சக்தி சூர்யா (Sakthi Surya) எழுதிய சந்தாலி (Santali) - நூல் அறிமுகம் - பாரதி ( Bharathi Puthakalayam) புத்தகாலயம் வெளியீடு - Novel - https://bookday.in/

சந்தாலி (Santali) – நூல் அறிமுகம்

சந்தாலி (Santali) – நூல் அறிமுகம்

மனித தேவைகள் அனைத்துமே சமூகமாய் மேற்கொண்டாலும், அதில் ஒரு சிறு புள்ளியின் தடுமாற்றம் சிதைத்து சிதறிவிடும். அது மனிதன் செல்லம் பாதையின் உணர்வுகள் கடந்த பேராசை.

சொல்லி கொள்ளும் அளவுக்கு நம் நிலைமைகள் மோசமானாலும், வாழ வேண்டும் என்ற பாதைக்கு நிச்சியம் ஒரு வழிகாட்டி இருந்தே தீர வேண்டும் அப்படி பட்டவர்களின் கதைகளில் மூழ்கிய நாவல் தான் பாரதி புத்தகாலயம் வெளியீடாக சக்தி சூர்யா எழுதிய சந்தாலி நாவல்.

கொங்கு பகுதியான கோவையை கதை களமாக கொண்டு பஞ்சாலை தொழிலாளியாக வலம் வரும் வடக்கனின் துயர் மிகுந்த கதையை தத்துவார்த்த அமைப்பு ரீதியாக எழுதுவதும், பயணிப்பதும் எழுத்தை தாண்டி தொழிலாளி என்ற வர்க்க சொல்லை ஆழமாக பதியப்பட்டுள்ளது.

நாவலில் இருந்து சில….

இனி, சாலையின் ஓரமாய் நின்று வாகனங்களை நிறுத்திப் பயனில்லை. வாகனங்கள் வந்தால் சாலையின் நடுவே நின்று மறிக்க வேண்டியதுதான்’ என்று சாவுத் துணிச்சல் கொண்டான்.

ஆனால், கொஞ்ச நேரம்கூட மஞ்சுவை நடத்திச் செல்ல இயலாமல், சாலைத்தடுப்பு ஓரமாய் அரளிச்செடிகளின் நிழலில் அமர்ந்தான். மஞ்சுவை மடியில் போட்டுக்கொண்டான்.

செவ்வரளிச்செடிகள் அவர்களை நிழல் போர்த்தி அசைந்தன.

இப்போது, அவன் மடியில் கிடந்த மஞ்சு பிதற்ற ஆரம்பித்தாள். இவன் அவளது கன்னங்களைத் தட்டிக்கொண்டே இருந்தாள்.

அவள் கண்களைத் திறந்து, திறந்து மூடிக்கொண்டே இருந்தாள். தார்ச்சாலையின் வெப்பம் தாங்க முடியாத கனலாக இருந்தது. நேரம் நடுப்பகலை எட்டிய நேரத்தில், உச்சிவெயில் தலை காய்ந்துகொண்டிருந்த கணத்தில், அவன் முதுகை அணைத்திருந்த கை சரிந்தது.

“அவ்வளவுதானா?”

அவள் நாசியில் மூச்சூதிப் பார்த்தான்; நெஞ்சில் காது வைத்துக் கேட்டான். அனல் கொதித்துக்கொண்டிருந்த அவளது உடல், இப்போது ஜில்லெனக் குளிர்ந்து கொண்டிருந்தது. மடியில் கிடந்த மஞ்சுவின் உடலைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.

அவனது நினைவுகள் ஓடாமல், சிந்தை அறுந்து நின்றுவிட்டன. கானலின் வழியே, கலர்க்கலராய் ஒளிரும் ஒளி நீரை, விழி நீர் வழியப் பார்த்துக்கொண்டே இருந்தான். ‘தன் பிறவியின் பயணம் ஆளரவமற்ற இந்த அத்துவானக் காட்டில் மொத்தமாய் முடிந்துவிட்டதோ?’

திடீரென ஓவெனப் பெருங்குரலெடுத்துக் கத்தினான். வானம் பார்த்து வாய் பிளந்து சத்தமாக அழுதான். அந்த அத்துவானக் காட்டில், அவன் கதறலைக் கேட்கக்கூட அங்கே,ஒரு நாதியுமில்லை.

நெடுநேரம் கடந்த பின், நிலைகுத்தி நின்ற அவன் கண்களில் திரண்டிருந்த கண்ணீரின் வழியே மங்கலாக, புள்ளியாகத் தெரிந்த வெள்ளை ஒன்று பெரிதாகிக்கொண்டே வந்தது. ஆமாம்…

அது ஒரு வாகனம்தான்.

விடுதலை பாகம் 3 பார்த்தது போன்ற நினைவலைகளாக விடுத்து புத்தகத்தை வைக்க முடியவில்லை. செங்கா, மஞ்சு, செல்வராஜ் கதாபாத்திரங்கள்.

இப்படி கணக்கிட முடியாத மனிதர்கள் தினமும் ஏதாவது ஒரு வழியில் மடிந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

நூலின் தகவல்கள் :

நூல் : சந்தாலி
ஆசிரியர் : சக்தி சூர்யா
வெளியீடு : பாரதி புத்தகாலயம்
விலை : 310
நூலைப் பெற : https://thamizhbooks.com/product/santhali/

நூல் அறிமுகம் எழுதியவர் : 

ரா. தீபன்
திருப்பூர்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *