனங்கள் கணினிகளை நாடுகின்றன. உலகின் கணினி நிறுவனங்களும் மனித செயல்களுக்கு இணையாகக் கணினி செயல்படும் வகையில் அதற்கான ஆராய்ச்சிகளிலும் நடவடிக்கைகளையும் செய்கின்றன. அதாவது ஒரு கணினிக்குத் தருவதைப் போல ஒரு சில குறிப்பிட்ட தரவுகளைக் கொடுத்து ஒரு குறிப்பிட்ட செயலை மட்டும் மீண்டும் மீண்டும் செய்ய வைக்கும் போது கணினியை விட சிறப்பாகச் செய்ய இயலும். ஆனால் ஒரு கல்வியாளர்களாக நாம் கையாண்டு வரும் பாடத்திட்டங்கள் அந்த முறையில் அமைக்கப்படவில்லை. பொதுக்கல்வி என்று கற்றூக் கொடுக்கப்படும் கல்வி குறைந்தது எட்டு ஆண்டுகளுக்காவது மீண்டும் மீண்டும் வலியுறுத்தப்படுகின்றது. இதே பாடத்தரவுகளைக் கணினிக்கு என்று எடுத்துக் கொண்டாலும் கடந்த இருபது ஆண்டுகளில் கணினியில் சேகரித்து வைக்கப்பட்டிருக்கும் தகவலுக்கு மாறாகவோ அதிகமாகவோ வேறு எந்தத் தகவல்களும் நம் பள்ளிப்பாடத்தில் இல்லை அப்படி இருக்க நவீன சிந்தனைகளும் செயல்பாடுகளும் நம் மாணவரிடத்தில் எப்படி வரும்? ஒரே பாதையில் சென்று பழகிய செக்கு மாடுகளின் பயணமாய் நம் கல்வி இருக்கின்றது.

கணினிகளைச்சார்ந்தே நம் நடவடிக்கைகள் இருக்க வேண்டும் என்று கணினி நிறுவனங்களும் நம்மைப் பழக்கிவிட்டன அதனால் தான் எந்த ஒரு புது கண்டுபிடிப்புக்களும், அதிகமாக இல்லை கணினி சார்ந்த அனைத்துமே நவீனம் புதிய தொழில்நுட்பம் என்று நாம் எண்ணிச் செயல்பட்டுக் கொன்டு இருக்கின்றோம்.

Microsoft Viva Google Primer போன்ற கனினிச்சேவைகள் தாங்கள் சேகரிக்கும் தகவல்களைக் கொண்டு செயற்கை அறிவுத் திறன் கணக்கீடுகளைக் கொண்டு தேர்ந்தெடுக்கும் செய்திகளை அறிவு பூர்வமாக, தனக்குக் கல்வியாக அளிப்பதாக தங்களை முன்னிலைப் படுத்தி வருகின்றன. Microsoft Viva பணி இடங்களுக்கு என்றால் Google Primer பொதுமக்களுக்கான ஒரு சாதனமாக மனித வளம் இங்கே கணினியிடம் கையேந்தும் நிலையில் இருக்கின்றது.

இந்தக் கணினிச்செயலிகள் நமக்கு அருகிவருவது நம் எதிர்கால மனித வளத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. கணினி வழிகாட்டி ஒருவர் தன்னுடைய அறைவைப் பெற வேண்டுமானால் , அப்படிப் பெற்ற அறிவை தன் அன்றாட வாழ்வில் பயன்படுத்த வேண்டும் என்றால் இன்றைய மனித வளத்தின் நிலை என்ன? கல்வியின் நிலை என்ன?

கல்வியும் மனிதவளமும் சிதைந்து கொண்டு இருக்கின்றது என்றுதானே பொருள். அது மட்டுமல்ல, தான் அன்மையில் மதுரை உலகத்தமிழ் சங்கத்தில்ஜீலை 8ம் தேதி நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கில் அனுவிருத்தக்கல்வி என்ற தலைப்பில் நான் கூறியது போல்

உலகமயப் பொருளாதாரத்தின் விளைவாக ஒவ்வோரு தேசமும் அதனுடைய தனித் தன்மையை இழந்து அமெரிக்க, சீன நாட்டின் கணினி நிறுவனங்களுக்கு அடிமையாகி விட்டன. கணினியுகத்தில் கணினி கற்றல் கற்பித்தலில் ஒரு முக்கியமான இடத்தைப் பெற்று இருக்கின்ற இந்தக் காலகட்டத்தில் எதிர்கால உத்தியோகம் எப்படிப்பட்ட நிலையில் இருக்கும் என்று யோசித்தால் தொடர் வளர்ச்சிக்கான கல்வியின் அவசரம் புரியும். இந்நிலையில் கொரானா தொற்றின் பாதிப்பும் உக்ரேன் ரஷ்ய போரினாலும் தன்னிறைவு பெற்ற நாடாகத் திகழ வேண்டிய அத்தியாவசியத்தை ஒவ்வோரு நாடும் உணர்ந்து உள்ளன. ஒரு நாடு சுய சார்பு நிறுவனமாக இருக்க வேண்டுமேயானால் அதன் மனிதவளமும் இயற்கை வளமும் செழிப்பாக இருக்க வேண்டும். ஒரு நாட்டின் தனிப்பட்ட கலாச்சார, பண்பாட்டு அடையாளங்கள் உடனடியாக மெருகேற்ற வேண்டிய நிலையில் உள்ளன. ஒரு நாடு மெருகேற்ற வேன்டிய முக்கியமான வளம் அதனுடைய மாணவச் செல்வங்கள் என்றால் மிகையாகாது.

மாணவச் செல்வங்களை இன்றைய யதார்த்தத்திலிருந்து ஃஆளைய பிரச்சனைகளைக் கணித்து தீர்வு சொல்லக் கூடிய வகையில் உருவாக்குவதே கல்வி 4.0 ன் அடிப்படை வேலையாகும். இந்த அடிப்படையை வேலையைச் சரியாகச் செய்யவே கடந்த சில வாரங்களாக நம் பாடத்திட்டங்கள் ஆராயப்பட்டன.

அடுத்து என்ன செய்ய வேண்டும்?

மாணவர்கள் செயல்முறை மூலமாகத் தங்களுடைய நோக்கங்களை, யதார்த்தங்களைச் செய்து பார்க்கும் ஒரு பாதுகாப்பான சோதனைக் கூடமாகப் பள்ளிக் கூடங்கள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 85 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 85 – சுகந்தி நாடார்



கணினியும் மாணவனும்


நம்மைப் பற்றிய விவரங்கள் மட்டுமின்றி எதிர் காலத்தில் நம் தேசத்துக் குடிமகனும் தொழில்நுட்பத்தில் முன்னேறியவராக இருக்க வேண்டும் என்பதற்காக நம் தாய் மொழியில், நம் தனிப்பட்ட வியாபாரங்களுக்கான தொழில்நுட்பம் என்று நமக்கு வேண்டுமென்றால் நாம் கணினையை மாணவர்களாக யோசித்துத் தானே ஆக வேண்டும்?

நாம் கணினியை ஒரு மாணவராக யோசிக்கின்றோமோ இல்லையோ பல நாடுகள் அப்படி யோசிக்க ஆரம்பித்து விட்டன. ஆங்கில  மொழியிலும் சீன மொழியிலும்  செயற்கை அறிவு உச்சத்தில் இருப்பது  நாம் அனைவரும் அறிந்ததே. இன்றைஉ தரவு உலகத்தில் முன்ணனியில் இருக்க வேண்டுமானால் உலகின் அனைத்து மொழிகளிலும் கண்டிப்பாக செயற்கை அறிவுத் திறன்   கணினிக்குக் கொடுக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று உலக நிறுவனங்கள் நினைக்கின்றன.  உலக நாடுகளும் அதை வரவேற்கின்றன.

ஏப்ரல் மாதம் வந்த முக்கியமான ஒரு செய்தி லேசர் சக்தியால் ஆன ஒரு ஆயுதத்தை இஸ்ரேல் நாடு காணொலி வழியாக உலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அமெரிக்க டாலர் 4க்கும் குறைவானசெலவில் இதை உருவாக்கியுள்ளது இதன் மூலம் தரை கடல் வானம் என்று அனைத்து விதமான எல்லைகளைப் பாதுகாக்க இயலும் என்ரு இஸ்ரேல் அரசு கூறிகிறது. அறிவியல் புனைவு கதைகளில் நாம் சிறுவராக படித்து ஆச்சிரிஅப்பட்ட ஆயுதங்கள் இன்று நிஜத்தில் இருக்கின்றது. அந்த அளவிற்கு வேகமாகக் தொழில்நுட்பம் மாறி வருகிறது. உலகையே மாற்றக் கூடிய வளர்ச்சியாக இது இருக்கின்றது. தொழில்நுட்பங்கள் ஒவ்வோரு தனிதேசத்திற்கும் ஏற்ப தனியாக உற்பத்தி செய்வதும், அவ்வாறு உற்பத்தி செய்வது விலை குறைவாக இருப்பதும், கணினித் தொழில்நுட்பத்தால் நம் புவியைக் காப்பாற்ற முடியும் என்ற காரணிக்கும் ஒரு எடுத்துக் காட்டாக இந்த செய்தியால் தெரிகிறது.

சரி பாடங்களின் சாராம்சத்திற்கு வருவோம்

எட்டாம் வகுப்பு சமூகவியல் பாடத்தில் முதலில் போலவே , பாடத்தின் சாராம்சத்தைப் பார்ப்போம். இப்பாடநூலின் பாடங்கள், அறிமுகம், தொகுப்புரை இவற்றிற்கு இடையில் இணையச்சுட்டிகளாகவுன் சுட்டிகளாகவும், பாடத்தைப் படிக்க மாணவர்களின் கவனத்தைக் கவரும் வகையில் உங்களுக்குத் தெரியுமா பகுதிகளையும், பாடத்தில் சொல்லப்படும் கருத்தை, மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் துல்லியமாகவும் வண்ணமயமாகவும் வரையப்பட்டப் படங்களும் குழு செயல் பாடுகளும் அணிவகுத்து நிற்கின்றன. ஒவ்வோரு [அகுதியிலும் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களும் பல ஆராய்ச்சிகளுக்குப் பின் கொடுக்கப்பட்டுள்ளது.

இனி சாரம்சத்தின் ஆராய்ச்சிக்கு வருவோம்

புவியியல் பாடத்தில் சாராம்சத்தை இங்கே பாடநூலில் உள்ள பகுதிகளை, கணினி என்னும் மாணவனுக்கு ஏற்ற வகையில் எவ்வாறு உள்ளது? ஒரு மாணவன் கணிய்யை ஆளும் திறன் எவ்வாறு உள்ளது என்ற இரு கேள்விகளின் அடிப்படையில் ஆராயலாம்.

கணினி என்னும் மாணவன்

கணினிக்கு நாம் கொடுக்க்கும் விவரங்கள்,பலவகைத் தரவுகளாக கணினி எடுத்துக் கொண்டு, அந்தத் தரவுகளை வைத்து ஒரு குறிப்பிட்ட செயலை செய்ய உதவுகின்றது. கணினி செய்யும் செயல் ஒரு பிரச்சனைக்கு தீர்வு காணுவதாக இருக்க வேண்டும். பூளோகப் பாடத்தில் வானிலைபற்றிய தரவுகளௌக் கொண்டு ஒரு எதிர்காலக் கணினியால் என்ன செய்ய இயலும்? 

இன்றையக் கணினிகள் வானிலையையும் காலநிலையையும்,, தங்களுக்குக் கொடுக்கப்படும் தரவுகளைக் கணக்கிட்டு காலநிலையை துல்லியமாக கணிக்க வானிலை ஆராய்ச்சியாளர்களுக்கு உதவுகின்றது. தரவுகளின் தரத்தைக் கொண்டு சூழவியியல் பாதிப்புக்களையும் கணக்கிட்டு நமக்கு எச்சரிக்கை செய்கின்றது. 

நாளைய கணினியின் வேலை. கொடுக்கபட்டுள்ள தரவுகளால், வரப் போகும் ஆபத்துக்களை ஆராய்ந்து, ஆபத்திலிருந்து காப்பாற்ற மட்டுமல்லாமல், ஆபத்தைக் களை களைந்து சாதகமான ஒரு சூழ்நிலையை உருவாக்கும் வகையில் தரவுகளை மாற்றி அமைக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்க வேண்டும். சாதகமான சூழ்நிலைக்கான தரவுகளை மேம்படுத்தி சாதகமான விளைவுகளை வளர்ச்சிப் பாதையில் அதிகப் படுத்த வேண்டும். இந்தப் பணியை கணினி சிறப்பாகச் செய்ய

சமூகவியல் பாடத்தின் விவரங்கள் தரவுகளாக மாறினால் உதவி செய்யுமா?

 

கற்றலின் நோக்கங்கள்அறிமுகமும் தொகுப்புரையும்செயல்பாடுகள்கருதுகோள்உங்களுக்குத் தெரியுமா?
சிறப்புபுரிதலுக்கான வகைப்படுத்துதல், வகைப்படுத்தியவற்றை ஆக்கப்பூர்வமாக பயன் படுத்துதல்உலகமயமாதல் பற்றிய சிந்தனைமாணவர்கள் கல்ந்துரையாடலில் ஈடுபடுதல், கற்றலில் தங்கள் பங்கை முழுமையாகச்வானிலை காலநிலைஆகியவற்ற்றின் அடிப்படை அறிவைப்புகுத்தலும்,அதன் வழி பொதுஅறிவையும் இணையப் பயன்பாட்டை வளர்த்தல்பொது அறிவை வளர்க்கும் விஷயங்கள்
செலுத்துதல்
தேவையான மேம்பாடுபொதுவான விளக்கத்தைத் தாண்டி, கால லை, வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களின் புள்ளிவிவரங்களை சேகரிக்கும் வழி காட்ட வேண்டும்வெப்பச் சலனத்தால், அறிமுகப் பகுதியில் ஏற்பட்ட மாற்றங்கள், பாதிப்புக்கள் பற்றிய தரவுகள் தரவுகளை சேகரிக்கும் வகைகள்______________காலநிலை வானிலை பற்றிய நுண்தகவல்கள், இயற்கையை பாதுகாப்பிற்கான தகவல் தேடல்கொடுக்கப்பட்ட புள்ளிவிவரங்களை வைத்து ஆபத்துக்களை கணிக்கவும், ஆபத்துக்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளும் வழி முறைகளும்
இயற்கை சக்திகளை துல்லியமாக அளவெடுக்கும் முறை
பின்னூட்டம்செயல்பாடுகள் மாணவர்களின் கற்றல் ஈடுபாடுகளை வளர்த்தாலும் கணினியோடு இணைந்து செய்யும்பாடத்தின் கருதுகோள் அடிப்படையை மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
நாளையக் கணினி இதைவிட இன்னும் அதிமானத் தகவல்களை
இன்றைய கணினிகள் பெரும்பாலும் மேல் கொடுத்துள்ள பணிகளை செவ்வனே செய்கின்றது. அதனால் பின் விளைவுகள்
செயல்பாடுகளை உருவாக்கலாம்
இது மாணவருக்கும், கணினியின் செயற்கை அறிவுத் திறன் வளர்ச்சிக்கும் மிகவும் அவசியம்
நமக்குத் தரலாம்இன்றைய கணினிகள் பெரும்பாலும் மேல் கொடுத்துள்ள பணிகளை செவ்வனே செய்கின்றது. அதனால் பின் விளைவுகளை கணக்கிடும் புள்ளி விவரம் நமக்குக் கிடைக்கு

நம்முடைய திறன்பேசிகளைப் பயன்படுத்தி, நாம் நமது வானிலை அறிக்கைகளை இப்போது பெற்றுக் கொண்டு இருகின்றோம் தான்? ஒரு வெப்பமானி செய்த வேலையை நம் கைபேசி செய்கிறது.

IBM நிறுவனம் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியிட்டுள்ளத் தகவலில் கோரானா காலத்தில் வானிலையை அரிவிக்க வேண்டிய அறிவிப்பாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்ய வேண்டியிருந்ததால், பல விதமானத் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வந்ததாகவும் அதிலும் முக்கியமாக மெய்நீட்சி மெய்ம்மை(augmented reality) தொழில்நுட்பம் பயன்படுத்துவதாகக் குறிப்பிட்டு உள்ளனர்.OTT (Over-The-Top) technology என்ற முழுக்க முழுக்க இணைய வழி சார்ந்த தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தியதாகவும் தெரிவிக்கின்றது. சமூக வலைதளங்கள், குறுஞ்செயலிகள் ஆகியவை மூலம் உடனடியாக வானிலை செய்திகள் தனி மனிதனை அடையும் வண்ணம் வேலை செய்கின்றன என்ற விவரத்தையும் கூறுகின்றது. 

செயற்கை அறிவுத் திறனை பயன்படுத்தும் விதமாக ஒவ்வோரு வினாடியும் வானிலை விவரங்கள் துல்லியமாக, சேகரிக்கப்படுவது மட்டுமல்லாமல் , வானிலை அறிவிப்பாளரின் குரலில் உருவாக்கப்பட்டு காணோலிகளாகவும் வெளியிடப்படுகின்றன என்று விளக்கியுள்ளது. இது மட்டுமல்ல 

Weather InSight என்ற செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பத்தை வியாபாரநிறுவனங்களுக்காக இந்நிறுவனம் உருவாக்கியுள்ளது. இத் தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு வியாபாரநிறுவனம், தங்களுடைய வாடிக்கையாளர்களுக்குத் தேவையான காலநிலை வானிநிலை அறிக்கைகளைத் தாங்களே தனிப்பட்ட முறையில் வாடிக்கையாளர்களுக்குக் கொடுக்க முடியும். தொலைக்காட்சி நிலையங்கள் தங்கள் பார்வையாளர்களிடமிருந்து வானிலை சம்ம்பந்தமான புகைப்படங்கள் காணொலிகள் விவரத்தை வாங்கி ஒரு ஊடாடும் அனுபவமாக வானிலை அறிக்கைகளை உருவாக்குகின்றது.

2020 களில் இப்படிப்பட்ட செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையில் வந்து விட்டது என்றால்? இன்னும் இருபது ஆண்டுகளில் தொழில் நுட்பம் எப்படி இருக்கும்? 

world meteorological organization( உலக வளிமண்டலவியல் நிறுவனம்) எதிர்கால வானிலை தொழில்நுட்பம் பற்றி அதனுடையத் தொழில்நுட்பத்தில் குறிப்பிடும் போது, தேசிய சர்வதேச அளவில் வானிலைத் தொழில்நுட்பம் சார்ந்த தரவுகளுக்கானத் தொழில்நுட்பமும், கொளவு தொழில்நுட்பம் மூலம் தரவு பகிர்தலும், செயற்கை நுண்ணறிவின் அடிப்படையில் தயாரிக்கப்படும் அறிக்கைகளும் மிக முக்கியமான பங்கை அடுத்துவரும் ஆண்டுகளில் எதிர்பார்க்கலாம் என்றும் அதற்குத் தேவையான திறன்மிக்க வானிலை ஆராய்ச்சியாளர்களை உருவாக்குவது தலையாயப் பொறுப்பு என்றும் கூறுகின்றது.

கணினியை ஆளும் மாணவன்

கற்றலின் நோக்கங்கள்அறிமுகமும் தொகுப்புரையும்செயல்பாடுகள்கருதுகோள்உளுங்களுக்குத் தெரியுமா?
சிறப்பு
மேம்படுத்துதல்
பின்னூட்டம்

மேலே சொன்ன தகவல்கள் போன்ற செய்திகள் சமூகவியல் பாடத்தில் இல்லை என்பது தவிர, அப்படிப்பட்ட தகவல்களை எப்படிப் பெறுவது? அப்படிபெறப்படும் தகவல்களில் சரியானத் தகவல், தகவலின் உண்மைத் தன்மை பற்றி ஆராய்வது என்ற விவரங்களும் இல்லை. இது பாடத்தயாரிப்பாளர்களைக் குறை கூறுவதற்காக எடுத்துச் சொல்லப்படவில்லை. இன்றைய ஆசிரியர்களின் வேலை எவ்வளவு ஆழமானதாக இருக்க வேண்டும் என்பதையும் ஒவ்வோரு பாடத்திலும் கணினித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் விதமும், துறை சார்ந்த கணினி த் தொழில் நுட்பம் பற்றிய விழிப்புணர்வும் இருக்க வேண்டும் என்பதே!

என் தாயார் அண்மையில் கூறினார், இரண்டாம் படிக்கும் மாணவர் ஒருவர் எந்நேரமும் திறன்பேசியில் விளையாடுவதில் நாட்டம் கொண்டவர். ஆனால்கடந்த இரு ஆன்டுகளாக இணைய வழி பாடங்கள் நடத்தப்பட்டக் காரணத்தால் இப்போது திறன்பேசி என்றாலே அலறி அடித்து ஓடுவதாக! இதைக் கேட்கும் போதும் எழுதும் போதும் புன்னகைக்கிறேன் தான். ஆனால், கணினி வழி, திறன்பேசி வழி பாடம் நடத்துவதால் மட்டும், அந்தப் பாடம் கல்வி 4.0வின் பகுதியாக மாறிவிடுமா?

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 84 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 84 – சுகந்தி நாடார்



சொன்னதே சொல்லும் கிளிப்பிள்ளை கணினி

சொன்னதே சொல்லும் கிளிப்பிள்ளை கணினி

சொன்னதைச் செய்யும் சுப்பாண்டியும்

கணினி தான். நம் மாணவர்களின் மூளைக்கும் மனித மூளையைப் போலவே செயல்பட விழியும் நம் கணினிக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. பாடநூல்களின் பொருண்மைகளின் வழி நாம் இப்போது இவை இரண்டையும் ஒப்புமைப்படுத்திப் பார்த்து வருகின்றோம்.

நம் மாணவர்களும் நம் பாடநூல்களில் உள்ள பொருண்மைகளில் எவ்வாறு தேறுவர் என்பதை பாடங்களிலுள்ள மதிப்பீட்டு வினாக்களின் அடிப்படையில் பார்த்து வருகின்றோம்.

அடுத்து சமூகவியலில் குடிமையியல் அலகு 2 குடிமக்களும் குடிஉரிமையும் என்ற பாடத்தைப் பார்ப்போம் இப்பாடத்தின் கற்றல் நோக்கங்களாக குடிமக்கள் குடியுரிமைக்கான பொருளையும் வரையறையும் அறிதல் இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் இந்தியக் குடியுரிமை பெறுதலும் நீக்குதலும் வெளிநாட்டுக் குடியுரிமைத் தன்மை குடி மக்களின் உரிமைகளும் பொறுப்புக்களும் என்று பாட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பாடத்தின் விவரங்கள், ஒருவர் இன்று இணையத்தில் படித்துத் தெரிந்து கொள்ளும் அடிப்படை விவரங்களைக் கொண்டுள்ளன/ செயல் முறைப் பயிற்சிகள் குறைவே

செயல்பாடு
%
இவற்றை முயலுக
%
உங்களுக்குத் தெரியுமா?
%
பல்வகை திறநெறி வினாக்கள்
%
இணைய செயல்பாடு
%
குறிப்பு
%
சிந்திக்க
%
கணினி10010010090-10010010090-100
ஆசிரியர்90-10090-10090-10080-10090-10090-10090-100
மாணவர்35-10035-10035-10035-10015-10035- 10035- 100

இப்படி ஒவ்வோரு பாடமாகப் பார்த்து வரும் போது சென்ற வாரம் நாம் பகுத்தாய்வு செய்த பாட விவரங்களில், கணக்குப் பாட விவரம் மட்டுமே கணினிக்கு ஏற்ற பாடமாக தெரிந்தது.

பாடநூலில் உள்ள விவரங்களை விட இன்னும் அதிகமாகவே இன்றையக் கணினி விவரங்களைத் திரட்டி வைத்துள்ளது. ஒரு மொழியில் மட்டுமல்ல, உலகில் உள்ள பல மொழிகளில் இத்தகையத் தகவல்கள் கிடைக்கின்றன உங்களுக்கு நான் சொல்வதில் சந்தேகம் இருந்தால் விக்கிப்பீடியாவை சென்று பாருங்கள், அதன் விவரங்கள் எத்தனை மொழிகளில் இருக்கின்ற்ன என்று.எனவே மற்றப்பாடங்களின் விவரங்கள் அனைத்தும் கணினிக்கு ஏற்கனவேத் தெரிந்து இருக்கக் கூடும், கணக்குப் பாடத்தில் உள்ள பயிற்சிகள் கணினியின் முடிவெடுக்கும் திறனை சோதிப்பதால் கணினியின் அடிப்படை செயல்பாடுகளை செய்ய கணக்குப் பாடம் ஓரளவு உதவி செய்யலாம். நான் என்ன சொல்ல வருகின்றேன் என்று உங்களுக்குப் புரியும் என்று நினைக்கின்றேன்.

இன்று நடமாடும் கலைக்களஞ்சியமாக நம் கணினி திகழ்கிறது, அதில் நம் பாடப்புத்தகத்தில் வரும் விவரங்கள் மட்டுமல்ல்ல,பாடநூலில் வரும் விவரங்களுக்கு எதிரான கருத்துக்களும் உள்ளன அறிவியல் சமூகவியல் வரலாறு புவியியல் என்று எடுத்துக் கொண்டால். இறந்தகால நிகழ்கால விவரங்கள் மட்டுமின்றி, நாளைய நிகழ்வுகள் பற்றிய கணிப்புக்களும் கணினி வாயிலாக நமக்குக் கிடைக்கின்றது.

நம்முடைய பகுத்தாய்வில் நாம் கண்ட பாடங்களின் சாராம்சத்தை நாம் இப்போது ஆராயாலாம்.

இன்று நாம் கணினி என்று பார்க்கும் போது, தகவல்கள் வெறும் உரை வடிவில் மட்டுமா இருக்கின்றது.? இப்பாடங்களில் பொதுவாக கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் எழுத்து வடிவில் உள்ள தரவுகள் கணினிக்கு கற்பிக்க போதுமா?

பாடப்புத்தகங்களில் வண்ண வண்ண படங்கள் இருக்கின்றது தான். கற்றலின் குறிக்கோளோடு ஒத்துப் போவதற்கான பிரிவுகளாக பாடப்பகுதி பிரிக்கப் பட்டு இருக்கின்றது தான். ஆனால் கணினியும் நாமும் கைகோர்த்து பயணம் செய்யும் இந்தக் காலக்கட்டத்தில், கணினிக்கு உரை வழியாக செய்தி மட்டும் கொடுத்தால் போதுமா?

