கவிதை: *கார்ப்பரேட் கம்பெனி* – சூர்யமித்திரன்கார்ப்பரேட் கம்பெனி

கதவுகளில்
‘வேலை காலி’
விளம்பரம்.
விவேக்குகளும்
சந்தானங்களும்
அவசர அவசரமாய்
கோட்டுசூட்டுகளை
வாடகைஇடத்தில்
திருப்பிக்கொடுத்து
ராம்ராஜ் வேட்டி
சட்டைக்குத் தாவுகின்றனர்..
விளம்பரத்தை
மேலும்
கவனித்தால்
சேற்றில்
கால்வைத்த
முன் அனுபவம்
மூன்று ஆண்டுகள்
என பளிச்சிட~
பாக்கெட் பேனா
எடுத்து
தலை சொறிந்து கொள்ள
அடுத்த
முன் தகுதி
இப்படியாயிருந்தது..
ஏர்கலப்பை
பிடித்து
மண் உழுத அனுபவம்.
மங்கலாய்
கண்கள்
ஒளிவீச மறக்க
அடுத்த தகுதி~
வண்டிமாடு
ஓட்டிய
முன் அனுபவம்.
…போச்சு.
கட்டிய வேட்டியை
அவிழ்த்து
கட்டிய விளம்பரத்தின்
மீது கடாசி எறிந்து..
ஜெய் ஜவான்
ஜெய் கிஸான்
என கோஷமிட
புறப்பட்டாயிற்று
எம்.டெக் ., குகளும்
பி.டெக்.,குகளும்.
கடாசி எறிந்து
சூர்யமித்திரன்