மனித ஆளுமையை வடிப்பது இசையே, ஒரு ஆணையோ அல்லது பெண்ணையோ அதிக முழுமை பெற்றவர்களாக்குவதும் இசையே என பூர்வ கிரேக்கர் நம்பினார்கள். அறிவியல், பொருளாதாரம், தர்க்கரீதி ஆகியவற்றில் கல்வியறிவு பெறுவதை வலியுறுத்துகிற இந்த 20-⁠ம் நூற்றாண்டில், கலைகள் மூலம் மனித ஆளுமையின் உணர்ச்சியை வளர்க்கும் பணியை இசையில்  செய்யப்படுகிறது.

இனிய இசையை கேட்பது நன்மையாகவும் இருக்கும், இன்பமாகவும் இருக்கும். ஆனால், ஒரு இசைக் கருவியை இசைப்பவர் அல்லது நண்பர்களுடன் சேர்ந்து பாடுபவர் இதைவிட அதிக மகிழ்ச்சியை அனுபவிப்பார். இசை ஞானம் மெய்யான மகிழ்ச்சிக்கு வாயிலாக இருக்கலாம் என்று கூறுகின்றனர்.

நிச்சயமாகவே, வாழ்க்கையில் மற்ற மகிழ்ச்சியான விடயங்களைப் போலவே, பொழுதுபோக்கிற்குரிய இந்த அம்சத்திலும் மிதம், நல்நிதானிப்பு, தெரிந்தெடுப்பு தேவை. தெரிந்தெடுக்கும் இசையைக் குறித்ததில் மட்டுமல்ல, கேட்பதிலும் இசைக் கருவிகளை வாசிப்பதிலும் செலவிடும் நேரத்தைப் பொருத்ததிலும் இது உண்மையாக இருக்கிறது.

சிலவகை இசை உங்களுடைய உணர்ச்சிகள்மீது, செயல்கள்மீது, உறவுகள்மீது எரிமலை புகையை கக்க ஆரம்பித்தால், வேறுவகை இசையை தெரிந்தெடுங்கள். உங்களுடைய உணர்ச்சிகளை காத்துக்கொள்ள உங்களுடைய செவியை காத்துக்கொள்ளுங்கள், இப்படி செய்தால் உங்களுடைய இருதயத்தையும் மனதையும் காத்துக்கொள்ள முடியும்.

இப்படி சராசரியாக ஒரு நாளைக்கு இசை குறித்து செலவு செய்யப்படுகிற பொருளாதாரத்தை கணக்கிடப்படும் பொழுது  பல ஆயிரம் கோடிகளை தாண்டி செலவுகள்  செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. காரணம் இங்கே இசை தரம் என்கிற ஒரு ஒற்றை வார்த்தையை முன் வைத்து  இசைத்துறை இயங்கிக்கொண்டிருக்கிறது.

Doctor Vikatan - 01 November 2018 - இசை என்ன ...

முந்தைய காலங்களில் இசையை மக்களை அணிதிரட்ட, அதற்கு ஒரு தொடர்பு சாதனமாக பயன்படுத்தினார்கள். அதேபோல் அவர்களை உணர்ச்சி வயப் படுத்துவதற்கும் இசை என்கிற அந்த ஆயுதத்தை பயன்படுத்தி வந்தார்கள்.  ஏதோ ஒரு துறையை சார்ந்து செயல்படக் கூடியதாக அமைந்து வருகிறது  இசை . இதோடு  பாடல் என்கிற ஒரு வடிவத்தோடு இணைகிற போது  வேறு ஒரு பரிணாம வளர்ச்சியை பெறுகிறது.

கருப்பின மக்களுடைய விடுதலைக்காக எழுதப்பட்ட பாடல்கள் அனைத்தும் அவர்களை இன உணர்வை அவருடைய விடுதலை உணர்வை சொல்லப்பட்ட இசைக் குறிப்புகளாக,  பாடல்களாக நமக்கு கிடைக்கிறது.  மார்ட்டின் லூதர் கிங் ஒரு பாடல் எழுதுகிறார்.

விடுதலை பெறுவோம்…

விடுதலை பெறுவோம்..