ஏற்கனவே கவனச்சிதறலில் தங்கள் நேரத்தை விரயம் செய்யும் மாணவர்களுக்கு, உரையைத் தாண்டி எந்தந்த விதமாக நாம் பாடங்களைக் கொண்டு போகலாம் என்று யோசிக்க வேண்டி இருக்கிறோம்.

இணையம் வழி காணோலி மட்டும் இட்டு விட்டால் போதுமா? சில பொருத்தமான இணையச் சுட்டிகளைக் கொடுத்தால் போதுமா?

https://www.christophtrappe.com/alexa-podcasts/ என்ற தளத்தில் சென்று பாருங்கள்? ஒரே செய்தியை எத்தனை விதங்களில் ஒரு தகவலைக் கொடுக்கின்றனர். நாம் கொடுக்கப்பட்டுள்ள தகவலை மேலோட்டமாக வாசிக்க எவ்வளவு நேரம் ஆகும் என்று கூட கணக்கிட்டுச் சொல்கின்றனர். ஏன் வாசகர்களின் கவனச் சிதறலை கணக்கில் கொண்டு, அவர்களின் வாசிப்புத் தன்மையை ஊக்குவிக்கும் விதமாக ஒருவர் இணையத்தில் உள்ள செய்தியை வாசிக்கத் தோராயமாக எவ்வளவு நேரம் ஆகும் என்று கூடச் சொல்லி ஒருவரை இணைய தளத்திற்கு வருகை புரிய ஊக்குவிக்கின்றனர்.

ஒரு தளத்தில் கொடுக்கபடும் செய்திகள் மெய்யோ, பொய்யோ செய்திகளை உடனுக்குடன் மாற்றுவது மிக எளிது. ஆனால் பல துறை வல்லுனர்களின் ஆராய்ச்சியில் உருவாக்கப் படும் பாடநூல் மாணவரின் பயன் பாட்டிற்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப உடனடியாக மாற்ற இயலாது.புதிய செய்திகளை உடனுக்குடன் இட இயலாது. ஒரு தனி மாணவத் தேவைக்கு ஏற்ப பயிற்சிகளை வேறுவிதமாக மாற்றி அமைக்க இயலாது.பாடப்புத்தகம் என்பது அச்சுவடிவில் இருக்கும் போது அது மாற்ற இயலாததாகத் தானே இருக்கின்றது.

புதிய தகவல்களை சேர்க்க ஏதுவாக பாடங்கள் இருக்க வேண்டாமா? புதிய புதிய பாடங்களை திட்டமிட்டு ஒவ்வோரு முறை உருவாக்கி அதற்கேற்றவாறு ஆசிரியர்களைப் பயிற்சிக் கொடுப்பதற்கு எவ்வளவு பொருள் செலவு? எத்தனை பேருடைய உழைப்பும் நேரமும் இங்கு முதலீடு செய்யப்படுகின்றது, இந்த மூன்று முதலீடுகளும் விழலுக்கு இறைத்த நீராக வீணாகலாமா? இல்லை களர் நிலத்தில்விழும் விதைகளாகாலகலாமா?

விவரங்கள் அனைத்தையும் பள்ளிக்கு வந்து கற்றுக் கொள்ளும் மனித மாணவர்களுக்கான சிக்கல்களையே இத்தனை இருக்கும் போது, நம் பாடநூலில் உள்ள அடிப்படை அறிவுகளை ஏற்கனவே தாங்கி வரும்

கணினிகளுக்கு நாம் இன்னும் எத்தனைத் தடைகளைத் தாண்டி வர வேண்டும்?
மனித மாணவனாக இருந்தாலும் சரி, கணினியே நம் வகுப்பில் மாணவராக இருந்தாலும் சரி பாட விவரத்தரவுகள் பன்முகத் தன்மை கொண்டவையாகவும், தொழில்நுட்பமாற்றங்களுங்களுக்கு இணக்கமாக மாறும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டுமல்லவா?

நம்முடைய பாடநூலில் சாராம்சம் ஏற்கனவே கணினிக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் போது, ஏன் இன்னும் விவரம் கொடுக்க வேண்டும் என்று நாம் யோசிக்கலாம்? ஏற்கனவே வெறும் விவரங்கள் தரவுகளாக கொண்டு செயல்படும் கணினி அனைத்திலும் 100% என்பது நம் யூகம். ஏன் எனில் கணினியின் பல செயல்பாடுகளும் சரி நம்முடைய செயல்பாடுகளும் சரி ஆங்கிலத்தில் இருக்கின்றன்.

பொதுவாச் செயற்கை அறிவுத் திறன் கொண்ட ஒரு கணினிக்கு இந்த விவரங்கள் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே இருக்கின்றன. அதனால் விவரங்களும் அதை சார்ந்த கணினியின் செயல்களும், செயல்களுக்கு அடிப்படையான முடிவுகளையும் எடுக்க ஆங்கில மொழியில் தான் அதிகம் இருக்கின்றது. இன்று செயற்கை அறிவுத் தொழில்நுட்பத்தின் முன்னனியில் இருப்பது சீனாவும் அமெரிக்காவும் தான். அதிலும் செயற்கை அறிவுத் திறன் சார்ந்த தொழில்நுட்பங்களும் அதற்கான ஆராய்ச்சிகளும் அமெரிக்காவில் தான் நடந்து கொண்டு இருக்கின்றன.

இந்நிலையில் நம் பாடங்களில் உள்ள கேள்விகளை அப்படியேத் தமிழ் மொழியில் கேள்வியாகக் கேட்டால் கணினி சரியான பதில் சொல்லுமா? சந்தேகம் தான். ஏன் எனில் பாடங்கள் அனைத்தும் இன்று அச்சு வடிவிலேயே இருக்கின்றன.

இணையத்தில் தமிழ் மொழியில் கிடைக்கும் சொற்பத் தகவல்களும் நம் பாடப்பொருண்மையைச் சார்ந்ததாக இல்லை. அப்படியே பாடப் பொருண்மைகள் கொடுக்கப்பட்டு இருந்தாலும் அதற்கான விடைகளை தமிழில் கணிக்கும் கணக்கீட்டு முறைகளை நாம் இன்னும் தமிழில் ஆழமாக ஆராய்ச்சி செய்யவில்லை.

தமிழ் மொழியில் செயற்கை அறிவுத் திறன் கண்டிப்பாக வளர வேண்டும்

Ulagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனா

உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ்



 Ulagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனா

உங்களில் யாராவது அடா லவ்லேஸ் என்ற பெயரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் பிறந்த  ஆங்கிலேய கணிதப்  பேரரசி அவர். கணினிக்கு வரைபடம் அமைத்தவர்! பிறவியிலேயே கற்பனைத்திறன் மிக்க பெண். மிகச் சிறந்த எழுத்தாளர். அவர்தான் அகஸ்தாஅடாகிங்,லவ்லேஸின் கோமாட்டி(Augusta Ada King-Noel, Countess of Lovelace ) என்பதே. இதனை சுருக்கி “அடா லவ்லேஸ்” என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இவரின் இயற்பெயர் அகஸ்தா அடா பைரன் .

அடா  பேர் சொல்லும் கணினி
கணினிக்கு அடிப்படையான முதல் நிரலை (புரோகிராம்) வடிவமைத்தவர். அடா லவ்லேஸ்தான். கணிப்பொறியின் முழுத் திறமையை /   பரிமாணத்தை  அறிந்துகொண்டு பணியாற்றியவர் இவரே. சாதாரண கூட்டல், கழித்தல், பெருக்கல் போன்ற சாதாரண செயல்பாடுகளைத்  தாண்டி கணினி  அற்புதமாக  செயலாற்றுவதாகக்  கண்டறிந்தார். கணினியின் முதல் அல்காரிதத்தை 1843 ல் வெளியிட்டவர் அடா லவ்லேஸ்.

கணினி கணினி 
இன்று கணினியைத் தவிர்த்துவிட்டு இந்த உலகைக் கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது.சிறு குழந்தையிலிருந்து நவீன உலகில் பணியாற்றி ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கும் விஞ்ஞானி வரை கணினியின்றி செயல்பாடு இல்லை.  கணினிக்கு வன்பொருள்(hardware) கட்டமைப்பு தேவையான அளவுக்கு, மென்பொருள் தரவுகளும் அவசியம். மென்பொருளை மையமாகக் கொண்டு உயர் கல்வி, வேலை வாய்ப்பு, தகவல் தொடர்பு, வர்த்தகம் மற்றும்  தொழில்நுட்பம் என நவீன உலகம் இது வரை இல்லாத அளவு றெக்கை கட்டி பறக்கிறது.  இதற்காண விதை போட்டவர் ; அடித்தளமிட்டவர் அடா லவ்லேஸ் என்ற கணித மேதைதான்.

அடாவின் பிறப்பு 
அடா லவ்லேஸ் யாருடைய மகள் தெரியுமா? புகழ் பெற்ற காதல் ரசம் சொட்டும் கவிதைகளின் சொந்தக்காரார் படைப்பாளி ஆங்கில கவிஞர் லார்ட் ஜார்ஜ் கோர்டான் பைரனின் (Lord George Gordon Byron) சட்ட பூர்வமான ஒரே மகள். அடா லவ்லேசின் அன்னை பெயர் ஆன்னி இசபெல்லா மில்லிபான்கி பைரன் (Lady Anne Isabella Milbanke Byron) . மற்ற பெண்கள் மூலம் பைரனுக்கு நிறையக் குழந்தைகளும் இருந்தன . Ulagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனா

ஆங்கில கவிஞர் லார்ட் ஜார்ஜ் கோர்டான் பைரனின் நேரடி வாரிசு அடா . நிச்சயமாக லார்ட் பைரன் ஒரு வித்தியாசமான தந்தைதான். அவர் அடா லவ்லேஸ் பிறந்ததும் சொன்ன முதல் வாக்கியம் என்ன தெரியுமா? நான் உன்னை எப்படிச் சித்திரவதை செய்யப்போகிறேன் தெரியுமா  என்றாராம். அடா லவ்லேஸ் 1815, டிசம்பர் 10ம் நாள் லண்டனில் உள்ள பிக்காடிலி என்ற இடத்தில் பிறந்தார்.

 அடா லவ்லேசின் பெற்றோர் நிலை
அடா லவ்லேஸின் தந்தை பைரன் ஒரு நிலையற்ற மனிதர்; பெண்கள் விஷயத்தில் ரொம்பவும் மோசம். அடா லவ்லேசின் பெற்றோர்களின்  இல்லற வாழ்க்கையின் ஆயுள்  மிகக் குறைந்த நாட்களே இருந்தன. அதுவும் மகிழ்ச்சியே இல்லாத குடும்ப வாழ்க்கையை வாழ்ந்தார் அடா லவ்லேஸின் அன்னை  லேடி ஆன்னி இசபெல்லா மில்பான்கே பைரன். அடா லவ்லேஸைப்பற்றி, ஜூலியா மார்க்ஸ் என்பவர் ஒரு புத்தகம் எழுதியுள்ளார். அதன் பெயர்  “லேடி பைரன் மற்றும் அவரது மகள்கள்”.   இதில் ஜூலியா மார்க்ஸ் குறிப்பிட்டுள்ள விஷயம் நமக்கெல்லாம் கொஞ்சம் அதிர்ச்சியானது என்றாலும், அந்தக் காலத்தில் அது ஒன்றும் அது பெரிய விஷயமல்ல. குழந்தை பிறந்த ஒரு மாதத்துக்குள், பைரன் தனக்கு ஒரு நாடக நடிகையுடன் தொடர்பு உண்டு என்றும் அவருடன்தான் வாழ்க்கை நடத்தப்போவதாகவும் அடாவின் அன்னையிடம்  கூறியுள்ளார். மேலும் மூன்று நாட்கள் சென்ற பின்னர்,  வேறு எங்காவது நல்ல இடம் பார்த்துக்கொண்டு வெளியே சென்றுவிடும்படி அடாவின் அன்னை லேடி ஆன்னி இசபெல்லா விடம்  கூறிவிட்டார்.” பரவாயில்லை உனக்கு இந்தக் குழந்தை நல்ல துணையாக இருக்கும்” என்றார். அடா பிறந்த ஒரு மாதத்திலேயே பைரன் தனது மனைவி ஆன்னி இசபெல்லாவையும் , குழந்தையையும் விட்டுப் பிரிந்துவிட்டார். பின்னர் நான்கு மாதத்தில் லண்டனை விட்டே  சென்றுவிட்டார். அதன்பின் லண்டனுக்கு பைரன் திரும்பவே இல்லை,  அடா லவ்லேஸைப் பார்க்கவே இல்லை. அவர் இறக்கும்போது அடா லவ்லேஸூக்கு வயது 8.

Ulagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனா

லார்ட் பைரனின் முடிவு 
லார்ட் பைரன் 1824ல்,கிரேக்கத்தின் சுதந்திரப்போரில் , காய்ச்சல் ஏற்பட்டு , மிசோலாங்கி (Missolonghi) என்ற இடத்தில் உயிர் நீத்தார். அப்போது அடா லவ்லேசுக்கு வயது 8.  அதன் பின்னர் எப்போதும் அடா லவ்லேஸ் தன் தந்தையை சந்தித்ததே இல்லை. முழுமையாகத்  தாயின் கண்காணிப்பிலேயே வளர்க்கப்பட்டு உருவாக்கப்பட்ட பெண்தான் அடா லவ்லேஸ்.

