1
காலைப் பனி
காலாற நடை பயில்கின்றன
காக்கைக் குஞ்சுகள்!
2
வெண்கொக்குக் கூட்டம்
வெண்மை பூசிக் கொள்கின்றன
வசந்தகால வயல்வெளிகள்!
3
அடர்ந்த பனிப்படலம்
கலங்கலாக வழிந்து ஓடுகிறது
முழுநிலவு வெளிச்சம்!
4
உடைந்த மீன்தொட்டி
நினைவில் நிழலாடிச் செல்கின்றன
வற்றிய குளங்கள்!
5
உச்சிவெயில் நேரம்
கால் மாற்றி நின்றிருக்கும்
கரையோரக் கொக்கு!
6
கொழுத்த கற்குவாரிகள்
கூர் மழுங்கி கிடக்கின்றன
மலைச் சிகரங்கள்!
7
அடர்ந்த சவுக்குத்தோப்பு
ஊடாக ஊர்ந்து செல்லும்
ஒத்தையடிப் பாதை!
8
மார்கழி அதிகாலை
விறகடுப்பில் புரண்டு படுக்கிறது
கிழட்டுப் பூனை!
9
இளம்மாலை நேரம்
மஞ்சள் பூசிக் கொள்கின்றன
கடற்கரை நண்டுகள்!
10
நெடுஞ்சாலை விரிவாக்கம்
ஓய்வு எடுத்துக் கொள்கின்றன
சுமை தாங்கிகள்!
எழுதியவர்
மெ. கிஷோர் கான்
உளுந்தூர்பேட்டை
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.


மகிழ்ச்சி. அருமையான முன்னெடுப்பு. எனது ஹைக்கூ கவிதைகளை பிரசுரித்தமைக்கு எனது இதயங்கனிந்த நன்றி!