இணைய வகுப்பறைக்கு இன்றியமையாத் தேவைகள் 44 – சுகந்தி நாடார்

Essential requirements for internet classroom (Online Education) - Suganthi Nadar. Book Day is Branch of Bharathi Puthakalayamதேடு பொறி தொழில்நுட்பத்தின் அடிப்படை

இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் ஒரு இணையத் தொழில்நுட்பம் கூகுள். அந்த தொழில்நுட்பத்தின் அடிப்படையை நாம் தெளிவாக அறிந்து கொண்டோம் என்றால் கூகுள் செய்யும் பல வேலைகளிலிருந்து பல வகைகளில் வேறுபட்டும், அதே நேரம் சில வகைகளில் ஒன்றுபட்டும் இருக்கும் மறைக்குறியின் தொழில்நுட்பம் பற்றி நாம் ஆழமாக அறிந்து கொள்ளலாம்.

இணையத்தில் இருக்கும் விவரமும் தனிக்கணினி விவரமும்

ஒரு தேடுபொறி தொழில்நுட்பம் இணையத்தில் பொதுவாக உள்ள சேமிப்பகத்திலிருந்து நாம் கேட்கும் விவரங்களை எடுத்துக் கொடுக்கின்றது. ஆனால் இணையம் வழி இணைந்திருந்தாலும், நமது கணினியிலோ அல்லது திறன் பேசியிலோ இருக்கும் தகவல்களை அதனால் எடுத்துக் கொடுக்க முடியாது. நம்முடைய கணினிக்குள்ளும் நமது திறன்பேசிக்குள்ளும் உள்ள தகவல்களைத் தேடித்தருவதெற்கென ஒவ்வோரு இயங்குதளமும் ஒரு குறிப்பிட்ட படிமுறை (algorithm) ஒன்றை உருவாக்கி நம் கணினிக்குள்ளும் திறன் பேசிக்குள்ளும் வைத்துள்ளது. ஒரு அண்ட்ராய்டு திறன் பேசியில் உள்ளே நுழைந்து கூகுள் தேட இயலாது. ஏன் என்றால் அதற்கான படிமுறை (algorithm) நம் எண்னியியல் கருவிகளுக்குள் இல்லை. அதே போல இணையம் வழி இணைந்து இருக்காத கருவிகளுக்குள்ளும் தேடுபொறிகள் செயல்படுவதில்லை. அதாவது ஒரு தனிக்கணினியில் உள்ள விவரங்கள் பயனாளர் அனுமதி கொடுத்தால் மட்டுமே அதனை இன்னொரு கணினிக் கருவியுடனோ அல்லது வேறு ஒரு சேவையுடனோ நாம் இணைக்க இயலும். இந்த அடிப்படையை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

நம்மில் சிலர் கணினிக் கடிகாரங்களை பயன்படுத்துகின்றோம் அவற்றை நமது திறன்பேசியுடன் நாம் இணைத்தாலேயன்றி இரு கருவிகளும் ஒருங்கிணைந்து செயல்படாது என்பது நம்முடைய அனுபவ அறிவு, இன்று தமிழ் நாட்டில் உள்ள ஆசிரியர்களில் பலர், தங்கள் கணினியில் வேலை செய்து விட்டு அதைப் பள்ளிக்கு எடுத்துச் செல்ல சிறுசிறு சேமிப்புக் கருவிகளில் எடுத்துச் சென்று பள்ளியில் உள்ள கணினியில் பயன்படுத்துகின்றோம். அதே வேளையில் நம் பள்ளிக் கணினிக் கூடத்தில் ஒரு கணினியில் பார்ப்பதைக் கூடத்தில் உள்ள அனைத்து கருவிகளிலும் வரும்படி செய்ய முடியும். இந்தக் கூடங்களில் உள்ள ஒரு கணினியில் நிறுவி இருக்கும் மென்பொருள் கூடத்தில் உள்ள அனைத்துக் கருவிகளிலும் தெரியும். ஆனால் ஒவ்வொரு கணினியிலும் செய்யப்படும் மாற்றம் கூடத்தில் உள்ள முதன்மைக் கணினியில் எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தாது இந்த அடிப்படை அனுபவ அறிவை நாம் புரிந்து கொண்டோமானால் மறைக்குறியீட்டாக்க செலாவணி தொழில்நுட்பம் நமக்கு எளிதில் புரியும்.அடிப்படைத் தேடு பொறித் தொழில்நுட்பம்