அடாவின் கல்வித்தாய் 
அடா லவ்லேசின் அன்னை ஆன்னி இசபெல்லா, அடாவுக்குக் கணிதமும், தத்துவமும் சொல்லிக்கொடுத்தார். அந்தக் காலத்தில் பெண்கள் கணிதம் மற்றும் அறிவியல் படிப்பது கிடையாது. பெண்களுக்கு அவை வேண்டாம், தேவையில்லை எனச் சமூகம் கருதிய காலம் அது. அடாவுக்குத் தந்தையின் குணங்கள் வந்துவிடக்கூடாதே என்று கவலைப்பட்டார் அவரது அன்னை ஆன்னிபெல்லா . எதிலும் பைரனின் சாயல் கொஞசமும் இல்லாதபடி முக்கியமாக மகளின் கவனம் கவிதை பக்கம் சாயாதபடி, ஆன்னி   பார்த்துப் பார்த்து வளர்த்தார். அது மட்டுமன்று. அடா லவ்லேசின் அன்னை ஆன்னிபெல்லாவும் கணிதத்தில் திறமைசாலிதான். லார்ட் பிரானே கூட ஒரு முறை ஆன்னிபெல்லாவை ” இணை வரைபடங்களின்”(parallograms) ‘ இளவரசி என்று பெருமையுடன் பாராட்டி உள்ளார். எனவேதான் இயல்பாகவே கணிதத்தின் மீது ஆர்வம் கொண்ட ஆன்னிபெல்லா தன மகள் அடாவுக்குக்  கணிதமும் அறிவியலும் சொல்லித்தர ஏற்பாடு செய்தார்.

கணிதக்காதலி அடா 
அடாவுக்கு கணிதத்தின் மீது அளப்பரிய காதல். அவள் சிறு வயதில் அடிக்கடி நோய்வாய்ப்பட்டு படுக்கையில் இருப்பாள்.  அப்போதும் கூட அடா கணிதத்தோடுதான் பேசிக்கொண்டு இருப்பாள்; கணிதத்தைக் கற்றுக்கொள்ள அதிக நேரம் செலவிட்டாள். அவளுக்கு 12 வயதாகும்போது, அவள் பறக்க ஆசைப்படுகிறாள்.  எப்படிப் பறப்பது என்று யோசித்து அவளாகவே இறக்கைகள் செய்கிறாள். இதனை அடா பறவைகளில் இறக்கைகள் பார்த்தும், அவை எப்படிப் பறக்கின்றன என்று அறிந்தும் பறக்கும் எந்திரத்தை உருவாக்குகிறாள். பின்னர் அதையே “பறக்கும் கலை”( the art of flying) என்ற பெயரில் ஒரு புத்தகமாக எழுதினாள். பின்னர் அது அவளின் நண்பரான சார்லஸ் பாபேஜுக்கு தெரிந்தது. அடா லவ்லேசை அவர் பறக்கும் தேவதை (Lady Fairy) என்று அழைக்கிறார்

எண்களின் தேவதை
குழந்தைப் பருவத்தில் அடா லவ்லேஸ் அடிக்கடி நோய்வாய்ப்படுவாள்.; பள்ளி செல்ல  முடியாது . இருப்பினும் கல்வியில் சிறந்து விளங்கினாள். வீட்டில் உடல் நலமின்றி ஓய்வாக இருந்தபோது இவரது வாழ்க்கைக்குப் பறக்க ஒரு சிறகைக் கொடுத்தது  கணிதம். அப்போது அடா லவ்லேஸ்  பறக்கும் எந்திரத்தின் மாடலை உருவாக்கினாள். இளம் வயதிலேயே, அடாவுக்கு எண்கள் மற்றும் மொழியின் மேல் காதல் அதிகமாக இருந்தது.  சமூக சீர்த்திருத்தவாதி வில்லியம் பிரென்ட், குடும்ப மருத்துவர் வில்லியம் கிங் , ஸ்காட்டிஷ் கணித மேதை மற்றும் வானவியலாளர் மேரி சோமேர்வில்லி  இவர்களிடம் அடா லவ்லேஸ் ஏராளமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் பெற்றார். இவர்களில் ஒருவர் மேரி சோமேர்வில்லி  என்பவர். ராயல் வானவியல் கழகத்தில் முதல் பெண் இவர்தான். இவர்தான் அடா லவ்லேசுக்கு உலகின் கணினித் தந்தை சார்லஸ் பாபேஜை அறிமுகம் செய்து வைத்தவர்.  Ulagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனா

கல்வி மேலும் கல்வி 
அடா லவ்லேசின் கல்வி மற்றும் சமூக நடவடிக்கைகள் ஆண்ட்ரூ கிராஸ், சார்லஸ் பாபேஜ் , சர் டேவிட் புரூஸ்டர் , சார்லஸ் வீட்ஸ்டோன், மைக்கேல் பாரடே மற்றும் சார்லஸ் டிக்கன்ஸ் போன்ற அறிவியல் அறிஞர்கள் மூலம் வெளிப்பட்டது. இந்தத் தொடர்புகள் மூலம்தான் அடா லவ்லேஸ் தனது கல்வியை மேலும் தொடர்ந்தார். அடா அவரது செயல்பாட்டைக் கவிதை அறிவியல் என்கிறார். அவரையே கணித உலகம் ஆய்வாளர் என்றும் மீவியர்பியன் ( Analyst& Metaphysician) என்றும் சொல்கிறார்கள்.

 பருவ வயதும் கணித ஈர்ப்பு நட்பும் 
அடா லவ்லேசுக்கு 17 வயது ஆனது . அப்போது அடா, கணிதத்தில் பெருமையும், கண்டுபிடிப்புகளும்  செய்த பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த, கணினி உலகின் தந்தை என்று போற்றப்படும்  சார்லஸ் பாபேஜ் என்ற கணித மேதையைத் தனது ஆசானான மேரி சோமேர்வில்லி  மூலம்   சந்தித்தார். பின்னர் அடா லவ்லேஸின் உலகமே வேறுபட்டு போனது. அடா  சார்லஸ் பாபெஜின் கணிதம் பற்றி உரையாடல் செய்கிறார். சார்லஸ் பாபேஜ் கணக்கீடு செய்யும் “வேறுபாட்டுப் பொறி” (Difference Engine) என்னும் ஒரு கணினிக்கு முன்னோடியான ஓர் எந்திரத்தை 1833 ல் வடிவமைக்கிறார். அதனைப் பார்த்து வியந்த அடா லவ்லேஸ், சார்லஸ் பாபேஜின் நண்பராகிறார். அதன் பின்னர் 18 வயது அடா லவ்லேசும்  மற்றும் 45 சார்லஸ் பாபேஜ் இருவரும் மதிப்பிடமுடியாத  அளவுக்குக் கணிதத்தால் நெருங்கி வாழ்நாள் நண்பர்கள் ஆனார்கள்.  45 வயது சார்லஸ் பாபேஜ் அடாவின் வழிகாட்டி மற்றும் ஆசான் ஆனார். அடா பாபேஜ்  மூலமாக லண்டன் பல்கலைக்கழகத்தில், பேராசிரியர் அகஸ்டஸ் டி மார்கன் உதவியுடன் கணிதத்தின் நவீன கருத்துகளைப் படித்தார். சார்லஸ் பாபேஜ்  கணக்கு போடும் வித்தியாசமான எந்திரமான கணினியின் பிதாமகன் என்பதாலும் அவரது கணித கொள்கையாலும் அடா  அவர் மீது மிகுந்த ஈடுபாட்டுடன் இருந்தார். 1837ல் சார்லஸ் பாபேஜ் உருவாக்கிய  பகுப்பாய்வு கணக்கு எந்திரம் (Analytical Engine) மெகா சைசில் இருந்தது. Ulagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனா

 

அடாவும், கணக்கும், இசையும் 
கணக்குப் போடும் பகுப்பாய்வு எந்திரத்துக்கு (Analytical Engine) புரோகிராம் உருவாக்கியபோது அடாவுக்கு வயது 18. அறிவியல், கணிதத்துக்கு அடுத்தபடியாக அடா இசையை அதிகம் நேசித்தார். கணினி நிரல்கள் மூலமாக முதன்முதலில் இசையைக் கோர்த்தவர் அவரே. ’செயற்கை அறிவு’ குறித்த அவரது அன்றைய குறிப்புகளும் அவ்வளவாகக்  கண்டுகொள்ளப்படவில்லை. சார்லஸ் பாபேஜூக்கு நிகரான உழைப்பை அடா மேற்கொண்டபோதும், 1940-வரை அவருக்கு ஆணாதிக்க வரலாற்று உலகம் இடம் கொடுக்கவில்லை.

Ulagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனா

மொழியாக்கவியலாளர் & திட்டவியலாளர் அடா லவ்லேஸ்
அடா லவ்லேஸ் இளம் வயதிலேயே ஒரு வரம் பெற்ற கணித மேதை எனலாம். 1843ல் இத்தாலிய கணித மேதை லூய்கி மினிப்ரே(Luigi Menabrea) என்பவர் , கணக்கு போடும் பகுப்பாய்வு எந்திரம் (Analytical Engine) பற்றி  பிரெஞ்ச் மொழியில் ஸ்விஸ் நாட்டு அறிவியல் பத்திரிகையில்  எழுதி இருந்தார். அந்த  தகவல்களை எல்லாம், அந்த  எந்திரத்தின் சிறப்பான திறன்களை எல்லாம், அடா லவ்லேஸ் தனது அற்புதத் திறமையால் அனாயாசமாக மொழி பெயர்த்தார். அத்துடன் 1,௦௦௦ வார்த்தைகளில்  ஒரு விவரணக் குறிப்பையும் அத்துடன் இணைத்தார்.  லூய்கி மினிப்ரே எழுதியதை விட மூன்று மடங்கு அதிகமாகவே எழுதினார். இவை எல்லாம் சேர்த்து  65 பக்கங்களுக்கு எழுதி தள்ளினார். அவை எல்லாம் லூய்கி மெனாப்ரியா சொன்னதைவிட அதி அற்புதமாக விளக்கப்பட்டு இருந்தன. சார்லஸ் பாபேஜூக்கு எளிதில் புரியும்படி இருந்தன. கணிதக் கணக்கீடுகள் தவிர மேலும் இசை குறியீடுகள் /சுரம் கூட இதன் மூலம் பயன்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டார் அடா லவ்லேஸ். இதையெல்லாம் செய்தபோது அடா லவ்லேசின் வயது 27 மட்டுமே.

முதல் அல்காரிதம்
லூயிஸ் மினிப்ரேவின் ஆய்வைத் தொடர்ந்து பாபேஜூம், அடாவும் இணைந்து பகுப்பாய்வு இயந்திரத்தின் முதல் கணனி நிரலை எழுதினார்கள். இது  அடாவிற்கு நீடித்த புகழைத் தேடிக்கொடுத்தது. அடா தன்னை ஒரு ஆய்வாளர் என்றும் மீவியர்பியன் (Analyst & Metaphysician) என்றும் முன்னிலைப்படுத்த இது மிகவும் உதவியது. பாபேஜின் இயந்திரத் திட்டங்களைப் புரிந்து, இந்த  பகுப்பாய்வு எந்திரம் இன்னும் அதிகமாகப் பணிபுரியக்கூடிய விஷயம் பற்றியும் அடா லவ்லேஸ் விரிவாக அல்காரிதம் பற்றியும் விளக்கி இருந்தார் என்பதுதான் சிறப்பு. .உதாரணமாக இந்த எந்திரம் எப்படி பெர்னாலி எண்களைக் (Bernoulli numbers) கணக்கிடும் என்றும் குறிப்பிட்டு இருந்தார். எனவே இவற்றைப் பார்த்த கணினியின் வரலாற்றியலாளர்கள், ”அவைதான் கணித தகவல்களை பற்றி விளக்கிய முதல் கணினி திட்டம்/திட்டவமைப்பு  ( First Computer Program)”  என்றும் தெரிவிக்கின்றனர். மேலும், இது பொது நோக்கத்திற்காக கணினி என்றும் மிகச் சிக்கலான செயல்பாடுகளைத் (Complex Problem) தீர்க்க உதவும் என்றும் அடா லவ்லேஸ் தெரிவித்தார்.

அடா லவ்லேஸ்.. தனி வாழ்க்கை 
அடா லவ்லேஸ் 1835ல், தன்னை விட பத்து வயது மூத்தவரான  வில்லியம் கிங்  என்பவரை திருமணம் செய்து கொள்கிறார். பின், 1838ஆம் ஆண்டு இவர்கள் ஏர்ல் மற்றும் லவ்லேஸால் கவுண்டெஸ் (Earl and Countess of Lovelace) என்ற பட்டத்தின் மூலம் கௌரவிக்கப்பட்டனர். இதானால் அடா லவ்லேஸ் மூன்றாண்டுகள் லவ்லேசின் இளவரசியாகவும், பின்னர் கோமாட்டியாகவும்  வாழ்ந்தார். இவர்களுக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன. . கணவர், 3 குழந்தைகள் எனக் குடும்ப நெருக்கடிகளுக்கு இடையேயும் கடைசிவரை தனது ஆராய்ச்சிகளை அடா கைவிடவில்லை.. அடா லவ்லேசின் கணவர் அவருக்கு அவரை சமூக தளத்தில் மேலேற்றி  ஏராளமான உதவிகள் செய்தார். ஆனால் திருமணத்துக்குப் பின்னர் அடா லவ்லேஸ் தனது இரண்டு மகன்களுக்கு தந்தையின் மேலுள்ள பிரியத்தினால் பைரன் மற்றும் கோர்டான் என்று பெயர் வைத்தார். அது மட்டுமில்லை. அடா லவ்லேஸ் இறந்த பின்னர் , அவருடைய விருப்பத்திற்கு இணங்க, அவளது உடல் ,லண்டன் நொட்டிங்காமில் (Nottingham, England) உள்ள செயின்ட் மேரி மக்டலேனே தேவாலத்தில் உள்ள கல்லறையில்  லார்ட் பைரனின் கல்லறைக்குப் பக்கத்திலேயே வைக்கப்பட்டது.

அடாவின் உடல் நிலை 
அடா பகுப்பாய்வு எந்திரம் (Analytical Engine) பற்றி எழுதி முடித்ததும், அடாவின் உடல்நிலை 1837ஆம் ஆண்டிலிருந்தே பாதிப்புக்குள்ளானது. பலவகையான நோய்கள் உருவாகின்றன.. முதலில் காலரா வந்தது.  பின்னர் அதன் வழியே ஆஸ்த்மா தொற்றிக்கொண்டது. பின்னர் வயிறு தொடர்பாக பிரச்சினைகள; அடா லவ்லேஸ் இறுதியாக கருப்பைப் புற்று நோயால் பாதிக்கப்படுகிறார். பல ஆண்டுகள் நோயுடன் மற்றும் வலியுடன்தான் வாழ்கிறார். இறுதியில் அவரது மருத்துவர் அவருக்கு வலி நிவாரணியாக ஓபியம் தருகிறார். அதன் பின்னர் அவரது குணம் இதனால் மாறத் தொடங்கியது. மனநிலை மாறி இதனால் மாயத் தோற்றங்கள் அவருக்கு ஏற்பட்டன. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அடா லவ்லேஸ் , தந்தை பைரனைப் போலவே தனது 36-வது வயதில் 1852.ஆம் ஆண்டு, , நவம்பர் மாதம்  27ம் நாள், இறப்பைத் தழுவுகிறார்.அடாவின் விருப்பப்படியே அவர் தந்தையின் கல்லறை அருகிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.Ulagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனா

அடாவின் குறிப்புகள் ஆங்கில 1843ல்   பத்திரிகையில் வெளியானது. அதில் அவரது பெயரை AAL.  என்றே குறிப்பிட்டு இருந்தார். AAL என்பதற்கு ஆகஸ்ட் அடா லவ்லேஸ் எனபது பொருளாகும். அவரது குறிப்பில், அடா, எவ்வாறு குறியீடுகள் ஒரு வார்த்தை அல்லது எழுத்துகள் மற்றும் பயன்படுத்தும் விதம் பற்றியும் சொல்கிறார்.

அடாவின் இறுதி நாள்
அடா தான் இறக்கும் தறுவாயிலும் கூட தான் ஒரு முறை கூட பார்த்தே இராத அப்பா மேல் அவ்வளவு பாசம் கொண்டு தனது கணவரிடம் தான் தவறு செய்ததாக ஒத்துக்கொண்டார். அத்துடன் அவரது தந்தையின் கவிதை வரிகளை cain என்ற கவிதையிலிருந்து எடுத்து நம்புங்கள் ; மூழ்கி விடாதீர்கள் (Believe—and sink not)என்று கூறி முடிக்கிறார்.

இறப்புக்குப் பின்னர்
அடா லவ்லேஸ் 36 வயதிலேயே 1852.ல், நவம்பர் 27ம் நாள் இறந்துவிட்டார். ஆனால் அப்போது கணினி கணக்குப் போடும் எந்திரம் முழுமையாக  உருவாக்கப்படவில்லை. ஆனால் அவர் உருவாக்கிய கணினி மொழி /திட்டம் அவரது பெயரிலேயே அடா திட்டம் மொழி(Ada programming language) என்று அழைக்கப்படுகிறது.  இன்று வரை அப்படியே இயங்கி வருகிறது இன்று  கணினித் திரையில் நீங்கள் பார்ப்பது அவரது வடிவமைப்பு செயல்பாடுதான். அதன் பின்னர் அது பற்றிய குறிப்புகளும் அவரது செயல்பாடும், அடா லவ்லேசுக்கும், சார்லஸ் பாபேஜுக்கும் இடையில் உள்ள நட்பு இருவரின் திறமைகள்  , 2015ல்   கிராபிக் நாவல் உருவாக்கிய , இயங்குபட அமைப்பாளர்,  சிட்னி படூவாவின் எழுத்துக்களில் ஏராளமான தகவல்களாக உள்ளன. அவர் இந்த இரண்டு நண்பர்களைப் பற்றி முழுமையாக எழுதியுள்ளார். அதனால் Scientific American  பத்திரிகை படூவாவிடம் அடா லவ்லேஸ் நாளின்  முக்கியம் /அவசியம் குறித்து பேசியது. அது மட்டுமின்றி 1837-43 களில் ஒரு பெண் எவ்வாறு டிஜிட்டல் அனிமேஷன் துறையில் வருவது என்பது பற்றியும் பேசியது. .

இறப்புக்குப் பின்னர் பெருமை
கணிதத்திற்கு இவ்வளவு பங்களிப்பு செய்த அடா லவ்லேசை இந்த உலகம் 1950 வரை கண்டு கொள்ளவே இல்லை. பின்னர் அவரது குறிப்புகள் மீண்டும் இந்த உலகில் B.V. Bowden என்பவரால் 1953ல் மீள்துவக்கம் செய்யப்படுகிறது. கணினிக்கான நிரல்களைப் பின்னாளில் உருவாக்கிய பெண்களான ஜீன் ஜென்னிங்ஸ் பார்டிக், கிரேஸ் ஹாப்பர் ஆகியோரை உலகம் அடையாளம் கண்ட பின்புதான், அவர்களின் முன்னோடியான அடா லவ்லேஸ் வெளிச்சத்துக்கு வந்தார். அடாவின் குறிப்புகளின் அடிப்படையில் ஆராய்ச்சிகள் நடைபெற்றன.  அதன் பின்னரே அடாவுக்கு அவரது கணித பங்களிப்புகளுக்கு இறப்புக்கு பின் கிடைக்கும் ஏராளமான  விருதுகள் வழங்கப்படுகின்றன. அடாவைக் கவுரவிக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் அதன் பின்னர் 1980ல், அமெரிக்கப் பாதுகாப்புத் துறைக்குப்  புதியதாக ஒரு கணினி மொழியை  உருவாக்கி, அதற்கு அடா எனப் பெயரிட்டு அதனை “அடா நிரலாக்க மொழி” என்று அழைத்து அவருக்குப் பெருமை சேர்த்திருக்கிறது.

அடா லவ்லேஸ் நாள்
தொழில்நுட்ப உலகில் பாலினப் பாகுபாட்டினால் மறக்கடிக்கப்படும் பெண் வல்லுநர்களை இப்போது மேற்குலகம் வெளிச்சத்துக்குக் கொண்டுவருகிறது. இந்த முயற்சியில் ஒன்றாக 2009 முதல் ஆண்டுதோறும் அக்டோபர் 2-வது செவ்வாயன்று அடா லவ்லேஸ் நாள் சிறப்பிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டுக் கணிதம், பொறியியல், அறிவியல், தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்கள் மற்றும் அத்துறையில் பணிபுரிவோர் மத்தியில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன 2௦௦9ம் ஆண்டிலிருந்து  ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாம் செவ்வாய்க்கிழமை அடா லவ்லேஸ் நாளாக கொண்டாடப்படுகிறது. அன்று பிரிட்டிஷ் சிவில் அக்ஷன் இடத்தின் முன்பு சுமார்  ஓர் உறுதி மொழி அடா லவ்லேஸ் பெயரால் எடுத்துக்கொள்ளப்படுகிறது. அறிவியல் ,தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதத்தில்(science, technology, engineering, and mathematics (STEM) ) பங்களிப்பு செய்த பெண்களுக்கு  அடா பெயரில் விருது கொடுத்து  பாராட்டப் படுகிறது.  நவீன கணினி உலகின் எழுச்சிக்கு வித்திட்ட பெண் தான் அடா லவ்லேஸ்.

 Ulagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனாUlagai purattipotta kanitha methai Ada Lovelace Article By Mohana உலகைப் புரட்டிப்போட்ட கணித மேதை அடா லவ்லேஸ் - பேரா. மோகனா

பேரா. மோகனா

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 83 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 83 – சுகந்தி நாடார்



கணினி, ஆசிரியர் மாணவர்: முதலில் வருவது யார்?

கணினி சார் உலகம் கணினிஇணை உலகம் என்ற இரு பிரிவுகளுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எனவே இங்கு கணினி, ஒரு ஆசிரியர், மாணவர் இன்றையக் கல்விப் பொருண்மையில் எப்படித் தேறுவர் என்ற முதல் கட்ட ஆராய்ச்சி செய்ய வேண்டியுள்ளது.

இந்த ஆராய்ச்சிக்கு இணையத்தில் இருந்து தமிழ்நாடு எட்டாம் வகுப்பு ஆங்கில வழி பொது அறிவுப் பாடப்புத்தகத்தை தரமிறக்கி ஆராய்ச்சி செய்யலாம்.

இப்பாடப்புத்தகத்தில் கொடுக்கப்பட்ட கற்றலின் விளைவுகள் பட்டியலை வைத்து பாடநூலை ஆராயலாம். இப்படி நம் ஆராய்ச்சிய்ன் கூறுகளை நாம் முழுமையாகப் பார்க்கலாம்.

Essentials for Internet Classroom 83 - Sukanti Nadar இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 83 – சுகந்தி நாடார்அடுத்து ஆசிரியர்களின் செயல்திறன் எவ்வாறு இருக்க வேண்டும், இன்றைய மாணவர்களுக்கான செயல் திறனில் எப்படிப்பட்ட மாற்றத்தை நாம் எதிரர் பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட மாற்றத்தை நம் பாடத்திட்டத்தால் கொண்டு வர இயலுமா என்று பார்க்க வேண்டும் அப்போது தான் மாணவர்களில் செயல் திறன் எவ்வாறு சூழவியல், மேம்பட்ட மானிட செயல்திறன் வாழ்க்கை சார்ந்த பொருளியல் ஆகிய மூன்றுக்கும் தேவையான வகையில் எவ்வாறு இருக்க வேண்டும்.

பகுத்தாய்வு

எட்டாம் வகுப்பு பொது அறிவியியல் ஆங்கில வழிப் பாடம் ஒன்றை இங்கே நாம் ஆய்விற்கு எடுத்துக் கொள்வோம். எடுத்துக் கொள்ளப்பட்ட பாடத்தை ஒரு கணினி எவ்வாறு கையாளுகின்றது என்று பார்க்கலாம்.

பாடநூலில் குறிக்கோள்களாக ஒவ்வோரு பொருளையும் பிரித்து வகைப்படுத்துவதோ, சிறிய சோதனை செய்வதும், ஒரு அறிவியல் கருத்தின் வரைமுறைகளை வரையறை செய்வதும் , பொருட்களில் ஏற்படும் வேதியியல் மாற்றங்களும் உயிரியைல் தாவர இயலின் வகைகளையும் , படங்கள் வரைவதும் குறிக்கப்பட்டுள்ளது.

பாடப்புத்தகத்தின் 4வது பாடம், மின்னோட்டம்மின்சாரம் காந்தவியல் என்று இருக்கிறத. பாடத்தில் பொருண்மை சம்பந்தமாக அனைத்து விஷயங்களும் எழுத்து வடிவிலும் படங்களாலும் விளக்கப்படுகிறது, முயற்சி செய்து பார், யோசித்துப் பார், உங்களுக்குத் தெரியுமா? என்று சில பகுதிகளில் நல்ல நல்ல விஷயங்கள் கொடுக்க்கப்பட்டு இருக்கிறது. பாடத்தின் இறுதியில் கோடிட்ட இடங்களை நிரப்புவதும், பட விளக்கங்களை வரையவும், சில கேள்விகளும், அறிவியிஅல் கண்காட்சிக்கான சோதனைகள் பற்றிய விவரங்களும் கேட்டு இருக்கின்றனர்.