என்று தொடங்கும் அந்த பாடலை எழுதி மக்களுக்கு மத்தியில் பாடி வந்தவர்.

அதேபோல  கம்யூனிஸ்ட்  தோழர்களுக்கு என்று ஒரு பாடல் உண்டு

பட்டினி கொடுஞ் சிறைக்குள்

பதருகின்ற மனிதர்கள்..

இந்த  பாடலை மேடையில் பாடுகிறது பொழுது ராணுவ அணிவகுப்பு  மாதிரியான ஒரு கட்டமைப்பில் அந்த பாடலும் பாடல்களில் கருத்தும் குறிப்பிடுகிறார்கள். இந்த பாடலை முதன்முதலில்  கேட்ட சமயத்தில்  ஒரு  பெரிய எழுச்சியை உண்டாக்கியது. என்று குறிப்பிடுகின்றார் தோழர் சுப்பய்யா.

இரண்டாவது உலகத்தினுடைய மக்கள்தொகை பரப்பில் பெருமளவில் இருக்கக்கூடிய கிருத்துவ மதத்தைச் சார்ந்தவர்களுக்காக  ஒரு வகையான பாடல், இசை  இருக்கிறது.

மூன்றாவதாக இந்தியாவிற்கு  ஒரு தேசிய கீதம் இருக்கிறது. அந்த தேசிய கீதத்தை எழுதியவர் ஒரு மிகப்பெரிய பணக்காரர் ரவீந்திரநாத் தாகூர்.   அந்த பணக்காரர்களாக ஒரு நாட்டினுடைய தேசியத்தை பற்றியும்,  அதனுடைய சிறப்பு அம்சங்களைப் பற்றியும்  எழுதியதாக  அந்த பாடலை நாடு  மக்களிடத்தில்  செல்கிறார்கள். ஏழை எளிய மக்கள் நிறைந்த இந்திய  நாடு. ஆனால்  ஒரு மிகப்பெரிய பணக்காரர் ஒரு நாட்டினுடைய தேசிய கீதம் எழுதுகிறார். அதை இந்த நாடும், மக்களும் தினந்தோறும் பாடி வருகிறார் என்பதுதான் ஒரு கேள்வி குறியாக இருக்கிறது.

அதேபோன்று தமிழ்நாட்டுக்கு என்று தமிழ் தாய் வாழ்த்துப்  பாடல் இருக்கிறது. அந்த பாடலை எழுதியவர் மனோன்மணியம் சுந்தரனார்.   இப்படி ஒவ்வொரு தளத்திற்கும் பாடல்கள் என்கிற அந்த பெருமை இருப்பதனால் இந்த சூழல் என்பது ஒரு மிகக் கடினமான சூழலாக அமைகிறது. ஒரு  நாட்டினுடைய பெருமையை,  மொழியினுடைய பெருமையை பேசுகிற தன்மையை பொறுத்து  மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய இசை இனப்படுகொலை நடைபெறுகிறது.

இசை பல்கலையில் ஜெயம் 2015 நிகழ்ச்சி ...

மக்கள் இசை என்பது பண்பாடு சார்ந்தது , அதை அரசு செய்துவருவதாக சொல்லிக் கொள்கிறார்கள் கலை பண்பாட்டுத் துறை அறிவிப்புகள் – 2019-2020 ,  தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம் புதியதாக இசைக் கருவிகள் மற்றும் உபகரணங்கள் வாங்குதல் – ரூ.32.92 இலட்சம் நிதி ஒப்பளிப்பு செய்தல் ஆணை வெளியிடப்படுகிறது. அதே போன்று  கலை பண்பாட்டுத் துறை அறிவிப்புகள்- 2019-2020ஆம் ஆண்டு  தமிழ் நாடு இயல், இசை,  நாடக மன்றம் சார்பில்  மறைந்த மூத்த கலைஞர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப பராமரிப்பு உதவித் தொகையினை ரூ.25,000/-ஆக உயர்த்தி வழங்குதல் என்றும் மூல நிதியினை ரூ.28.76 இலட்சத்திலிருந்து ரூ.50.00 இலட்சமாக உயர்த்துதல் என்றும்  கூடுதல் தொகை ரூ.21.24 இலட்சத்திற்கு நிதி ஒப்பளிப்பு செய்தல் என்றும் தமிழ்நாடு அரசு ஆணை  வெளியிடுகின்றது .

அதே போல் – 2019 – 2020 காண நிதிநிலை அறிக்கையை மத்திய அரசு  கலாச்சாரங்கள் மற்றும் பண்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக ₹3,042.05 கோடி ஒதுக்கியுள்ளது.  இதனுடைய பயன்பாடுகள் என்பது பல்வேறு துறைகளில் சார்ந்து செயல்பட்டு வருகிறது.  இதில் அரசு சார்ந்த கலைக் கழகங்கள்,  பல்கலைக்கழகங்கள், அருங்காட்சியகங்கள்,  நூலகங்கள்,  ஆவணக் காப்பகங்கள் என்றெல்லாம் தனிமைப்படுத்தி அதற்கான செலவுகளை வைத்திருக்கிறார்கள்.

தொகைகள் எல்லாம் எதை சார்ந்த இசைக்குறிப்புகளுக்கு,  கலைகளுக்கு பண்பாடுகளுக்கு செலவு செய்யப்படுகிறது என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது.  அதிலும் தமிழகத்திற்கு அவர்கள் தருகிற மத்திய அரசினுடைய நிதி ஒதுக்கீடு  தொகையை எத்தனை பாரம்பரிய கலைஞர்களுக்கு செலவு செய்யப்படுகிறது என்பதில் இருந்து துவங்குகிறது. பண்பாட்டை காக்கப்படவேண்டும் என்று கூறுகிறவர்கள் பண்பாடு எங்கே இருக்கிறது என்று அறிந்துகொள்ள மறந்து விடுகின்றனர்.

வழக்கமாக இங்கே ஒரு பார்வை இருக்கிறது ” இசை தூய்மை, இசை தரம்”  என்று இரண்டை  முன்வைத்து இந்த பொருளாதார அரசியலை இசை மீது திணிக்கப்படுகிறது. இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் இதை கண்மூடி தனமாக கடைபிடித்து வருகின்றனர் .

இசை மேன்மையைக் குறித்து இசை தரம் குறித்து நம்முடைய அரசு எப்படி தீர்மானிக்கின்றது என்பதை நாம் ஆய்வு செய்யப் போனால் நம்முடைய முன்னோடி ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், களப்பணியாளர்கள் நமக்கு ஒரு எடுத்துக்காட்டை முன்வைக்கிறார்கள்.

நம் பாரம்பரிய இசை வாத்தியங்கள் ...

நாட்டினுடைய பாரம்பரிய இசை என்பது ஒரு நான்கு வகையாகப் பிரிக்கப்பட்டு இருக்கிறது.

  1. பழங்குடியினர் இசை
  2. நாட்டுப்புற இசை
  3. செவ்வியல் இசை
  4. வெகுஜன இசை

இங்கு நான்கு வகைகளாக  இசை வடிவத்தை முன்வைக்கிறார்  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் மானிடவியல் துறை பேராசிரியர் ஆ.செல்லப்பெருமாள் அவர்கள் .

இதிலே பழங்குடியினர் இசை என்பது  நாட்டின் பூர்வகுடியானை இசையாக இருக்கிறது .  அதை ஒட்டி நாட்டுப்புற இசை இரண்டாவது இடத்தில் பிடித்து வருகின்றது.  அதில் ஏதோ ஒரு சில இழப்புகளையும் , கலப்புகளையும்  நாம் சமீபத்தில்  பார்த்து வருகிறோம். இந்த இரண்டு துறைதான் நாட்டில் இருக்கக்கூடிய உழைக்கும் மக்களோடு தொடர்பு படுத்தக்கூடிய இசையாக இருக்கிறது.