கூகுள், யாகு போன்ற தொழில்நுட்பங்கள் பயனுக்கு வருவதற்கு முன்னால் ஒரு இணையப்பக்கத்தில் இருக்கும் செய்திகளை நம்மால் எளிதில் கண்டுபிடிக்க இயலாது. இந்தத் தேடுபொறிகள் crawling algorithm என்ற படிமுறையைப் பயன்படுத்தி இணையப்பக்கத்தில் உள்ள விவரங்களைச் சேகரித்து ஒரு மைய சேமிப்பகத்தில் சேமித்து வைக்கின்றன. இணையப்பக்கங்ளில் உள்ள குறிப்பிட்ட விவரங்கள் இந்த தொழில்நுட்பம் சிறந்து செயல்பட வசதியாக உள்ளன. இந்த web crawlers என்ற தொழில்நுட்பம் வினாடிக்கு ஒரு முறை புதிய விவரங்களைத் தேடித்தேடிச் சேகரித்து வைக்கின்றது. தாங்கள் சென்று வந்த தளங்கள், அவற்றில் உள்ள விவரங்கள், ஒவ்வொரு தளமும் எப்போது புதிப்பிக்கபப்டுகின்றது அனைத்து புள்ளி விவரங்களையும் தரவுகளாகச் சேகரிக்கப்படுகின்றன. எந்த தளங்களுக்குச்செல்ல வேண்டும் , வேலை செய்யாத தளங்கள் என்று எல்லா தகவல்களும் திரட்டப்படுகின்றன. அவ்வாறு படிமுறை கொண்டு திரட்டப்பட்ட விவரங்கள் அடுத்ததாக இந்தத் தரவுகளை வரிசைப்படுத்தின.

விவரங்கள் பலவிதங்களில் வரிசைப்படுத்தப்பட்டு அட்டவணைகள் தயாரிக்கப்பட்டன. இணையத்தில் பயன்படுத்தப்படும் ஒவ்வோரு சொல்லும் இவ்வாறு சேகரிக்கப்பட்டு வரிசைப்படுத்தப்படுகின்றன. இதை நாம் சோதித்துப் பார்க்கலாம். தமிழில் இதுவரை நாம் பொதுவாகப் பயன்படுத்தாத சொல் ஒன்றைத் தேடிப்பார்த்தோமேயானால் அப்படி ஒரு சொல் இல்லை என்று வரும். அப்படியென்றால் அந்த சொல் இணையத்தில் பயன்படுத்தப்படவில்லை என்ற பொருள் இல்லை. அந்த சொல்லும் அதன் பொருளும் தேடுபொறி சேமிப்பகத்தில் தரவுகளாக இல்லை என்று பொருள். நாம் இரு நாட்களுக்கு ஒரு முறை அந்தச் சொல்லைப் பயன்படுத்தித் தேடிக் கொண்டு இருந்தோமேயானால் அதற்கான விவரங்கள் மெதுவாக நமக்குக் கிடைக்க ஆரம்பிக்கும். இதுவரை நீங்கள் செய்து பார்க்காவிட்டால் செய்து பாருங்கள். ஆனால் தேடுபொறியின் சேமிப்பகத்தில் இல்லாத ஒரு சொல் எது என்பதை நாம் ஆராய்ந்து எடுப்பதே நமது சவாலாக இருக்கும். அந்த அளவிற்குத் தேடுபொறி ராட்சத சேமிப்பகங்களில் அத்தனை சொற்கள் சேர்த்து வைக்கப்பட்டுள்ளன என்று பொருள்.

இணையத்தில் உள்ள சொற்களின் விவரங்கள் மட்டுமல்லாது தேடுபவரின் சொற்களும் அவரது கணினி இணைய விவரங்களையுமே தரவுகளாகச் சேகரிக்கப்பட்டு அட்டவணைப்படுத்தப்படுகின்றன.ஒன்றோடு ஒன்று தொடர்பு உள்ள சொற்கள், வேறுபட்டு நிற்கும் சொற்கள், ஒரு பொருள் தரும் சொற்கள், படங்கள் காணொளிகள் வரைபடங்கள் செய்திகள் வணிகம் பொருட்கொள்ளவு வழிகாட்டி பயணம் என்றும் புள்ளி விவரங்கள் தரம் பிரிக்கப்படுகின்றன

இவ்வாறு அட்டவணைப் படுத்தப்பட்ட பல பில்லியன் கணக்கில் உள்ள விவரங்களை வேகமாகத் தேடித்தரும் படிமுறை சூத்திரங்கள் மூலமாக நாம் தேடும் விவரங்கள் நொடிகளில் நம் கணினித் திரையில் தெரிகின்றது.உலகத்தில் உள்ள எல்லாத் தேடுதல் படிமுறை சூத்திரங்களை விட கூகுள் நிறுவனத்தின் தேடுதல் படிமுறை சூத்திரம் சிறப்பாகச் செயல்படுவதினாலேயே இன்று அந்த நிறுவனம் தேடுபொறித் தொழில்நுட்பத்தில் முன்னணியில் இருக்கின்றது.

Google drive, one drive, drop box ஆகியத் தொழில்நுட்பங்களையும் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றோம். நாம் இந்த சேவைகளைப் பயன்படுத்தும் போது, ஒரு கணினியில் செய்யப்படும் மாற்றம் நாம் இன்னுமொரு கணினியில் சென்று பார்த்தால் அப்படியே மாற்றம் செய்யப்பட்டு இருக்கும். இதற்கான படிமுறை சூத்திரங்கள்(algorithm) ஒவ்வோரு நிறுவனத்திற்கும் வேறுபடும். நாம் பயன்படுத்தும் மின்னஞ்சல் சமூக வளை தளங்கள் போன்ற தொழில்நுட்பங்களும் இந்த மாதிரியான படிமுறை சூத்திரங்களைப் பயன்படுத்துகின்றன. நாம் அடிக்கடி பயன்படுத்தி வரும் கணினியை விட்டு ஒரு புதிய கணினியிலோ அல்லது வழக்கமான இருப்பிடத்தைத் தாண்டி புவியில் வேறோரு இருப்பிடத்திலிருந்து கொண்டு நம் மின்னஞ்சலையோ, அல்லது சமூக வலைதளங்களிலோநாம் உள் நுழைய முயன்றால், நுழைய முற்படுவது நாம் தான் என்று கணினிக்கு உத்தரவாதம் கொடுக்கப்பட வேண்டும். இதுவும் நமது அனுபவமே

மறைக்குறியீட்டாகத் தொழில்நுட்பம் தேடுபொறித் தொழில்நுட்பத்தைப் போல இணையம் வழி கணினிக்கருவிகளை இணைப்பதில்லை. ஆனால் நம் கல்வி நிறுவனங்களின் கணினிக்கூடம் போல ஒவ்வோரு கணினியும் ஒன்றோடு ஒன்று இணைக்கப் பட்டுள்ளன. ஆனால் ஒரு கணினியில் நாம் செய்யும் மாற்றம், முதன்மைக் கணினிக்குள்ளும், இணைக்கப்பட்டிருக்கும் எல்லாக் கணினிகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும்

Nodes, PtoP Network, genesis block ledger mining consensus coin burn, nounce hash time stamp என்ற கலைச்சொற்களின் விவரங்களை நாம் அடுத்துப் பார்ப்போம்.முந்தைய தொடர்களை படிக்க கிளிக் செய்க: 

https://bookday.in/essential-needs-for-internet-classroom-39-suganthi-nadar/

https://bookday.in/essential-needs-for-internet-classroom-40-suganthi-nadar/

https://bookday.in/essential-needs-for-internet-classroom-41-suganthi-nadar/

https://bookday.in/essential-needs-for-internet-classroom-42-suganthi-nadar/

https://bookday.in/essential-needs-for-internet-classroom-43-suganthi-nadar/இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.