இந்தப் பாடத்தில் வரும் விவரங்களை கணினி மாணவன், ஆசிரியர் என்று மூவர் கொண்ட ஒரு அட்டவணையை இங்கு இடுவோம். அந்த அட்டவணையில் ஒரு கணினி, ஆசிரியர், மாணவர் ஆகியோரின் சராசரி மதிப்பெண்கள் எவ்வாறு இருக்கும் என முதலில் பார்ப்போம

வினா விடை
%
படம் வரைதல்
%
கோடிட்ட இடம் நிரப்புதல்
%
சோதனைகள் செய்தல்
%
சோதனைகளை விவரித்தல்
%
அறிவியல் கருத்தின் வரைமுறை
%
வேதியியல் இயற்பியல் மாற்றங்கள்
%
உயிரியல் வகைகள்
%
கணினி10010010090-100100100100100
ஆசிரியர்90-10090-10090-10080-10090-10090-10090-10090-100
மாணவர்35-10035-10035-10035-10015-10035-10035-10035-100

இப்பட்ட்டியலில் கணியின் மதிப்பெண்கள் சோதனைகள் செய்வதில் மட்டுமே குறைய வாய்ப்பு உள்ளது. ஆசிரியருக்கும் மாணவர்களுக்குமான தவறுகள் கணினியோடு ஒப்பிடும் போது அதிகமாகவே உள்ளது. இது மனிதர்களுக்கு இயற்கையிலேயே இருக்கும் கவனக் குறைவில் ஏற்படும் தவறுகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆசிரியர்கள் மாணவர்கள் என்று இரு மனிதக் குழுவிற்கும் உள்ள மதிப்பெண் வித்தியாசத்திற்கு, ஆசிரியரின் வெளி அனுபவம்., பாடப் பொருண்மையில் ஆசிரியரின் அனுபவம், பொருண்மையில் அவருக்குள்ளத் தேர்ச்சி என்பவை முக்கியக் காரணிகளாக அமைகின்றன.

அடுத்து எட்டாம் வகுப்பு கணித வகுப்புப் பாடத்தை எடுத்துக் கொள்வோம்

இப்பாட நூலின் முக்கியக் குறிக்கோள் கணிதம் வாழ்க்கைய்ப்ப்டு ஒன்றிப் போனது என்பதை மாணவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். அதற்காக செயல்பாடு, இவற்றை முயலுக உங்களுக்குத் தெரியுமா? பல்வகை திறநெறி வினாக்கள் இணைய செயல்பாடு, குறிப்ப்பு சிந்ஹிக்க என்று பாடப் பொருண்மை பிரிக்கப்பட்டுள்ளது. இக்கணித பாடப்புத்தகத்தில் தகவல் செயலாக்கம் என்ற ஐந்தா, பாடத்தை ஆராய்ச்சிக்கு எடுத்துக் கொள்வோம்.

இப்பாடப் பொருண்மையின் அடிப்படை மாணவர்களுக்கு எண்ணுதலில் கூட்டல் கொள்கை எண்ணுதலில் பெருக்கல் கொளகை என்று தர்க்க முறை விதிகளை மாணவர்களுக்குக் கொடுக்கின்ரது. அன்றாட சூழலில் கணித்த்தை எடுத்துக் காட்டுக்க்களோடு காட்டவும் செய்கின்றது. பயிற்சியிலும் இக்கணிதத் திறமை சார்ந்த விஷயங்களைப் பர்ட்சிக்கவும் செய்கின்றது. ஆனால் இதில் தேர்ச்சி விகித்மும் , அறிவியல் பாடத்தைப் போலவே கணினி முன்னிலையில் இருக்கும்.

வினாக்கள்
%
வரைபடம் வரைதல்
%
பல்வகை திறனறுப் பயீர்சி கனக்குகள்
%
கணினி100100100
ஆசிரியர்90-10090-10090-100
மாணவர்35-10035-10035-100

எட்டாம் வகுப்பு தமிழ் பாடநூலில் அறிவியியல் தொழில்நுட்பம் என்றபாடத்தை ஆராய்வதற்காக எடுத்துக் கொண்டுள்ளேன்.

இப்பாடப் பொருண்மை , கவிதைப் பேழை,பல்துறைக்கல்வி. விரிவானம், இலக்கணம் மதிப்பீடு என்று பிரிக்கப்பட்டு பாட விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மதிப்பீட்டுப் பகுதியில் சரியான விடை தொடரில் வைத்து எழுது,குறுவினா. சிறு வினா, நெடு வினா, சிந்தனை வினா, சுருக்கி எழுது என்ற மதிப்பீட்டுக் கேள்விகள் உள்ளன.

சிறுவினா
%
குறுவினா
%
நெடுவினா?
%
சரியான விடை
%
தொடரில் வைத்து எழுது
%
சிந்தனை வினா
%
சுருக்கி எழுது
%
கணினி10010010010010095-9890-100
ஆசிரியர்100100100100100100100
மாணவர்35-9035-9035-9035-10015-10035- 8035- 80

தமிழ் மொழிப்பாடம் என்று வரும் போது ஆசிரியரின் மதிப்பீடுகளே முன்னணியில் உள்ளது அதன் காரணம் அவருக்கு மொழியின் இலக்கண இலக்கிய அறிவும் சொல்லாடலும் கணினியை விட அதிகம். அதே நேரத்தில் கணினியும் மாணவரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டத் தகவலை அப்படியேத் திருப்பிச் சொல்லும் கிளிப்பிள்ளைகள். அதனால் அவர்களால் சிந்தித்து எழுதுவதும் சுருக்கி எழுதுவதும் திறம் பட எழுத முடிகின்றது. அது மட்டுமின்றி ஆசிரியர்கள் பாடங்களைக் கற்பிக்கின்ற காரணத்தால் அவர்களால் எல்லா தகவல்கலையும் திருப்பி சொல்ல முடிகின்றது.

எட்டாம் வகுப்பு சமூக அறிவியியல் பகுதியில் புவியியலில் வானிலை, கால நிலை என்ற அலகின் கற்றல் குறிக்கோள்களாக வானிலை, காலநிலை ஆகிய இரண்டின் முக்கியத்துவம், இவ்விரண்டு கூறுகளின் தன்மைகள் இவற்றை அளவிடக்கூடிய கருவிகள், ஒரு குறிப்பிட்ட இடத்தின் காலநிலை வானிலை இரண்டையும் அள்வவிடுதல் என்று குரிக்கப்பட்டுள்ளது. இப்பாடப் பொருண்மையின் மதிப்பிடலாக சரியான விடை கோடிட்ட இடம் பொருத்துக, சரியா தகவறா, சுருக்கமாக விடையளி காரணம் கூறு விரிவான விடையெளி என்பற பகுதிகள் உள்ளன/ அறிவியியல் பாடத்தை[ போலவே இந்த புவியில் பாடத்தின் அளவீடுகளும் இருக்கின்றன.

சரியான விடை
%
கோடிட்ட
இடம்
%
பொருத்துகசரியா தவறா
%
சுருக்கமான விடையளி
%
காரணம் கூறு
%
விரிவான விடையளீ
%
கணினி10010010090-100100100100
ஆசிரியர்90-10090-10090-10080-10090-10090-10090-100
மாணவர்35-10035-10035-10015-10035-10035-10035-100

நாம் இதுவரைப் பார்த்த பாடப் பொருண்மைகளில், கனக்குப் பாடத்தின் விவரங்கள் தவிர மற்ற எல்லாப் பாடங்களுமே ஒரு தகவல் பரிமாற்றமாகத் தான் இருக்கின்றது. மாணவர்களின் மதிப்பீட்டுக் கொள்கையும் இவ்விவரங்களை சோதிக்கும் விதமாக மட்டுமே இருக்கின்றது. அதனாலேயே கணினி மதிப்பீடுகளில் முன்னணுஇயில் இருக்கின்றது. 

அதாவது ஒரு கொடுத்த விவரத்தை அச்சுப்பிழையில்லாமல் ஒரு கணினியால் திரும்ப எடுத்துக் கொடுக்க முடியும். கொடுக்கப்படும் எந்த ஒரு தகவலையும், எந்த ஒரு பிழையும் இல்லாமல் பல்வேறு வகைகளில் வேகமாகவும் திறன்படவும் கொடுக்கக் கூடிய வகையில் உருவாக்கப்பட்ட சாதனமே கணினி, அதுவும் ஒரு விஷயத்தை எவ்வாறு பல்வேறு வழிகளில் பிழை இல்லாமல் கொடுக்க முடியும் என்ற தர்க்கம் இக்கணினிகளுக்கு போதிக்க்ப்பட்டுள்ளது.

ஒரு ஆசிரிரியரை எடுத்துக் கொண்டால் அவ்ருடைய அனுபவ அறிவும், ஒரு தகவலை மீண்டும் மீண்டும் பலமுறை மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பதாலும் அவரால் அதிக மதிப்பெண் பெற முடினின்றது அதாவது கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அவர் நினைவடுக்குகளிலிருந்து அடுத்த நிலைக்கு அனிச்சை செயலாக மாறிவிடுகின்றது.

ஆனால் மாணவர்களுக்கு?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80(தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 82 – சுகந்தி நாடார்

இன்றைய நூதன இராணவக் கருவிகள்? நாளைய நிதர்சனம்? நம் வாழ்வில் அன்றாடம் நடக்கும் செய்திகள், கல்வி 4.0க்கான நம்முடைய இந்த ஆய்வின் பயனாளிகளை அடையாளம் காண உதவுகின்றது மெலோட்டமாக . நம்முடைய ஆய்வின் பயனாளிகளாக , கணினி, மனிதர்கள் என்று இருபிரிவு…

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்




தொன்மக் காலத்து இயற்கை மாற்றங்களால் உருவான புவி வெப்பச்சலனத்திற்கும், நம்முடைய இன்றைய வெப்பச்சலனத்திற்கான ஒப்புமையை தொலைக்காட்சியில் பார்த்துதான் தெரிந்துகொண்டேன் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கும்போதுதான் கல்வியாளர்களின் பணி தொழில்புரட்சிக் காலத்திற்கும் இன்றைக்கும் மாறி விட்டதை உணர முடிந்தது. பதினேழு பதினெட்டு பத்தொன்பதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பாளர்கள் எங்கே தவறு செய்து விட்டனர் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

புத்தாக்கச் சிந்தனையை மாற்றி அமைக்க வேண்டுமானால் அது கல்வியாளர்களால் மட்டுமே முடியும் என்றப் புரிதல் ஏற்பட்டது. தும்பை விட்டு வாலைப் பிடித்தக் கதையாய், நம்முடைய முந்நூறு நூற்றாண்டு கண்டுபிடிப்புக்கள் பல நம்முடைய வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி வாழும் வழிகளை மாற்றி அமைத்து இருந்தாலும், நம்முடைய அடிப்படை வாழ்வாதாரமான புவியைப் பற்றிய சிந்தனை இல்லாத கண்டுபிடிப்புக்கள் இன்று நம் அடி மடியிலேயே கை வைத்துவிட்டன.

அதே நேரம் நம்முடைய பொருளாதார நடவடிக்கை ஒவ்வொன்றும் கணினியைச் சார்ந்ததாகிவிட்டது கணினிசார் வாழ்க்கையில், இன்று இருக்கக்கூடிய பொருளாதாரம் இலாபம் சார்ந்த எந்த ஒரு தொழில் முனைப்புகள் நீடித்து இருக்கும் ஒரு புவி என்பதை தங்களுடைய தொழிலின் அடிப்படையாக கொண்டே செயலாற்றவேண்டும். இது ஒரு மேடைப் பேச்சாகவோ, மனித உணர்வுகளைத் தூண்டி தங்கள் செய்தி நிறுவனங்களின் விளம்பர வருவாயைப் பெருக்கக்கூடிய அன்றாடம் அடிக்கொரு தொலைக்காட்சியில் மிதந்து வரும் செய்திகளாக மட்டுமே இருந்து விடக்கூடாது.

Essential requirements for internet classroom 81th Series by Suganthi Nadar. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்

கணினிசார் உலகில், இயந்திரங்களே தொழிலாளர்களாக வேலை செய்யும், காலக்கட்டத்தில், அனைத்து விவரங்களும் ஆராயப்பட்டு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும்முறை, நாம் வாழும் புவியின்மேல் நாம் காட்ட வேண்டிய அத்தியாவசிய அக்கறை இவற்றை நாம் ஒரு உணர்வு பூர்வமாகப் பார்க்கும்போது ஒரு தார்மீகப் பொறுப்பாக மட்டும்தான் தெரியும். ஆனால் தற்போதைய தரவுகளின் உலகத்தில் தரவுகளை ஆராய்ந்து நாம் அறிவியல் பூர்வமாகவும் சிந்தித்துப் பொறுப்பு ஏற்றுக் கொள்ளவேண்டியக் கட்டாயத்தில் இருக்கின்றோம். ஒரு நல்ல குடிமகனாக இப்பொறுப்புணர்ச்சி அனைத்துத் துறையில் இருப்பவர்களுக்கும் பொது என்றாலும், கல்வித் துறைக்கு இப்பொறுப்பின் பளு அதிகமாகத்தான் உள்ளது. உலக நிகழ்வுகள் மட்டுமன்றி இயற்கையையே சீர் படுத்தவேண்டிய ஒரு அச்சாணியாகக் கல்வித்துறை திகழ்கிறது. ஆசிரியர்கள் ஆனாலும் சரி மாணவர்களானாலும் சரி இந்தப் பொறுப்பை எந்த அளவிற்கு உணர்ந்திருக்கின்றோம் என்பதன் வெளிப்பாடாய் நம்முடைய அன்றாட வகுப்பறை பாடங்கள்.

நம்முடையப் பாடங்கள் தொழில் புரட்சி காலத்தில் ஒரு தனி மனிதன். உயர்வின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட காரணத்தால் ஒவ்வோரு துறை வாரியாக நமது பாடங்கள் பிரிக்கப்பட்டு உள்ளன. ஆனால் இன்றைய இணையத் தொழில்நுட்பத்தாலும் தரவுகளின் ஆராய்ச்சியினாலும் சமூக வலைதளங்களில் தனி ஒருவரின் ஆளுமையினாலும் நம் ஒவ்வோருவரின் செயல்பாடுகள் பாடப் புத்தகங்கள் வகுப்பறை மதிப்பெண்கள் என்ற எல்லையைத் தாண்டி வெட்டவெளியில் அனைவருக்கும் எந்நேரமும் கிடைக்கக் கூடிய தரவுகளாக உள்ளன. அதனால் நமது செயல்பாடுகளின் பக்க விளைவுகள் பின் விளைவுகள் பல்வேறு கோணமாக ஆராயப்படுகின்றன. அப்படி ஆராயப்பட வேண்டியத் தேவையும் உள்ளது.

அப்படி ஆராயப் படக்கூடிய பொருண்மைகளாக நமது பாடநூல்களையும் மாணவர்களையும் ஆசிரியர்களையும் பார்க்கவேண்டும். கல்வி 4.0 என்பது கணினிசார் வாழ்க்கைமுறைக்கான கல்வி என்பதோடு, கணினியோடு இயந்து வாழும் வாழ்க்கைமுறை என்பதை நாம் எதிர்பார்க்கத்தான் வேண்டும். கணினிகள் மனிதனின் உதவியாளராக மட்டுமல்லாமல், மனித வளத்திற்கும் போட்டியாகவும், மனிதனின் சிந்தனையை அச்சிந்தனை சார்ந்த செயல்முறையை நடத்திச் செல்லும் ஒரு அதிமுக்கியக் காரணி என்பதால் மாணவர்கள் ஆசிரியர்கள் பாடப் பொருண்மை ஆகிய ஆராய்ச்சிக் கூறுகளை கணினி என்ற அளவு கோலைக் கொண்டு நாம் மதிப்பிடவேண்டும்.

Essential requirements for internet classroom 81th Series by Suganthi Nadar. இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 81 – சுகந்தி நாடார்

எந்த ஒரு ஆராய்ச்சியிலும் உள்ள நான்கு முக்கிய கூறுகளை நாம் புரிந்து கொண்டால் கல்வி 4.0 கொள்கைகளை நம் ஒவ்வொருவரின் தனித்தனித் தேவைக்கு ஏற்ப புரிந்து நாம் பயன்படுத்திக்கொள்ள முடியும். முதல் இரண்டு Objective and Subjective analytics. Objective analysis என்பது உணர்வுகளை சார்ந்தது. ஆராய்ச்சியாளரின் விருப்பு வெறுப்புக்களின் அடிப்படையில் செய்யப்படும் ஒரு ஆய்வு இது. அகவழி ஆய்வு எனவும் நாம் அதைப் புரிந்து கொள்ளலாம். Objective analysis என்பது புறத்தில் ஆய்வாளர் சேகரிக்கும் புள்ளி விவரங்களை சார்ந்தது. உணர்வுகள் ஒவ்வொரு மனிதனுக்கும், காலக் கட்டத்திற்கும் தேவைக்கும் ஆராய்ச்சியின் பொருண்மைக்கும் தேவையான விவரங்களை அறிவியியல் பூர்வமாக நிரூபிக்க உதவும் புள்ளி விவரங்களைக் கொண்டது.

பொது முறை ஆய்வு என்று அறியப்படும் இவ்வாய்வு முறை, ஒரு யதார்த்ததைப் புரிய வைக்கக் கூடியது ஐக்கிய நாடுகளின் கல்வி 4.0 கொள்கை பல்வேறு புள்ளி விவரங்களை கொண்டு உருவாக்கப்பட்ட பொதுமறை ஆய்வின் விளைவாக உருவானது என்றால் கல்வி என்பது, ஒருவரின் விருப்பு வெறுப்புக்களைச் சார்ந்தது. கல்வி என்ற பொருண்மை அகவழி ஆய்விற்கு ஏற்றதாகும். கல்வி 4.0 ஆய்வுப் பொருண்மையின் அடுத்த இரண்டு முக்கியக் கூறுகள், dependent variable and Independent variable. Variable என்றால் ஒரு ஆராய்ச்சியில் மாறிக் கொண்டே வரும் ஒரு கூறு (மாறி) Dependent variable என்றால் சார்பு நிலை மாறி என்றும். Independent variable என்றால் சார்பற்ற மாறி என்றும் அகராதி கூறுகின்றது. நாம் இதை ஒரு தன்னிச்சை மாறி என்றும் புரிதலுக்காக எடுத்துக் கொள்ளலாம்.

கல்வி 4, 0 பற்றிய நமது ஆய்வில் கணினி என்பதற்கு சார்பற்ற மாறி (independent variable) என்றும் ஆசிரியர்கள் மாணவர்கள் பாடத்திட்டங்கள் பொருளாதாரத் தேவைகள் மனித வளம், புவியின் அழிவைத் தடுத்தல், இயற்கை வளங்களைக் காத்தல் என்பவற்றை சார்பு நிலை. மாறிகளாகவும் நாம் எடுத்துக் கொள்ளலாம். புழக்கத்தில் இதுக்கும் பலவகைப் பாடத்திட்டங்களை இன்றைய உலக நிகழ்வுகளோடு பொறுத்தி, நம்முடைய. இரு வகை மாறிகளையும், அக வழி ஆய்வாகவும் பொதுமுறை ஆய்வாகவும் நாம் அடுத்துப் பார்க்கலாம்.

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80(தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 80th Series by Suganthi Nadar. Book Day. Trains and omnipotence இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 - தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 – சுகந்தி நாடார்

தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

நாம் முன்பு பார்த்த தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டு வந்த Philippa Ruth Foot, Judith Jarvis Thomson இருவரும் தத்துவஞானிகள் மட்டுமே. மனித மனம் எவ்வாறு சிந்திக்கின்றது ? மனித சிந்தனையில், மனிதனின் ஒழுக்க நெறி (உசனம் ethics)பற்றிய ஆராய்ச்சியில் ஒரு பகுதியாகவே தறிகெட்டு ஓடும் மின் ரெயில் புதிர் கொண்டுவரப்பட்டது. இப்பிரச்சனையை ஒரு பொறியாளரிடம் கொடுத்து இருந்தால், அவர் அந்த இரயிலை எப்படி நிறுத்த முடியும் என்று சிந்தித்து இருப்பார் தானே? ஒரு சட்ட அறிஞரிடம் கொடுத்து இருந்தால் இப்படி ஒரு விபத்து நடக்காமல் இருக்க சட்டப்படி வழி செய்வார்தானே? ஒரு மருத்துவரோ விபத்து நேர்ந்தால் என்னென்ன சிகிச்சை செய்ய வேண்டும் என்று யோசிப்பார், இப்புதிரை ஒரு மொழியாளரிடம் கொடுத்தால் விபத்து பற்றிய காரண காரியங்களை ஆராய்ந்து அதை பிறரோடு பகிர்ந்திருப்பார். மற்றக் கலைஞர்களும் தங்கள் சிந்தனைக்கு ஏற்ப இப்பிரச்சனையை வெளிப்படுத்தி இருப்பார்கள். ஒரு பொருளாதார வல்லுனரிடம் கொடுத்தால் அவர் விபத்தின் பொருளாதாரச் சிக்கல்களை அலசி ஆராய்வார்.

இந்தப் புதிரை விடுவிக்க ஒவ்வோரு துறையினரும் ஒரு குழுவாக முயலும்போது, நல்விளைவுகளைப் பெருக்கவும், தீய விளைவுகளைக் குறைக்கவும் முடியும்தானே? நாம் இன்று அப்படித்தான் செய்து வருகின்றோம். ஆனால் குழுவில் செய்தாலும் புரிதல் குறைவு நேரம் கடத்தப்படுதல் போன்ற பிரச்சனைகளை நாம் சந்திக்கின்றோம், இந்த நேரக் கடத்துதல் பிரச்சனைதான் சர்வவல்ல சமுதாயத்தை உருவாக்க வேண்டிய அவசியத்தை நமக்குக் கொடுக்கின்றது.

நாம் வாழும் பூமி கொஞ்சம் கொஞ்சமாக ஆனால் விரைவாக அழிந்து கொண்டு இருக்கின்றது. புவி அழிய முடியுமா என்ன? 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் dinosaurs (பெருத்த தொன்ம ஊருமினம்) வாழ்ந்து வந்ததாக தொல்லியியல் ஆராய்ச்சியில் கிடைத்த அவ்விலங்குகளின் எலும்புகள் சாட்சி கூறுகின்றன. ஆனால் தற்காலத்தில் அந்த விலங்கு இருப்பதற்கான அடையாளம் இல்லவே இல்லை.

அன்றையக் காலத்து உயிரின அழிவில் ஏறத்தாழ 75% அழிந்துவிட்ட காரணத்தால் இந்த பெருத்த தொன்ம ஊருமினம் மரபின்றி அழிந்து விட்டது(extinct) முழுமையாக அழிந்துவிட்டது என்றும் கூற முடியாது. பறவைகள் பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) வழித் தோன்றல் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இப்பேரழிவிற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் 1980களில் கண்டுபிடிக்கப்பட ஒரு உண்மை காலநிலை மாற்றம்தான். காலநிலை மாற்றத்தால் greenhouse effect உருவாகி மூச்சுவிடக் காற்று இல்லாமல் உயிரனங்கள் அழிந்து போயிருக்க வாய்ப்புகள் அதிகம்.

Essential requirements for internet classroom 80th Series by Suganthi Nadar. Book Day. Trains and omnipotence இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 80 - தறி கெட்டு ஓடும் ரெயில்களும் சர்வ வல்லமையும்

அப்படி அழிந்து போகக் காரணம் பூமியின் தட்பவெப்பநிலைதான். 2015ம் ஆண்டு Temperature of Earth என்ற தலைப்பில் எழுதப்பட்ட இணையக்கட்டுரையில் Jerry Coffey என்பவர் புவிக்கோளத்தின் சராசரி தட்பவெப்பநிலை 15 0c அல்லது 590 F என்கின்றார். பூமியின் தட்ப வெப்பநிலை அதிகரிக்கும் போது புவியில் உயிரினங்கள் வாழ இயலாமல் போய் விடும். பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) காலத்தில் மிகப்பெரிய பெரிய எரிமலைகள் வெடித்துக் கொண்டே இருந்ததால், அதிலிருந்து வெளிவரும் கரிமல வாயு புவியை சூழ்ந்துபுவியின் வெப்பம் அதிகரித்துக் கொண்டே இருந்திருக்கிறது. 

10 கிமி விட்டம் கொண்ட ஒரு புவியின் அதிர்ச்சியில் உருவான பெரிய பெரிய எரிமலைகளும், நிற்காது தொடர்ந்த காட்டுத்தீக்களும் சூழ்நிலையில் உள்ள கரியமில வாயு அதிகரிக்கக் காரணமானது விண்கோள் புவியைத் தாக்கியதால் எழுந்த கந்தகப்புகையும் கரியமில வாயுவும் புவியிலிருந்து 75% உயிரினங்கள் இறக்கக் காரணமாகிவிட்டன. இப்புகைகள் சூரியனையே பல்லாண்டுகள் மறைத்து உலகின் உறைபனிக்காலம் உருவாகியது. இந்த இரண்டு காரணங்களாலும் உயிரினங்கள் வாழ இயலாமல் மடிந்தே போயின. அப்படிப்பட்ட ஒரு தட்பவெப்ப சூழ்நிலையை நோக்கித்தான் நாம் இப்போது சென்று கொண்டு இருக்கின்றோம்.பெருத்த தொன்ம ஊருமினங்களின்( dinosaurs) அழிந்த காலத்தில் புவியின் தட்பவெப்பம் 50 C/410 Fஉயர்ந்து இருக்கலாம் என்று நம்பப் படுகின்றது. 1880 களிலிருந்து புவி ஒவ்வோரு பத்தாண்டுக்கும் 0.080C/0.140 F உயர்ந்து உள்ளது. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் 0.18° C/0.32° F தட்டப்வெட்பநிலையைப் பற்றிய தளமான https://www.climate.gov ல் ரெபெக்கா லின்ட்ஸி என்பவரும் லுயன் டால்மென் என்ற இருவர் கருத்துத் தெரிவித்து இருக்கின்றார்கள்.

அமெரிக்க நாசா இன்று தனது இணையதளத்தில் கூறுவதாவது, 10 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு ஏறக்குறைய 250p/million. 1950களில் காற்றில் கரியமில வாயுத் துகள்களின் அளவு 300p/million. ஆனால் தற்போது கரியமிலத் துகள்களின் அளவு 450 p/million, நாசா மேலும் அறிவுறுத்துவது பல்லாயிரம் ஆண்டுகளாக ஆகவே இருந்திருக்கிறது. 

நனது பாடத்திட்டங்களில் மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா என்ற அளவீடு எவ்வளவு முக்கியம் என்று நமக்குப் புரிகின்றது. தொழில் புரட்சிக் காலத்திற்குப் பிறகு மிகப்பெரிய கண்டுபிடிப்பு கணினி. தொழில்புரட்சிக்காலத்தில் புத்தாக்க கருத்துக்களையும் புதிய கண்டுபிடிப்புக்களையும் கண்டுபிடித்துப் பயன்படுத்திய நாம், அதன் பின்விளைவுகளை யோசிக்காமல் விட்டதன் விளைவே பூமி அழிவை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டு இருக்கின்றது என்ற அச்சுறுத்தலுக்குக் காரணம். 