இதை தவிர்த்து மூன்றாவதாக இருக்கக்கூடிய செவ்வியல் இசைக்கு இங்கே அதிகமான ஒரு முதலீட்டை அதற்கான பொருள் செலவுகளை இசையின் மேன்மைக்கு பயன்படுவதாக நிறைய பொருளாதார ஊக்குவிப்புகள் நடைபெறுவதாக ஆய்வுகள் கூறுகின்றன .

இன்றைக்கு இந்தியாவின் கலாச்சார அமைச்சகம்  நிறுவனத்தில் இருந்து ஒரு இசைக்கலைஞர் ஜூனியர், சீனியர் என்கிற இரண்டு பிரிவுகள் மத்திய அரசு இசை குறித்து படிப்பதற்கு,  ஆய்வுகள் செய்வதற்கு அவர்களுக்கு ஊக்க ஊதியம்  வழங்கி வருகிறது.  அதில் பெரும் பங்காக விளங்கக்கூடிய செவ்வியல் இசையினுடைய  மேம்பாட்டிற்காக கூடுதலான தொகைகளை ஒதுக்கப்படுவது.  அந்தத்துறையில் விண்ணப்பிக்கும் மற்ற கலைஞர்களை விட கடந்த பத்தாண்டுகளில் செவ்வியல் இசையை கற்பவர்களுக்கு,  பரத நாட்டியம் போன்ற நடனங்களுக்கு  கூடுதலாக இருக்கிறது.

அரசு ஏன் இதை ஊக்குவிக்கிறது என்பதற்கான நம் ஆராய்ந்தபோது அவர்கள் ஒரு இசை தரத்தை அங்கே முன்வைத்து பேசுகிறார்கள். அந்த  தரம் என்பது இந்த பாரம்பரிய பழங்குடி இசையில் இல்லை என்பதும் நாட்டுப்புற இசையில் இல்லை என்பதுதான் அவர்களுடைய மறைமுக புறக்கணிப்பாக  இருக்கிறது.

ஒரு நாட்டினுடைய பாரம்பரிய இசை வடிவத்தை மென்மைபடுத்தவும் , அதற்கு வளர்ச்சியாகும் துணையாகவும் இருக்கவேண்டிய அரசு ஒரு இசையை பார்த்தாலே ஒதுக்கி வைக்கின்ற நிலையை செய்து வருகிறது.  ஏதோ ஒரு மேன்மை பொருந்திய அரசியலை இங்கே முன் வைக்கப்படுகிறார்கள்.

எனக்கு ஒரு அனுபவம் இருக்கிறது அரசுத்துறையில் தரப்படுகிற  நாட்டுப்புற கலைஞர்களின் ஊக்க தொகை   ஆண்டுக்கு ஒருமுறை அவர்களின்  இசைக் கருவிகள் வாங்குவதற்கு,  உடைகள் வாங்குவதற்கு, கலைக் குழுவினர் பல்வேறு  பணிகளைச் செய்வதற்காக ஒரு சிறிய தொகையை ஒதுக்கப்படுகிறது. அந்த தொகை  ஏழாயிரம் ரூபாய்  அந்த தொகையை பெறுவதற்கு இயல் இசை நாடக மன்றத்தில் நாம் நாட வேண்டும்.

தமிழ்நாடு இயல், இசை, நாடக ...

அப்படியே இயல் இசை நாடக மன்றத்தில் விண்ணப்பித்த பிறகு அவர்களில் கலைஞர்களை பார்த்து தேர்வு செய்வார்கள் தேர்வு செய்த கலைஞர்களில் கடிதத்தில் மூலமாக தொடர்பு கொண்டு அவர்களின் ஒரு கூட்டம் வைத்து.  அதிலே  காசோலையாக தரக்கூடிய பணிகள் இப்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது ஒரு சிறந்த பணி தான் மக்களுக்கு மத்தியில் அந்த அலுவலர்கள் மத்தியில் ஒரு பார்வையை முன் வைக்கப்படுகிறது.