அப்படி இருக்க நம்முடைய பாடத்திட்டம்,  மனிதாபிமான உணர்வுகளையும் விழிப்புணர்வையும் கற்றுக் கொடுக்க வேண்டுமானால் கருணை அன்பு விட்டுக் கொடுத்தல் என்று நீதிக் கதைகளை மட்டும் சொல்லாமல், நம் புவியைக் காக்க வழி சொல்லும் விதமான விவரங்களைக் புவியை பாதுகாத்து வளப்படுத்தும் அறிவையும், விழிப்புணர்வையும் அதை செயலாற்றும் வழி முறைகளையும் கொண்டதாகப் பாடத்திட்டம் அமைய வேண்டும். இத்தகைய அறிவையும் விழிப்புணர்வையும் பெற்ற ஒருவர், செயலாற்றும் முன் அவற்றின் பின்விளைவுகளைப் பற்றி சிந்திக்க வேண்டும் என்றால் அவர் ஒரு சர்வத்துறையிலும் வல்லமை பெற்றவராகத்தானே இருக்க வேண்டும் ?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79(மாணவர்களின் வல்லமை) – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 – சுகந்தி நாடார்

மாணவர்களின் வல்லமை

மாணவர்களுக்கு நாம் எந்தப் பாடம் நடத்தினாலும், பாடத்திட்டத்தின் ஒரு அங்கமாக ஒவ்வோரு தனி மாணவரும் சர்வ வல்லமை உடையவராக மாறக் கூடிய ஒரு அனுபவத்தையோ, அல்லது அப்படிப்பட்ட ஒரு தேடலுக்கான வழியையும் கொடுக்க வேண்டும். அப்படிக் கொடுத்தால் என்ன மாதிரியான ஒரு மாணவர் சமூகத்தை நம்மால் உருவாக்க முடியும் என்று யோசித்துப் பார்ப்போம். இங்கே நான் சர்வ வல்லமை என்றச் சொல்லை, சமயம் சார்ந்த இறைமையைக் குறிப்பிடவில்லை. (கோவிலுக்கு போக வேண்டுமா? தேவலாயத்திற்கு அழைத்துச்செல்ல வேண்டுமா? தொழுகை செய்வதற்கு பழக்க வேண்டுமா என்று மதங்கள் சார்ந்து யோசித்து விட வேண்டாம். இங்கு சர்வ வல்லமை என்பது வாழ்க்கைக் கல்வி என்று சொல்லுக்கு ஒரு மறுபெயர் தான் என்று வைத்துக் கொள்ளுவோமே).

நம் பாடத்திட்டத்தின் அங்கம் நம் மாணவர் ஒருவரை சர்வத்திலும் வல்லுனராக ஆக்கக் கூடிய தகுதி பெற்றுள்ளதா என்பதை எப்படி சோதித்துப் பார்ப்பது? சோதித்துப் பார்த்தால் தானே நம் பாடத்திட்டம் வேலைசெய்கின்றதா இல்லையா என்று தெரியும்? 

மாணவருக்கு மனிதாபிமான உணர்வு, அது சார்ந்த செயல்கள் பற்றிய விழிப்புணர்வு கொடுக்கும் முறையில் இருக்கின்றதா? அவர் வயதுக்கும் சூழ்நிலைக்கும் தேவையான திறமையையும் செயல்திறனையும் வளர்க்கும் விதத்தில் உள்ளதா? 

மாணவரது செயல்திறனையும் திறமையையும் ஊக்குவித்து, வளர்க்கும் வகையில் பாடப் பொருண்மையை வகுப்பில் அளிக்கக்கூடிய வகையில் பாடத்திட்டம் அமைந்துள்ளதா? ஒரே சூழ்நிலையிலும் வயதிலும் உள்ள மாணவர்களில் ஒரு மாணவர் முதல் எட்டு இடங்களில் வரக்கூடியவரா? ஒரு மாணவர் தன்னைத்தானே வளர்த்துக்கொள்ளும் வகைகளை தன்முனைப்பில் தேடிசென்று, தன்னை வளர்த்துக் கொள்ளும் திறன் படைத்தவரா?  என்ற வகையில் ஒரு பாடத்திட்டத்தின் ஒரு அங்கத்தையாவது நாம் சோதித்துப் பார்த்தால்தான் நம் மாணவர் ஒரு சர்வ வல்லமை படைத்தவராகக் வர முடியும்.

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

சரி வாழ்க்கைக் கல்வியை, ஏன் சர்வ வல்லுனர் என்று குறிப்பிட்டுச் சொல்கின்றேன் என்று முதலில் பார்ப்போம். பொதுவாக வாழ்க்கைக் கல்வி என்று சொன்னால் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது சூழ்நிலைக்கு ஏற்றவாறு எண்ணத்தையும் தங்கள் செயல்முறைகளையும் மாற்றிக் கொள்ளும் பண்பு செய்யும் தொழிலின் அறம் காத்தல் கூட்டணியில் வேலை செய்தல் தகவல் தொடர்பு வல்லமை  என்று பலர் சொல்லுவர். இன்னும் சிலர் தொழில்நுட்ப அறிவு, கோட்பாடுகளை சார்ந்த கருத்துக்களை புரிந்து கொள்ளுதல் எதையும் ஆராய்ந்து பார்க்கும் தன்மை தருக்கவியல் கருத்துக்களை உருவாக்குவதில் வல்லமை சிக்கலான தெளிவில்லாத விஷயங்களைப் புரிந்து கொன்டு அதை கோர்வைப்படுத்தப்பட்ட கருத்தாகக் கூறுதல் புத்தாக்க சிந்தனை மாற்றங்களை எதிர்பார்த்தல் நடக்கும் நிகழ்வுகளை ஆராய்ந்து எதிர்காலத்தைக் கணித்தல் என்று பட்டியலிடுவார்கள்.

மேற்கூறிய பட்டியலில் ஒரு மாணவரை வல்லவராக்கும் எந்த ஒரு அடையாளமும் இல்லை அதனால் தான் வாழ்க்கைக் கல்வி என்ற பதத்திற்கு பதிலாக சர்வ வல்லமை என்ற சொல்லை இங்கு பயன்படுத்துகின்றேன். நாம் கல்வி 4,0 பற்றி பார்த்துக் கொண்டு இருக்கின்றோம். இடையில் கட்டுரை நின்று போயிருந்த காலக் கட்டத்தில் உக்ரேன் மேல் ரஷ்யா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது, துக்கமான செய்தியாக இருந்தாலும். ஒரு மாணவன் சர்வத்திலும் வல்லவராக இருக்க வேண்டிய அவசியத்தை உக்ரேன் மக்கள் உலகிற்கு உணர்த்தி வருகின்றனர். இராணுவப் பயிற்சி இல்லாத அனைவரும் நாட்டைக் காக்கும் வீரர்களாய் மாற வேண்டிய கட்டாயம். வீட்டுக்கு அரசியாக இருந்த பெண்கள் முதல் பல்வேறு தொழில் புரியும் அனைத்துப் பெண்களும் ஒரு நாளில் அடிப்படையே இல்லாத ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்க வேண்டியக் கட்டாயம். சர்வ வல்லமையுடைய மாணவர் என்று சொல்லும் போது, all-rounder என்ற சொல்லைப் பொருத்திப் பார்க்கலாம். all – rounder என்றால் சகலத்துறையர் என்று பொருள். இங்கே சர்வவல்லமயம் என்பது சகலத் துறை அறிவு அனுபவம் பெற்றதோடு மட்டுமல்லாமால், அனைத்துத் துறையிலும் வல்லமை பெற்று இருப்பது.

ஒரு மாணவர் வல்லமை பெற்று இருக்கின்றார் என்பதை எந்த ஒரு அளவுகோலாலும் மதிப்பிட இயலாது. ஏன் எனில் ஒவ்வோரு மாணவரும் ஒரு விதம், மனிதனுக்கு முகம் எப்படி வேறுபடுகின்றதோ அப்படித்தான் மூளையும் வேறுபடும். அதனால் நம் திறமையும் சிந்தனைத் திறனும் செயல்திறனும் கண்டிப்பாக வேறுபடும். நம்முடைய முகம் நமது மூதாதையர் போல் இருந்தால் நமது முகம் மூதாதையரின் முகமாகிவிடாது. அது போலத்தான் ஒருவர் வல்லமைப் பெறுவதும். முகம் ஒன்று போல இருந்தாலும் மூளை (தலைமிதழ், தேகசாரம், பூமலி, மிதடு ஆகியவை மூளை என்ற சொல்லிற்கு இருக்கும் சிலச் சொற்கள் சின்னக் கொசுறுத் தகவல் – கூகுள் ஆண்டவருக்காக) என்பதன் திறன் கண்டிப்பாக வேறுபட்டுத்தான் இருக்கும். ஒரே முகம் கொண்ட இரட்டையரிடமும் சில வித்தியாச குணநலன்களைத் திறமைகளை நாம் காணலாம். எனவே சர்வ வல்லமை என்பதற்கு எந்த விதத்திலும் ஒரு அளவு கோலை வைக்க முடியாது. சர்வ வல்லமைத் திறனைத்தான் ஒரு மாணவனிடமிருந்து கல்வி 4.0 எதிர் பார்க்கின்றது.

Essential requirements for internet classroom 79th Series by Suganthi Nadar. Book Day. The strength of the students இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 79 - மாணவர்களின் வல்லமை

All-rounder என்ற சொல்லுக்கு துடுப்பாட்டத்தை (cricket) ஒரு நல்ல உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். இவ்விளையாட்டில் ஒரு வீரர்,பந்தை அடிப்பது, பந்தை வீசுவது. மைதானத்தில் பந்தைக் கையாளுவது ஆகிய அனைத்துத் திறமைகளையும் காட்டினால் அவரை All-rounder அல்லது பன்முக வித்தகர் என்கின்றோம். அதே விளையாட்டுக்காரர், துடுப்பாட்டத்தை மட்டும் விளையாடாது அனைத்து விளையாட்டிலும் எந்த ஒரு பொறுப்பையும் எடுத்துச் செய்யக் கூடியவராக இருந்து, விளையாட்டைச் சார்ந்த பொருட்கள் பயன்படுத்தும் விதம், அவற்றை தயாரிக்கும் விதம், விளையாட்டின் வரலாறு என்று விளையாட்டுத் தொடர்புடைய அத்தனைத் தகவல்களையும் தெரிந்தவராகவும் இருந்தால் அவரை நாம் சர்வ வல்லமை படைத்தவர் என்று கூற முடியுமா? இல்லை. தான் விளையாடும் விளையாட்டைச் சார்ந்த அனைத்து செயல்களின் நல்விளைவையும், தீய விளைவுகளையும் ஆராய்ந்து பார்த்து நல்விளைவுகளைப் பெருக்கும் வகையையும் , தீய வளைவுகளைக் குறைக்கும் வகையையும் தெரிந்து அவற்றைச் செயலாற்ற கூடிய ஒருவரை நாம் சர்வ வல்லுநராக நாம் அடையாளம் காட்ட முடியும். இத்தகைய சர்வ வல்லுனர்களைக் கொண்ட சமுதாயம் நாளைய உலகிற்கு இப்போது தேவை. அப்படிப்பட்ட ஒருவர் உலகத்திலேயே இல்லை, இதில் எங்கிருந்து ஒரு சமுதாயத்தை உருவாக்க? இயலாத காரியம்.

இல்லாத ஒன்றை நாம் எவ்வாறு உருவாக்குவது என்ற கேள்வி இருக்க அப்படி ஒருவரை மாற்றக் கூடிய இடம் கல்வி நிலையங்கள் தான். கல்வி நிலையங்களைச் சார்ந்தே, குடும்பம் பணிகள் பொருளாதாரம் உடல் நலம் அனைத்தும் இருக்கின்றன. கல்வி என்ற கட்டமைப்பை மேம் படுத்தி வலு பெறச்செய்வதே கல்வி 4.0. சர்வ வல்லுநராக ஒரு மாணவனை ஏன் தயார் படுத்த வேண்டும்? 

ஏன் எனில் அம்மாணவன் தனது செயல் முறைகளை நன்னெறிப் படுத்த முடியும். இன்றைய உலகிற்கும் நாளைய உலகிற்கும் இது அத்தியாவசிய, அவசரத் தேவை. அப்படி என்றால் கல்வி என்று நாம் அடையாளம் காட்டும் ஒன்றை முற்றிலும் வேறு கோணத்தில் பார்க்க வேண்டும். ஏன்?

நன்னெறி என்றால் நீதிக்கதைகளா?

முந்தைய தொடர்களை வாசிக்க:

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 74(என்ன மாதிரியான விழிப்புணர்வு?) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 75(கல்வியியலின் மற்றப்பரிணாமங்களும் கல்வி 4.0வின் தேவையும்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 76(2030க்கான குறிக்கோள்களை நோக்கிய கல்வி) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 77(டாவோஸ் செயல்திட்டமும் கல்வி 4.0ம்) – சுகந்தி நாடார்

இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 78(அது என்ன  மக்களைச்சார்ந்த முதலாளித்துவம்?) – சுகந்தி நாடார்