எப்படி அவர்கள் இசை தரத்தை முன்வைத்து பேசுகிறார்களோ அதைப் போலவே அவருடைய உடை பாவனைகளையும் அவர்கள் தரம் வைத்துப் பேசப்படுகிறது. அனைவரும் அந்த மேடையில் நிற்கிற பொழுது  இசைக்கலைஞன்,  குரல் இசைக்கலைஞர்  இப்படித்தான் இருக்கவேண்டும் என்கிற ஒரு எண்ணத்தை அவர்கள் வைத்திருக்கின்றனர். நல்ல உடைகளை அணிந்து செல்கிறபோது  தொடர்ந்து ஒரு நான்கு அலுவலர்கள் மீண்டும் மீண்டும் என்னை கேட்ட கேள்வி நீங்கள் எந்த துறை என்று,  என்ன கலைஞர் எதற்காக வந்திருக்கிறார்கள் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தார்கள் .

அதற்குக் காரணம் என்னவென்றால் தோலிசை  சார்ந்த  கலைஞர் என்றால் அவருக்கு உடைகள் கருத்த நிறத்தையுடைய,  வறுமை, உடல் மெலிந்து காணப்பட வேண்டும். அவர்களாகவே  காலத்திற்கும் இப்படியே தங்களுடைய மனதில் நினைத்துக் கொண்டிருக்கிறார்.  அப்போது நான் சொன்னேன் நான் ஒரு பறை இசை கலைஞருக்காக இருக்கிறேன்,  உதவி தொகை பெறுவதற்காக வந்திருக்கிறேன் என்று சொல்கிற பொழுது அவர்களுக்கு ஒரு ஆச்சரியம்,கலந்த  வியப்பாக இருந்தது.

வெகுஜன மக்கள் இசை என்பது இன்றைக்கு திரைத்துறையில் சார்ந்து பேசப்படும் ஒரு பாடல் இசையமைப்பு என்பதிலிருந்து மக்களிடத்தில் கொண்டு போய் சேர்க்கும் வரை அவர்கள் செய்கிற பணிகளில் மிக முக்கிய பணிகளாக இருப்பது பொருளியல் செலவுதான்.  ஒரு பாடலை எழுதுகிற பொழுது அதற்கு அங்கீகாரம் கிடைப்பதில்லை. இயக்குனர் காட்சிகளையும் விவரித்து ஒரு சூழலை ஏற்படுத்திக் கொடுக்கப்படுவது இசையமைப்பாளர் இந்த சூழலுக்கேற்ப ஒரு ராகத்தை மெட்டமைத்து பாடல் ஆசிரியருக்கு காண்பிக்கிறார்கள்.

பாடலாசிரியர் இந்த சூழ்நிலைகளை கருத்தில் வைத்து பாடலை எழுதி இசையமைப்பாளர்களுக்கு தந்த பிறகு இந்தப் பாடலை யாரை வைத்து பாடவைப்பத்து,   அதிகமான மக்களிடத்தில் கொண்டு போய் சேரும் என்பதிலிருந்து, அவர்களுடைய சம்பளம்,  அதற்கான செலவுகள் இப்படி பல்வேறு ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசை அமைக்கும் பணிகளை இன்றைக்கு செய்து கொண்டு வருகிறார்கள்.

வெகுஜன  இசை என்பது நேரடியாக தனித்த இசை என்று சொல்ல முடியாது.  இதில் ஒரு தரப்பில் பழங்குடி இசையை சார்ந்ததோ அல்லது நாட்டுப்புறவியல் இசையை சார்ந்ததாகவே இருக்கிறது, அல்லது செவ்வியல் இசையை சார்ந்ததாக இருக்கிறது. இம்மூன்று இசைகளை தவிர்த்து இவர்கள் புதிதாக ஒன்றும் கட்டமைக்க முடியாது  என்பதுதான் இங்கே வியப்பு.

ஒரு பெருத்த பொருளாதார  முதலீடு  இசையில் செய்வதற்கான காரணங்கள் வேறாக இருந்தாலும், முடிவில் மக்களை உயிர்ப்போடு வைத்துக்கொள்வதற்கு என்று சொல்லப்படுகின்றது.

தொடர் 1ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-1/

தொடர் 2ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-2/

தொடர் 3ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-3/

தொடர் 4ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-4/

தொடர் 5ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-5/

தொடர் 6ஐ வாசிக்க

https://bookday.in/the-politics-of-music-6/

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *